Subscribe: Comments on சம்பூகன்: தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'ய
http://sampoogan.blogspot.com/feeds/1817446350473238641/comments/default
Preview: Comments on சம்பூகன்: தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'ய

Comments on சம்பூகன்: தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....





Updated: 2015-05-18T20:54:12.259-07:00

 



Good Job comrade... Your replies seperates Water f...

2008-02-12T00:19:00.000-08:00

Good Job comrade... Your replies seperates Water from the Milk... I presume "Tamilmani" is a half-boiled egg.. screaming about communism and socialism.. I hope your replies will cook him more...



////கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்தி...

2008-01-31T23:41:00.000-08:00

////

கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்தியதுகளுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்த ஒப்பாரி வைத்தனர். ஐயா நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்ய+னிஸ்டுகளின் கோரிக்கை முன்வைக்காத படி, சமுகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள். இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்ய+னிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.

உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கழுவறுக்க உருவாக்கின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகள், கூடத்தான்.

/////

சரியான வாரத்தைகள்.

மக்களின் கோரிக்கைகளை ஜனநாயகமயமாக்கிவிட்டல் அங்கு புரட்சிகர ஜனநாயக சக்திகளுகு என்ன வேலை இருக்கப் போகிறது?

அசுரன்



அருமையான விவாதம், அருமையான பின்னுட்டங்கள் நன்றி தோ...

2008-01-31T20:32:00.000-08:00

அருமையான விவாதம், அருமையான பின்னுட்டங்கள் நன்றி தோழர்களே

அனைவரும் ஒன்றிணைந்து பார்ப்பனர்களை எதிர்த்துக் குரலெழுப்ப தகுந்த நேரம் இது

பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழர்களே

நன்றி



தமிழ்மணி என்ற பார்பனியமணி, கம்ய+னிசம் மீது காறி உம...

2008-01-31T13:04:00.000-08:00

தமிழ்மணி என்ற பார்பனியமணி, கம்ய+னிசம் மீது காறி உமிழ்ந்த போது அதன் நோக்கம் மக்களின் உரிமை தொடர்பானதல்ல. மாறாக மக்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற, தமது சமூக விரோத செய்லகளை பாதுகாக்கின்ற வகையில் தான், பூனுலில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

கம்யூனிஸ்ட்டுகள் கோயிலை இடிப்பார்கள், நாஸ்த்தியதுகளுக்கு அங்கு என்ன வேலை என்று, மார்பில் அடித்த ஒப்பாரி வைத்தனர். ஐயா நீங்கள் எதை மற்றவனுக்கு மறுக்கின்றீர்களோ, அதைக் கோரித்தான் அங்கு கம்யூனிஸ்ட்டுகள் போராடுகின்றனர். கம்யூனிஸ்ட்டுகளை விரட்ட வேண்டுமா, நீங்கள் கம்ய+னிஸ்டுகளின் கோரிக்கை முன்வைக்காத படி, சமுகத்தின் கோரிக்கைகளை ஜனநாயக மயமாக்கிவிடுங்கள். இதை செய்ய மறுக்கும் நீங்கள், கம்ய+னிஸ்ட்டுகளின் ஜனநாயக மீறல் பற்றி புலம்புவது அர்த்தமற்றது. அதுவோ பூனூல் வகைப்பட்டது.

உங்களால் தான், உங்கள் நடத்தையால் தான், கம்யூனிஸ்ட்டுகள் கோடிக்கால் பூதம் போல் உங்களை கழுவறுக்க உருவாக்கின்றனர். ஏன் பெரியாரிஸ்ட்டுகள், கூடத்தான்.

கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வர முன் அவர்களின் ஜனநாயக மீறலைப்பற்றி பேசும் நீங்கள், அவர்கள் உருவாகாத மாதிரி சமூகத்தின் உரிமைகளை வழங்கிவிடுவதல்லவா நேர்மை. சரியான வழியும் கூட. அதற்காகவா தமிழ்மணி என்ற பார்ப்பனமணி போராடுகின்றது.

கம்ய+னிஸ்ட்டுகளுக்கு எதிராக காறி உமிழ்வதை விட, கம்யூனிஸ்டுகள் அரசியலை நடத்த முடியாத வகையில், சகல சமூக அநீதிகளை ஒழித்துக் கட்டலாமே.

கோயில்களில் அனைத்து சாதியினரும் சென்று வழிபடும் உரிமை வழங்க மறுப்பது ஏன். அனைத்து சாதியிரும் பூசை செய்யும் உரிமை வழங்க மறுப்பது ஏன். அதை அவர்களின் சொந்த மொழில் வழிபடும் உரிமை மறுப்பது ஏன்? இப்படி பற்பல. இதை நீங்கள் மறுப்பதால், கம்யூனிஸ்டுகள் அதற்கு எதிராகப் போராடுகின்னறனர்.

இதனால் தான் கம்யூனிஸ்டுகள், பெரியாரிஸ்ட்டுகள், மற்றவர்களும், அவர்கள் நேசிக்கும் மக்களின் அடிப்படை உரிமைக்காக போராடுகின்றன்றனர்.



அசுரன், நமக்கு இடையில் இருக்கும் முரண்பாடும், விமர...

2008-01-31T08:08:00.000-08:00

அசுரன், நமக்கு இடையில் இருக்கும் முரண்பாடும், விமர்சணமும் எப்படி இந்த இந்துத்துவ பார்ப்பன சமூகத்தை மாற்றியமைப்பது, சாதியை ஒழிப்பது, மூடநம்பிக்கைகளை ஒழித்து ஒரு முற்போக்கான சமூகத்தை படைப்பது போன்ற முற்போக்கான அம்சங்களை அடிப்படையாக் கொண்டது, த‌மிழ்ம‌ணி என்ற பெய‌ரில் எழுதுகின்ற பார்ப்ப‌ன‌ ச‌நாத‌னிக‌ளுட‌ன் நாம் கொண்டிருக்கும் விம‌ர்ச‌ணமும் முர‌ண்பாடும் அடிப்ப‌டையிலேயே வேறான‌து, அவர்கள் நாம் எந்த மாற்றத்தையும் செய்து இந்த பார்ப்பனீய‌ சமூகத்தை மாற்றிவிடக்கூடாது என்று இயங்குகிறார்கள், அதற்காகவே கம்யூனிஸ்ட்களையும் பெரியாரியவாதிகளையும் மோதவிட்டு ஆதாயம் அடைய துடிக்கிறார்கள். உதார‌ண‌த்திற்கு சொல்ல‌ வேண்டுமானால் "ஆயுத‌ப் ப‌யிற்சி எடுக்கும் ஆர்.எஸ்.எஸ்." என்ற த‌லைப்பில் நீங்க‌ள் போட்டிருக்கும் ப‌திவை இப்பொழுது பார்த்தேன், ஒரு சிறுவ‌னுக்கு காக்கி ட‌வுசர், குல்லாவை மாட்டிவிட்டு, அவ‌ன‌து கையில் துப்பாக்கியை கொடுத்து ஆயுத‌ப்ப‌யிற்சி கொடுக்கும் ஒரு அதிர்ச்சியான‌ புகைப்ப‌ட‌ம் அதில் வெளியிட்டிருக்கிறீர்க‌ள், பிஞ்சுக‌ளின் க‌ர‌த்தில் துப்பாக்கியை கொடுத்து, முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைய தூண்டும் இந்த‌ காட்சியை பார்த்தாலே நெஞ்சு ப‌தைக்கிற‌து, இப்ப‌டி ப‌யிற்சி எடுத்த‌ வ‌ன்முறை கும்ப‌ல்தான் ச‌மீப‌த்தில் ஒரிசாவிலும், சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்பு குஜ‌ராத்திலும் ப‌ல்லாயிரக்க‌ண‌க்கில் இந்திய‌ ம‌க்க‌ளான‌ முஸ்லீம் ச‌கோத‌ர‌ர்க‌ளை கொன்று குவித்திருக்கிறது. இப்ப‌டி வ‌ன்முறை, பொறுக்கி கும்ப‌லாக‌ வ‌ள‌ர்ந்து நிற்க்கும் இந்த‌ ஆரிய‌ இந்தும‌த‌ வெறி ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களை க‌ண்டித்து இதுவ‌ரை ஒரு ப‌திவு கூட‌ எழுதாத‌ த‌மிழ்ம‌ணி, க‌ம்யூனிஸ்ட்க‌ள் ஆட்சிக்கு வ‌[...]



ஒரு பார்ப்பனிய முகத்திரை கிழிய போராடும் சம்பகனுக்க...

2008-01-31T07:50:00.000-08:00

ஒரு பார்ப்பனிய முகத்திரை கிழிய போராடும் சம்பகனுக்கு தோமையுடன் கூடிய வாழ்த்துகள்.
அவனை விடு, இவனை விடு என்று சொல்லும், நீ யார்? நீ பாhப்பான் என்றால், கோயில் உன்னுடையதா? வழிபடும் உரிமை, வழிபடதா உரிமை தனிமனிதனுடையது. இதற்கு அப்பால் இதைச் சொல்லி, கடவுளின் பெயரால் தின்னும் கூட்டத்துக்குரியதல்ல. ஒரு மனினதனாக உழைத்து தின்ன மறுக்கும் பாhப்பான், கடவுளின் பெயரல் தின்னுவதை உரிமை என்கின்றான். கோயிலுக்குள் செல்லக் கூட உரிமை கிடையாது. உரிமை பற்றி பேசுகின்றனர்.



இங்கு வருகைதந்து வாழ்த்தியிருப்பதோடு வாய்கொழுப்பெட...

2008-01-31T07:20:00.000-08:00

இங்கு வருகைதந்து வாழ்த்தியிருப்பதோடு வாய்கொழுப்பெடுத்த ஒரு அனானிக்கு பதிலையும் கூறியிருக்கும் நண்பர் அசுரனுக்கு எனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

தமிழ்மணி என்ற வலைப்பூ "பார்ப்பனர் + பார்ப்பன அடிவருடிகள்" இணைந்து நிர்வகிக்கும் ஒரு கூட்டுப்பதிவு என்பதனை பலர் இங்கு கூறியிருகிறார்கள், அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை, கடந்த ஒரு வாரமாக நான் பார்த்து தமிழ்மணியின் வலைப்பூவை படித்த வகையில், ஜெர்மனியில் இருப்பதாக சொல்லிக்கொள்ளும் தமிழ்மணியிடமிருந்து இரவில் பதிவு வருவதும், மதிய நேரங்களில் பின்னூட்டம் வருவதுமாக அது 24 மணிநேரமும் இயக்கத்திலேயே இருப்பதால் ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்று எண்ண‌ வாய்ப்பு இருக்கிறது. ஆனால் 'தமிழ்மணி' என்று நயவஞ்சகமாக பெயரிட்டுக்கொண்டிருப்பது ஒரு பார்ப்பன தந்திரம்தான் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை அதனைத்தான் அவரது கருத்துக்களிலிருந்தும் நிலைப்பாடுகளிலிருந்தும் இங்கு அம்பலப்படுத்தியிருக்கிறேன். பார்ப்பனர்கள் தனிதனியாக இயங்கினாலும் கூட அவர்கள் கட்டுக்கோப்பானவர்கள் என்பதும், ஒருவகையில் கருத்தியல் ரீதியாக அவர்கள் கூட்டுப்பதிவர்கள்தான் என்பதும் வெள்ளிடைமலை, இந்த நிலையில் நான் தனியாக நின்று அவர்களுக்கு பதிலளிப்பதை காட்டிலும், நண்பர்களூம், தோழர்களும் இதில் பங்கெடுத்துக் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

பார்ப்பனர்கள் இதற்கு முன்பு சல்மா அயூப், முரளி மனோகர் என்ற பல்வேறு பெயர்களிலும் எழுதி கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார்கள் என்று ஒரு நண்பர் தனிமடலில் தெரிவித்து இருக்கிறார், தமிழ்மணி என்று தமிழை தனது அடைமொழியாக்கி கொண்டு சதியில் இறங்க முற்பட்டிருந்த பார்ப்பனர்கள் தங்கள் கருத்துக்களின் வாயிலாக இப்போது அம்பலமாகியிருக்கும் நிலையில்,இது போன்று பல்வேறு பெயர்களில் எழுதமுற்பட்டு இணையத்தின் பார்ப்பனர்கள் அம்பலமான வரலாற்றினை சுருக்கமாக‌ மூத்த பதிவர்கள் யாராவது எழுத முற்பட்டால் என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு உதவியாய் இருப்பதோடு, பார்ப்பனர்களின் இந்த தொடர் முயற்சியை பலர் புரிந்து கொள்வதற்கும் ஏதுவாக இருக்கும் நண்பர் லக்கி லுக் போன்ற‌ மூத்த பதிவர்களால் அது இயலும் என்கிற காரணத்தால் இதனை அவருக்கு எனது வேண்டுகோளாக முன்வைக்கிறேன்.



//இந்து சமூகம் இதைஇன்னும் உணரவில்லை.//சிதம்பரம் கோ...

2008-01-31T05:11:00.000-08:00

//இந்து சமூகம் இதை
இன்னும் உணரவில்லை.//

சிதம்பரம் கோயில் ஏற்கனவே தீட்சிதர் கையில் இருக்கிறது. அப்படியெனில் அது இந்துக்கள் கையில் இல்லையா? சரி யார் இந்த் இந்து? இவர்கள் கணக்கில் தீட்சிதர் தவிர யாரும் உள்ளே போக முடியாது எனில் இவர் சொல்லும் இந்து பார்ப்பந்தான்.

அடித்து துவைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி என்னும் சூத்திரன் ஒரு இந்து கிடையாது என்று ஒத்துக் கொண்ட அனானிக்கு நன்றிகள்.


//மத வழிபாட்டு உரிமை
அரசியல் சட்டம் தருவது. //

மத வழிபாட்டு உரிமை சரி. பார்ப்பன வெறியர்கள் பேசுவது சாதி வழிபாட்டு உரிமையல்லவா? இந்து மதம் எனப்படும் பார்ப்பனிய ஒடுக்குமூறை வாழ்க்கை தத்துவம் ஒரு மதமல்ல என்று இந்த அம்சத்தில்தான் சொல்கிறோம்.


//சிதம்பரம் நடராசர் கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முயன்று நீதிமன்றத்தில்
தோற்றுவிட்டது.//

பொய், இந்த அம்சத்தில் 1800களிலிருந்து இன்று வரை நடந்த வழ்க்கு நிலவரங்கள் வேண்டுமானால் தருகிறேன். முதல் வழக்கிலேயே அந்த கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என்பதுதான் தீர்ப்பு, மாறாக தீட்சிதர்களின் வருவாய் கோயிலை நம்பி இருக்கீர்து என்ற அம்சத்தில்தான் அவர்களுக்கு பாதி சாதகமான ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.



தமிழ்மணீ ஒரு பார்ப்ப்னிய பதர் என்பத்ற்க்கு பதிவுல ...

2008-01-31T04:24:00.000-08:00

தமிழ்மணீ ஒரு பார்ப்ப்னிய பதர் என்பத்ற்க்கு பதிவுல தோழர்கள் ஆதாரங்கள் இருப்பதாக கூறீனர். ஆயினும் அப்பொழுது அசுரன் தளத்தில் தமிழ்மணியின் அல்பத்தனத்தை விளம்பரப்படுத்தும் முயற்சி நடந்து கொண்டிருந்ததால் அந்த அம்சத்தில் தமிழ்மணி கும்பலை அவதனிப்பது(for sometime) என்று முடிவு செய்தோம். அப்பொழுதே அசுரன் தளத்தில் கிருத்துவ ஏகாதிபத்தியம் போன்ற RSS கும்பலுக்கே உரிய வசனங்களை உதிர்த்துச் சென்றான் இந்த பார்ப்பனமணி(இந்த கும்பலில் நீலகண்டன் போன்றவர்களும் இருக்கலாம்).


But u did the job at right time... with right spirit.

நண்பர் லக்கிலுக்,

தமிழ்மனியின் ஆரம்ப கால எழ்த்துக்களை வாசித்தால் கூட அவனது கள்ளாத்தனத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும்(அவன் பார்ப்பன பயங்கரவாதி என்று சொல்ல முடியாது எனினும் அவன் ஒரு மிதவாத இந்துத்துவவாதி என்று சொல்லிவிடக் கூடிய அளவில்தான் அவனது ஆரம்ப கால எழுத்துக்கள் உள்ளன). நமது பிரச்சினை நாம் விசயங்களை வேக வேகமாக பரவசமாக உள்வாங்குவதுதான். கொஞ்சம் நிதானித்து யார் எழுதுகிறார் எதற்க்கு எழுதுகிறார், வார்த்தைகளுக்கிடையிலுள்ள அர்த்த இடைவெளி என்ன்? எதை பேசமால கள்ளமௌனம் சாதிக்கீறார் என்று கொஞ்சம் நிதானமாக பார்த்தால் பெரும்பாலன நேரங்களில் எதிரி அம்பலமாகிப் போய்விடுவான். ;-)

அசுரன்



//தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் க...

2008-01-31T04:16:00.000-08:00

//தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் கூட்டங்களின் கூட்டுப் பதிவு!//

வாழ்த்துக்கள் சாம்பூகன்.

கம்யுனிசம் குறித்த உங்களது கருத்துக்களை ஏன் எம்முடன் விவாதித்து புரிந்து கொள்ளக் கூடாது? உங்களது விமர்சனங்களை எனக்கு கடிதம் அனுப்புங்கள் asuran@inbox.com.

சமிபத்தில்தான் திருவினுடைய ஒரு பின்னூட்டத்திற்க்கு பதிலளிக்கும் போது பார்ப்பன் எதிர்ப்பாளர்களிடையே சரியான உரையாடல் இல்லாதது ஒரு பிரச்சினையாக இருப்பதை சுட்டிக் காட்டினேன். இதில் யார் பக்கம் தவறு என்று எதுவும் நான் குறிப்பிட்டு பேசவில்லை.

ஏன் நாம் இந்த அம்சத்தில் உரையாட்க் கூடாது? உங்களது இமெயில் ஐடியை எனது தளத்தில் உங்களது ப்ளாக்கர் ஐடி மூலமாக வந்து கொடுத்துச் செல்லுங்கள். ஏனேனில் தமிழ்மணி கும்பல் உங்களது பெயரில் என்னுடன் உரையாடும் வாய்ப்பு 99% உள்ளது.

உங்களது கருத்துக்களை அறிய ஆவலுடன்,
அசுரன்



சிதம்பரம் நடராசர் கோயில் விவகாரங்களில் அரசு தலையிட...

2008-01-31T02:07:00.000-08:00

சிதம்பரம் நடராசர் கோயில் விவகாரங்களில் அரசு தலையிட முயன்று நீதிமன்றத்தில்
தோற்றுவிட்டது.வழக்கு இன்னும்
முடியவில்லை. இதை நினவில்
கொள்வது நல்லது. ஆகம விதிகள்படி கருவரையில்
நுழையும் உரிமை பூசை செய்பவர்களுக்கே உள்ளது.பல கோயில்களில் பார்ப்பனர் அல்லாதோரும் பூசகர்கள்.இங்கு பார்பனர் கருவரையில் நுழைய
முடியாது.பார்பனர் பூசகராக இருந்தாலும் பூசகர் மட்டுமே
செல்ல முடியும், அனைத்து
பார்ப்பனருக்கும் அந்த உரிமை
இல்லை.

மத வழிபாட்டு உரிமை
அரசியல் சட்டம் தருவது. அதில்
அத்துமீறி நுழைய அரசுக்கு அதிகாரம்
இல்லை.
மசூதிகளில் தமிழில் வழிபாடு இல்லையே, ஏன். மசூதிகளில்
தமிழிலும் வழிபாடு வேண்டும்
என்று நீங்கள் கோருவீர்களா.

எப்படி தேவாலயங்கள் கிறித்துவர்களிடமும், மசூதிகள்
இஸ்லாமியரிடமும் இருக்கின்றனவோ
அது போல்
இந்துக் கோயில்கள் இந்துக்களிடம்
இருக்க வேண்டும், அரசிடம் அல்ல.
இதுதான் தீர்வு. இந்து சமூகம் இதை
இன்னும் உணரவில்லை.



கலைஞர் பகுத்தறிவு பாசறையை சேர்ந்த நண்பர் இராவணனின்...

2008-01-30T23:10:00.000-08:00

கலைஞர் பகுத்தறிவு பாசறையை சேர்ந்த நண்பர் இராவணனின் வருகைக்குக்கும் பாராட்டுகளுக்கு நன்றி.தோழர், நீங்கள் குறிப்பிடுகின்ற சம்பூகன் நான் இல்லை.,



உங்களது பாராட்டுக்கு நன்றி லக்கி லுக், தமிழ்மணி என...

2008-01-30T23:07:00.000-08:00

உங்களது பாராட்டுக்கு நன்றி லக்கி லுக், தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன போலியை பற்றி நன்றாக புரிந்து வைத்திருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்..



நண்பர்களே தமிழ்மணியின் பதிவுகளில், பழைய அனானி என்ற...

2008-01-30T23:05:00.000-08:00

நண்பர்களே தமிழ்மணியின் பதிவுகளில், பழைய அனானி என்று பெயரிட்டுக்கொண்டு ஒருவர் தொடர்ந்து பின்னூட்டமிட்டு எழுதி வருகிறார், அவர் உண்மையிலேயே பழைய்யயய அனானிதான் போலத்தான் தெரிகிறது, வைக்கம் போராட்டத்தின் பொழுது தந்தை பெரியார் நாத்திகரா என்று கேள்வி எழுப்பியிருப்பதோடு, ஒரு ஆர்.எஸ்.எஸ் இந்துமதவெறியனுக்கே உரிய வன்மத்தோடு சம்பந்தமேயில்லாமல் முஸ்லீம் மதத்தின் மீதும், கிறிஸ்தவ மதத்தின் மீது விழுந்து பிராண்டியிருப்பதோடு இந்து மதம் ஒரு ஜனநாயக மதம் என்று ஒரு பச்சைபொய்யை வேறு உதிர்த்து சென்றிருக்கிறார்.

வைக்கம் போராட்டத்தின் போது பெரியார் நாத்திகரா என்று அவர் எழுப்பியிருக்கும் சந்தேகத்திற்கான விளக்கத்தை பார்ப்போம்.

பழைய அனானி கூறுவது போலவே காங்கிரசின் பிரதிநிதியாகத்தான் தந்தை பெரியார் அந்த போராட்டத்திற்கு தலைமை ஏற்றார், அந்த போராட்டத்தில் ஈடுபட்ட 19 தலைவர்களும் கைதாகி வைக்கம் போராட்டம் தொய்வடைந்திருந்த‌ நிலையில், தந்தை பெரியாருக்கு தலைமையேற்கும்படி கடிதம் எழுதப்பட்டது. பண்ணைபுரத்தில் பொதுக்கூட்டம் பேசிவிட்டு ஈரோடு வந்த தந்தை பெரியார் உடனே வைக்கம் புறப்பட்டுச் சென்றார், போராட்டத்தில் ஈடுபட்டு சிறையும் சென்றார். காங்கிரஸின் பிரதிநிதியாகவே அங்கு சென்றிருந்த தந்தை பெரியார் அங்கு காங்கிரஸ் பிரதிநிதியாக மட்டும் செயல்படவில்லை மாறாக இந்துமதத்தின் கொடுங்கரத்தால் ஆண்டாண்டு காலமாக ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சூத்திர பஞ்சமர்களின் பிரதிநிதியாகவே போர்குணத்தோடு அந்த போராட்டத்திற்கு பெரியார் தலைமை கொண்டார், அதன் காரணமாகத்தான் காங்கிரஸ் தலைமையிலிருந்த காந்தி, இராஜாஜி, சீனிவாச அய்யங்கார் போன்றவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்தும் கூட பெரியார் தொடர்ந்து போராடினார்.

மேலும் இந்த போராட்டத்தில் கைதாகி பெரியார் சிறையிலிருந்த பொழுது அவர் இறந்து போக வேண்டும் என்பதற்காக சத்ரு சம்ஹார யாகம் என்றவொரு யாகத்தை, பார்ப்பன நம்பூதிரி கும்பல் நடத்தியது, ஆனால் யாகத்தின் முடிவில் மகாராஜா இறந்துவிட்டார், பெரியாரை கொல்ல அனுப்பப்பட்ட பூதம் திரும்பிசென்று மகாராஜாவையே கொலை செய்துவிட்டது என்று சிறையிலிருந்த ஒரு காவலர் பெரியாருக்கு முன்னாலேயே கூறி மகிழ்ந்த பொழுது தந்தை பெரியார் அதனை ஒரு மூடநம்பிக்கை என்று கண்டித்தார். இந்த சம்பவத்தை சமீபத்தில் வந்த 'பெரியார்' படத்தில் கூட காட்டியிருப்பார்கள். இந்த ஒரு சம்பவம் போதுமானது பெரியார் அப்போது ஆத்திகராக இருந்தாரா? அல்லது நாத்திகராக இருந்தாரா? என்பதை புரிந்து கொள்வதற்கு.

மேலும் மதுரை கோவில் நுழைவு போராட்டத்தில் பெரியார் பங்கேற்கவில்லை என்றும் கூட பழைய அனானி கூறியிருக்கிறார். ம‌துரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோவில் நுழைவு போராட்ட‌ம் என்ப‌தே ந‌ட‌க்க‌வில்லை என்பதை அப்பொழுதே விடுத‌லை ப‌த்திரிக்கையில் அம்ப‌ல‌ப்ப‌டுத்தினார் த‌ந்தை பெரியார்.

ப‌ழைய‌ அனானி இங்கு ம‌துரை கோவில் நுழைவு என்று குறிப்பிடுவ‌து, திணமனியில் பேட்டியளித்த‌ இல‌.க‌ணேச‌ன் என்ற‌ ஒரு இந்துத்துவ‌ வெறிய‌னும், புதிய‌ பார்வை என்ற‌ தேவ‌ர் ஜாதிவெறி ப‌த்திரிக்கையும் எழுதிய க‌ருத்துக்க‌ளை அடியொற்றி கூற‌ப்ப‌டுவ‌து. அதாவ‌து தேவர்(முத்துராமலிங்க தேவர்) ஜாதியின‌ரும், பார்ப்ப‌ன‌ர்க‌ளும்(வைத்திய‌நாத‌ அய்ய‌ர்) இணைந்துதான் கோவில் நுழைவு போராட்ட‌ங்க‌ளை ந‌ட‌த்தின‌ர் என்ப‌துதான் அந்த‌ க‌ருத்து.

இந்த‌ புளுகுமூட்டைக்கு எதிராக‌ 'வாலாச‌ வ‌ல்ல‌வ‌ன்' என்ற‌ பெரியாரிய‌ தொண்ட‌ர் ஒருவ‌ர் 'த‌லித் முர‌சு' என்ற‌ ப‌த்திரிக்கையில் அப்பொழுதே ஒரு ம‌றுப்பு க‌ட்டுரை எழுதியிருந்தார். த‌ற்பொழுது "கோவில் நுழைவில் திராவிட‌ இய‌க்க‌த்தின‌ரின் ப‌ங்கு" என்ற‌ ஒரு புத்த‌க‌த்தையும் எழுதியிருக்கிறார். புளுகு மூட்டைக‌ளை தூக்கி சும‌ந்து கொண்டு திரியும் ப‌ழைய்ய்ய‌ய‌ அனானி இந்த‌ புத்த‌க‌த்தை வாங்கி ப‌டித்து பார்க்க‌லாம்.,

அந்த பின்னூட்டத்தில் தந்தை பெரியார் பற்றி இப்படி நுட்பமாக புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கும் பழைய அனானி போதாக்குறைக்கு க‌ம்யூனிஸ்ட்க‌ள் மீதும் த‌ன‌து வெறுப்பை க‌க்கிவைத்திருக்கிறார், எவ‌னோ சிவ‌ப்பு ச‌ட்டைக்காரன், பழைய அனானி ட‌வுசரை ந‌ன்றாக‌ கிழித்துவிட்டு துரத்தியிருப்பான் போல... பாவம்...



தமிழ்மணி என்பவரது ஆரம்ப பதிவுகளை யார் கண்டிருந்தால...

2008-01-30T21:16:00.000-08:00

தமிழ்மணி என்பவரது ஆரம்ப பதிவுகளை யார் கண்டிருந்தாலும் அவர் ஒரு திராவிட பதிவர் என்று தவறாக புரிந்துகொண்டிருப்பார்கள்.

பார்ப்பன முகமூடியை சரியான நேரத்தில் கிழித்தெறிந்து உண்மையை வெளிக்காட்டிய சம்பூகனுக்கு நன்றி!



பார்ப்பன சதியை புட்டு புட்டு வைக்கும் நன்பர் சம்பூ...

2008-01-30T21:15:00.000-08:00

பார்ப்பன சதியை புட்டு புட்டு வைக்கும் நன்பர் சம்பூகனுக்கு பாராட்டுகள்.

நட்பு சக்திகளுக்குள் சிண்டு முடியும் வேலையில் இறங்கியிருக்கும் தமிழ்மணி பதிவை மிகச்சிறப்பான முறையில் தோலுரித்துக் காட்டி வரும் சக தோழருக்கு மனமார்ந்த நன்றிகள் பல.

நீங்கள் “கருங்குயில்” கவிதைத் தொகுப்பை எழுதிய தோழர் சம்பூகன் என்றால்..எங்கள் ஊருக்கு வரும் போது தெரியப்படுத்தவும். உங்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறோம்

இராவணன்,
கலைஞர் பகுத்தறிவு பாசறை
மதுராந்தகம்.

பி.கு - எனது முதல் தமிழ் தட்டச்சு முயற்சி இது. எழுத்துப் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்



வருகைக்கும் உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சத்திய...

2008-01-30T21:05:00.000-08:00

வருகைக்கும் உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சத்தியநாராயணன், இங்கு வருகை தந்து பதிவினை படிக்கும் வாசகர்கள் உங்களது கருத்துக்களை பதிந்தால், நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும்.



தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் கூட...

2008-01-30T20:44:00.000-08:00

தமிழ்மணி என்பது பாப்பான் + பாப்பான் அடிவருடிக் கூட்டங்களின் கூட்டுப் பதிவு!



அருமை நண்பரே,அருமையான பதிவுக்கு நன்றிஉங்களது பணித்...

2008-01-30T20:22:00.000-08:00

அருமை நண்பரே,

அருமையான பதிவுக்கு நன்றி

உங்களது பணித் தொடரட்டும்

வாழ்த்துக்கள் தோழரே