Subscribe: PERIYAR DRAVIDAR KAZHAGAM
http://periyardravidarkazhagam.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: PERIYAR DRAVIDAR KAZHAGAM

PERIYAR DRAVIDAR KAZHAGAM





Updated: 2014-10-07T07:00:22.544+05:30

 



பெரியாரியல் பயிலரங்கம்

2007-08-08T22:42:23.372+05:30

(image)
5.8.2007ஞாயிறு காலை 9.00மணி முதல் மாலை 6.00மணி வரை திருப்பூர் துரைசாமி அவர்கள் தோட்டத்தில் பெரியாரியல் பயிலரங்கம்நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கழக தலைவர் கொளத்தூர்மணி, பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்க வரலாறு,இயக்கச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவிளக்கினர் நிகழ்ச்சியில் புதிய தோழர்கள் கலந்து அதிக அளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கருத்துக்களை கேட்டனர்.கலந்து கொண்ட தோழர்களுக்கு மதிய உணவை தோழர்கள் அகிலன்,முகில்ராசு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.நிகழ்ச்சியில் அங்ககுமார், ராவணன்,(image) பல்லடம் திருமூர்த்தி,விஜயன்,அவிநாசியப்பன்,ஜீவாநகர்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



‘பண்டு கிராமங்கள் - இரட்டை பெஞ்ச்’ கொடுமைகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்த கழகச் செயல்வீரர்களை சாதி வெறியர்கள் உயிரோடு கொளுத்த முயற்சி! - ‘அரசு கொறட

2007-07-06T13:35:46.248+05:30

திண்டுக்கல் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கிராமங்கள் தோறும் இரட்டைக்குவளை ஒழிப்பு - பஞ்சமி நில மீட்பு - ரிலையன்ஸ், வால்மார்ட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுக் கொள்ளை எதிர்ப்புப் பயணம் 11.4.07 முதல் 22.4.07 வரை நடத்தத் திட்டமிடப்பட்டது.அனைத்து ஊர்களிலும் இரட்டைக் குவளை முறையின் கொடுமையை விளக்கியும், பஞ்சமி நில மீட்பின் அவசியத்தை விளக்கியும், விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக மக்களிடம் விளக்கப்பட்டது. பாடல்கள் மூலமும் மக்களிடம் கருத்துகள் எடுத்துச் சொல்லப்பட்டன. அனைத்து கிராமங்களிலும் மக்கள் நல்ல ஆதரவு அளித்தனர். பிரச்சாரத்தைக் கேட்டு கழகத் தோழர்களுக்கு பொது மக்கள் நன்கொடை வழங்கினர். எந்த இடத்திலும் சிறு சலசலப்புக்கூட இல்லை.கழகத் தோழர்கள் பயணம் சென்ற பாதையிலுள்ள ஊர்களில் இரட்டை குவளை முறை இருக்கிறதா என ஆய்வு செய்ய கழகத் தோழர்களின் ஆய்வுக்குழு கிராமம் கிராமமாகச் சென்றது. அப்போது இரட்டைக் குவளை முறை மட்டுமல்லாமல் இரட்டை பெஞ்ச் முறை என்னும் கொடுமையும் இருப்பதும் தெரிய வந்தது. அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயரமான பெஞ்ச் அல்லது திண்ணை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் தரை அல்லது உயரம் குறைவான பெஞ்ச் என்ற பிரிவினை முறை.இந்த இரண்டு கொடுமையும் பழனி ஒன்றியத்தில் வயலர் அருகேயுள்ள மிடாப்பாடி, மயிலாபுரம், நல் லெண்ணக் கவுண்டன்புதூர், பாப்பாகுளம், அய்யம் பாளையம், சின்னாக்கவுண்டன்புதூர், பழனி அருகேயுள்ள வேலாயுதம்பாளையம்புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களில் நடைமுறையில் உள்ளன. அதே போல தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, பூலாம்பட்டி, [...]



மேட்டூரில் நாத்திகர் விழாவில் - கோவை. இராமகிருட்டிணன்

2007-07-06T13:17:48.763+05:30

உயர்கல்வி இடஒதுக்கீட்டில் ‘தகுதி-திறமை’ வேண்டும் என்று கூறும் பார்ப்பனர்கள், அர்ச்சகர் பதவியில் ‘தகுதி-திறமை’ கூடாது - ‘சாதி’ வேண்டும் என்று கூறுவது ஏன், என்று பொதுச்செயலாளர் கோவை. இராமகிருட்டிணன் கேட்டார். சாதி, ஆகமம், சோதிடம், வழி பாட்டு மொழி தொடர்பாக பார்ப் பனர்கள் வைக்கும் வாதங்களைத் தகர்த்து எறிந்தது அவரது உரை. மேட்டூரில் ஜூன் 25 ஆம் தேதி நடந்த நாத்திகர் விழாவில் பெரியார் தி.க.பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆற்றிய உரை. ‘சோதிடப் புரட்டு’ என்ற அருமையான நூல் இந்த நாத்திகர் விழாவில் வெளியிடப்பட இருக்கிறது. சோதி டத்தை எதிர்த்து இந்நூலில் கூறியவற்றுக்கு எந்த சோதிடராலும் நிச்சயம் பதில் கூற முடியாத நிலைதான் இருக்கும். சென்ற சில வருடங்களுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்ற தங்களின் கணிப்பை இந்தியாவின் புகழ்பெற்ற சோதிடர்கள் எல்லாம் பத்திரிகைகளில் எழுதினர். இந்தியாவின் தலைமை அமைச்சராக வாஜ்பேயிதான் வருவார் எனச் சிலரும், சோனியாகாந்திதான் என சிலரும் கணித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், எந்த பிரபல சோதிடராலும் கணிக்க முடியாத மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக ஆனார். இது போன்ற நூல்களை வெளியிடுவது மாதிரியான சரியான பணிகளைச் செய்ய பெரியாரின் வழியிலே இயங்குகின்ற எங்களின் பெரியார் திராவிடர் கழகம் முனைந்து ஈடுபட்டு வருகிறது. எங்கள் இயக்கத்திற்கு பெரியார் விட்டுச் சென்ற பொருள் எதுவும் கிடையாது. பொது மக்களாகிய உங்களிடம் கையேந்தி, பொருள் திரட்டி, உங்களுக்காகவே இவற்றை வெளியிடுகிறோம். அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் இயக்கத்தைச் சார்ந்த சுமார் ஆயிரம் பேர் 2004 ஆம் ஆண்டில் காஞ்சி காமாட்சியம்[...]



மதமாற்றத்தடைச்சட்டக் கண்டன ஆர்ப்பாட்டம்

2007-07-06T12:24:44.210+05:30

(image)

மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவையில் மதமாற்றத் தடைச்சட்டக் கண்டன மாநாடும் நடைபெற்றது. தூத்துக்குடியில்(image) ஆட்சிக்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது(image)



சம்பூகன் நீதிப் பயணம்’தூத்துக்குடியில் துவங்கி சென்னை வரை

2007-07-06T12:15:34.370+05:30


தனியார்துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி செப்.20 ‘சம்பூகன் நீதிப் (image) பயணம்’- செப்பம்பர் 20-ல் தூத்துக்குடியில் துவங்கி-அக்டோபர் 2-ம் (image) தேதி சென்னையில் நிறைவடைந்தது.

அக்.2 சென்னையில் நிறைவடைந்த சம்பூகன் சமூகநீதிப் பயணத்தை வாழ்த்தி, அனைத்து கட்சித் தலைவர் உரையாற்றினார்கள்.

(image)



வீரப்ப மொய்லி அறிக்கை

2007-07-06T11:58:16.793+05:30

எரியட்டும் சட்ட விரோத மசோதா!அனைத்து கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் அது, அரசு உதவி பெறாத நிறுவனமாக இருந்தாலும்கூட, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதை உறுதி செய்து, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்தப் புதிய சட்டம் 15(5). பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு பயந்துபோன மத்திய அரசு, இந்த சட்டத்தின் நோக்கத்தைக் குழி பறிக்க, மற்றொரு சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், சட்டத்துக்கான மசோதா கடந்த ஆக. 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வீரப்ப மொய்லி அறிக்கை கூறுவதுபோல் - பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை, வரும் கல்வி ஆண்டிலிருந்தே, முழுமையாக அமுலாக்குவதை, சட்ட ரீதியாகவே தடுப்பதற்கு இந்தப் புதிய சட்டம் வரப் போகிறது. எனவே இப்போது - எரிக்கப்பட வேண்டியவைகள், வீரப்பமொய்லி குழு பரிந்துரை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவும்தான் (மசோதா எண் 76/2006). இதன் ஆபத்துகளை தெளிவாக சுட்டிக்காட்டி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ‘சிந்தனையாளன்’ ஏட்டில் எழுதியுள்ள தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்:-இந்திய அரசு உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு தருவதற்கு - இந்திய அரசு அமைச்சரவையும், இந்திய அரசு உயர் நிர்வாகத் துறைகளும், இந்திய அரசை இன்று தலைமை தாங்கி நடத்தும் பார்ப்பனிய அடிமைகளும், புதியதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டி, 25.8.2006 இல் மசோதா எண் 76/2006 என்பதை முன்மொழிந்து விட்டனர்.எதற்காக இந்த மசோதா? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்[...]



மனிதக்கழிவுகளை கைகளால் அள்ளுவதைத் தடைசெய்யக்கோரி ரயில் மறியல் போராட்டம்

2007-07-06T11:35:44.282+05:30

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம்! இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு; அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்துக் கொண்டு ‘இந்தியா’ சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி! ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.கடந்த ஆகஸ்டு மாதமே, இந்த இழிவுகளுக்கு, ‘ரயில்வே துறை’யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம்! ரயில்வே துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காண வில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம்! எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக ஒழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம்! ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.1,100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள் : ‘தலித் முரசு’) இது மனிதர்களை - மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான த[...]



முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம்

2007-07-03T20:59:30.949+05:30

(image) முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழக-கேரள எல்லையில் கம்பம், செங்கோட்டை, கோவை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலம் செல்லும் பொருட்கள் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக் கானவர்கள் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அதை ஏற்று செயல்பட பிடிவாதமாக மறுத்துவரும் கேரள அரசுக்கு எதிராக ஒருநாள் பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடத்தப்பெறும் என பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு அறிவித்தது. போராட்டத்தில் பெரியார் திராவிடர்(image) கழகம் மற்றும் 15 அரசியல் கட்சிகள் 32 விவசாயிகள் சங்கங்கள் தமிழ்த் தேசிய அமைப்புகள் கலந்துகொண்டன.

கோவை கந்தே கவுண்டன் சாவடியில் பொருளாதார தடை மறியல் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் தணிக்கையாளர் பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் ஆர். காந்தி, தமிழர் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கி.த. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுசி. கலையரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பொழிலன், தமிழர் கழகத் தலைவர் இரா. பாவாணன், தமிழக மனித உரிமை கழகத் தலைவர் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மணிபாரதி, தமிழக இளைஞர் இயக்கத்தின் செயலாளர் தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் லோகநாதன், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் வே. ஆறுச்சாமி, மா.ரெ. இராசகுமார், பெரியார் திராவிடர் கழக மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் ந. பிரகாசு, வே. கோபால், சா. கதிரவன், கா.சு. நாகராசன், நா. பன்னீர், கராத்தே இராசேந்திரன், மணிகண்டன், தனசேகரன், பாவேந்தன், சிவசாமித் தமிழன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக கோவை-பாலக்காடு இடையே போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.



பல்லடம் நாத்திகர் விழா

2007-06-27T13:13:17.889+05:30

கோவை மாவட்டம் பல்லடத்தில் 15.04.2007 அன்று நாத்திகர்விழா எழுச்யுடன் நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் பி.எம்.ஆர் திருமண மண்டபத்ல் தோழர் ப.மூர்த்தி நினைவு அரங்கில் பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சி.விஜயன் வரவேற்புரை நிகழ்த்தபல்லடம் திருவள்ளுவர் தாய்த்தமிழ்ப்பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சியோடு விழா தொடங்கியது. முதல் நிகழ்வாக தஞ்சை குப்பு வீரமணி அவர்கள் தலைமையில் கா.சு.நாகராசு, சிற்பி செல்வராசு, பன்னீர்செல்வம், பெங்களூர் கலைச்செல்வி, பேராசிரியர் ருக்மணி, மதிமாறன், சூலூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து புலவர் செந்தலை கவுதமன் நடுவராகவும் கடலூர் வழக்கறிஞர் அழகரசன், மயிலாடுதுறை அழகிரி ஆகியோர் வழக்காடுபவர்களாகவும் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது.மாலை 5.00 மணியளவில் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தொடங்கி காமராசர் திடலில் முடிவடைந்தது.மாலை 7.00 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கழக தலைமைக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்கள் தலைமை வகித்தார். பல்லடம் திருமூர்த்தி வரnற்புரை ஆற்றினார். விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ம.தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் வந்தியத் தேவன், ஆதித்தமிழர்பேரவை பொதுச்செயலாளர் நீலவேந்தன், வழக்கறிஞர் செ. துரைசாமி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டினன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர். சூலூர் பன்னீர்செல்வம் நன்றியரையாற்றினார்.விழாவிற்கு உழைத்த தோழர்கள்:க.ஆறுமுகம், ந.ரமேசு, சிவக்குமார், இரா,அண்ணாத்துரை, ம.கருப்புச்சாமி, சி.முருகேசு, மு.வடிவேல்,சு.வடிவேல்,ந.சின்னச்சாமி, ம. இரவி, இராஜ்கபூர், த[...]



தேசியப் பாதுகாப்புச் சட்டம் - கண்டனப் பேரணி

2007-06-27T12:33:38.394+05:30

(image)
இந்து மக்கள் கட்சி அர்ஜுன்சம்பத் கும்பலால் சிறீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்வினையாகக் கிளர்ந்தெழுந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது கலைஞர் தலைமையிலான தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச்சட்டத்தை ஏவியது. 40 தோழர்கள் 15 நாள் காவலில் இருந்து பிணையில் வந்தனர். பெரம்பலூர் இலட்சுமணன், தாமோதரன், கோபி இராம.இளங்கோவன்,அர்ச்சுனன்,முருகானந்தம், ஈரோடு குமரகுரு சென்னை குமரன் ஆகிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு ஐந்து மாதங்களாகச் (image) சிறையில் உள்ளனர். பெரியாரியல் கடமையாற்றிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசைக்கண்டித்து 16.03.2007 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.




வீரப்பமொய்லி அறிக்கை எரிப்புப் போராட்டம்

2007-06-27T12:17:40.503+05:30

(image)
மத்தியஅரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஏ.ஐ.ஐ.எம்.எஸ் போன்றவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வ(image) ழங்குவது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட வீரப்பமொய்லி குழு தனது பரிந்துரையில் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக இடஒதுக்கீட்டை முடக்கும் நோக்கில் தனது பரிந்துரையை அளித்தது. எனவே வீரப்பமொய்லி குழுவின் அறிக்கையை எரிக்கும் போராட்டத்தை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியும், பெரியார் திராவிடர் கழகமும் அறிவித்தன. 22.11.2006 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வீரப்பமொய்லி பரிந்துரை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.




அப்சலுக்கு தூக்குதண்டனை - கண்டன ஆர்ப்பாட்டம்

2007-06-27T12:07:56.610+05:30

(image) அப்சலுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து சேலத்தில் 06.11.2006 அன்று தலைமை அஞ்சலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியார்திராவிடர்கழகம் மற்றும் THE FEDERATION FOR THE RETRIEVAL OF CIVIL RIGHTS பேராசிரியர் அ.மார்க்ஸ், அற்புதம் அம்மாள் மற்றும் ஏராளமான தலித் இயக்கத்தொண்டர்களும் பங்கேற்றனர்.



சம்பூகன் சமூகநீதிப்பயணம் இரண்டாம்கட்டப் பிரச்சாரம்

2007-06-27T11:54:06.605+05:30

(image) மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங் களில் தாழ்த்தப்பட்டோர் , பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தி கொளத்தூர், கோவை, சென்னை, தூத்துக்குடி ஆகிய தமிழகத்தின் நான்கு மூலைகளிலி ருந்தும் சம்பூகன் சமூக நீதிப் பயணம் இரண்டாம் கட்டப் பிரச்சாரப் பயணம் தொடங்கி 12.11.2006 அன்று திருச்சியில் நிறைவடைந்தது. கோவையிலிருந்து

பொதுச்செயலாளர்கோவை.இராமகிருட்டினன் தலைமையிலும், சென்னையிலிருந்து பொதுச்செயலாளர் விடுத(image) லை இராசேந்திரன் தலைமையிலும், கொளத்தூரிலிருந்து கழகத் துணைத்தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையிலும், தூத்துக்குடியிலிருந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும் ஆன குழுக்கள் தமிழகம் முழுக்கப் பிரச்சாரம் செய்தன. 12.11.2006 அன்ற திருச்சியில் சம்பூகன் சமூக நீதிப் பயண நிறைவு விழாவில் சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர். இரவீந்திரநாத், டாக்டர். முத்துக்குமார் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.







தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் படத்திறப்பு - இரங்கல் கூட்டப் படங்கள்

2007-06-27T01:06:13.387+05:30

இடம் : கோவை பெரியார் படிப்பகம்
நாள் : 15.12.2006

தொடக்கஉரை : கோவை இராமகிருட்டிணன்
பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

படத்திறப்பு : கொளத்தூர் மணி
தலைவர், பெரியார் திராவிடர் கழகம்

இரங்கல் உரை :
கோவை ஞானி
எம்.வீரகோபால் தி.மு.க மாநகரச் செயலாளர்
கோவைமு.கிருஸ்ணசாமி, ம.தி.மு.க
இராமகிருட்டிணன் ம.தி.மு.க அவைத்தலைவர்
எழுத்தாளர் பாமரன்,
விடியல் சிவா,
ஓசை காளிதாசு,
நீலவேந்தன், பொதுச்செயலாளர் , ஆதித் தமிழர் பேரவை
ஆ,காந்தி, உலகத்தமிழர் பேரமைப்பு
தனசேகரன் தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி
வான்மதி வேலுச்சாமி பல்லடம்
தேவேந்திரன் தமிழ் தமிழர் இயக்கம்
சாக்ரடீசு, பா.ம.க
(image)



கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல் படங்கள்

2007-06-27T00:41:18.811+05:30


கோவையில் சிங்கள இராணுவத்திற்கு இந்திய இராணுவத்தினரால் விமானப்பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல் 85 தோழர்கள் கைது

(image)

(image)
(image) கோவையில் சிங்கள இராணுவத்திற்கு இந்திய இராணுவத்தினரால் விமானப்பயிற்சி அளிக்கப்படுவதைக் கண்டித்து கோவை இராணுவ விமானப்படைத்தளம் முன்பு மறியல்போராட்டம் நடைபெற்றது. பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.இராமகிருட்டிணன் அவர்களது தலைமையில் 17.11.2006 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோவை சூலுர் சீரணி அரங்கிலிருந்து சிங்களவெறியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் சூலூர் விமானப்படைத்தளம் நோக்கி மறியல் செய்யப் பேரணியாகத் தோழர்கள் புறப்பட்டனர். மறியலுக்குச் சென்ற 85 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.



எஸ்.வி.இராஜதுரை அவர்களின் ஆகஸ்ட் 15 நூல் வெளியீட்டு விழா படங்கள்

2007-06-26T22:32:08.841+05:30

18.02.07 இல் ஈரோட்டில் நடைபெற்ற எஸ்.வி.இராஜதுரை அவர்களின் ஆகஸ்ட் 15 நூல் வெளியீட்டு விழா படங்கள்நூல் வெளியிட்டவர் : தோழர் கொளத்தூர் மணி தலைவர், பெரியார் திராவிடர் கழகம்நிறைவுரை : எஸ்.வி.இராஜதுரை இயக்குநர், பெரியார் உயராய்வு மையம் பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி[...]



19.03.07 ஈரோட்டில் நடைபெற்ற என்.எஸ்.ஏ. கண்டனக் கூட்டம் புகைப்படங்கள்

2007-06-26T22:15:49.679+05:30

19.03.07 அன்று ஈரோட்டில் நடைபெற்ற பெரியார் திராவிடர் கழகக் கொடி அறிமுக விழா மற்றும் என்.எஸ்.ஏ. கண்டனக் கூட்டம் புகைப்படங்கள்2..என்.எஸ்.ஏ கண்டனக்கூட்ட சுவரெழுத்துக்கள்கொடியேற்று விழாமேட்டூர் டி.கே.ஆர் கலைக்குழுவின் இசை நிகழ்ச்சிவழக்கறிஞர் பாலமுருகன்வழக்கறிஞர் ப.பா.மோகன்பேராசிரியர் கல்விமணிமக்கள் கண்காணிப்பகம். ஹென்றிடிபேன்ஆனூர் ஜெகதீசன்விடுதலை இராசேந்திரன்கோவை இராமகிருட்டிணன்கொளத்தூர் மணி[...]



திருப்பூர் தமிழர் எழுச்சி விழா புகைப்படங்கள்

2007-06-23T01:27:10.840+05:30

தமிழர் எழுச்சி விழா 1,2 . அக்டோபர் 2005 திருப்பூர்தலித் சுப்பையா அவர்களின் இசைநிகழ்ச்சிஆதி தமிழர் பேரவையின் நிறுவனர் தோழர் அதியமான் அவர்களின் உரைதோழர் சக்குபாய், தோழர் பெங்களூர் கலைச்செல்வி ஆகியோர் பங்கேற்ற வழக்காடுமன்றம்பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன் அவர்களின் உரைகுடிஅரசு 1926 நூல் வெளியீடுவெளியிடுவர் தோழர் நல்லகண்ணுபெற்றுக்கொள்பவர் இயக்குநர் மணிவண்ணன்மாநாடு சிறக்க உழைத்த பொறுப்பாளர்கள் இல.அங்கக்குமார், துரைசாமி ஆகியோருக்குப் பொன்னாடை-பாராட்டுவோர் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன். தலைவர் கொளத்தூர் மணி. இயக்குநர் மணிவண்ணன்கழகத்தலைவர்கொளத்தூர் மணிஅவர்களின் நிறைவுரை [...]



2003 சனவரி முதல் 2005 டிசம்பர் வரை கழகத்தின் செயல்பாடுகள்

2007-06-27T10:39:38.230+05:30

சன.6 பவானி ஆற்றின் குறுக்கே-கட்டப்பாடி முக்காலி என்ற இடத்தில்-கேரள அரசு அணை கட்ட நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து-பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் மேட்டுப்பாளையத்தில் கழகம் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியது. கட்சி வேறுபாடின்றி பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.சன.6 தலித் மக்களை இழிவுபடுத்திப் பேசிய காஞ்சி சங்கராச்சாரியைக் கண்டித்து-சென்னையில் வள்ளலார் பேரவையின் சார்பில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. கழகம் முன் முயற்சி எடுத்து நடத்திய இந்தக் கூட்டத்தில்-சங்கராச்சாரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சன.8 சீர்காழியில் கழக சார்பில்-மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.சன.16 விழுப்புரம் மாவட்டம் தொழுவந்தாங்கலில்-கழகத்தின் ஒரு நாள் பயிற்சிப் பாசறை நடந்தது.சன.21 பவானி நதி குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து-கோபியில் கழகம் மனிதச் சங்கிலி நடத்தியது.சன.23 கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி-கருநாடக சிறையிலிருந்து-அம்மா பேட்டை வெடிகுண்டு வழக்கு விசாரணைக்காக திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார்.பிப்.12, 13,14 திருச்சியில் கழகத் தோழர்களுக்கு 3 நாள் பயிற்சி முகாமை-கழகமும், சமூகக் கல்வி அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து நடத்தின.பிப்.16 வேலூர் மாவட்டக் கழகம் சார்பில் வேலூரில் மதமாற்றத் தடைச் சட்ட எதிர்ப்பு மாநாடு நடந்தது.பிப்.20 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்டு, இந்தியில் எழுதப்பட்டதைக் கண்டித்து, பொள்ளாச்சியில் தார் பூசி அழிக்கும்போராட்ட[...]