Subscribe: பெரியார் தளம்
http://periyarthalam.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language:
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: பெரியார் தளம்

பெரியார் தளம்





Updated: 2017-07-29T15:27:03.249+05:30

 




2014-01-09T00:22:46.369+05:30

திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்நண்பர் திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் ஒரு பெரியார் பெருந்தொண்டர். 89 வயதில் அவரது மறைவு சுயமரியாதைக் கொள்கை உலகுக்கு ஒரு பெரும் இழப் பாகும். தொடக்கத்தில் திருவாரூரில் காங்கிரஸ் காரராக இருந்தாலும், பிறகு அவர் 1950 ஆம் ஆண்டுவாக்கில் திராவிடர் கழகத்தில் இணைந்தார்.நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்கள் சிலவற்றிற்கு கதை, வச னம் எழுதினார். அவற்றுள் ரத்தக் கண்ணீர், இராமாயணம் ஆகிய நடிகவேளின் நாடகங்கள் குறிப்பிடத்தக்கவை (பின்னது பெரிதும் தந்தை பெரியாரின் இராமாயணம் பற்றிய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டே எழு தப்பட்டது). அவர் திராவிடர் கழகத்தின் பல போராட்டங் களிலும் கலந்து கொண்டு சிறையேகியவர்; கழகத்தின் பேச்சாளர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தார்.அன்னை மணியம்மையார் அவர்கள் தலைமையேற்ற பிறகு, கருத்து வேறுபாடுகளால் அவரால் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற இயலாமல், வெளியேற்றப்பட்ட வர்களுடன் இருந்தார். என்றாலும், அவரது மாறாத சுய மரி யாதை, பகுத்தறிவுக் கொள்கைக்காக (அவர் நம்மை எவ்வளவு விமர்சித்தபோதிலும்) அவருக்கு வீர வணக்கத் தைத் திராவிடர் கழகம் தெரிவித்துக் கொள்கிறது.அவரது குடும்பத்தினருக்கும், வாழ்விணையர், மகள், மகன் மற்றும் அனைவருக்கும் இரங்கலைத் துயரத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.சென்னை,5.1.2014கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்Read more: http://www.viduthalai.in/page1/73237.html#ixzz2ppnY3I5Mதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர் கள் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள திருவாரூர் தங்கராசு அவர்களின் இல்லத்திற்குச் சென்று, மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அவரின் இணையர், மகள்கள், மகன் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார்.கழகத் துணைத் தலைவர் கலி.[...]



திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்

2014-01-09T00:20:25.277+05:30

திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் மறைவுக்கு இரங்கல்தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மூத்த தலைவரும் தந்தை பெரியாரின் கொள்கை காப்பாளருமான அய்யா கு.திருவாரூர் தங்கராசு அவர்கள் 05.01.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மறைவுற்றார். அவரது மறைவிற்கு பல்வேறு இயக்க தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.1.      தோழர் நல்லகன்னு (இந்திய கம்யுனிஸ்ட்)2.      ஆனுர். ஜெகதீசன் (தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்)3.      தொல். திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்)4.      டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்)5.      ஜெயக்குமார் ( அ.தி.மு.க முன்னாள் சபாநாயகர்)6.      வழக்கறிஞர் செ.துரைசாமி (துணை தலைவர் தந்தை பெரியார் தி.க)7.      கோவை கு.ராமகிருட்டிணன் (பொதுச்செயலாளர் தந்தை பெரியார் தி.க)8.      சிற்பி ராசன் (கொள்கை பரப்புச் செயலாளர் தந்தை பெரியார் தி.க)9.      திருச்சி வே.ஆனைமுத்து10.   வே.மதிமாறன் (எழுத்தாளர்)+++++11.  க.திருநாவுக்கரசு (திராவிடர் இயக்க எழுத்தாளர்)12.  விடுதலை ராசேந்திரன் (திராவிடர் விடுதலைக் கழகம்)13.  கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)14.  ம.நடராசன் (புதிய பார்வை ஆசிரியர்)15.  திருச்சி கே.செளந்தர்ராஜன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)16.  பெ.மணியரசன் (தமிழ் தேசிய பொதுவுடைமை கட்சி)ப17.  பு.சி.இளங்கோவன் ( பேராசிரியர்)18.  கல்வியியளார் பேராசிரியர் நாகநாதன்19.  மருத்துவர் எழிழன்20.  சு.தமிழ்ச்செல்வன் (பேரன்)[...]



மாவீரர் நாள் 2013

2013-12-01T00:55:54.434+05:30

தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணமடைந்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்க நிகழ்வு 2013நவம்பர் 27 மாலை 6.00 மணிக்கு அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அறிவுச்சோலை குழந்தைகள்,பெரியார் படிப்பக தோழர்கள் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்





மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு

2012-11-27T19:29:17.506+05:30



தமிழீழ விடுதலைப்போரில் வீரமரணமடைந்த விடுதலைப் புலிகளுக்கு வீரவணக்க நிகழ்வு நவம்பர் 27 மாலை 6.00 மணிக்கு அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சியில் அறிவுச்சோலை குழந்தைகள்,பெரியார் படிப்பக தோழர்கள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்



மக்களுக்கு மருத்துவம் தர மறுத்துவிட்ட அரசுகள்-க.முகிலன்

2014-01-13T00:11:08.056+05:30

மக்களைச் சுரண்டும் தனியார் மருத்துவக் கொள்ளையர்கள்1991ஆம் ஆண்டு முதல் நடுவண் அரசும், மாநில அரசுகளும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் எனப்படும் புதிய பொருளாதாரக் கொள்கையை நடை முறைப்படுத்தி வருகின்றன. இதனால் முதன்மை யான மூன்று பெருங்கேடுகள் - பொதுமக்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் விளைந்துள்ளன.முதலாவதாக 60 விழுக்காடு மக்களின் வாழ்வா தாரமாக விளங்கும் வேளாண்மை சீரழிந்துவிட்டது. நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 30 விழுக்காடாக இந்த வேளாண்மையின் பங்கு இப்போது 13% ஆகச் சரிந்துள்ளது. அரசின் புள்ளி விவரப்படி, 1995 முதல் 2011 முடிய கடன் சுமையைத் தாங்க முடியாமல் 2,70,940 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் (தி இந்து 3.7.2012).அடுத்ததாகக் கல்வி வேகமாகத் தனியார் மயமாகி வருகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. இவை ஏழை, நடுத்தரக் குடும் பங்களைச் சுரண்டிக் கொள்ளையடித்துக் கொண்டிருக் கின்றன. 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் களுள் 70 விழுக்காட்டினர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றனர் என்பது உண்மை தான். இவர்களில் 90%க்கு மேல் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்புகளின் மாணவர்களேயாவர்.ஆனால் உயர்கல்வியில் கிட்டத்தட்ட 90% மாண வர்கள் தனியார் தன்நிதிக் கல்லூரிகளில்தான் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 540 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 510க்கு மேற்பட்டவை பணம் பறிக்கும் தன்நிதிப் பொறியியல் கல்லூரிகளேயாகும். இதேபோன்று தனியார் தன்நிதிக் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில் பட்டயப் படிப்புக் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள் ஆகி யவை ஆயிரக்கணக்கில் கொள்ளைக் கூடாரங்களாக உள்ளன. இவற்றின் கல்விக் கொள்ளையைக் கட்டு[...]



வீண் பேச்சு வேண்டாம்; செயல்பட வாரீர்!

2012-07-17T23:13:45.586+05:30


தங்கம் எடுத்தவன் யார்?
முத்துக்குளித்தவன் யார்?
வயல்கள் செய்தவன் யார்?
வரப்பு செதுக்குகிறவன் யார்?
மாடமாளிகை கட்டினவன் யார்?
நந்தவனம் வைத்தவன் யார்?
அனுபவிப்பவன் யார்? … என்று
சோம்பேறிப்பாட்டு பாடினால் போதுமா? இது செய்தவர்கள் யார், அனுபவிப்பவர் யார் என்று கடுகளவு அறிவுள்ளவனுக்கு தெரியுமே! அதாவது மடையன், ஏமாளி, மானமற்றவன் செய்தான்; தந்திரசாலி, வஞ்சகன், கடவுள் பிரச்சாரக்காரன் அனுபவிக்கிறான்; ஆகவே மடையன் புத்திசாலியாகி மானமற்றவனுக்கு மானஉணர்ச்சி ஏற்பட்டு இந்த நிலைமைக்கு காரணம் நமது ஏமாளித்தனமே ஒழிய கடவுளல்ல, மதமல்ல, முன் ஜன்மமல்ல, விதி அல்ல, இவையெல்லாம் புரட்டு இவைகளைத் தகர்த்தெறிவது எனது முதல் வேலை என்று எவன் எண்ணுகிறானோ அவனே முதலாளிகளை, செல்வவான்களை, மாடமாளிகை கூடகோபுரங்கள் அரண்மனையில் வசிப்பவர்கள் ஆகியவர்களை ஒழிக்கத் தகுந்தவனாவான்.
—-தந்தை பெரியார். [குடியரசு 6-7-1946]



சங்கமித்ரா உமக்கு எமது வீரவணக்கம்.

2012-04-26T14:26:47.829+05:30

சங்கமித்ரா மரணம்.... 
எமக்கு அறிவும், உணர்வும் ஊட்டிய பெருந்தகையே... உமக்கு எமது வீரவணக்கம்.



மாவீரர் நாள்-2011 திருப்பூர்

2011-12-17T20:15:00.118+05:30

நவம்பர் 27 மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பெரியார் படிப்பகத்தில் நவம்பர் 27 ஞாயிறு மாலை 6 மணிக்கு நடந்தது.நிகழ்ச்சியில் அறிவுச்சோலை குழந்தைகள் பெரியார்படிப்பக தோழர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு போரில் இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.



நடந்த கதை

2011-11-23T00:26:57.425+05:30

width="480" height="270" src="http://www.youtube.com/embed/H7Pja1ujH9Y?fs=1" frameborder="0" allowfullscreen="">



மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி

2010-11-27T18:58:29.970+05:30

நவம்பர் 27 சனிக்கிழமை மாலை 6.04 மணிக்கு மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி திருப்பூர் அறிவுச்சோலை குழந்தைகள் சார்பில் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போரில் இறந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.



உறுதியேற்போம்....

2010-09-17T18:05:31.135+05:30

அறியாமை இருளகற்றி

அறிவியல் வளர்க்க

உறுதியேற்போம்....

சாதி மறுப்புத் திருமணம் செய்து

சமத்துவம் படைக்க

உறுதியேற்போம்...

ஆணாதிக்கக் கொடுமையிலிருந்து

பெண்ணினத்தை மீட்டெடுக்க

உறுதியேற்போம்...

சாதி மத சழக்குகளிலிருந்து

தமிழர்களை விடுவிக்க

உறுதியேற்போம்....

அரசு தனியார் வேலைகளில்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய

பங்கை பெறுவதற்கு

உறுதியேற்போம்...

உலக வர்த்தக பேரத்தில்

உருக்குலையும் தமிழினத்தை

பாதுகாக்க உறுதியேற்போம்...

ஆரியப் பார்ப்பனர்

கொட்டங்களை

அடியோடு ஒழிக்க

உறுதியேற்போம்....

வடவர்களின் பிடியிலிருந்து

தமிழ்நாட்டை விடுவிக்க

உறுதியேற்போம்...

பார்ப்பன இந்திய சதியாலே

சர்வதேச துணையோடு

சிங்களம் அழித்த ஈழத்தை

மீட்டெடுக்க உறுதியேற்போம்...

தமிழ்நாடு தமிழருக்கேயென

அய்யா சொன்ன வார்த்தைகளை

உண்மையாக்க உறுதியேற்போம்...




பெரியார் பிறந்தநாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி-2010

2010-09-17T17:50:29.216+05:30

தந்தை பெரியார் அவர்களின் 132 பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 17-9-2010 வெள்ளிக் கிழமை காலை 11-00 மணிக்கு பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் திருப்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் சாதி,மத மூடநம்பிக்கை ஒழிப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அங்ககுமார்,மாவட்டத்தலைவர் துரைசாமி,மாநகர்த் தலைவர் இரமேசுபாபு,மாநகரச் .செயலாளர் முகில்ராசு,ஒன்றிய தலைவர் அகிலன், மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன், அறிவரசு, சண்.முத்துக்குமார், அவிநாசியப்பன்,கருணாநிதி,கமல்,கார்த்தி,முரளி உட்பட மாநில,மாவட்ட,மாநகர,ஒன்றிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..



வீரவணக்கம்

2010-09-04T23:28:26.072+05:30

சீரிய தமிழினப்போராளி
திருப்பூர் தென்மொழி துரையரசனார் அவர்கள் மறைந்தார்.அவருக்கு எமது வீரவணக்கம்



உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்!

2010-08-15T23:34:27.505+05:30

நாம் சட்டத்தைப் பற்றி பயப்படாமலும்,பதவி கிடைக்காதே என்று கவலைப்ப்டாமலும் சுதந்திரத் தமிழ் நாடு பெற ஒவ்வொருவரும் முடிவு செய்து கொண்டு முன் வர வேண்டியது ஒவ்வொரு தமிழனுக்கும் அவசியமான காரியம் என்பதைபணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திரத் தமிழ்நாடு-என் இலட்சியம் என்ற சொற்களை ஒவ்வொருவரும் இலட்சியச்சொல்லாகக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். பதினாயிரக் கணக்கில் பாட்ஜுக்கு ஆர்டர் கொடுத்துத் தயார் செய்து மக்களுக்கு விநியோகிக்க ஆசைப்ப்படுகிறேன். பொது மக்களுக்கும் இதுவே இலட்சியச் சொல்லாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பொதுமக்களே! இளைஞர்களே! பள்ளி,கல்லூரி மணவர்களே! மணவிகளே! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்! உறுதிகொள்ளுங்கள்!
பெரியார்
[பிறந்தநாள் மலர் 17.9.1973]



சுயமரியாதை

2010-08-10T23:22:21.116+05:30

மனித தர்மத்தை அடிப்படையாக வைத்து, மனித சமுதாயத்திற்கு யாராவது தொண்டாற்ற வேண்டுமானால் முதலில் செய்யவேண்டியது, பகுத்தறிவுப்படி மக்களை நடக்கச் செய்வதும் சிந்திக்கச் செய்வதுமே யாகும். மனிதன் தனக்குள்ளாகவே, தான் மற்றவனைவிடத் பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சியைப் போக்கித் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் பெற வேண்டும். சீர்திருத்தமும், சுயமரியாதையும், சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம் மனிதன் உலகில் தன் சுயமரியாதையை - தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ளவேண்டும். மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம். மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.
-தந்தை பெரியார்



என்னடா தேசபக்தி

2010-08-07T20:01:55.881+05:30

எதற்காக இந்தியா
புரிய வில்லை
எதைச்சொன்னாலும்
சொரணை யில்லை

நாடாளு மன்றம்
தமிழ் பேசாதாம்
நற்றமிழ், 'நீதி
மொழி' ஆ காதாம்!

யாரடா நாயே
இதை நீ சொல்ல
இந்திதான் நுழையுமா?
எம்மையே கொல்ல

பனிமலைக் காசுமீர்
தீப்பற்றி எரியுது
ஒரிசா சதீசுகர்
கோவணம் கிழியுது

ஆந்திரா கன்னடம்
மராட்டியம் மோதுது
அட உன், தேசபக்தி
அடிபட்டுச்சாகுது

மீனவன் சாகிறான்
தடுக்க மாட்டாய்நீ
முள்வேலிக்கம்பியை
அறுக்க மாட்டாய் நீ

குட்டி நாடுதான்
அதட்ட மாட்டாய்நீ
கொழுத்துப் பேசுவான்
உதைக்க மாட்டாய்நீ

எங்கள் தாயரின்
தாலி ஏன் அறுக்கிறாய்?
இத்தாலிக்காய் ஏண்டா
தமிழனை எரிக்கிறாய்?


-தமிழேந்தி

நன்றி
சிந்தனையாளன்
ஆக .2010



பேராசிரியர் கீசகனுக்கு வீரவணக்கம்

2010-07-29T16:54:22.349+05:30

பட்டி தொட்டி எல்லாம் சுற்றி சுழன்று சாதி,மத,மூட பழக்க வழக்கங்களை எதிர்த்து தமிழர் விடுதலைக்கு போராடிய பெரியார் பெருந்தொண்டர் பேராசிரியர் கீசகன் அவர்கள் மறைந்தார் அவருக்கு எமது வீரவணக்கங்கள்.



சமரசம் என்ற பேச்சே இல்லை

2010-07-28T21:43:41.598+05:30

எங்களது இதயம் எங்கள் கடமையைச் சுட்டிக் காட்டுகிறது. இனியும் நாங்கள் தயங்கி நிற்கத்துணியமாட்டோம். நாங்கள் எங்கள் கொடியை உயர்த்தி விட்டோம். அந்தக்கரங்களை கீழே இறக்கமாட்டோம். எங்கள் கரங்கள் முறியடிக்கப்பட்டு புழுதிக்குள் புதையுண்டாலொழிய... எங்கள் கரங்கள் உயர்ந்தே நிற்கும். இனி சமரசம் என்ற பேச்சே இல்லை. எங்கள் நியாயங்களுக்கு செவிகள் காது கொடுத்தேதீரும். -ரிவோல்ட் [3-11-1929]



அபாயச்சங்கு

2010-07-20T22:51:07.626+05:30

தமிழ்நாடும்,தமிழனும் தப்பி பிழைத்து விடுதலை பெற வேண்டுமானால் ... இந்தியக் கூட்டாட்சி என்கின்ற பார்ப்பன ஏகபோக சர்வாதிகார ஆட்சியிலிருந்து விலகி தமிழ்நாட்டை சுதந்திரத் தமிழ்நாடு ஆக்கிக் கொண்டாலன்றி வேறு எந்தக் காரணத்தாலும், எக் கிளர்ச்சியாலும் முடியவே முடியாது என்பதைத் தமிழ் மக்கள் உணர வேண்டுமாய் வேண்டிகொள்கிறேன். தியாகம் என்பது சிறத்தண்டனை அனுபவிப்பதுதான் என்று பலர் கருதிக்கொண்டிருக்கிறார்கள். தியாகம் என்பது தன்னலமறுப்பு ஆகும்.தன்னலமறுப்பு என்பது உயிரைப் பலிகொடுப்பது என்பதை இறுதியாகக் கொண்டதாகும்.இப்படிப் பட்ட தன்னல மறுப்புக் கொண்ட ஓர் ஆயிரம் வீரர்கள் முன்வந்தால்தான் தமிழ்நாடு சுதந்திரத் தமிழ்நாடாக முடியும்.இளைஞர்கள் இதை நல்லபடி சிந்தித்து முடிவு செய்து கொண்டு செயலில் ஈடுபட வேண்டுகிறேன். சிந்திக்க வேண்டிய காலம் நெருங்கிவிட்டது என்பதற்காகத்தான் இந்த அபாயச்சங்கை ஊதுகிறேன்.

தந்தை பெரியார்.
[விடுதலை13.5.1960]



ஒழிக்கப்பட வேண்டியவை

2010-07-18T20:50:21.702+05:30

1. மக்களிடம் உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்படவேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி, நேர்மை ஏற்படவேண்டுமானால், வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டுமானால்பத்திரிகைகள் பெரிதும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்படவேண்டுமானால்தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும், கள்ள வியாபாரமும் ஒழிக்கப்படவேண்டுமானால் லைசென்சு, பெர்மிட், கட்டுப்பாடு முறைஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில் துறையில் தொழிலாளர்களிடையே சுமூகமும், நாணயமும்,பொறுப்பும் ஏற்பட வேண்டுமானால் லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் சட்டம் ஒழிக்கப்படவேண்டும்.

7. அய்க்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை நீதிபதியாகநியமிப்பது ஒழிக்கப்படவேண்டும்.
-தந்தை பெரியார்




மீண்டு[ம்] வருகிறோம்...

2009-11-14T22:52:45.104+05:30

மீண்டு[ம்] வருகிறோம்...
சில நாட்களாய் மனம் கனத்துப் போனதால்...
உடல் மரத்துப் போனதால்...
தளத்தில் எழுதாமல் தவிர்த்திருந்தோம்...
தவிப்பிலிருந்து மீண்டு வருகிறோம்
.
மீண்டு[ம்] வருகிறோம்
...



வீரமணியின் மனு தள்ளுபடி

2009-07-27T21:48:57.270+05:30

தந்தை பெரியாரின் எழுத்துக் களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவையும் சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
.
1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை தான் தோற்றுவித்த சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தந்தை பெரியார் இருந்த போது, குடியரசு பத்திரிகையில் அவர் தனது கட்டுரைகளையும், கருத்துக்களையும் வெளியிட்டு வந்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதனை பெரியார் திராவிடர் கழகம் பல்வேறு நூல் தொகுதிகளாக வெளியிட ஏற்பாடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக தான் இருந்து வருவதால், தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக் களும் தங்களுக்கே சொந்தமானது என்றும், இவற்றை வெளியிட தங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது என்றும் அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.' இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் நூல்களை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்திற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இதனை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.

தந்தை பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும் யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்று தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தீர்ப்பின் விவரம் வருமாறு:
கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர் அவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப்போருக்கும் இடையே சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டுள்ளார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக் களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு நடுவே அவரது கொள்கைகளை அடைத்து விடக்கூடாது.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது
. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இவ்வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங்கோவன் ஆகியோர் ஆஜராகினர்.



ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் 2

2009-07-11T23:25:45.320+05:30

கிழக்குத் திமோர்போர்ச்சுகலின் காலனி நாடாக இருந்த கிழக்குத் திமோர் “1975 ஆம் ஆண்டு நவம்பர் 28” ஆம் நாள் தன்னைச் சுதந்திர நாடாகப் பிர கடனம் செய்தது. அந்தப் பிரகட னத்தை மூன்றாம் உலக நாடுகளின் மார்க்சிய - லெனினிய அரசுகள் அங்கீகரித்தன. மக்கள் சீனம் அங்கீ கரித்தது. அவு°திரேலியா, போர்ச்சுக் கல், இந்தோனேசியா ஆகியவை அங்கீகரிக்கவில்லை.அதே நேரத்தில் இந்தோனேசியாவினால் அந்நாடு ஆக்கிரமிக்கப்பட்டு அந்நாட்டினது ஒரு மாகாணமாக கிழக்குத் திமோர் மாற்றப்பட்டது.ஆனால், கிழக்குத் திமோர் மக்கள் இரு தசாப்த காலமாக விடுதலைப் போராட் டத்தைத் தொடர்ந்தனர். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்டு 30 ஆம் நாளன்று கிழக்குத் திமோரில் மேற்பார்வையில், இந்தோனேசியாவி லிருந்து கிழக்குத் திமோர் பிரிவது குறித்த மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரு வாரியான மக்கள், கிழக்கு திமோரின் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் பின்னர் 2002 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாளன்று கிழக்குத் திமோரை ஒரு தனிநாடாக அனைத்துலகம் ஏற்றுக் கொண்டது.தென் கமுரூன்கமரூன் கூட்டமைப்பில் 1961 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் நாள் தென் கமரூன் இணைக்கப்பட்டது. தென்காமரூனானது ஆங்கில மொழி பேசுவோரையும் இதர பகுதிகள் பிரெஞ்சு மொழி பேசுவோரையும் கொண்டதாக இருந்தது.இந்நிலையில் 1972 ஆம் ஆண்டு மே 21 ஆம் நாளன்று வாக்கெடுப்பின் மூலம் கமரூன் கூட்டமைப்பு “ஒற்றையாட்சி” முறைக்கு மாறி யது. தென் கமரூன் பிரதேசம் சுயாட்சியை இழந்தது. கமரூன் குடியரசினது வடமேற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களாக தென் கமரூன் மாற்றமட[...]



ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள்

2009-06-25T13:15:50.250+05:30

ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:ஐ.நா. தோன்றுவதற்கு முன் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைபட்சமான சுதந்திரப் பிரகடனங்கள்.°காட்லாந்து : 1320 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசரான முதலாம் எட்வர்ட்டின் நீதியற்ற தாக்குதல்களி லிருந்து தற்காத்துக் கொள்ள °காட் லாந்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. அந்தப் பிரகட னத்தைத் தொடர்ந்து இரு நாடு களிடையே அப்போதைய 22 ஆம் பாப்பரசர் ஜோன் அனுசரணை யாளராக செயற்பட்டு பேச்சுவாத்தை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து °காட்லாந்தின் மீதான பிரித்தானியாவின் உரிமை கோரல்கள் கைவிடப்பட்டு 1328 ஆம் ஆண்டு பிரித்தானிய பேரரசர் மூன்றாம் எட்வர்டினால் ஏற்கப்பட்டது.லத்தின் அமெரிக்க நாடுகளின் சுதந்திரப் பிரகடனங்கள் : 1800 களின் தொடக்கத்தில் பிரெஞ்சு புரட்சி மற்றும் அமெரிக்க புரட்சிக் கான யுத்தங்கள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டன.1810 மே 25 ஆம் நாளன்று °பெயி னின் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிரெஞ்சு படையணிகள்,[...]



காங்கிரஸ் வரலாறே - தமிழினப் பகைமை தான்!

2009-04-15T13:39:42.063+05:30

காங்கிரஸ் கட்சி - பிரிட்டிஷ்காரரால் தொடங்கி யது முதல் இது நாள் வரை அது தமிழினத்தின் பகை சக்தியாகவே இருந்திருக்கிறது. இடையில் இந்திய தேசியத்திலிருந்து மாறுபட்டு, தமிழின அடையாளத் தோடு செயல்பட்ட காமராசர் காலம் மட்டுமே மாறு பட்டிருந்தது. மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் - தமிழினப் படுகொலைக்கு கரம் நீட்டிக் கொண்டிருக் கிறது. இளம் தலைமுறையினரே; இதோ, அந்த வரலாற்றிலிருந்து சில துளிகள்... • 1885 இல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் ஆலன் ஆக்டேவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அய்.சி.எஸ். (அந்தக்கால அய்.ஏ.ஸ்.) அதிகாரி. அதற்கான ஆலோசனையை வழங்கியவர் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரலாக இருந்த டஃப்ரின் பிரபு. • பம்பாய், கல்கத்தா, சென்னையில் காங்கிரஸ் மாநாடுகள் கூடியபோது மாநாட்டுப் பிரதிநிதி களுக்கு பிரிட்டிஷ் ஆளுநர்கள் தேனீர் விருந்து கொடுத்தனர். • காங்கிரஸ் தொடங்கப்பட்டது - சுதந்திரம் கேட்பதற்காக அல்ல. அப்போது நிர்வாகம் நடத்திய பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரின் அடக்குமுறைகளை எதிர்த்து எவரும் போரிடாமல் கட்டுக்குள் வைப்பதற்கே காங்கிரஸ் தொடங்கப்பட்டது. எனவேதான் காங்கிரசைத் தொடங்கிய ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரியே அக்கட்சியின் செயலாளராக 20 ஆண்டுகாலம் இருந்தார். • ஒவ்வொரு காங்கிரஸ் கட்சியின் மாநாடும் தொடங்கும்போதும் - “பிரிட்டிஷ் அரசர் அரசிக்கு கடவுள் நீண்ட ஆயுளைத் தர வேண்டும்” என்று தீர்மானங்கள் போடுவது வழக்கம். 1886 இல் தொடங்கி 1914 வரை 8 மாநாடுகளில் இந[...]