Subscribe: தென்றல்
http://feeds.feedburner.com/rss
Added By: toneypan Feedage Grade B rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: தென்றல்

தென்றல்



எண்ணங்கள்...செய்திகள்...



Updated: 2017-03-16T11:52:26.813+05:30

 



மூன்று வியப்புகள்!!! பகுதி - 3

2012-02-11T13:38:37.593+05:30

1958 – ல் நான் துணை விடுதிக் காப்பாளனாகப் பொறுப்பேற்ற போதுதான், விடுதி வரவு - செலவுகளைக் கண்காணிக்கவும், கணக்கு எழுதவும் தனியாகக் கணக்கர் நியமிக்கப் பட்டார். எனது உடன் பிறவாச் சகோதரர் முகம்மது பாரூக்தான் விடுதியின் முதல் தனிக் கணக்கர். அப்போது, “இச் சீட்டு கொண்டு வருபவரிடம், கல்லூரிச் செல்வுக்கு ருபாய் ............. கொடுத்தனுப்பிக் கணக்கில் எழுதிக் கொள்ளவும்” என்று தாளாளர் ‘ரோக்கா’ (ஆணைச்சீட்டு) அனுப்புவார். இரும்புப் பெட்டியில் பணம் இருந்தாலும், விடுதிப் பணத்தைக் கல்லூரிச் செலவுக்குப் பயன் படுத்துவதை ஒப்பாமல், “பணம் கிடையாது” என்று அதே ரோக்காவின் பின் பக்கத்தில் எழுதித் திருப்பி அனுப்பிவிடுவேன்! இதனை மேlல் அதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாமை (insubordination) என்று நினைவூட்டுவார், சகோதரர் பாரூக். குற்றமோ இல்லையோ, தாளாளர் இதுக்காக என்னைக் கண்டித்ததும்  இல்லை; தண்டித்ததும் இல்லை! “முதல்வர் தனக்கோடி, இரும்புப் பெட்டிக்கு, சரியான பூதத்தைக் காவலாகப் போட்டிருக்கிறார்!” என்று மட்டும் சொல்வார்!நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கைக் கடுமையாகக் கண்காணிப்பார்! அவர் அறியாமல் யாரும் எதையும் சுருட்டிவிட முடியாது! யார் என்ன செய்கிறார்கள்; என்ன பேசுகிறார்கள் என்ற செய்திகளெல்லாம் அவர் காதுகளுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும்!அவரோடு பழகியவர்கள் பலர், “நாம் வயைத் திறப்பதற்கு முன்பே நம் மனத்தில் உள்ளதை, உள்ளபடி எப்படிச் சொல்லி விடுகிறார்?” என்று வியப்பார்கள்! ‘தாளாளருக்குக் குறிப்பு உணரும் கூர்த்த அறிவு உண்டு’ என்பது உண்மையே! ஆனாலும், இதில் மாயம், மர்மம், மந்திரம், தந்திரம் ஏதும் இல்லை! அவரது தந்தை ஜனாப் அபுல் ஹசன் மரைக்காயர், நகரத் தந்தையாகப் பதவி வகித்த காலத்திலேயே ஊர் நடப்புகளையும் பழகியவர்களின் நடவடிக்கைகளையும் அற[...]



மூன்று வியப்புகள்!!! - பகுதி - 2

2012-01-22T23:58:30.760+05:30

பகுதி - 2பழைய கனவுகளில் மூழ்கி, தலைப்பை மறந்து, பாதை மாறி, வெகு தூரம் வந்து விட்டேன்! மன்னியுங்கள்! மீண்டும் 1957 ஆகஸ்டு முதல் தேதிக்குப் போவோம்!  காலைச் சிற்றுண்டி முடிந்தது. எனது ஞானத் தந்தை, முதல்வர், பேராசிரியர், தி.தனக்கோடி அவர்களைப் போய்ப் பார்த்தேன். இருவரும் வாடிக்குப் போனோம். அங்கு எனக்கு இரண்டாவது வியப்புக் காத்திருந்தது! “இந்த இளைஞரா கல்லூரி நிர்வாகி?”. அவருக்கு அப்போது முப்பத்தாறு வயது இருக்கலாம்! எனைவிட பதின் மூன்று வயது மூத்தவர், என்றாலும் என்னினும் இளமையாகத் துறு துறு என்று இருந்தார், கல்லூரி நிர்வாகி!மாலையில் கல்லூரியைப் போய்ப் பார்த்தேன். ‘ஊர்தான் மோசம்; கலூரிக் கட்டிடம் அடுக்கு மாளிகையாக இருக்கும்’  என்று கற்பனைக் காற்றில் கட்டிய கோட்டை இடிந்து விழுந்தது! “இதுவா கல்லூரி?” என்று மூன்றாவது வியப்பு ஏற்பட்டது! அகழ்வாராய்ச்சி நடந்த இடம் போல் காட்சி தந்தது! கல்லூரி முற்றமும் கல்லூரிக் கட்டிடத்தின் நீண்ட கூடங்களும் தாழ்வாராமும் ஒரு சத்திரத்தை நினைவூட்டின!முப்பது ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தையும் காதிர் முகைதீன் கல்லூரியையும் கண்ணால் கண்டவர்கள்தான்,  கல்வித் தந்தை S.M.S.  ஷேக் ஜலாலுதீன் அரும் பாடுபட்டு செங்கல் செங்கலாகக் கல்லூரியை வளர்த்ததையும், கல்லூரியால் ஊர் முன்னேறியதையும் செம்மையாகப் புரிந்து கொள்ள முடியும்.அரச மரத்தைப் பிடித்த சனி, பிள்ளையாரையும் பிடித்ததாம்! அது போல ஊரின் வசதிக் குறைவு, ஊரின் வளர்ச்சியையும் பாதித்துடன் கல்லூரியின் வளர்ச்சியையும் பாதித்தது! அதிரை நகரம் மற்றும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் படித்த பள்ளி மாணவர்களின் மேற் படிப்புக்காகவே கல்லூரி துவக்கப் பட்டது. ஆனால் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் நிறைய மதிப்பெண்கள்  பெற்ற மாணவர[...]



மூன்று வியப்புகள்!!!

2011-12-20T10:16:27.752+05:30

1957- ஆம் ஆண்டு, ஆகஸ்டுத் திங்கள், முதல் நாள், அன்று தான் அதிராம்பட்டினம் மண்ணில் முதல் தடவையாகக் காலை வைத்தேன்! முதல் நாள் அன்றே மூன்று வியப்புக் குறிகள் என் நெஞ்சில் பதிந்தன!கல்லூரி இருக்கும் ஊர் பெரிய நகரமாக, மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், நவ நாகரீக வசதிகள் நிறைந்ததாக இருக்கும் என்று எண்ணி வந்த எனக்குப் புகை வண்டி நிலையத்தைப் பார்த்ததுமே பெரும் அதிர்ச்சி! புகை வண்டி நிலையத்திலிருந்து ஊருக்குள் குதிரை வண்டியில் பட்டணப் பிரவேசம்! மேடு பள்ளங்கள், குண்டு குழிகள் நிறைந்த மண் பாதை! குதிரை வண்டி குளுங்கியும் தூக்கியும் போட்டபடி ஊர்ந்து சென்றது! கடற் கரைத் தெரு தர்கா வைத் தவிர பெரிய கட்டிடம் எதுவும் கண்ணில் படவில்லை! வழி யெல்லாம் புதர்கள், புற்றுகள், முட் செடிகள் மண்டிக் கிடந்தன! பார்வைக்கு எட்டிய வரை கீற்றுக் கொட்டகை வீடுகள், கடைகள்; ஆங்காங்கே சில ஓட்டுக் கூரைகள்! ஊரில் உட் பகுதியில் அங் கொன்றும் இங் கொன்றுமாக மாடிவீடுகள்!வீடுகளில் திறந்த வெளிக் கழிப் பறைகள்! குளிய லறைகள், குடி நீருக்கு மன்னப்பன் குளம்! பேருந்துச் சத்தம் எப்போதாவது கேட்கும்! மயிலாடு துறை மார்க்கத்தில் இரண்டு புகை வண்டிகள்! கூட்டமே இருக்காது! படுத்துக் கொண்டு போகலாம்! மாலை ஆறு மணி ஆகிவிட்டால், வெளியூர்த் தொடர்புகள் அத்தனையும் அறுந்து போகும்!எனக்கு ஏற்பட்ட முதல் வியப்பு, இந்தக் குக்கிராமத்தில் ஒரு கல்லூரி!?முதல் நாள் நான் கண்டது, அதிரையின் புறத் தோற்றத்தை! பழகப் பழக அதன் அகத் தோற்றமும் பழம் பெருமையும் புலனாயிற்று! அதிராம்பட்டினம், அதிவீரராம பாண்டியன் ஆண்ட ஊர்! அதி மதுர கவி அண்ணாவியார் பிறந்த மண்! செல்லி யம்மன் காவல் புரியும் செல்லியம் பதி! தியாகி இப்ராகீம் போன்ற தன்னலமற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடம்! [...]



ஐம்பது ஆண்டுகளுக்கு முன்!

2011-12-13T12:37:20.480+05:30

அதிரை நகரக் கல்வித் தந்தை ஹாஜி எஸ்.எம்.எஸ். ஷேக் ஜலாலுதீன் 28-01-1920 – ல் பிறந்தார். நகரத் தந்தை சேர்மன், முஹம்மது அபுல் ஹசன் மரைக்காயரின் ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை; சேர்மன் தன் தந்தை ஹாஜி ஷேக் ஜலாலுதீன் பெயரைப் பிள்ளைக்குச் சூட்டினார். அதனால் மகனை எப்போதும் ’வாப்பா’ என்றே அழைப்பார்! மற்றவர்களிடம் பிள்யைப் பற்றிச் சொல்லும்போது ‘தம்பி’ என்பார்! இதனால் அவர் எல்லாருக்கும் ‘தம்பி’ ஆகிவிட்டார்!நான் திரு ஷேக் ஜலாலுதீனின் பள்ளித் தோழன்; நான் அவருக்கு இரண்டு வகுப்புகள் இளையவன். அதிராம்பட்டினம்,ஆராவமுத அய்யங்கார் நடு நிலைப் பள்ளியிலும், பட்டுகோட்டை மாவட்டக் கழக உயர் நிலைப் பள்ளியிலும் படித்தோம். ஆராவமுத அய்யங்காரும் அவருடைய இரண்டாவாது மகனும் ஆசிரியர்கள்; அருமையான ஆசிரியர்கள்! அவர்கள் திறம் படப் பாடங்களை நடத்தியதோடு, மாணவர்களை வைத்து நாடகங்களையும், மற்ற கலை நிகழ்ச்சி களையும் நடத்தினார்கள். குறிப்பாக, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பிறந்த நாளன்று கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்படும். அரசு மருத்துவ மனை வளாகம்தான், பள்ளியின் கலை அரங்கம்! ஒரு ஆண்டு சேக்ஸ்பியரின் ’வெனிஸ் வர்த்தகன்’ ஆங்கில நாடகம் நடந்தபோது, அதில் திரு ஷேக் ஜலாலுதீன் நீதிபதியாக நடித்தார்!உடல் தளர்ச்சி காரணமாக ஆராவமுத அய்யங்கார், பள்ளியை மூடிவிட்டார்! அப்போது, தற்போதைய ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மாவட்டப் பகுதிகளில், பட்டுக்கோட்டை – ஒரத்தநாடு இந்த இரண்டு இடங்களில் மட்டுமே உயர் நிலைப் பள்ளிகள் இருந்தன! எனவே மேற் படிப்புக்காக நாங்கள் பட்டுக்கோட்டை போய் வரலானோம்!இப்போது போல அப்போது பட்டுக்கோட்டைக்கு பேருந்து வசதி கிடையாது! ஒரு நாளைக்கு இரு முறையோ, ஒரு முறையோ பேருந்து வரும்; போகும்! பயணக் கட்டணம் 4 அணா! பயணம் செய்வோரும[...]



எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை!

2011-12-13T11:13:29.277+05:30

எம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை! சுருங்கப் பேசுகின்ற எஸ். எம். எஸ்., சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்! உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்! சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியா மனிதரை மசிய வைப்பார்! திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம்! இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர்! மடிக் கணினி வரு முன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில், பணி ஆணைகள் பல அச்சிட்டு, படித்தோர்க்குப் பலன் தந்தார். ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்ஆளுமையில் அடங்கும் துறைகள்;கோட்டுகளும் சூட்டுகளும் வசமாய் மாட்டிக் கொண்டு குட்டுப் படும்! வாசகமொன்று இவர் எழுதிடின்,வக்கணை பேச யாருளர்? பிறர்வாசகத்தை இவர் திருத்திடின், வாய்திறந்து மறுப்போர் யாருளர்? அலுவலகங்களுக்கு ஓர் உடை,விழாக்களுக்கு என்று ஓர்உடை,பிரமுகரைச் சந்திக்க ஓர் உடைஎன்ற வழக்கம் உடையாரல்லர்! யாவும் உடையார்க்கு உயருடையா?பயமே அறியார்க்குப் படை பலமா?தளரா நடையே போதும் அவருக்கு, அடையா இலக்கை அடைவதற்கு! நீட்டோலை வாசியா நின்றவரை,ஏட்டோடு பள்ளிக்கு வரச் செய்தார்!படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர். பட்டறிவில்லா எம் போன்றோரை,பட்டை தீட்டி மதிப் பேற்றினார்! அறிவுரைகளால் அதட்டி என்னைமுது கலையை அடைய வைத்தார்! ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்; ஆசீர்வதித்தார்; தலைமை யாசிரியர்பதவி நெருங்கும் வரை அவர்அன்பில் எம் முயர்வு இருந்தது! பரவட்டும் தாளாளர் புகழொளிபாரெல்லாம்! வல்ல இறைவன்,புவனப் பதவி பல தந்தவருக்கு சுவனப் பதவியை [...]



நடையா, இது நடையா! நற் கடமையன்றோ நடக்குது!

2011-11-03T11:12:32.528+05:30

“நான் வாக்கிங் போகும்போது கச்சலை அவிழ்த்து விட்டு,சலாம் சொல்லிக் கடக்குமளவுக்கு மதிப்பிற்குரிய வாத்தியார்களின் ராஜபாட்டை நடைப் பயிற்சி தொடர்கிறதா?” என்று, உமர் வரலாறு ஆக்கத்துக்குக் ‘கமென்ட்’ எழுதிய கவிஞர் சபீர் கேட்டிருந்தார். அவரின் நினைவூட்டலுக்குப் பின்,ஹாஜா முகைதீன் சாரோடு என் வீட்டில் நடந்த உரையாடலுக்குப் பின், சில ஐயப்பாடுகளும் தொடர்ந்தன!நான் பட்டுக்கோட்டையில் ‘பிஸ்மி ஸ்டேஷனரி’வைத்திருந்தபோது, காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் உள்ள ‘ஷப்னம்’ கடைக்குப் பிளாஸ்டிக் ஃபைல்களும் நோட்டுப் புத்தகங்களும் சப்ளை செய்து கொண்டிருந்தேன். கடையை நடத்திக் கொண்டிருந்தவர் மாற்று மதத்தைச் சேர்ந்த, மாற்றுக் குறையாத் தங்கம்! அவர் எனக்குப் பணத்திற்கு பதிலாக அவரின் மென்மையான பேச்சையும் குணத்தையும் தந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்! சில நாட்களுக்குப் பிறகு நான் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன் – ‘பாஸ்போர்ட்-விசா’ தேவையில்லாத இடத்திற்கு எங்களைத் தவிக்க விட்டுச் சென்று விட்டார் என்று! எங்கள் கணக்கை முன்னரே முடித்துவிட்ட அவர், தன் கணக்கையுமல்லவா முடித்துக் கொண்டார்! ஒருமுறை நான் பட்டுக்கோட்டைக்குச் செல்வதற்காக சேர்மன் வாடி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது,என் அருகில் காரை நிறுத்தி, “அஸ்ஸலாமு அலைக்கும். ஏறிக் கொள்ளுங்கள்!” என்று சொல்லி ஏற்றிச் சென்று என்னைப் பட்டுக்கோட்டையில் விட்டவர்தான், சப்னம் கட்டிடத்தின் சொந்தக்காரர் என்று அறிந்து கொண்டதுடன்,அவர் என் மாணவர் என்றும் அறிந்து பெருமை அடைந்தேன். அவர் சற்று சீரியஸ் ஆகக் காணப்பட்டார்! ஆனால் அவர் பெயர் அப்போது எனக்குத் தெரியாது! இப்போது ஹாஜா முகைதீன் சாரோடு நடந்த உ[...]



மறக்க முடியா மனிதர் (...தொடர்ச்சி)

2011-10-15T22:41:59.997+05:30

இன்றைய நாளில் பெண்கள் மேல் நிலைப் பள்ளியாக விளங்கி வரும் காதிர் முகைதீன் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவான விதம் பற்றித் தெரிந்து கொண்டால்தான் தாளாளர் அவர்களின் தொலை நோக்குச் சிந்தனை எத்தகையது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அதிராம்பட்டினத்து மக்களின் குடி நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் மேலத் தெருவில் அமைந்துள்ள குடி நீர்த் தொட்டியைத் திறந்து வைப்பதற்காக அப்போதைய தமிழக முதல்வர் M.G.R. அவர்கள் அதிரைக்கு வருகை தந்தார். அப்போது அவரிடம் ‘பெண்களுக்காகத் தனியாக உயர் நிலைப் பள்ளி வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்து அதிரை மக்களால் விண்ணப்பம் அளிக்கப்பட்டது. விழா மேடையிலேயே அவ் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த முதலமைச்சர், அப்போது மேடையில் வீற்றிருந்த தமிழக அமைச்சர் மாண்புமிகு S.D. சோம சுந்தரம் அவர்களிடம் விண்ணப்பத்தைக் கொடுத்து, அதிரைக்குப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி அமைவதற்கு உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்! அமைச்சர் S.D. சோம சுந்தரம் அவர்களின் முயற்சியால் அரசுப் பெண்கள் உயர் நிலைப் பள்ளி உருவாவதற்கான பணிகள் தீவிரமாக நடை பெற்று வந்தன! அத் தருணத்தில் காதிர் முகைதீன் மேல் நிலைப் பள்ளியில் கூட்டுக் கல்வி (CO-EDUCATION) முறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பெற்றோர்கள் தாளாளர் அவர்களை அணுகி, ”பலரும் கூடுகின்ற இடமான மெயின் ரோட்டில் அமையவிருக்கும் அரசுப் பெண்கள் பள்ளிக்கு எங்கள் பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு நாங்கள் விரும்பவில்லை. ஊரின் மையப்பகுதி ஒன்றில் பெண்கள் உயர் நிலைப் பள்ளி வருவதற்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களின் வேண்டு கோளை ஏற்றுக் கொண்ட அறக் கட்டளையின் செயலாளர் ஹாஜி S.M.S. அவர்கள் துரிதமாகச[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 14

2011-10-11T23:18:51.036+05:30

சமுதாய அரசியலா, $UM ஆதாய அரசியலா?ஒரு கணிஞனின் கணிப்புடன், ஒரு கலைஞனின் கருத்துரை!உமர் பல இயல்களைக் கற்றிருக்கிறார். ஒவ்வொன்றிற்கும் துவக்க ஆசிரியன் நான்தான்! சில காலம் என்னிடம் கற்ற பிறகு, அவர் எனக்கு ஆசிரியராக மாறிவிடுவார். இயல்களிலேயே ஒரு ஒழுங்கு முறை இல்லாத இயல் அரசியல்தான்! மனிதன் படைக்கப்பட்டபோதே ஷைத்தானுக்கும் மனிதனுக்கும் இடையில் அரசியல் துவங்கிவிட்டது! உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரை அது நீடித்துக் கொண்டிருக்கிறது! ஆன்மீகவாத அரசியல்வாதிகள் அவனைத் துரத்தி, அடித்து, விரட்டிக் கொண்டிருந்தார்கள்! இந்தியாவில் காந்திஜி வரை அரசியல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது! காந்திஜியின் சீடர்களான லால் பகதூர் சாஸ்திரியும் கக்கன்ஜீயும் அரசியல் கற்பைக் காப்பாற்றினார்கள். சாஸ்திரி அரியலூர் இரயில் விபத்தின்போது தன் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்! மந்திரி ஆன பின்பும் கக்கன்ஜீ இரயிலில் மூன்றாம் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்! கண்ணியத்தின் சின்னமான இஸ்மாயில் சாகிப் தன் ஓட்டு வீட்டுக்குத் தாமே ஒட்டடை அடித்துக் கொண்டிருந்தார். கர்மவீரர் காமராஜர் தன் அமைச்சரவையில் எட்டு அமைச்சர்களை வைத்துக்கொண்டு தமிழகத்தை தன் முஷ்டியில் அடக்கினார்.இந்தியாவின் விடுதலைக்காக காங்கிரசும், முஸ்லிம் லீகும் பாடுபட்டன. இரு கட்சிகளின் தேசியப் பற்றில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. காந்திஜி 1940-களில் காங்கிரசையும், முகம்மது அலி ஜின்னா முஸ்லிம் லீகையும் வழி நடத்திச் சென்றனர். முஸ்லிம் லீகில் மற்ற மதத்தவர்கள் இல்லாவிட்டாலும் காங்கிரசில் முஸ்லிம்கள் கணிசமான அளவில் இருந்தார்கள். உதாரணம் மவுலான அபுல் கலாம் ஆசாத்! காங்கிரசை எங்கள் மாமா, மற்றும் S.K.[...]



மறக்க முடியா மனிதர்

2011-10-08T22:57:18.554+05:30

மறக்க முடியா மனிதர் ‘Short Message Service’ என்பதன் சுருக்கமான ‘S.M.S.’ என்ற வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் மற்றும் நவீன தொழில் நுட்பத்தின் பயனாக உலகளாவிய ஒரு வழக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.ஆனால் ‘S.M.S.’ என்ற மந்திரச்சொல் அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் மனதில் – குறிப்பாகக் கற்றோர் நெஞ்சங்களில் நிறைந்து நிற்கிறது! ‘S.M.S.’ என அனைவராலும் அன்பொழுக அழைக்கப்பட்டவரும், எங்களால் ‘பெரியவர்’ என மரியாதையோடு அழைக்கப்பட்டவருமான ‘அதிரையின் கல்வித் தந்தை’ ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி இந்தக் கட்டுரை எழுதுவதற்கு கிடைத்த வாய்ப்பைப் பெரும் பாக்கியமாகக் கருதி மகிழ்கின்றேன். “The reasonable man adapts himself to the world. The unreasonable man wants the world to adapt himself. All progress depends upon the second man.” பேரறிஞர் பெர்னார்ட்ஷாவின் இக்கூற்றைப் படிக்கும் போதெல்லாம் மறைந்த மாமனிதர் - காதிர் முகைதீன் நிறுவனங்களின் நிறுவனர் கல்வித் தந்தை ஹாஜி ஜனாப் S.M.S. ஷேக் ஜலாலுதீன் மரைக்காயர் அவர்களின் உருவமே நம் மனக் கண் முன் வந்து நிற்கும். ஹாஜி S.M.S. அவர்கள் தன் மனதுக்குச் சரி எனப்படும் கருத்தில் தெளிவாக இருப்பார்; அதை அழுத்தமாகச் சொல்லுவார். மற்றவர்களின் எதிர்ப்புகளைக் கொஞ்சமும் பொருட் படுத்தமாட்டார். அவ் வெதிர்ப்புகளை யெல்லாம் தன் வெற்றிக்கு உரமாக்கிக் கொள்வார்! 60 ஆண்டுகளுக்கு முன் அதிராம்பட்டினத்தில் 5-ம் வகுப்பு முடித்த சிறுவர் சிறுமியர்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியாத நிலையில் வசதி வாய்ப்புள்ள வீட்டுப் பிள்ளைகள் வெகு சிலர் பட்டுக்கோட்டை, இராஜமடம் போன்ற ஊர்களிலும், செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் சிலர் சென்னையிலும் படிப[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 13

2011-10-03T22:43:53.095+05:30

ஊரின் தேவைகளும் உமரின் சேவைகளும்உமர் படிக்கும் காலங்களில் பல பொழுது போக்குகளில் ஈடுபட்டிருந்தார். முதலில் அவரது கவனம் ரேடியோவின் பக்கம்தான் திரும்பியது. பத்திரிகைகளில் வரும் ‘ரேடியோ செய்வது எப்படி?’ என்ற கட்டுரையைப் படித்து, டிரான்சிஸ்டர் உதிரி பாகங்களை கடையிலிருந்து வாங்கி சிறிய சாக்பீஸ் பெட்டியில் ரேடியோ செய்தார். அதில் வெற்றியும் கண்டார். படிப்பில் கவனமில்லையே என்று நாங்கள் முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் வாசலில் அவரது ரேடியோ முனுமுனுத்துக் கொண்டிருக்கும்.எல்லா அலை வரிசைகளும் எடுக்கூடிய ஒரு பெரிய ரேடியோ செய்யவேண்டும் என்பதற்காக எங்கள் மாமா எல்லா உதிரி பாகங்களையும் உமருக்கு வாங்கிக் கொடுத்தார்கள். மாணவர் உமரின் ஆனந்தத்தைப் பார்க்க வேண்டுமே! அங்கீகாரம் தந்த மாமா, ரேடியோவின் அங்கங்களையும் வாங்கித் தந்ததும் உமரின் அங்கமெல்லாம் பூரித்தன! எதையும் செய்யத் துடிக்கும் இதயம் கொண்ட உமர், இதையும் செய்யத் துடித்தார் . ஒரே முனைப்பாக இணைப்புகள் கொடுத்தார். ரேடியோ இயங்கத் துவங்கியது. அதை அப்படியே மாமாவிடம் தந்துவிட்டார். எங்கள் மாமாவுக்கு உமரோடு பிணைப்பு அதிகமானது.கல்லூரியில் பேராசிரியர் N.A. சாகுல் ஹமீது ஒலி, ஒளி காட்சிக்குப் பொறுப்பாளராக இருந்தார். அப்போது உமர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். N.A.S. உடன் சேர்ந்து கல்வி தொடர்பான படங்களையும், கலைப் படங்களையும் திரையிட உதவினார். கல்லூரியின் ஆண்டு விழாக்களிலும் இலக்கிய மன்றக் கூட்டங்களிலும் முக்கிய விருந்தாளிகள் மற்றும் பேச்சாளர்களின் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்தார்.உமருக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் மிகுந்திருந்தது. ஒரு விலையு[...]



மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன் - நினைவுகூறுவோம்

2011-10-02T11:18:51.856+05:30

மர்ஹூம் ஹாஜி S.M.S.ஷேக்ஜலாலுதீன்செயலாளர், தாளாளர்; M.K.N. மதரசாமறைவு: 02-10-1986 சுருக்கமாகப் பேசுகின்ற எஸ்.எம்.எஸ்.,சுருக்காய்ச் செயல்படும் எக்ஸ்பிரஸ்!உழைப்பில் எறும்பாய் இயங்கிடுவார்;உறுதியில் இரும்பாய் இருந்திடுவார்!சுவைபடப் பேசிச் சொக்க வைப்பார்;நயம்படச் சொல்லி ரசிக்க வைப்பார்;வசிய வார்த்தையில் சிக்க வைப்பார்;மசியாத மனிதரை மசிய வைப்பார்!திட்டினால் நமக்கு அறிவுரை; அவர்குட்டினால் அனுபவம்! இவைகளின்சொந்தக்காரர் நமது தாளாளர்; தன்சொந்தக்காலில் நின்ற செயலாளர்!மடிக் கணினி வருமுன்னரேமடியில் வைத்துத் தட்டச்சில்,பல பணி ஆணை அச்சிட்டு,படித்தோர்க்குப் பணி தந்தார்.ஆங்கிலத்தை ஆளும் துரை! இவர்ஆளுமையில் அடங்கும் துறைகள்;கோட்டுகளும் சூட்டுகளும் இவரிடம்மாட்டிக் கொண்டு குட்டுப்படும்! வாசகத்தை இவர் எழுதிடின்,திருத்துவோர் யாருளர்? பிறர்வாசகத்தை இவர் திருத்திடின், மறுத்துரைப்போர் யாருமிலர்! அலுவலகத்துக்கு ஓர் உடை,விழாவுக்கு என்று ஓர் உடை,பிரமுகரைச் சந்திக்க ஓர் உடைஎன்ற வழக்கம் உடையாரல்லர். யாவும் உடையார்க்கு உயருடையா?பயமே அறியார்க்குப் படை பலமா?தளரா நடையே போதும் அவருக்கு, அடையா இலக்கை அடைவதற்கு!நீட்டோலை வாசியா நின்றவரை,ஏட்டோடு பள்ளிக்கு வரச்செய்தார்!படிப்பின்றி வீட்டோடு இருந்தோர்,பள்ளியில் சேர்ந்து புள்ளியாயினர்.பட்டறிவில்லா எம் போன்றோரை,பட்டை தீட்டி மதிப் பேற்றினார்! அறிவுரைகளால் அதட்டி என்னைமுதுகலையை அடைய வைத்தார்!ஆசிரியப் பணி வாய்ப்பு தந்தார்; ஆசீர்வதித்தார்; தலைமையாசிரியர்பதவி நெருங்கும் வரை அவர்அன்பில் எம்முயர்வு இருந்தது!பரவட்டும் தாளாளர் புகழொளிபாரெல்லாம்! வல்ல இறைவன்,புவனப் பதவி பல தந்தவர[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 12

2011-10-01T20:38:54.083+05:30

... எனக்கும் உமருக்கும் அமீரகத்தில் இப்போது உறவும் இல்லை, வரவும் இல்லை; அதனால் எந்தப் பற்றும் இல்லை! எல்லாப் பணிகளையும் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து ”எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று சொல்லிக் கொண்டு வரவேற்பறையில் அமர்கிறோம். அன்று தேதி செப்டம்பர் 11 2001. புறப்படுவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன! அந்த நான்கு நாட்களில் உறவினர்களையும் நண்பர்களையும் நேரில் காணவேண்டும்; அல்லது தொலைபேசியில் அவர்களுடன் பேசவேண்டும். வீட்டுக்குத் தேவையான சில பொருள்கள் வாங்க வேண்டும். மீதி நாட்களில் உடலுக்கும் உணர்வுகளுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறோம்.உமர் சோபாவில் அமர்ந்து தொலைக் காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். நான் என் சிந்தனையைப் பின்னோக்கி ஓடவிடுகிறேன்! பள்ளி, கல்லூரி அளவிலும் மாநில அளவிலும் சித்திரத்தின் சரித்திரத்தில் முதல் இடம் பிடித்து, அறுபது வயது வரை கவலை இல்லை என்று சொல்லக் கூடிய தூய ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு, ஷெர்ஷாவையும் ஷாஜஹானையும் நடத்திச் சென்ற நான், அன்று இருந்த அரபு நாட்டுப் பயண அலையால் உந்தப்பட்டு துபாய் வந்ததையும், அடுத்த ஆறு மாதத்தில் காதிர் முகைதீன் கல்லூரி மற்றும் எங்கள் குடும்பத்தின் தூணாக விளங்கிய, எங்கள் மரியாதைக்குரிய மச்சான் (சகோதரி கணவர்) S.M. முஹம்மது பாரூக் அவர்கள் திடீரென இறந்து போனதையும், அதனால் எங்கள் குடும்பம் தடுமாறியதையும், இப்போது அவர்களின் குடும்பத்தின் சுமை என் மீதும் உமர் மீதும் விழுந்ததையும், பட்டுக்கோட்டையில் சுதந்திரமாக இருந்த உமரை துபைக்கு வரவழைத்ததையும், கராமா கிளையில் உமர் தனி மனிதனாகப் பணி புரிந்ததையும், [...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 11

2011-10-01T20:39:11.145+05:30

உமர்தம்பி ஊர் வந்த பிறகு எத்தனையோ முறை நான் துபையிலிருந்து போனில் பேசியிருக்கிறேன். இந்த விமானச் சம்பவத்தை என்னிடம் சொன்னதே கிடையாது! எங்கள் வீட்டில் உள்ளவர்களும் இதுபற்றிச் சொல்லவில்லை! உமர் துபை திரும்பிய பின்தான் சென்ற வாரம் விவரிக்கப்பட்ட செய்திகளை நேரில் கேட்டுத் தெரிந்து கொண்டேன்! உமர்தம்பிக்கு எப்போதுமே விமானம் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்வது மிகவும் த்ரில்லிங்காக இருக்கும்! அந்த நிகழ்ச்சி அவர் வாழ்க்கையிலேயே நடந்துவிட்டது!கட்டுரை வெளியான உடனேயே அதைத் தொடர்ந்து வெளியான பின்னூட்டங்கள் என் கட்டுரையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன. இரத்தம் உறையும் நிகழ்ச்சிகள்! சந்தடி சத்தம் இல்லாமல் என் இரத்தத்தின் இரத்தங்கள் செய்திகளை எனக்கு மறைத்துவிட்டார்கள்! நான் துக்கத்தில் ஆழ்ந்து விடுவேனாம்! தூக்கத்தை துறந்து விடுவேனாம்! ஆழமான அன்புதான்! இவ்வளவு ஆழத்திலா புதைத்து வைப்பது?உமர்தம்பி இந்த முறை ஊரிலிருந்து வந்தபோது குடும்பம் வரவில்லை. குடும்பம் இல்லாததால் சப்பாட்டுக்குத் திண்டாடினோம். ஓட்டல் உணவு உமருக்கு ஒத்துவரவில்லை. துபாய் வந்து இரண்டு நாட்களில் காய்ச்சல் வந்துவிட்டது மருத்துவரிடம் காட்டியும் குணமாகவில்லை. இரத்தப் பரிசோதனைக்குப் பிறகுதான் டைபாய்டு என்று தெரிய வந்தது.இது சோதனையான நேரம். விடுமுறை எடுத்துக்கொண்டு உமர் வீட்டில் இருந்தார். டைபாய்டினால் மிகவும் துன்பமுற்றார். நான் வேலைக்குப் போய்விட்டால் அவரைக் கவனித்துக்கொள்ள ஆள் கிடையாது. நண்பர்கள், உறவினர்கள் என்று எண்ணற்றோர் இருந்தும் அவர்களைப் பயன் படுத்திக்கொள்ள முடியாது. அவரவர் வேலை அவர்களுக்கு. துன[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 10

2011-10-01T20:39:24.504+05:30

உமர்தம்பியும் அவர் மனைவியும் எங்கள் சகோதரி மகன் அபுல் ஹசன் சாதலியும் துபாயிலிருந்து 13-09-1999 அன்று ஊர் புறப்பட்டு வந்தார்கள். அபுல்ஹசன் அவரது திருமணத்திற்காக ஊர் வருகிறார். உமர் தம்பியின் மனைவி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்க வருகிறார். எனவே உடன் வரும் பொருள்கள் அதிகம் இருந்தன. அவற்றை அங்குமிங்கும் நகர்த்துவது கடினமாக இருந்தது. ஒருவாறாக அவர்களை நாங்கள் வழி அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டோம்.அவர்கள் பயணித்தது ஏர் இந்தியா ஜம்போ ஜெட் (Boeing 747) விமானம். அவர்கள் சென்னை வந்து அங்கு இரண்டு நாட்கள் தங்கி ஊர் வர வேண்டும். உமர் ஏர்ப்போர்டிலிருந்து போன் செய்தார். பயணத்திற்கான எல்லா நடை முறைகளும் நல்லபடியாக முடிந்ததாகச் சொன்னார். அவர்கள் மூவரும் புறப்பட்ட செய்தியை வீட்டுக்குத் தொலை பேசி மூலம் தெரிவித்துவிட்டோம். அடுத்து நாங்கள் சென்னையிலிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தது அவர்கள் நலமாக வந்து சேர்ந்துவிட்டார்கள் என்ற நல்ல செய்தியை. எதிர்பர்த்திருந்தபடியே ஊர் வந்து சேர்ந்த செய்தியும் எங்களுக்குக் கிடைத்தது. அடுத்து நாங்கள் எங்கள் வழக்கமான பணிகளைத் தொடர்ந்தோம். நாட்கள் உருண்டோடின! ஒரு மாதத்திற்குப் பின் நான் கேள்விப்பட்ட செய்திதான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.துபாய் விமான நிலையத்தில் பொருள்களை அனுப்பி வைத்துவிட்டு வழக்கமான எல்லாப் பணிகளையும் முடித்துவிட்டு, அனுமதிச் சீட்டும் பெற்று அவரவர் இடத்தில் அமர்ந்துவிட்டார்கள். விமானத்தில் முதலில் எல்லாருக்கும் ஜூஸ் வழங்கினார்கள். 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தில் உணவு பரிமாறப்பட்டது. உமர் தேர்ந்தெடுத்[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 9

2011-10-01T20:39:39.118+05:30

சர்க்கரை நிர்வாகம் பகுதி – 9உமர் தம்பி துபையில் அல் குசைஸ் பகுதியில் வாழ்ந்தார். நானும் நாடு திரும்பும் வரை உமரோடு வாழ்ந்திருந்தேன். பிள்ளைகளுக்கு கல்வியில் உதவி செய்தல் என் போழுதுபோக்கானது. உமரின் பொழுதுபோக்கு என்னவாக இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. உறவினர்களும் நண்பர்களும் அடிக்கடி வந்து போவர்கள். வீடு எப்போதும் கலகலப்பாக இருக்கும். அமீரகத்தில் வாழ்ந்திருந்த நாட்களில் மறக்கமுடியாதவை அல் குசைஸ் வாழ்க்கை.உமர்தம்பி 1983 –ல் துபாய் வந்தார். ஈராண்டுகளுக்குப் பின் விடுப்பில் நாடு திரும்பினார். அல்ஹம்துலில்லாஹ்! அப்போது நல்ல உடல் நலத்தோடு இருந்தார். இரண்டு மாத விடுமுறையை மகிழ்ச்சியோடு கழித்துவிட்டு துபாய் திரும்பினார். இப்போது அவர் உடலில் மாற்றத்தைப் பார்தேன். உடல் மெலிந்திருந்தார். விளக்கம் கேட்டபோது தனக்கு சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகச் சொன்னார். இப்போது உடலைக் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. உணவில் மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்தார். அடுத்தமுறை நாடு திரும்பியபோது சென்னையிலுள்ள நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி மருத்துவம் பார்த்துக்கொண்டார். அப்போதெல்லாம் நோய் மாத்திரைகளுக்கு ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. ஒவ்வொரு விடுமுறையின் போதும் நீரிழிவு நோய் மையத்தில் உமர்தம்பி மருத்துவம் பார்த்துக்கொண்டார்.இவ்வளவுக்குப் பின்னும் இனிப்பு அவர் கட்டுப்பாட்டுக்குள் அடங்க மறுத்தது. இணையம் அவரோடு ஒத்துழைத்தது; ஆனால், கணயம்?! இணையம் இன்சுவையைத் தந்த அளவுக்கு கணயம்இன்சுலினைத் தரவில்லியே! உமர், அலுவலக நிர்வாகம்,[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 8

2011-08-21T00:05:36.360+05:30

பகுதி – 8 (பத்திரிகை, தொலைக் காட்சி) உமர்தம்பிக்கு சிறு வயதிலேயே பத்திரிகை படிக்கும் பழக்கம் வந்துவிட்டது.. நான் கல்கண்டு வாரப் பத்திரிகை வாங்கிப் படிக்கும்போது, அவரும் மர்மக் கதைத் தொடருக்காக கல்கண்டு படிப்பார். வாசிப்புத் திறன் வளர்ந்தவுடன் கேள்வி பதில், அரசியல் கட்டுரைகள், அறிவுக் கட்டுரைகள் முதலியன வாசிக்க ஆரம்பித்தார். நான் வாங்குவதற்கு முன்பே கடையில் போய் வாங்கிவிடுவார். தமிழ்வாணனுக்குப் பின் கல்கண்டின் இனிப்பு கரைந்துவிட்டது. அதைப் படிப்பதையும் நிறுத்திக்கொண்டார். துக்ளக் பத்திரிகை வெளிவந்த புதிதில் பரபரப்பாக விற்றுக் கொண்டிருந்தது. சோவுடைய கேள்வி பதில்களும், தலையங்கமும், வேடிக்கையான அரசியல் கட்டுரைகளும், மருத்துவரின் கட்டுரைகளும் சுவாரஸ்யமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதைத் தவறாமல் வாங்கிப் படிப்பார். பட்டுக்கோட்டைக்கு பஸ்சில் போகவர இருக்கும்போது, பஸ்ஸிலேயே துக்ளக்கைப் படித்து முடித்துவிடுவார் தமிழில் ‘இந்தியா டுடே’ நடு நிலை நழுவாமல் வந்துகொண்டிருந்தது. அந்தப் பத்திரிகையையும் படித்தார். எலக்ட்ரானிக் தொடர்பான பத்திரிகைகள் அஞ்சலில் வந்துகொண்டிருந்தன. தமிழ்க் கம்ப்யூட்டர், ELECTRONICS FOR YOU, P.C. MAGAZINE ஆகிய பத்திரிகைகளை சந்தா கட்டி வரவழைத்தார். அவற்றை விரும்பிப் படித்தார். அவற்றிலிருந்து புதுப்புது கண்டு பிடிப்புகளைப் பற்றி அறிந்துகொண்டார். அவற்றை தன் தொழிலில் கையாண்டார். கணினி, எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான புத்தகங்களை வாங்கி வைத்திருந்தார். செய்தித்தாள்களில் இந்து மட்டும் படிப்பார். குமுதத்தில் வந்துகொண்டிருந்த சுஜாதாவின் க[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி 7

2011-10-01T20:40:02.467+05:30

உமர்தம்பிக்கு விளையாட்டுக்களில் ஆர்வமுண்டு; ஆனால் அவர் விளையாட்டு வீரர் அல்லர். விளையாட்டு நுணுக்கங்களை அறிந்து வைத்திருந்தவர். அவ்வப்போது நடைமுறையில் உள்ள கிரிக்கட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ் ஆட்டங்களின் விதி முறைகளும் உமருக்குத் தெரியும். விளையாட்டுக்களைப் பார்த்து ரசிப்பதில் தனி மகிழ்ச்சி.நான், உமர் சிறுவனாக இருக்கும்போது உலகக் குத்துச் சண்டைச் சாம்ப்பியனாக இருந்த முகம்மது அலியைப் பற்றி கதை போல நிறையச் சொல்வேன். பன்னிரண்டு வயதில் சைக்கிளைத் தொலைத்தது; ஒரு போலீஸ்காரரிடம் குத்துச்சண்டை பழகியது; அவர் சொல்லித் தராத வித்தைகளை எல்லாம் அவரிடமே காட்டியது; ஒலிம்பிக்கில் இரண்டு முறை வென்று தங்கப் பதக்கம் பெற்றது; குத்துச் சண்டையின் எல்லா ஜாம்பவான்களுக்கும் சவால் விட்டது என்று எல்லா செய்திகளையும் சொல்வேன். மிக ஆர்வமாகக் கேட்பார். பிறகு முகம்மது அலியின் சண்டையைப்பற்றி எந்தப் பத்திரிகையில் வந்தாலும் படிப்பார். இலங்கை வானொலியில் அலியின் சண்டை நடந்து கொண்டிருக்கும்போது நேரடி ஒலிபரப்பைப் பரபரப்பாகக் கேட்பார். இப்போது காற்று திசை மாறி அடிக்க ஆரம்பித்தது! முகம்மது அலி பற்றி உமர் எனக்குச் சொல்லத் துவங்கினார்! உமர் துபாய் வந்த பிறகு, அலி தனது குத்துச்சண்டை எதிரிகளான, ஜோபிரேஜியர், ஃபோர்மன், நார்டன் ஆகியோருடன் போட்ட பிரபலமான சண்டைகளின் வீடியோ கேசட்டுகளை வாங்கிப் போட்டுப் பார்த்தார்.முகம்மது அலி ஓய்வு பெற்றார். அவர் பார்க்கின்சன் நோயால் துன்பப் பட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அமெரிக்காவில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடந்தன. அதன் [...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 6

2011-10-01T20:40:21.064+05:30

பகுதி – 6எகிப்து ஓர் ஆப்பிரிக்கநாடு. நைல் நதியின் நன்கொடை என்று அழைக்கப்படும் நாடு. மெசபடோமியா, சிந்துவெளி நாகரீகங்களுக்கு இணையான நாகரீகத்தைக் கொண்ட நாடு. காகிதத்தை உலகிற்குத் தந்த நாடு. உயர்வகைப் பருத்திக்குப் பெயர் பெற்ற நாடு. மிகப் பெரிய சூயெஸ் கால்வாயை தன்னகத்தே கொண்ட நாடு. பிரமிக்க வைக்கும் பிரமிடுகளைக் கொண்ட நாடு.இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட எகிப்து நாட்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பானாசோனிக் தொலைபேசி நிறுவனம் நடத்தியது. அந்த நாடுகளில் தன் நிறுவனத்தின் தொலை பேசிக் கருவிகள் செயல்படுவதை மேலும் மேம்படுத்துவதற்காக பானாசோனிக் தொலைபேசி நிறுவனம், முயற்சியை மேற்கொண்டது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பாக உமரை எகிப்துக்கு ஒமான் நேஷனல் அனுப்பி வைத்தது. உமர் போலவே தென்கிழக்காசிய நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். ஜப்பானிலிருந்தும் நிபுணர்கள் வந்திருந்தனர். நான்கு நாட்கள் கலந்தாய்வுக் கூட்டங்களில் கலந்து கொண்டார் உமர். வல்லுநர்கள் தங்கள் அனுபவங்களைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர்.எகிப்துக்கு அங்கே உள்ள புராதனச் சின்னங்களைப் பார்ப்பதற்காகவே வெளிநாட்டினர் வருகின்றனர். சூயெஸ் கால்வாய்க்கு அடுத்தபடியாக வருமானம் சுற்றுலாத் துறையிலிருந்துதான் கிடைக்கிறது. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள புராதனச் சின்னங்களை கண்டு வரலாற்று உண்மைகளை உணரலாம். இப்படிப்பட்ட இடங்களைக் கண்டு களிக்கும் வாய்ப்பு உமருக்குக் கிடைத்தது. எகிப்தில், நைல் நதிக் கரையில் அமைந்துள்ள ‘ஷெரட்டன்’ ஐந்[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 5

2011-10-01T20:41:04.842+05:30

ஹஜ் பயணம்உமர் அல் ஃபுத்தைமில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சக பாக்கிஸ்தானியர்களுடன் நட்புக் கொண்டிருந்தார். பாக்கிஸ்தானியர் கார் மூலமாகவோ பஸ் மூலமாகவோ ஹஜ்ஜுக்குப் போய் வருவதை அறிந்திருந்தார். இவருடன் பணி புரிந்த நண்பர்கள் உமர் ஹஜ் செய்வதை ஆர்வப்படுத்தினர். துபாயிலிருந்து கார், பஸ், விமானம் மூலம் ஹஜ்ஜுக்குச் செல்வது எளிது. அந்தக்கடமையை செய்துவிடுமாறு அடிக்கடி கூறுவர்.உமர் என்னை ஹஜ் செய்துவரும்படி வற்புறுத்தினார். பொருள் ஈட்ட வந்த இடத்தில் ஹஜ் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியவர் உமர்தான். அந்த நன்மையில் அவருக்கும் பங்கு உண்டு. நான் விமானம் மூலம் சென்று வந்தேன். ஆனால் உமர் தேர்ந்தெடுத்ததோ பஸ் பயணம்!ஹஜ் சீசனில் ஹஜ்ஜுக்கு பஸ் மூலமாக அழைத்துச் செல்வதை சிலர் தொழிலாகவே துபாயில் நடத்தி வந்தனர். செலவு குறைவு; மிகவும் துன்பத்துக்குள்ளாக நேரிடும். இது உமருக்கு நன்கு தெரியும். மனைவியுடன் பஸ் மூலமாகப் போய் வர முடிவெடுத்தார். பஸ் பயணம் ஒத்து வருமா என்பது எங்கள் கவலை. உமர்தம்பி இறைவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு ஹஜ் பயணத்தை மேற்கொண்டார். துன்பங்களை எதிர் நோக்க முன்பே ஆயத்தமாகிவிட்டதால் அவற்றைத் தாங்கிக்கொண்டார்.சாலை எங்கும் போக்கு வரத்து நெரிசல். இடையிடையே சோதனைச் சாவடிகள் பொறுமையைச் சாகடித்தன. வாகனங்கள் ஊர்ந்துதான் செல்லும். தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் தேவை; தொலை தூரப் பயணமாதலால் குளிர்ச்சாதனம் வேலை செய்யாது! நினைத்தால் இறங்கி அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாது. பஸ் நிறுத்தப[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 4

2011-07-23T22:53:53.414+05:30

உமர் தன் நண்பர் அன்சாரியின் வழிகாட்டலில் பம்பாய் வந்து நேர்முகத் தேர்வில் தேறி, விசா பெற்றார். அவருக்கு விசா வழங்கியவர் ஒரு சிந்தி; பகுதி 3-ல் சொல்லப்பட்டவர்தான். பாடியா பிரிவைச் சேர்ந்தவர். துபையில் முதலில் குடியேறிய இந்தியர்களுள் இவர்களும் குஜராத்திகளும் சேருவர். துபை வளர்வதற்கு இவர்களும் காரணமாவர் என்று கூறக் கேட்டதுண்டு. பாடியாவுக்கு தேரா துபையிலும் கராமாவிலும் தொழில் கூடங்கள் இருந்தன. இது தவிர உதிரி பாகங்கள் கடையும் இருந்தது. இவரிடம் பம்பாய்க்காரர்கள், பாகிஸ்தானியர், மலையாளிகள், தமிழர்கள் என பல பிரிவினர் பணி புரிந்திருக்கின்றனர். உமர்தம்பி கராமா மின்னணு சாதனங்கள் செப்பனிடும் தொழிற் கூடத்தின் பொறுப்பாளராகப் பணி ஏற்றார்.சத்வாவில் பணிபுரிந்த நான் பணிமுடித்து டாக்சியில் வந்து கராமாவில் இறங்கிவிடுவேன். உமர்தம்பி பணி முடித்த பிறகு இருவரும் மீண்டும் டாக்சியில் புறப்பட்டு பர்துபை வருவோம் அங்கிருந்து அப்ரா (படகு) மூலமாக தேரா வருவோம். இது கொஞ்ச நாட்கள் நீடித்தது. உமர் பணி புரிந்த தொழிற்கூடத்தில் எல்லா வகையான மின்னணு சாதனங்களையும் செப்பனிடுவதுண்டு. ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் வெகு அவசரமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டுவந்து “இதை உடனே செப்பனிட வேண்டும்” என்றார். அவர் ஓர் அராபியர். பொதுவாகப் பணியைத் தொடங்குவதற்கு முன்னதாக சிலர் செலவு எவ்வளவு ஆகும் என்ற மதிப்பீட்டைக் கோருவார்கள். அவர் தனக்கு அப்படியெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை பணி முடிந்து வரும்போது தனக்கு தொ[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 3

2011-07-16T21:52:45.186+05:30

சிறு வயதில் உமர்தம்பி நோயால் நோவினை அடைந்தார். அவர் ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘டெட்டனஸ்’ என்ற வாய்ப்பூட்டு நோய் ஏற்பட்டது. இதில் பிழைப்பவர்கள் சிலரே! சிறுவர்கள் உள்ளங் காலில் புண் ஏற்பட்டால் அதைக் கவனிக்காமல், மாடு, குதிரை இவற்றின் சாணம் போன்றவற்றை மிதித்து நடந்தால் ஏற்படும் நோய். உடல் விறைத்துவிடும்; வாய் திறக்க முடியாது; சிறு ஒலியைக் கேட்டால் கூட தாங்கிக்கொள்ள முடியாது! இந்த நோயால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் தஞ்சை மிராசுதார் மருத்துவ மனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது. விலை உயர்ந்த ஊசி போடப்பட்டது. இதற்குப் பிறகு எங்களின் முழு கவனமும் உமர்மீது திரும்பியது. இந்நோயால் படிப்பு பாதிக்கப்பட்டது. அன்னையார் செல்லம் கொடுக்கத் துவங்கினார்கள். உமர் படிக்கும் காலத்திலேயே வேளா வேளைக்குச் சாப்பிட மாட்டார். நண்பர்களோடு ஆராய்ச்சிப் பேச்சுக்கள் பேசிக் கொண்டிருப்பார். ஏதாவது கருவிகளோடு போராடிக் கொண்டிருப்பார். அம்மாவின் கூப்பாடும் சாப்பாடும் பெரிதாகத் தெரியாது. நேரத்திற்குச் சாப்பிடாததால் வயிற்றுப் புண் ஏற்பட்டது. பள்ளியில் படிக்கும் காலங்களில் வயிற்றுப் புண்ணால் மிகவும் அவதிப்பட்டார். வயிற்றில் புண்ணையும் கருவிகளில் கண்ணையும் வைத்திருந்ததால் எண்ணும் எழுத்தும் எட்டி நின்றன. ஒரு முறை துபாயில் அவருக்கு அம்மை நோய் கண்டது. 15 நாட்கள் வேலைக்குச் செல்லாமல் அறையிலேயே தனியாக இருந்தார். ஆள் துணையின்றி மிகவும் துன்பப்பட்டார். பொறுமையாக இருந்தார். பொறுமைக்குப் பரிசும் காத்திருந்தது! [...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 2

2011-07-12T22:35:35.601+05:30

இதற்கிடையில், உமருக்கு மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது! இயற்கையிலேயே உமருக்கு இயற்பியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். நம் கல்லூரியில் இளங்கலையில் இயற்பியல் பாடம் இல்லை. வேறு வழியின்றி உயிரியல் (Zoology) பாடத்தை எடுத்துப் படித்தார்!பறவைகள், மிருகங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் அலாதியான ஆர்வம்! உலகிலேயே பறவை ஆராய்ச்சியில் மிகப் பிரபலம் அடைந்திருந்த சலீம் அலி பற்றி என்னிடம் நிறையச் சொல்வார்! இவ்வளவு ஆர்வம் இருந்தும், நன்கு படித்து முதல் வகுப்பில் தேர்வு பெறவேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது! நன்கு படித்து, நல்ல வேலையில் சேரவேண்டும் என்பதெல்லாம் அவருக்குப் பிடிக்காது. ’ஆராய்ச்சிக்குத் தடை போட்டுவிட்டு, வருவாயைத் தேட முற்படுவதா?’ என்பார். தன்னிடமிருந்து அப்படியெல்லாம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பார். கடை நடந்த காலங்களில் பட்டுக்கோட்டைக் கண்ணப்பாவுக்கு உதிரி பாகங்கள் (spare parts) வாங்குவதற்காக அடிக்கடிச் செல்வார். இவருடைய திறமையை அறிந்த கண்ணப்பா முதலாளி, தன் கடையில் வந்து பணி செய்யும்படிக் கேட்டிருந்தார். காலச் சூழ்நிலை, பணி செய்யும்படி அவரை விரட்டியது. முன்பு ஏற்பட்ட பழக்கம் காரணமாக, கண்ணப்பாவில் பழுது நீக்கும் பணியில் அமர்ந்தார். 'பிலிப்ஸ்' ரேடியோவின் பழுது நீக்கும் பணி புரிந்தார். அப்போது தொலைக் காட்சி அறிமுகமான காலம்! பட்டுக்கோட்டை வட்டாரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை உமர் இயக்கிக் காட்டினார்! மருத்துவப் படிப்பு படிக்கவேண்டும் என்ற அவ[...]



வா.. வரையும் சரித்திரச் சித்திரம் - பகுதி - 1

2011-07-12T22:34:46.133+05:30

உலகப் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீரர் முகம்மது அலி கிளே, தனக்கு வயது எட்டு மாதம் ஆனபோதே நடக்கத் துவங்கி விட்டாராம்! நம் உமர் தம்பியும் தனக்கு வயது எட்டு மாதம் ஆகும்போதே நடந்துவிட்டார்!ஏன் இந்த ஒப்பீடு? செயற்கரிய செயல்களைப் பிற்காலத்தில் செய்ய இருப்பவர்களின் தொடக்க வாழ்வு, பெரும்பாலும் இப்படித்தான் இருந்துள்ளது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான். இரண்டு, மூன்று வயதில் தன் மழலை வாயால் திருக்குறள்களை ஒப்புவிப்பார்! அந்த வயதிலேயே டார்ச் விளக்கு மூடியைத் திறந்து, பேட்டரி செல்களை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு விளையாடுவார்! அவர் பள்ளியில் சேருவதற்கு முன்பே எடிசன், மார்க்கோனி, ஸ்டீவன்சன், ஜேம்ஸ் வாட் இவர்களைப் பற்றிக் கதையாகச் சொல்வேன். அவரை விஞ்ஞானி ஆக்கவேண்டும் என்பது என்னுடைய அன்றைய ஆர்வம்! பேராசைதான். தன் உடன்பிறப்பை உயர்ந்தவனாக ஆக்கிப் பார்க்க மூத்த சகோதரனுக்கு ஆசை எழுவதில் வியப்பில்லைதானே? சிறுவயதிலேயே அறிவியலில் ஆர்வம் மிக உண்டு! நமதூர் காதர் முகைதீன் உயர்நிலைப் பள்ளி முன்பு கீற்றுக் கொட்டகையில் நடந்தது. உமர் தம்பி ஆறாம் வகுப்பு ஆங்கில வகுப்பில் அமர்ந்துகொண்டு, அடுத்திருந்த ஏழாம் வகுப்பில் திரு. ரெங்கராஜன் சார் நடத்தும் அறிவியல் பாடத்தை உன்னிப்பாகக் கவனிப்பார்! அதை என்னிடம் வந்து சொல்வார்! திரு ரங்கராஜன் சார் வகுப்பு என்றால் நிரம்பப் பிடிக்கும் உமர் தம்பிக்கு. மார்க்கோனியைப் போல வானொலிப் பெட்டி செய்யவேண்டும் என்று சிறு வயதிலேயே ஆசை! எங்கள் வீட்டு வ[...]



ஏன் இந்தத் தொழிலாளர் பஞ்சம்?

2011-06-27T05:51:57.369+05:30

இன்று உழைப்புக்கும் உழைப்பாளிகளுக்கும் கடும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அன்றாட வேலைகளை முடிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. அது எந்த வேலையாக இருந்தாலும் சரி. அதற்கான காரணங்களை ஆராய்வோம்.
இன்று இந்தியாவில் கல்வி கட்டாயக் கடமை ஆகிவிட்டது. கல்வியின் அவசியம் பல ஆண்டுகளுக்கு முன்பே உணரப்பட்டுவிட்டது. அரசு, குறிப்பாகத் தமிழ்நாடு அரசு கல்வியில்தான் அக்கறை செலுத்தியது. கர்ம வீரர் காமராஜ் காலத்தில் இலவசக் கல்வி கொண்டு வரப்பட்டது. இலவசப் பகல் உணவும் வழங்கப்பட்டது.
எல்லா இனத்தவரும் கல்வி கற்கத் துவங்கினார்கள். கட்டிடத் தொழிலாளர் முதலாக எல்லாத் தொழிலாளர் வீட்டுப் பிள்ளைகளும் கல்வி கற்க முன் வந்தனர். இந்த வேகத்தால் சாணக்கியர் ராஜாஜியின் குலக் கல்வித் திட்டமும் தோல்வியைத் தழுவியது.
கல்வி கற்பதற்கே நேரம் போதாததால், தொழிலாளி வீட்டுப் பிள்ளைகளில் சிலர் தங்கள் தொழிலைக் கற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் தங்கள் மேற் படிப்பை முடித்துக் கொண்டு, வேறு வேலைகளைத் தேர்ந் தெடுத்தனர். எல்லா சமூகத்தினருக்கும் அயல்நாட்டு மோகம் எழுந்தது. தொழில் வர்க்கம் சும்மா இருக்குமா? அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பும் இருந்தது. அங்கு தன் பெற்றோரைவிட பல மடங்கு ஈட்டுவதற்குரிய வாய்ப்பை உணர்ந்தனர். எனவே வெளிநாடு சென்றனர்.
பிள்ளைகள் அல்லது சகோதரர்கள் வெளிநாட்டில் இருந்ததால் தொழிலாளர்களுக்கு வருவாய் தேடவேண்டும் என்ற முனைப்பு குறைந்தது. அவர்களின் வாழ்வாதாரங்களை அரசே தர முன் வந்தது. உணவுத் தேவையின் அடிப்படையாகவுள்ள அரிசி இலவசமாகக் கிடைத்து விடுகிறது. குழந்தைகளுக்குக் கல்வியோடு உணவு, புத்தகங்கள், சீருடை இலவசம்.
தொலைக் காட்சிப் பெட்டி இலவசம்; அது இயங்கும் மின்சாரம் இலவசம். வீட்டுக்கு வருகிற தொழிலாளி தொலைகாட்சி முன்னால் அமர்ந்து கொண்டு வருவாயைத் தொலைத்து விட்டு, பின்னால் தங்கிவிடுகிறான். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டதர்க்கு இவைதான் கரணம்.
இந்நிலை மாற வேண்டுமானால் அரசு இலவசங்களை ரத்து செய்யவேண்டும். தொழில் செய்ய மறுப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். தொழில் என்பது எல்லாருக்கும் பொதுதான். தொழில்களை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஈடுபட்டு பொருள் ஈட்ட முன் வரவேண்டும். தொழில் நுட்பம் வளர்ந்துவிட்ட காலம் இது. எந்தத் தொழிலையும் வெற்றிகரமாகச் செயய முடியும். அயல் நாடுகளில் எந்தத் தொழிலையும் செய்ய ஆயத்தமாக இருக்கும்போது, உள்நாட்டில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?
மாணவர்கள் தொழில் படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். தொழில் படிப்பு என்றும் கை கொடுக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கும். தொழில் வளர்வதற்கும் மக்களின் தேவைகள் நிறைவேறுவதற்கும் பொருளாதாரம் மேம்படுவதற்கும் தனி மனிதன் முதல் சமூகம் வரை அயராது பாடுபடவேண்டும்.
உழைப்பு உடல் நலத்தைத் தரும். வருவாயைத் தரும். மன மகிழ்வைத் தரும். நிம்மதியான வாழ்க்கை அமையும். நம் உயிர் காக்கும் உழைப்புக்கு உயிர் கொடுபோம்.
வாவன்னா



தனியார், பேராசை தணியார்!

2011-06-26T11:50:55.019+05:30

கல்வி வாணிபப் பொருளாகிவிட்டது. எந்த அளவுக்கு அரசு கல்வியை இலவசப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கிறதோ, அதற்கு நேர் மாறாக தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வியை விலை உயர்ந்த வாணிபப் பொருளாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.தனியார் கிராமங்களையும் விட்டு வைக்கவில்லை. ஐந்தாவது வரை தனியார் ஆங்கிலப் பள்ளிகள் துவக்கப்படுகின்றன. போதாதற்கு இந்தி வேறு கற்றுத் தருகிறார்களாம். எல்லாம் பணம் பண்ணத்தான். இவற்றில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர் வரிசையில் நிற்கின்றனர். பாவம், இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது ஆசிரியைகளே தமிழ்வழி கல்வி கற்றவர்கள் என்று.நகரங்களில் பெற்றோர் படித்தோராக இருப்பதால் பள்ளிகளையும் கவனிக்கிறார்கள்; பிள்ளைகளையும் கண்காணிக்கிறார்கள். ஆசிரியர்களுக்கு சம்பளம் பள்ளியே கொடுப்பதால் மாணவர்களிடமிருது கட்டணம் வசூலித்துத்தான் ஆகவேண்டும். இருந்தாலும் அதற்ககு ஒரு எல்லை உண்டு அல்லவா?அந்த எல்லையை நிர்ணயிக்கத்தான் கருணாநிதி அரசு கோவிந்தராஜன் குழுவை அமைத்தது. அக்குழு நிர்ணயித்த கட்டணத்தில் திருப்தி இல்லை என்று மேல் முறையீடு செய்தன. முறையீட்டை விசாரிக்குமுன் கோவிந்தராஜன் பதவியைத் துறந்தார். அரசு ரவிராஜ பாண்டியன் குழுவை அமைத்தது.ரவிராஜ பாண்டியன் குழு அறிவித்த கட்டணம் பெற்றோர், பள்ளி இவற்றின் எதிர்ப்பைச் சந்தித்தது. தனியார் பள்ளிகளுக்கு, பெற்றோரைப் பாதிக்கும் அளவுக்கு இக்குழு சலுகை செய்துள்ளது என்று பரவலாகப் பேசப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு உள்ளுக்க[...]