Subscribe: Comments on சம்பூகன்: தமிழர்களின் வழிபாட்டுரிமையை மறு
http://sampoogan.blogspot.com/feeds/236640308668944961/comments/default
Preview: Comments on சம்பூகன்: தமிழர்களின் வழிபாட்டுரிமையை மறு

Comments on சம்பூகன்: தமிழர்களின் வழிபாட்டுரிமையை மறுக்கும் தமிழ்மணி(?)க்கு சம்பூகனின் கேள்விகள்!!

Updated: 2015-05-18T20:54:12.259-07:00

 ஆகா! என்ன ஒரு தெளிவு.ஐயா அனானி, தொழுகையில் அரபி மொ...

2008-01-31T13:18:00.000-08:00

ஆகா! என்ன ஒரு தெளிவு.

ஐயா அனானி, தொழுகையில் அரபி மொழியில் தொழுவது அரபி தெய்வ பாஷை என்பதால் அல்ல, மாறாக ஒரு சமத்துவத்திற்க்காகத்தான், மேலும் நாங்கள் இறைவேதமாக மதிக்கும் அல் குர் ஆன் அரபி மொழியில் உள்ளதுதான் காரணமேயல்லாது அரபிதான் தேவ பாஷை என்பதால் அல்ல.

மேலும் முதன் முதலில் இறைவணக்த்திற்க்கான அழைப்பை கூறியது நீங்கள் கற்பனையிலும் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு கருப்பின அடிமைதான் என்பது கலப்பில்லாத உண்மை, எந்த கொம்பனாலும் நடத்த முடியாத ஒரு சமுதாயப் புரட்ச்சியைச் செய்தது நாங்கள் உயிருனும் மேலாக மதிக்கும் எங்கள் வழிகாட்டி முகமது நபியவர்கள்.

யாரலும் இன்றுவரை போராடியும் கிடைக்காத ஒரு உரிமயை மிக சர்வ சாதரணமாக நடத்தியதால்தான் அவரை இறைவனின் தூதர் என்று நாங்கள் நம்புகிறோம்.

முடிதிருத்தும் தொழில் செய்பவனாக இருந்தாலும், சாக்கடை அல்லும் தொழில் செய்பவனாக இருந்தாலும் அல்லது உங்கள் வேதப்பிராகாரம் தாழ் நிலையில் இருக்கும் (அது போன்ற எண்ணங்கொள்வதிலிருந்து இறைவன் நம்மைக் காப்பானாக) ஒரு சக மனிதன் "இறவன் ஒருவன்தான் என்றும் அவனின் தூதர் முகமது" என்றும் நம்புவாரேயானால் அவர் சமுதாயத்தில் எத்தனை பெரிய மனிதாராக இருந்தாலும் அவருடைய தோளோடு தோள் சேர்ந்து நின்று தொழலாம்.

அரபி மொழியை முன்னிலைபடுத்தும் அனானியே முடியுமா இது?

கூடுதல் தகவல்:- அனானி ஐயா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜூம்மா தொழுகையில் பிரசங்கம் பள்ளிவாசளுக்கு உள்ளில் தமிழ்தான் நடக்கிறது, மேலும் தொழுகை முடிந்தவுடன் கூட்டுப்பிரார்த்தனையும் தமிழில்தான் நடக்கும்.மசூதிகளில் தமிழுக்கு என்ன இடம்?. அங்கு ஏன் அரபி மொ...

2008-01-29T00:40:00.000-08:00

மசூதிகளில் தமிழுக்கு என்ன இடம்?. அங்கு ஏன் அரபி மொழியில் மட்டும் தொழுகிறார்கள். இதை எதிர்த்து பெரியாரோ அல்லது அவரது சீடர்களோ ஏதாவது செய்ததுண்டா?.சம்பூகன் அய்யா,ஆமாங்கய்யா.நீங்க சொல்வது தான் சரி.த...

2008-01-29T00:37:00.000-08:00

சம்பூகன் அய்யா,

ஆமாங்கய்யா.நீங்க சொல்வது தான் சரி.தமிழ்மணி அய்யா இந்த ம க இ க கும்பலும்,பெ தி க கும்பலும் இணைந்து போராடுவது, ஒரு ஆச்சரியம் என்று சொன்னது சரியல்ல தான்.ம க இ க கும்பல், லட்சக் கணக்கில் அப்பாவி மக்களை கொன்ற கம்யூனிச தலைவர்களை கொண்டாடும் ஒரு இயக்கம்;பெ தி க, வன்முறையை பரப்பிய ஒரு வெறி பிடித்த தாடிக்காரனை தலைவராக போற்றும் இயக்கம்.இந்த வன்முறைப் பிரியர்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன அதிசயத்தைக் கண்டு விட்டார் தமிழ்மணி அய்யா?லட்சக்கணக்கில் உலகெங்கும் அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பின் லேடன் கும்பல் கூட இந்த மூஞ்சிகளோடு சேர்ந்தால் ஆச்சரியம் இல்லை.ஆனால் தமிழ்மணி அய்யா ஒரு விஷயத்தை சரியாக சொன்னார் என்று தோன்றுகிறது.ம க இ க,பெ தி க, போன்ற ரெளடி கும்பல் தங்களை மனித உரிமை காக்கும் கும்பல்,தமிழ் மொழி காவலர்கள், என்று சொல்லிக்கொள்வது ஒரு நகை முரண் தான்.செம காமெடி இது.

பாலா//அவருடைய பல பதிவுகள் படித்துள்ளேன். என் கண்ணிற்கு...

2008-01-29T00:15:00.000-08:00

//அவருடைய பல பதிவுகள் படித்துள்ளேன். என் கண்ணிற்கு கம்யூனிச எதிர்ப்பு தான் புலபடுகிறது(எனது பார்வையில் தவறாக கூட இருக்களாம்.)//

இந்தியாவிற்கு பார்ப்பனீயம் என்ற பேராபத்து இருப்பதால் உங்கள் பார்வை கூர்மையடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.....//நான் சாதி ஒழிந்தால் சரியாகி விடும் என்று சொல்லவே...

2008-01-29T00:14:00.000-08:00

//நான் சாதி ஒழிந்தால் சரியாகி விடும் என்று சொல்லவே இல்லை. நான் கூற வந்தது, கோவில் வழிபாட்டு முறையில் புரட்சி வேண்டும் என்றேன்.
மேலும் நான் ஒடுக்க பட்டவர்கள் பற்றி இதில் சொல்ல வில்லை.உங்களுடைய இந்த தலைப்பிற்கு அது சம்பந்தம் இல்லாதது. உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டுமானால், அது 2000 ஆண்டுகள் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வு நிரவ படவேண்டும்.//

நான் சாதியை இங்கு குறிப்பிட்டிருப்ப‌து ஒடுக்குமுறையை ஒப்பிட்டுக் காட்டுவ‌த‌ற்காக‌த்தான், சாதி ஒழியும் வ‌ரை எப்ப‌டி ஒடுக்குமுறைக்கு எதிராய் குர‌ல்கொடுக்காம‌ல் இருக்க‌ முடியாதோ அது போல க‌ட‌வுள் விச‌ய‌த்திலும் அடிப்ப‌டை மாற்ற‌ம் வ‌ரும் வ‌ரை த‌மிழ்நாட்டிலேயே ஒடுக்குமுறைக்குள்ளாகும் தமிழ் மொழி வழிபாட்டுரிமைக்காகவும்‌ குர‌ல்கொடுக்காம‌ல் இருக்க‌முடியாது., நீங்க‌ள் என்ன‌ இங்கு ப‌திவுக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌வ‌ற்றை ம‌ட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்க‌ளா, ம‌ருதைய‌ன் பார்ப்ப‌ன‌ரா? இல்லையா என்றா இந்த பதிவு பேசுகிறது., த‌மிழ‌ர்க‌ளுக்கு தான் விரும்பும் க‌ட‌வுளை தன‌து தாய்மொழியில் வ‌ழிப‌ட‌ உரிமை இருக்கிற‌தா இல்லையா? என்பதும் அத‌னை நுட்ப‌மாக‌ ம‌றுக்கும் த‌மிழ்ம‌ணி(எ)ச‌ம‌ஸ்கிருத‌மணியின் வாதங்களை பற்றித்தான் இந்த பதிவு பேசுகிறது, அத‌னை ப‌ற்றி பேசாம‌ல் மீண்டும் மீண்டும் ம‌ருதைய‌ன் குறித்து பேசிய‌து யார்? ம‌ற்ற‌ப‌டி சாதி ஒழிய‌வேண்டுமானால் நீங்க‌ள் குறிப்பிடும் ச‌மூக‌ நீதி அடிப்ப‌டையிலான‌ தீர்வை நானும் ஏற்றுக் கொள்கிறேன், திராவிட இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சி பற்றி நீங‌கள் குறிப்பிட்டிருக்கும் ம‌ற்ற‌விச‌ய‌ங்க‌ள் ப‌திவுக்கு ச‌ம்ப‌ந்த‌மில்லாத‌வை ஆத‌லால் அவ‌ற்றை புற‌ந்த‌ள்ளுகிறேன்.//அதிருக்கட்டும் உங்கள் கூட்டாளி யார் என்பதைதான் இ...

2008-01-28T23:36:00.000-08:00

//அதிருக்கட்டும் உங்கள் கூட்டாளி யார் என்பதைதான் இங்கு கூறுபோட்டுக் காட்டியிருக்கிறேன் //

???????அவருடைய பல பதிவுகள் படித்துள்ளேன். என் கண்ணிற்கு க...

2008-01-28T23:35:00.000-08:00

அவருடைய பல பதிவுகள் படித்துள்ளேன். என் கண்ணிற்கு கம்யூனிச எதிர்ப்பு தான் புலபடுகிறது(எனது பார்வையில் தவறாக கூட இருக்களாம்.)பெரியார் தொண்டர்கள் எப்போது கூட்டாளிகள் மீது கவனத்...

2008-01-28T23:24:00.000-08:00

பெரியார் தொண்டர்கள் எப்போது கூட்டாளிகள் மீது கவனத்தோடுதான் இருப்போம் பூதம் அதிருக்கட்டும் உங்கள் கூட்டாளி யார் என்பதைதான் இங்கு கூறுபோட்டுக் காட்டியிருக்கிறேன் அதற்கு உங்கள் பதிலென்ன?//அத‌ற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய வன்கொடுமைகளுக...

2008-01-28T23:21:00.000-08:00

//அத‌ற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பொழுதும், இரட்டை குவளை வைத்து அவர்களை அசிங்கப்படுத்தும் பொழுதும், அவர்களது உரிமைக்காக குரல் கொடுக்காமல் சாதி ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?//

நான் சாதி ஒழிந்தால் சரியாகி விடும் என்று சொல்லவே இல்லை. நான் கூற வந்தது, கோவில் வழிபாட்டு முறையில் புரட்சி வேண்டும் என்றேன்.
மேலும் நான் ஒடுக்க பட்டவர்கள் பற்றி இதில் சொல்ல வில்லை.உங்களுடைய இந்த தலைப்பிற்கு அது சம்பந்தம் இல்லாதது. உண்மையிலேயே சாதி ஒழிய வேண்டுமானால், அது 2000 ஆண்டுகள் ஏற்படுத்திய ஏற்ற தாழ்வு நிரவ படவேண்டும்.

அத்ற்கு உண்மையிலேயே பாதிக்க பட்டவர்கள் தலைமை தாங்கி போராட வேண்டும்.

அதுதான் உண்மையான போராட்டமாக இருக்கும்.. திராவிட இய்க்கம் கூட தலித்துகளின் கொடுமைக்கு முழுமையாக பாடு படாதது கூட அந்த இயக்கத்தில் தலித்துகள் பலம் பொருந்திய தலைவர்களாக வராதது தான் காரணம் .கம்யூனிசம் இந்தியாவில் வெற்றி பெறாததற்கு முக்கிய காரணம், அதன் தலைமை ஆதிக்க வர்க்கத்தினரிடம் சென்றதுதான்.அதே நிலை திராவிட இயக்கத்துக்கும் வந்து விட கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் கூறுகிறேன்.நண்பர் பூதம், மேலே உள்ள அந்த சொற்றொடரை கூறிய தந்தை...

2008-01-28T23:18:00.000-08:00

நண்பர் பூதம், மேலே உள்ள அந்த சொற்றொடரை கூறிய தந்தை பெரியார்தான், பிறவிப் பார்ப்பனரான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த "பி.இராமமூர்த்திக்கு" மதுரை சட்டமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்தார் என்பதை மறந்துவிடாதீர்கள், தனது கொள்கைகளோடு ஒத்துவந்தவர்களை அவர் என்றுமே அரவணைத்துச் சென்றார்.,

தமிழர்களின் இந்த வழிபாட்டுவுரிமை போராட்டத்தின் மீது உங்களுக்கு இவ்வளவு அக்கறை இருந்தால் மகிழ்ச்சிதான் பூதம், மருதையன் போன்றவர்கள் அதற்கு தலைமை தாங்குவது சரியில்லை என்று நீங்கள் கருதினால் நீங்கள் இறங்கி வேலை செய்யலாமே, இன்று தலைமைக்கு வந்திருக்கும் மருதையன் கூட ஆரம்பத்தில் இப்படி சமூகத்தில் இறங்கிதான் வேலை செய்திருப்பார் என்று நினைக்கிறேன், நீங்களும் அது போல் பார்பனீயத்திற்கு எதிராக சமூகத்தில் இறங்கி வேலை செய்தால் பின்னாட்களில் தலைமைக்கு வந்து சமரசமில்லாமல் போராட்டத்தை வழிநடத்தக்கூடும். மற்றபடி குறைசொல்லிக் கொண்டிருப்பதால் மட்டும் பயனில்லை.,

அது சரி, தமிழ்மணிக்காக வாதாடிக் கொண்டுவந்தீர்கள், தேவாரம் திருவாசகம் பார்ப்பனீயம் என்றீர்கள், மருதையன் பார்ப்பனர் என்கிறீர்கள், இவ்வளவு தெரிகிற உங்களுக்கு தமிழ்மணியின் பதிவில் இருக்கும் பார்ப்பனீயத்தை சுட்டிக்காட்டியிருக்கிறேனே அது தெரியவில்லையா? அல்லது பதிவில் பேசுவதற்கு ஒன்றுமே இல்லையா?//ஒரு போராட்ட‌ம் என்று வ‌ருகிற பொழுது ஒரு பொது எதி...

2008-01-28T23:03:00.000-08:00

//ஒரு போராட்ட‌ம் என்று வ‌ருகிற பொழுது ஒரு பொது எதிரிக்கு எதிராக‌ அனைவ‌ரும் ஒன்று திர‌ளும் பொழுது எதிரியை விட்டுவிட்டு எங்க‌ளுக்குள் மோதும்ப‌டி நீங்க‌ள் தூண்டுகிறீர்க‌ள்//

எதிர்த்து நின்று போராடும் எதிரியை விட, கூட இருந்து போராடுவதாக கூறி, உஙகள் போராட்டத்தை மழுங்கடிக்கும் கூட்டாளிகள் ஆபத்தானவர்கள். பெரியார் இதைதான் பலமுறை கூறி உள்ளார்.//நிச்சயமாக தீட்சிதர்கள் அதற்க்காக மறுக்க வில்லை. ...

2008-01-28T23:02:00.000-08:00

//நிச்சயமாக தீட்சிதர்கள் அதற்க்காக மறுக்க வில்லை. அவர்கள் பார்ப்பீணியத்தின் முழு பிரதிபலிப்பு. நான் சொல்ல வருவது என்ன என்றால், தமிழில் கடவுளை வணங்கினால் மட்டும் பார்ப்பீணியம் போய் விடாது. அதற்கு அடிப்படையிலேயே பல மாறுதல்கள்/புரட்சி தேவைபடுகிறது. //

என்ன திரு.பூதம் 1960களின் கம்யூனிஸ்ட்கள் போல பேசுகிறீர்கள்.'புரட்சி' என்ற பதத்தை பயன்படுத்துவதால் அப்படி கூறவில்லை. அடிப்ப‌டை‌ மாறுத‌ல்கள்/புரட்சி வ‌ந்தால் எல்லாம் ச‌ரியாகிவிடும் என்று கூறுகிறீர்க‌ள் ச‌ரி? அதுவ‌ரை இருக்கிற‌ அமைப்பிலிருந்து உரிமைக‌ளை பெறுவ‌த‌ற்காக‌ போராடுவ‌தில் என்ன‌ குறை இருக்கிற‌து?

உதார‌ண‌த்திற்கு சாதி என்ப‌து த‌வ‌று என்று ந‌ம‌க்கு தெரிகிற‌து, அது முற்றிலுமாக‌ ஒழிந்துவிட‌வேண்டும் என்றும் கூறுகிறோம், அத‌ற்கு ஒரு அடிப்ப‌டை மாறுத‌ல்/புர‌ட்சி அவ‌சிய‌ம் என்ப‌தும் உண்மைதான், அத‌ற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பொழுதும், இரட்டை குவளை வைத்து அவர்களை அசிங்கப்படுத்தும் பொழுதும், அவர்களது உரிமைக்காக குரல் கொடுக்காமல் சாதி ஒழிந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது?நான் மருதையனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம்"புரோகித...

2008-01-28T22:58:00.000-08:00

நான் மருதையனை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம்
"புரோகித பார்ப்பானை விட லெளகீக பார்ப்பான் ரொம்ப ஆபத்தானவன்" என்பதே.

உண்மையில் இது போன்றவர்கள் தான் அபாயகரமானவர்கள். ஒடுக்கபட்டவர்களுக்காக நடக்கும் போராட்டத்தின் தலைமையை ஏற்று , அதன் வலிமையை சிறிது சிறிதாக மழுக்கடித்து விடுவார்கள்.
இது மருதையனுக்கும் பொருந்தும். ஞானிக்கும் பொருந்தும். N.ராமிற்க்கும் பொருந்தும். வரதராஜனுக்கும் பொருந்தும். இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. தமிழ்மணியின் பதிவிலும், நான் இந்த பின்ணூட்டம் தான் இட்டுள்ளேன்.//உண்மையில் பார்த்தால் மருதையன் கூட "லெளகீக பார்ப்...

2008-01-28T22:48:00.000-08:00

//உண்மையில் பார்த்தால் மருதையன் கூட "லெளகீக பார்ப்பான்" வரிசையில் தானே வருவார்?//

ச‌துக்க‌பூத‌ம் நான் ப‌திவில் கீழ்க‌ண்ட‌வாறு எழுதியிருப்ப‌தை ப‌டித்தீர்க‌ளாக‌, பிர‌த்யேக‌மாக‌ த‌மிழ்ம‌ணிக்காக‌வும் அவ‌ர‌து ந‌ண்ப‌ர் குழாமுக்காக‌வும் எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரிக‌ள் இவை...

//இப்ப‌டியாக‌ த‌மிழ்ம‌ணி என்ற நாம‌க‌ர‌ண‌ம் தாங்கியப‌டி க‌ம்யூனிஸ்ட்களூக்கு கேள்விகள் என்ற பெய‌ரில் விஷ‌த்தை க‌க்கிவிட்டு இறுதியில் பெரியாரிய‌வாதிக‌ளுக்கு த‌ட‌விக்கொடுத்து க‌ம்யூனிஸ்ட்க‌ளை நோக்கி கொம்பு சீவுகிறார் இந்த‌ த‌மிழ்ம‌ணி(எ)ச‌ம‌ஸ்கிருத‌மணி. பிரித்து வைத்து மோதவிட்டு பலன் அனுபவிப்பது, மேலாதிக்கம் செலுத்துவது பார்பணீயத்தின் பல்லாண்டு கால பழக்கம், இன்று திடீரென்று மாறிவிடுமா என்ன?//

ஒரு போராட்ட‌ம் என்று வ‌ருகிற பொழுது ஒரு பொது எதிரிக்கு எதிராக‌ அனைவ‌ரும் ஒன்று திர‌ளும் பொழுது எதிரியை விட்டுவிட்டு எங்க‌ளுக்குள் மோதும்ப‌டி நீங்க‌ள் தூண்டுகிறீர்க‌ள் என்றால் நீங்க‌ள் யாருக்காக‌ பேசுகிறீர்க‌ள் என்று தெளிவாகிவிடுகிறது., ம‌ருதையன் பிற‌விப் பார்ப்ப‌ன‌ராக‌ இருக்கலாம், சிதம்பர கோவிலில் அவர் யாருக்கு எதிராக போராடுவதற்கென்று கைகோர்த்திருக்கிறார் தமிழர்களுக்கு எதிராகவா? யாரோடு கைகோர்த்திருக்கிறார் இந்துமதவெறி கும்பலோடா? இல்லை தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளோடு, ஆனால் உங்களுடைய பார்ப்பன எதிர்ப்பு தீட்சிதரிலிருந்து தொடங்குவதற்கு மாறாக மருதையனிலிருந்து தொடங்குகிறது என்றால், நான் என்ன சொல்ல, ஊருக்கே தெரியும் நீங்கள் யாருக்காக பேசுகிறீர்கள் என்று?//நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது சதுக்கபூதம்,...

2008-01-28T22:15:00.001-08:00

//நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது சதுக்கபூதம், தேவாரம், திருவாசகம் எல்லாம் பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு என்கிற காரணத்தால்தான் சிதம்பரம் கோவிலில் அதனை பாடும் உரிமையை தீட்சிதர்கள் மறுக்கிறார்களா? தமிழர்களுக்கு தமிழில் வழிபட உரிமை கேட்டால், தேவாரமும், திருவாசகாமும் கூட பார்ப்பனீயம்தான் என்று பிரச்சணையை சாதுர்யமாக மடைமாற்றிவிடுகிறீர்களே.//

நிச்சயமாக தீட்சிதர்கள் அதற்க்காக மறுக்க வில்லை. அவர்கள் பார்ப்பீணியத்தின் முழு பிரதிபலிப்பு. நான் சொல்ல வருவது என்ன என்றால், தமிழில் கடவுளை வணங்கினால் மட்டும் பார்ப்பீணியம் போய் விடாது. அதற்கு அடிப்படையிலேயே பல மாறுதல்கள்/புரட்சி தேவைபடுகிறது.

நான் கோவிலில் தமிழில் பாட வேண்டும் என்பதை மறுக்கவில்லை.தயவு செய்து
நான் சென்ற ஆண்டு(என்னுடைய இரண்டாவது பதிவு) இந்த பிரச்சனை பற்றி இட்ட பதிவை பார்க்கவும்
http://tamilfuser.blogspot.com/2006/07/blog-post_21.htmlஅருமையான பதிவு தோழரேதமிழ்மணி என்றப் பெயரை பார்ப்ப...

2008-01-28T22:15:00.000-08:00

அருமையான பதிவு தோழரே

தமிழ்மணி என்றப் பெயரை பார்ப்பான்மணி என்றும் கூறலாம்

நன்றி//புரோகித பார்ப்பானை விட லெளகீக பார்ப்பான் ரொம்ப ஆ...

2008-01-28T22:05:00.000-08:00

//புரோகித பார்ப்பானை விட லெளகீக பார்ப்பான் ரொம்ப ஆபத்தானவன்" //

உண்மையில் பார்த்தால் மருதையன் கூட "லெளகீக பார்ப்பான்" வரிசையில் தானே வருவார்?//அவர் கோவிலில் தமிழ் பாடுவதை எதிர்ப்பதாக கூறவில்ல...

2008-01-28T22:02:00.000-08:00

//அவர் கோவிலில் தமிழ் பாடுவதை எதிர்ப்பதாக கூறவில்லை. உண்மையில் பார்த்தால் தேவாரம்,திருவாசகம் கூட பார்ப்பீணியத்தின் வெளிப்பாடே! அப்பாடல்கள் உருவான சோழர்கள் காலம் தான் பார்ப்பீணியத்தின் வளர்ச்சியின் உச்சகட்ட காலம்//


வாங்க நண்பர் சதுக்க பூதம் தமிழ்மணி பதிவிலிருக்கும் விசயங்களைத்தான் இங்கு குறிப்பிட்டு பதிலளித்திருக்கிறேன், புதிதாக எதையும் புணைந்து பேசவில்லை.,

நீங்கள் சொல்வது விநோதமாக இருக்கிறது சதுக்கபூதம், தேவாரம், திருவாசகம் எல்லாம் பார்ப்பனீயத்தின் வெளிப்பாடு என்கிற காரணத்தால்தான் சிதம்பரம் கோவிலில் அதனை பாடும் உரிமையை தீட்சிதர்கள் மறுக்கிறார்களா? தமிழர்களுக்கு தமிழில் வழிபட உரிமை கேட்டால், தேவாரமும், திருவாசகாமும் கூட பார்ப்பனீயம்தான் என்று பிரச்சணையை சாதுர்யமாக மடைமாற்றிவிடுகிறீர்களே.

தேவாரமும், திருவாசகம் பார்ப்பனீய வெளிப்பாடாகவே இருந்துவிட்டு போகட்டும், அதனை தில்லையில் பாடினால் என்ன குறைவந்துவிடப்போகிறது என்றுதான் கேட்கிறோம்.உங்கள் பாராட்டுக்கு நன்றி, பெரியார் அடிக்கடி சொல்வ...

2008-01-28T21:52:00.000-08:00

உங்கள் பாராட்டுக்கு நன்றி, பெரியார் அடிக்கடி சொல்வாராம் "புரோகித பார்ப்பானை விட லெளகீக பார்ப்பான் ரொம்ப ஆபத்தானவன்" என்று, ஏனெனில் புரோகித பார்ப்பானை அவனது அங்க குறீயீடுகளை வைத்து எளிதாக அடையாளம் கண்டு அவனது கருத்தையும் அறிந்து கொள்ளமுடியும், ஆனால் லெளகீக பார்ப்பானர்களோ நடுநிலை என்று சொல்லி தங்கள் நஞ்சை பரப்புவார்கள், இங்கு தமிழ்மணி என்ற பெயரில் எழுதியிருப்பவரும் அப்படித்தான் எழுதியிருக்கிறார், வசதியாக ஜனநாயகவாதி என்ற போர்வையில் ஒளிந்து தமிழர்களுக்கு எதிரான‌ மனித விரோத பார்ப்பனீய கருத்துக்களை அவிழ்த்துவிட்டு ஆதரவு தேடுகிறார்.,குமணன் இது என்ன காலக்கொடுவினை, பின்னூட்டம் போடுவதற...

2008-01-28T21:46:00.000-08:00

குமணன் இது என்ன காலக்கொடுவினை, பின்னூட்டம் போடுவதற்கு முன்னாடி நான் வாக்கு கொடுக்க வேண்டுமா? துரோணனுக்கு வாக்கு கொடுத்த கட்டைவிரலை இழந்த ஏகலைவனின் கதைகேட்டுத்தான் வளர்ந்திருக்கிறோம் நாங்கள், எந்த வாதம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை என்பதனை எடுத்துவைத்து குறிப்பிட்டு பேசுங்கள் விவாதிக்கலாம், அதைவிட்டுவிட்டு தமிழச்சி, இன்ஸ்டன்ட் கம்யூனிஸ்ட் என்று யாரையும் இங்கே வந்து புரளி பேச வேண்டிய அவசியம் இல்லை.//நீங்கள் நாத்திகர் தானே? உங்களுக்கு கோயிலுக்குள் ...

2008-01-28T21:38:00.000-08:00

//நீங்கள் நாத்திகர் தானே? உங்களுக்கு கோயிலுக்குள் என்ன வேலை?
போய் வெளங்கற வேலையா பாருங்க சார்..//

வைக்க‌ம் கோவிலுக்குள் தாழ்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் வ‌ர‌க்கூடாது என்று ஆத்திக‌ர்க‌ள் த‌டுத்த‌ பொழுது போராடி அந்த‌ உரிமையை போராடி பெற்று த‌ந்த‌வ‌ர் நாத்திக‌வாதியான‌ த‌ந்தை பெரியார், அன்றைய‌ கால‌க‌ட்ட‌த்தில் நாடார் ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ கோவிலின் உள்ளே செல்ல‌ அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌ட்ட‌து, நாத்திக‌ரான‌ பெரியார் போராடியிருக்காவிட்டால் இன்றுவ‌ரை அந்த‌ நிலையே கூட‌ தொட‌ர்ந்திருக்கலாம்., இத‌னை ப‌திவில் விரிவாக‌ கூறியிருக்கிறேனே அனானி அத‌ற்கு ப‌தில்கூட‌ கொடுத்திருக்கிறேனே, ப‌டிக்க‌வில்லையா.... த‌மிழின‌த்தை சேர்ந்த நான் என‌து நாட்டில் த‌மிழ் இருக்க‌ வேண்டும் என்று கூறுவத‌ற்கு உரிமை இல்லையா சார், அது விள‌ங்காத‌ வேலையா சார்?சம்பூகா,தமிழ்மணி என்ற ஆரிய மணிக்கு நீ அடித்த சாவும...

2008-01-28T21:35:00.000-08:00

சம்பூகா,

தமிழ்மணி என்ற ஆரிய மணிக்கு நீ அடித்த சாவுமணி.அவர் கோவிலில் தமிழ் பாடுவதை எதிர்ப்பதாக கூறவில்லை....

2008-01-28T21:25:00.000-08:00

அவர் கோவிலில் தமிழ் பாடுவதை எதிர்ப்பதாக கூறவில்லை. உண்மையில் பார்த்தால் தேவாரம்,திருவாசகம் கூட பார்ப்பீணியத்தின் வெளிப்பாடே! அப்பாடல்கள் உருவான சோழர்கள் காலம் தான் பார்ப்பீணியத்தின் வளர்ச்சியின் உச்சகட்ட காலம்முகத்திரையயை கிழித்தப் பதிவு வகைகளில் இதுவும் Snap...

2008-01-28T21:13:00.000-08:00

முகத்திரையயை கிழித்தப் பதிவு வகைகளில் இதுவும் Snapjudgeல் சேர்த்தால் நல்லா இருக்கும்.

ஆணித்தரமான கேள்விகள்.

வழக்கம் போல், பதில் வராது. மழுப்பல் தான் வரும்.

கோவில் எவன் அப்பன் வீட்டுச் சொத்து. அரசுடைமை ஆக்குவதில் தவறில்லை.

தமிழை இழிவு செய்யும் எந்த ஒரு விசயத்தையும், கேள்வி கேட்க மக்களுக்கு உரிமை இருக்கு.

நீ கேட்ககூடாது, என்று பல காரணம் காட்டி தப்பிக்கும் இவர்கள், யார் கேட்டால் பதில் சொல்லுவார்களாம்.

சாமி கும்பிடுறதும், பொண்டாட்டியயைக் கொஞ்சுறானாம்.

ஏண்டாப்பா, கோவிலைப் பூட்டி வைச்சு கொஞ்சுறது தானே. சில்லறை சேராதே.உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை நன்பர் சம்...

2008-01-28T20:36:00.000-08:00

உங்கள் வாதம் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை நன்பர் சம்பூகன், உங்கள் வாதங்களை என்னால் சுக்கு நூறாக உடைக்க முடியும்.. ஆனால் தமிழ்நாட்டு இன்ஸ்டண்ட் கம்யூனிஸ்டுகள் பாணியில் என்னை நீங்கள் பார்ப்பன கொட்டை தாங்கி என்று முத்திரை குத்திவிடுவீர்கள் அல்லது உங்கள் தலைவர் பெரியாரின் வலையுலக டைப்பிஸ்ட் தமிழச்சி பாணியில் “ங்கோத்தா...” என்று ஆரம்பித்து ஏதாவது ஏடாகூடமாக திட்டிவிடவும் ஆபத்து இருக்கிறது ;)


அப்படி நீங்கள் என்னை பார்ப்பன அடிவருடி என்று முத்திரை குத்த மாட்டேன் என்று வாக்களித்தால் நான் எதிர்த்து வாதாட தயாராக இருக்கிறேன்

என்றும் அன்புடன்,
குமணன்,
திசையன்விளை.