Subscribe: நதிக்கரை
http://feeds.feedburner.com/Nathikarai
Preview: நதிக்கரை

நதிக்கரை:: Nathikarai.in :: Science & TechnologyLast Build Date: Wed, 21 Feb 2018 06:22:24 PST

 தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும் - 2

Tue, 05 Jul 2016 20:55:31 PDT

டிஜிட்டல் சாதனங்களின் தயாரிப்பிலும் பயன்பாட்டிலும் பின்னணியில் உள்ள சுவாரசியமான காரணங்களைப் பற்றி விளக்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் இணைய உலகிலும், மென்பொருள் துறையிலும் புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் உருவான காரணங்களைப் பற்றிப் பார்ப்போம். கூகுள் 1998ல் கூகுளின் முதல் இணையதள வடிவமைப்பு 1996ம் வருடம் ஸ்டார்ன்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான(image)தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும்

Tue, 28 Jun 2016 21:04:54 PDT

கணினி, கைபேசி, டிஜிட்டல் கடிகாரம் எனப் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதில்லை.கணினியின் விசைப்பலகையில் f மற்றும் j எழுத்துக்கள் உள்ள கீகளில் மட்டும் சிறு மேடு போன்ற அமைப்பு ஏன் தரப்பட்டுள்ளது? குவெர்ட்டி கீபோர்டு என்று ஏன் குறிப்பிடப்படுகிறது? விண்டோஸ் எக்ஸ்பியில் புகழ்பெற்ற பசுமை சமவெளியும்(image)ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது நீங்களா? உங்கள் ஃபோனா?

Tue, 14 Jun 2016 20:48:55 PDT

இன்றைய நிலையில் கையடக்க கணினியாக, குறிப்பெடுக்க உதவும் குறிப்பேடாக, தனிப்பட்ட விபரங்களைப் பதிந்து வைக்கும் டைரியாக, அன்றாட வேலைகளை திட்டமிட உதவும் நாட்குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கணக்காளனாக, உறவு, நட்பு, வணிகத் தொடர்புகளுக்கு பாலமாக எனப் பல நிலைகளில் நமக்கு பேருதவியாக மாறி இருப்பது ஸ்மார்ட் போன்கள்.ஆசைக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கி உரையாடவும், பாடல் கேட்கவும், கேம்ஸ் விளையாடவும்,(image)நேரத்தை விரையமாக்கும் தொழிற்நுட்ப சாதனங்கள்

Tue, 28 Oct 2014 12:34:23 PDT

புதிய தொழில்நுட்பங்கள் உருவாவது வேலையை எளிதாக்கவும், விரைவாக செயல்படவும்தான் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இன்றைய டிஜிட்டல் சாதனங்கள் நமது கவனத்தை சிதறடித்து நேரத்தை விரையமாக்குவதாக பல நாடுகளிலும் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அயல் நாட்டு மக்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அதன் முடிவுகள் இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது. உடல் உறுப்பா கைபேசி?(image)பின்தங்கிய விண்டோஸ் - முன்னேறிய ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட்

Wed, 20 Aug 2014 22:21:52 PDT

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இணைய வெளியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத நிலை, மற்றொரு பக்கம் தன்னுடைய முதுகெலும்பாக இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தின் 8வது பதிப்பு எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது என அடுத்தடுத்து சரிவுகள்தான். டெஸ்க்டாப் கணினிகளில் இன்றுவரை விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்பாடு குறையவில்லை என்றாலும்(image)வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஏன் வாங்கியது ஃபேஸ்புக்

Mon, 03 Mar 2014 00:53:41 PST

தொழில்நுட்ப உலகின் சமீபத்திய பரபரப்பாக பேசப்படுவது வாட்ஸ்அப் (whats up) மென்பொருளை ஃபேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி) வாங்கியது பற்றித்தான். இத்துறையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு நிறுவனம் வாங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அப்படி என்ன இருக்கிறது? ஃபேஸ்புக் ஏன் இவ்வளவு(image)அறிந்து கொள்வோம்: கோப்பு சுருக்கமும், ரகசிய குறிமுறையாக்கமும்

Wed, 11 Dec 2013 02:15:59 PST

சிறு சிறு ஃபைல்களை  வகை பிரித்து தனித்தனி ஃபோல்டர்களில் பிரித்து வைப்பது தகவல் காப்பக மேலாண்மையில் முக்கியமாகும். ஃபைல்களை பொதுவில் வைக்காமல் அதனை சுருக்கியோ (Compression) அல்லது எளிதில் பிறர் அறிந்த கொள்ள முடியாத வகையில் சங்கேத குறிமுறைக்கு (Encrypt) மாற்றிப் பாதுகாப்பதும் தற்காலக் கணினி நுட்பத்தில் முக்கிய நடைமுறையாகும். பல கோப்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி ஒரே கோப்பாக மாற்றுதல் ((image)கைபேசிகள் தோற்றுவிக்கும் புதிய உடல் நலக் குறைபாடுகள்

Wed, 10 Oct 2012 08:35:47 PDT

இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மாறியிருப்பது கைபேசிகள். சாதாரண கைபேசி தொடங்கி, ஸ்மார்ட்போன், டேப்ளட் எனப்படும் விலையதிகக் கணினிப் பயன்பாட்டுச் சாதனங்கள் வரை அனைத்தும் சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசம் இல்லாமல்  அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன. அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய அற்புதக் கண்டுபிடிப்பு இக்கைபேசிகள். ஆனால், அதனை அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் எண்ணற்ற(image)நீங்களும் உருவாக்கலாம் பார்கோட்

Tue, 14 Aug 2012 11:07:03 PDT

வர்த்தகப் பயன்பாட்டில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பார்கோடு முறையாகும். இன்று பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் எனப் பல இடங்களிலும் பார்கோட் (Barcode) கள்  பயன்படுத்தப்படுகின்றன.  பார்கோட் வடிவில் நதிக்கரை பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவற்றிலும் இக்கோடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள்(image)மனிதனையும், கணினியையும் வேறுபடுத்தும் "கேப்ட்சா"

Tue, 14 Aug 2012 07:47:24 PDT

இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல்   சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும். இது எதற்கு? இதனால் என்ன நன்மை? என்று கேள்வி தோன்றும். இந்த கேப்ட்சா அமைப்பு இணையக்(image)பயன்பாட்டிற்கு வரும் புதிய IPv6 முகவரி முறை

Tue, 05 Jun 2012 12:03:28 PDT

இன்று முதல் இணையத்தின் புதிய முகவரி முறை அமலுக்கு வருகிறது. ஐபிவி 6 (IPv6) என்றழைக்கப்படும் இம்முறை இணைய வளர்ச்சியில் ஒரு புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. ஐபி முகவரி (Internet Protocol Address) என்பது கணினி, இணையதளம் மற்றும் இணையம் சார்ந்த சாதனங்களைத் தொடர்பு கொள்ள உதவும் எண்ணாகும். தற்போது உள்ள பழைய முறையான ஐபிவி4 (IPv4) என்பது 32 பிட் முறையில் உருவாக்கப்பட்டது. இதில் குறைந்த அளவு இணைய(image)கூகுள் தேடலில் புதிய சேவை

Mon, 28 May 2012 04:38:23 PDT

கூகுள் தேடல் வசதியில் புதியதாக அறிவு வரைபடம் (Knowledge Graph) என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இணையத் தேடல்தான் கூகுள் தொடங்கிய முதல் சேவை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் இணையப் பக்கங்களில் உள்ள செய்திகளில், நாம் தேடும் தகவல் எதிலெல்லாம் உள்ளது என்பதைத் கண்டுபிடித்துத் தருவதுதான் இதன் முக்கியப் பணி. அதில் தேடுபவர் இதைத்தான் தேடுகிறார் என்பதை நுணுக்கமாக அறிந்து ஒரு நொடிக்குள்ளாக(image)பிடிஎப் கோப்புகளை ஒளிப்படமாக மாற்ற

Fri, 27 Apr 2012 07:10:00 PDT

பிடிஎப் கோப்புகளை ஜெபெக் கோப்பாகவும், ஜெபெக் கோப்புகளை பிடிஎப் வடிவத்திற்கு மாற்றவும் ஃபோட்டோஷாப் அல்லது அடோப் பிடிஎப் புரொபஷனல் ஆகிய வணிக மென்பொருள்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றைப் பயன்படுத்தாமல் இலவசமாக கோப்புகளை மாற்ற உதவும் மென்பொருள்களை http://www.fm-pdf.com/pdf-to-jpg-free.html என்ற இணைய தளம் வழங்குகிறது. இம்மென்பொருளில் பிடிஎப் கோப்புகளை தேடும் வசதி, HTTP மற்றும் FTP மூலம்(image)இணையதள வீடியோவிற்கு ஏற்றம் தந்த யு ட்யூப்

Fri, 27 Apr 2012 03:31:44 PDT

இணைய உலகில் உள்ள நிறுவனங்களிடையே கடும் போட்டிகளும், அதனால் தோன்றும் புதிய புதிய வசதிகளும் பெருகிக் கொண்டே போகின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு ஆமை வேகத்தில் இருந்த இணையம் இன்று பல மடங்கு மேம்பட்டிருக்கிறது. இத்தகைய இணைய வேகம் கொடுத்த வசதிகளில் ஒன்று வீடியோக்களை பதிவேற்றும் வசதி. வீடியோ பதிவுகளை வெளியிட பல இணையதளங்கள் இன்று தோன்றியிருந்தாலும் கூகுள் நிறுவனத்தின் யு ட்யூப் இணையதளம்தான் தற்போது(image)கூகுள் பயன்பாட்டில் உதவும் மென்பொருள்கள்

Wed, 04 Apr 2012 06:44:15 PDT

இணையப் பயனரின் முதல் தேர்வாக இருக்கும் கூகுளின் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு உதவும் சிறு சிறு மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அதில் சிலவற்றை இங்கு தருகிறோம். கூகுள் மெயில் பேக்கப்: ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிலுள்ள அனைத்து மின்னஞ்சல்களையும் கணினிக்கு பதிவிறக்கம் செய்ய இம்மென்பொருள் உதவுகிறது. இதனை தரவிறக்கம் செய்ய: http://www.gmail-backup.com/ கூகுள் புக் டவுன்லோடர்:(image)ஹேக்கர்களிடமிருந்து உங்கள் தகவல்களைப் பாதுகாக்க..

Tue, 03 Apr 2012 07:44:56 PDT

இணையம் சார்ந்த பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும். அது நம்முடைய தகவல்களை எவரேனும் திருடிவிட்டால் (hacking) என்ன செய்வது என்பதுதான். நான் என்ன அவ்வளவு முக்கியமானவனா? என் தகவல்களை வைத்து என்ன செய்து விடமுடியும்? என்று சிலர் கேட்கலாம். தகவல் திருடர்களுக்கு (ஹேக்கர்) நீங்கள் யார் என்பதைவிட உங்களிடமுள்ள தகவலே முக்கியம். அவர்கள் தேடும் தகவல் உங்களிடம் உள்ளதா என்பதுதான் முதலில்.(image)லேப்டாப், அல்ட்ராபுக், நெட்புக், டேப்ளட் என்ன வித்தியாசம்

Mon, 02 Apr 2012 04:38:17 PDT

மாநில அரசு லேப்டாப் (மடிக்கணினி) வழங்குவதாக அறிவிக்க, மத்திய அரசோ டேப்ளட் கணினி வழங்குவதாக அறிவிக்கிறது.  கணினி நுட்பம் மனிதனோடு கலந்து இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட  சூழலில் பல பெயர்களில் வரும் தொழில் நுட்பங்கள் அனைவரையும் சற்றுக் குழப்பமடைய வைப்பது உண்டு. அப்படிப்பட்ட குழப்பம் லேப்டாப், டேப்ளட், அல்ட்ரா புக், நெட்புக் என்று வரும் கணினிகளைப் பார்க்கையிலும், பெயர்களைக் கேட்கும் போதும்(image)