Subscribe: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸà¯
http://kilumathur.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language:
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: கிழுமத்தூர் எக்ஸ்பிரஸà¯

கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக "Updated: 2017-11-23T00:01:05.986+05:30

 வெற்றிவேல் வீரவேல். சீமானின் தமிழ் தேசியப் புரட்டுக்கள். 2/2

2015-03-24T18:57:32.539+05:30

முதல் பாகம் படிக்காமல் தவற விட்ட முப்பாட்டனின் பேரன்கள் இங்கே சொடுக்கவும்.ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் சீமான் தன் கருப்புச் சட்டையோடு திராவிட இயக்க மேடைகளை வெறுத்து அதிமுக மேடைகளில் அதிகாரபூர்வமில்லா பேச்சாளராய் கோலோச்சிக் கொண்டே, " இனிமே எவனாச்சும் திராவிடம், தமிழ்னு பேசிகிட்டு கோபாலபுரம் கேட்டுக்கு அந்த பக்கம் போனீங்க? எல்லா பயலையும் கத்தியால குத்துவேன் என்று மார்க்ஸ், லெனின், சேகுவேரா, முப்பாட்டன் முருகன் எல்லாம் சிந்திக்காத ஒரு சித்தாந்தத்த முன் வைத்தபோது கூடவே இருந்த செவ்வாழைகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று துள்ளிக் குதித்து ஓடிப்போன விவகாரம் எல்லாம் நாம் அறிந்ததுதான்.ஒரு பக்கம் ஈழ ஆதரவு, இன்னோர் பக்கம் ஈழத்துக்கு எதிரான ஜெயலலிதா ஆதரவு, என்று ரெட்டைக் குதிரையில் எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல் சவாரி செய்துகொண்டிருக்கும் சீமான், கொஞ்சம் அல்ல அதிகமே முற்றிய நிலையில் கைய்யில் எடுத்திருக்கும் விவகாரம் தமிழ் தேசியம், ஆசிவகம், முப்பாட்டன் முருகன். வரலாற்றின் முன் தங்களுக்கான இடத்தை தங்களின் முயற்சியால், உழைப்பால், வீரத்தால் தியாகத்தால் தங்களை தாங்களே கட்டமைத்துக் கொண்ட மாவீரர்களை, எல்லாம் இவன் என் பாட்டன், இவன் என் கொள்ளுப் பாட்டன், இவன் என் அண்ணன் என்று சொல்லிச் சொல்லியே தனக்கான இடத்தை அடைந்து விடலாம் என்ற மனோபாவம் எல்லோருக்கும் உரிய ஒன்றுதான் ஆனால், புராணங்களால் கட்டமைக்கப் பட்ட மொட்டை முருகனை முப்பாட்டன் என்பதில் என்ன விதமான தமிழ் தேசியத்தை சீமான் உண்டாக்க விரும்புகிறார் என்பதில்தான் குழப்பம்.டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த பண்பாட்டுப் புரட்சி மீட்டெடுப்பு இல்லாமல் சமூகப் புரட்சி சாத்தியமில்லை என்ற கோட்பாட்டு முழக்கத்தை இவர்கள் தங்களுக்கு வேண்டி[...]வெற்றிவேல் வீரவேல். சீமானின் தமிழ் தேசியப் புரட்டுக்கள். 1/2

2015-02-13T01:02:36.389+05:30

அப்போது  நான் காதலில் விழுந்து கவிழ்ந்து என் கல்லூரிப் படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வைத்துவிட்டு விவசாயிக்கு கைய்யும் காலும் போதுமடா கல்லூரிப் படிப்பு ஏதுக்கடா என்று படு தீவிரமாய் விவசாயம் பார்க்க ஆரம்பித்திருந்தேன்.  பாஞ்சாலங்குறிச்சி திரைப்படத்தில் வரும் ஓன் ஒதட்டோர சிவப்பஏஏ... அந்த மருதாணி கடனா கேக்கும் கடனா கேக்கும் என்று மதுபாலாவின் இடைத் தேர்தலில் டெப்பாசிட்டுகளை இழந்துகொண்டிருந்தேன் அப்போதெல்லாம் இந்த சீமானை யாரென்று யாருக்குமே தெரிந்திருக்காத போது எனக்கு மட்டும் என்ன தெரிந்திருக்கவாப் போகிறது? இருந்தாலும் அந்த பாடலை அப்போதைய உச்ச கட்ட தொழில் நுட்பமான டிடிகே 90 கேசட்டு ஒன்றில் இரண்டு பக்கமும் இந்த ஒதட்டோர சிவப்பை மட்டுமே பதிவு செய்து ஓடவிட்டு என் பிபிஎல் ஆடியோ சிஸ்டத்தை அலறவிட்டு தனிமையில் காதலித்துக் கொண்டிருந்தேன்.நம்பினால் நம்புங்கள் அதற்குப் பின் சீமானை தம்பி படத்தில் இயக்குனராக கண்ட போதுதான் அவர் ஒரு ஈழப் போராளி என்றும் சாக்லேட் பாய் மாதவனை சண்டைக் கார மாதவனாக சைலண்டைக் கூட வயலண்டாகக் காட்டித்தான் சாதிக்க முடியும் என்ற உலகப் புகழ் பெற்ற காவியத்தில் நடிக்கவைத்து காணாமல் போக வைத்தவர் என்றும் கண்டுகொண்டேன்... என் சிங்களத்து கண்ணுக்குட்டீ பூஜா என்று வலையுலகம் எல்லாம் கொண்டாடும் பூஜாவுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டும் இருந்தேனோ என்னவோ. ஆனால் அந்த செபஸ்டியன் சீமான், பகுத்தறிவாளார். (விக்கி பீடியா இப்படித்தான் சொல்கிறது அய்யன்மீர்) அப்போதும் அதன் பிறகும் கவிஞர் அறிவுமதியின் நிழலில் நின்று கொண்டு திராவிட இயக்க மேடைகளில் பேராசான் பெரியாரின் படம் தாங்கிய தேனீர் ஆடைகளில் (அட டீ சர்ட்டுதான் மக்களே) தோன்றி உங்க ராமன் எங்கடா பொறந்தான் என்று பொங்கிப் பொ[...]ஊற்றிக் கொடுக்கிற அரசாங்கம்.

2015-02-01T22:27:43.087+05:30

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு பள்ளி மாணவன் மது  போதையில் மயங்கிக் கிடந்ததை காரணம் காட்டி அவனை பள்ளியில் இருந்தே விலக்கி இருக்கிறது பள்ளி நிர்வாகம். குடித்து போதையில் கிடந்த மாணவனுக்கு தண்டனை கொடுக்கும் சமூகம் ஊற்றிக் கொடுப்பதை, குடிப்பதை ஊக்குவித்து பண்டிகை நாட்களில் இலக்கு வைத்து சாராயம் விற்பதை ஒரு சமூகக் கடமையாகவே செய்து வரும் அரசாங்கங்களை என்ன செய்யப் போகிறது?.முன்பும் அரசாங்கம் கள்ளுக்கடைகள் சாராயக் கடைகள் என்று நடத்தத்தான் செய்தது ஆனால் அது இப்போதிருப்பது போல தெருவுக்கு மூன்றாகவோ இல்லை எளிதில் சிறுவர்களால் எட்டப்படும் தூரத்திலோ இல்லை. நான் முதன் முதலாய் மது அதுவும் கிங்ஃபிஷர் பியர் அருந்தியது என் 19ம் வயதில். 1997 சென்னையில் கல்லூரி காலத்தில். இப்போதுபோல அப்போதும் மது கிடைக்கத்தான் செய்தது ஆனால் வளசரவாக்கத்தில் இருந்த நாங்கள் வடபழனி அல்லது சாலிகிராமம் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்கு முன்னால் இருக்கும் கடைக்குப் போனால்தான் கிடைக்கும். இதற்கு மலைத்தே அதை பல நாட்கள் தவிர்த்து வந்திருக்கிறோம். இப்போது நிலை அப்படியில்லை.முன்பெல்லாம் சிறு நகரங்களில் மட்டுமே இருந்த ஒயின் ஷாப்புகள் டாஸ்மாக்கின் வருகைக்குப் பின்னால் பட்டி தொட்டியெங்கும் படையெடுத்து ஒரு தலைமுறை இளைஞர்களின் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது. என்னதான் குடிப்பதும் கும்மாளம் போடுவதும் தனிமனித சுதந்திரம் என்றாலும் எந்த வயதில் அதை அனுமதிப்பது என்ற ஒரு பெருங் கடமை அரசாங்கத்துக்கு உண்டு, சமூகத்துக்கும் உண்டு . கடந்த பத்தாண்டுகளில் அரசின் முக்கால் வாசி வருமானம் சாராயத்தில் இருந்தே வருகிறது. இலவசத் திட்டங்களை கொடுத்து ஒரு பக்கம் மக்களை ஏமாற்றிக் கொண்டே அரசாங்கம் இன்னொரு பக்கம் பல[...]உமாசங்கர். IAS or ISIS ?

2015-02-01T01:33:39.231+05:30

அரசுப் பதவியில் இருப்பவர்கள் மத மாற்றங்களில் ஈடுபடுவது என்பது இன்றோ நேற்றோ தொடங்கியது இல்லை. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் தொடர்ந்துவரும் ஒரு சமூக அயோக்கியத்தனம். இதில் கட்டாய மத மாற்றம், தானே விரும்பி ஏற்றுக் கொண்ட மத மாற்றம் இல்லை வேறென்ன பெயர் வைத்து வேண்டுமானாலும் அழைத்துக் கொள்வோம்.ஈரானில் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லாமியர்களின் கட்டாய மத மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ஸிக்களின் வெளியேற்றத்தில் இருந்து இன்று ISIS இன் மத்திய கிழக்கில் தாங்கள் வென்ற இடங்களில் தொடரும் மத மாற்றம் வரை தொடர்ந்த அயோக்கியத் தனமான வரலாறு.  சைவர்களால் கழுவில் ஏற்றப்பட்ட சமனர்கள் தொட்டு இந்துக்கள் அல்லாதவர்கள் வெளியேற வேண்டும் என்ற பாஜக/ஆர்.எஸ்.எஸ்/பெருந்தலைகளின் அரைகூவல் என்று  இன்றும் தொடர்கிறது அந்த அவலம்.மதத்தின் பெயரால் மனிதம் இழப்பவர்கள் மத்தியில் கல்விக்கொடுக்கிறோம் என்று வணிகம் செய்யவந்த கிருஸ்துவம் ஆண்ட சமூகத்தில் இருந்து அடிமைப் பட்டவர்கள் என்றும் தாழ்த்தப் பட்டவர்கள் என்றும் மீட்கவந்த மேய்ப்பர்கள் கடற்கரை ஒட்டிய பகுதிகளில் செய்த மத மாற்றம் இன்று வேர்விட்டு ஒரு குறிப்பிட்ட வெற்றியும் பெற்றிருக்கிறது.கல்வியும் பதவியும் மட்டுமே ஒரு மனிதனின் மத விருப்பு வெறுப்புகளையோ இல்லை அவனின் மதம் குறித்த முட்டாள் தனங்களையோ தெளிவுபடுத்துவதில்லை என்பதற்கு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வரை ஏகப் பட்ட உதாரணங்கள் கிடைக்கின்றன.காஞ்சி சங்க்கராச்சாரியாரை ஆட்சிக்கு வந்ததும் பதவிக்கு வந்ததும் பார்க்காத ஆட்களே இல்லை அது ஜெயலலிதாவோ அப்துல் கலாமோ இல்லை டி.என் ஷேசனோ. அவர்களின் தனிப்பட்ட விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியாது. பதவியில் இல்லாத போது அவர்கள் பரதேசி[...]நெகிழ வைத்த திரைப்படங்கள் -7 Der Untergang (Downfall)

2015-01-30T15:27:58.539+05:30

பொதுவாகவே சரித்திரங்கள், இரண்டாம் உலகப் போர், உண்மைக் கதைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட திரைப்படங்கள் எப்போதும் என்னைக் கவருபவை. சில படங்கள் படு அயோக்கியத் தனமாக உண்மையைக் கொலைசெய்து வரலாற்றுத் திரிப்பில்  ஈடுபட்டாலும் சில முத்துக்களும் ஆங்காங்கே கிடைக்கத்தான் செய்கின்றன அப்படியான முத்துக்களில் ஒன்றுதான் இந்த Downfall (Der Untergang- German, 2004). நிறைய வரலாற்று ஆவணங்களின் அடிப்படையிலும் நேரடி சாட்சிகளின் அடிப்படையிலான ஆதாரங்களைக் கொண்டும் உருவான இப் படம் நம்மை இரண்டாம் உலகப் போரின் கடைசி தினங்களுக்கு கொண்டு செல்கிறது.Downfall.இரண்டாம் உலகப் போருக்கு முன்னாலிருந்து  ஹிட்லரின் தற்கொலை வரை ஹிட்லரிடம் அந்தரங்க உதவியாளராக இருந்த ஃப்ராடி ஜங் (Traudi Jung (1920-2002) தான் இளம் வயதில் ஹிட்லரிடம் உதவியாளராகச் சேர்ந்ததை நம்மோடு சொல்ல ஆரம்பிக்கிறது கதை. படத்தின் ஆரம்பத்திலும் முடிவிலும் ஃப்ராடி ஜங் தோன்றியிருக்கிறார்.ஹிட்லரின் பிறந்த நாள் 1945 ஏப்ரல் 20ம் தேதி  நள்ளிரவில் தங்களுக்கு மிகச் சமீபத்தில் குண்டு வெடிப்பதைக் கேட்ட  ஃப்ராடி ஜங்கும் அவரின் உடன் பணிபுரிவோரும் எழுந்துகொள்ள ஹிட்லரும் விழித்துக் கொண்டு ஆர்ட்டிலரி தாக்குதல்கள் எங்கு எப்படி எவ்வளவு தூரத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று கேட்க ஆரம்பிக்கிறார். ஜெனரல் பர்ஹ்டாஃப் பெர்லினில் இருந்து 12 கிலோமீட்டர்களுக்கு அப்பால் ரஷ்யாவின் படை வந்துகொண்டிருப்பதையும் தெரிவிக்கிறார்.பிறந்தநாள் நிகழ்வின் போது ஹிட்லரின் எஸ்.எஸ் ஆர்மியின் ஜெனரலான ஹென்ரிச் ஹிம்லரும் ஹெர்மன் ஃபாக்லீனும் சீக்கிரமே பெர்லின் மேற்குக் கூட்டணிப் படைகளிடம் விழுந்துவிடும் என்றும் அதற்கு முன் ஹிட்லர் பெர்லினை விட்டு வெளியேறிவிடுவது நல்லது என்று[...]பதவிக்காக..

2015-01-14T20:47:53.381+05:30

சுஜாதாவின் பதவிக்காக நாவலை ஒரே மூச்சில் இரண்டாவது முறையாக இன்று படித்து முடித்தேன். தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த அரசியல் நாவல்களுள் ஒன்றான இது எத்தனை முறை படித்தாலும் அலுப்பதே இல்லை..தன்ராஜின் இடைத்தேர்தல் வெற்றியிலும் சின்னப்பனின் தோல்வியிலும் தொடங்கும் நாவல் எத்தனை சித்துவிளையாட்டுகள், சாதுர்யங்கள், சதிகள், திடீர் திருப்பங்கள் அரசியலில் சாத்தியமோ அத்தனையும் தொட்டுச் செல்கிறது. 1987-88 அரசியல் காலத்தைக் கொண்டு பார்கையில் இது அப்போதைக்கு ஒரு துணிச்சலான நாவலாக இருந்திருக்கலாம்.நாவலில் எங்குமே தன்ராஜின் வேகம் குறையவில்லை. மாறாக ஆறுமுகனாருக்கும் அரங்கராமானுஜத்துக்கும் நடக்கும் பதவிப் போட்டியில் பலிகடா ஆக்கப் படாமல் சாதுர்யமான வழி நகர்த்தல்கள்,திலகவதியோடு திருமணம், ஜமுனாவோடு இன்னொரு வாழ்கை என்று கதைதான் ஆனால் சுஜாதாவின் எல்லா நாவல்களின் கதாநாயகன்களிலும் , அவன் கொலைத் தொழில் திருட்டுத் தொழில் செய்பவனாக இருந்தால் கூட (உதா: என்றாவது ஒரு நாள், மேகத்தை துரத்தினவன்) இருக்கும் அதே ஒரு துளி நேர்மை ஒட்டிக் கொண்டிருக்கும் காதாநாயகன் நம் தன்ராஜ்.காவல்துறையின் அசுர பலம் அரசாங்கத்தின் உளவுக் கண்கள், மத்திய அரசு மாநில அரசின் மேல் செலுத்தும் அழுத்தம், வெறுப்பு விருப்புகளுக்காக மட்டுமே மாநிலத்தில் அரசியல் தலையீடு அதற்கு வர்மா என்ற ஒரு புத்திசாலித்தனமான குள்ளநரி கவர்னர் என்று கதை எல்லா தளங்களிலும் தட தடக்கிறது. சென்னையிலும் தமிழகத்திலும் கலவரங்களை உண்டாக்கி அதன் மூலம் பதவிக்கு வரத் துடிக்கும் அரசியலை அழுத்தமாக பதிவு செய்கிறது நாவல்.பாலியல் தொழிலாளி கம் நடிகை கௌரியின் கொலையில் ஒரு சாட்சியாக நுழையும் சாவித்திரி, ஐபிஎஸ் கோகுல் போலீஸின் நேர்மை அந[...]மாதொருபாகனுக்கு முன் மஹாபாரதத்தை கொளுத்துவோம்.!

2015-01-14T19:22:22.558+05:30

பெருமாள் முருகன்  நான்காண்டுகளுக்கு முன்னால் எழுதி காலச் சுவடு பதிப்பகத்தால் வெளியிடப் பட்ட மாதொருபாகன் நாவலைக் கொளுத்தியதில் ஆரம்பித்த சர்ச்சை இன்று பெருமாள் முருகனின் வாயாலேயே இனி நான் எழுத மாட்டேன் என்று சொல்லவைத்து இந்து சனாதனம் காக்கும் கோழைகள் தங்கள் கோர முகத்தை காண்பித்திருக்கிறார்கள். இந்த கட்டுரை பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலைப் பற்றியதும் இல்லை.படைப்பை அதன் தளத்தில் இருந்து உணராமல் அதில் இருக்கும் வார்த்தைகளை பிடித்து தொங்கிக்கொண்டே கலைகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் பழமைவாதிகள் இந்து மதத்தில் மட்டும் இல்லை என்பது எத்தனையோ முறை நிரூபிக்கப் பட்ட ஒன்று.தங்கள் கடவுள்களை மத நம்பிக்கைகளை கொச்சைப் படுத்துவதாகக் கூறி கிருஸ்துவர்கள் டாவின்ஸி கோடு திரைப்படத்தையும், முஸ்லிம்கள் விஸ்வரூபம் படத்தையும் தடைசெய்தது எல்லாம் மறந்து போகக் கூடியவை இல்லை.  புனைவுகளின் வழியே கதை சொல்லுதல் என்பது மனிதனின் கலாச்சார மரபுகளில் ஊறிப்போன ஒன்று.  கீதை, மகாபாரதம் ராமாயணம் என்று எழுதப் பட்ட எல்லாவற்றிலும் இவர்கள் இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் மாதொருபாகனை விடவும் ஆபாசம் நிறைந்த , பிறன் மனைவி கலத்தல், முறையற்ற உறவுகள், பல தார மணம் என்று இந்தியப் பழமைவாதிகள் கொண்டாடிக் கொன்டிருக்கும் பல படைப்புக்கள் இன்று மதங்களின் வேதங்களாக ஏற்றுக்கொண்டவர்கள்தான் நாம்.மனுதர்மத்தை ஏற்றுக் கொண்டு அதன்படிதான் காலம் காலமாய் ஆட்சியும் அதிகாரமும் ஆளுக்கொரு நீதி, குலத்துக்கொரு நீதி என்று நடக்கும் இந்த நாட்டில் கருத்துரிமையை எதிர்பார்ப்பதெல்லாம் நமது முட்டாள்தனம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை. மகாபாரத பாஞ்சாலி முதல் ராமாயணத்து தசரத[...]நெகிழ வைத்த திரைப்படங்கள் -6 The Stoning of Soraya M

2015-01-12T01:46:01.171+05:30

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்களின் சமூகத்தாலும், ஆண்களின் பொய்களாலும், அவர்களின் கடவுள்களாலும், மதத்தின் பெயராலும், கற்பு என்ற பெயராலும் அடக்குதலுக்கும் அச்சுறுத்தல்களும் உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கும்  கோடிக் கணக்கான பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கும் திரைப்படம்தான் இந்த . The Stoning of Soraya M 1986ல் ஈரானில் நடந்த உண்மைச் சம்பவம் புத்தகமாக வெளிவந்து பின்னர் திரைப்படமாக்கப் பட்டது.The Stoning of Soraya M.தனது கார் ஈரானின் உள்ளடங்கிய கிராமமான குபையாஹ் வில் நின்று போய்விட அதை சரிசெய்யப் போகும் ஈரானிய-ப்ரெஞ்ச்சு பத்திரிகையாளரான ஃப்ரொடொன் ஸ்பாஜெமை சந்திக்கும் சாரா என்னும் பெண் தன் உறவுக்கார பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து உண்மைகளை சொல்வதுதான் படத்தின் மொத்தக் கதையும்.ஸொரயாவுக்கு இளம் வயதிலேயே அலி என்பவனோடு திருமணம ஆகி இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன, அலி ஈரானின் சிறையில் கண்காணிப்பளாராக ஒரு உயர்ந்த பதவி , வகிக்கும் கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்குள்ள ஆள், சிறையில் மரண தண்டனை பெற்ற ஒரு டாக்டரின் விடுதலைக்காக லஞ்சமாக மெஹ்ரா என்ற டாக்டரின் 14 வயது மகள்  அலிக்கு பேரம் பேசப்படுகிறாள். ஸொராயாவை மிரட்டியும் அடித்தும் தன் இரண்டு மகன்களை தாய்க்கு எதிராகவே திருப்பி விட்டும் விவாகரத்து கேட்கிறான் அலி. ஆனால் தன் மகள்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஸொராயா மறுத்து விடுகிறாள்.இந்த விவாகரத்து விஷயத்தில் கிராமத்தின் முல்லாவும் அலிக்கு எப்படியாவது உதவி செய்தே ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். காரணம் முல்லா முல்லா ஆவதற்கு முன்பு ஈராணிய ஷா ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்களை செய்த ஒரு ஆள் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அலி முல்லா[...]ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் !

2015-01-07T03:11:46.176+05:30

இரண்டு நாட்களுக்கு முன்னால் வாஷிங்டன் போஸ்டில் " இந்தியர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்னே விமானங்கள் கண்டுபிடித்துவிட்ட்டார்கள்" என்று அறிவியல் காங்கிரஸில் பேசிய ஆட்களை மேற் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டார்கள் அதன் பின்னூட்டங்களில் இத்தனை ஆண்டுகளாய் கொஞ்சமாய் கொடி கட்டிப் பறந்த இந்துத்துவ வாந்திகளின் மானத்தை காற்றுக்கு மேலே கிரகங்கள் தாண்டியெல்லாம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சர்வதேசத்தினர். ஏற்கனவே நாசா எடுத்த மணல் திட்டை ராமனின் பாலம் என்று பாஜக ஆட்சியிலும் அதன் பின்னரான காங்கிரஸ் ஆட்சியிலும் ஊதி ஊதியே தமிழகத்தின் வளத்தை குறுக்கியும் அதன் பின்னர் அமைந்த தற்போதைய ஆட்சியில் சிங்கள இனவாத அரசுக்கு உதவிசெய்யும் விதமாக பல்லாயிரம் கோடிகள் கொட்டிக் கொடுக்கும் வருமான வழியை அடைக்கவேண்டாம் என்ற நல் எண்ணத்தாலும் சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற நாசகார சக்திகள் மூலம் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்த பாஜக இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கூட தன் முட்டாள்தனங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது.7000 ஆண்டுகளுக்கு முன்னர் விமானம் அதுவும் கிரகம் விட்டுக் கிரகம் ( காலக் கிரகமடா) போகும் எந்திரங்கள் கொண்டிருந்த ஆட்கள் என்ன டேஷுக்காக ராமரின் வானரப் படையும் அந்த மூன்று கோட்டு அணிலும் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள்? சரி கட்டியதுதான் கட்டினீர்கள் எங்கள் கரிகாலன் கட்டிய அணையைப் போல கொஞ்சம் திடமாகவாவது கட்டித் தொலைத்திருக்கக் கூடாதா என்றால் அதுவும் இல்லை. கடல் அழிப்பில் ஒழிந்து போனதாம் . எந்த எஞ்சினியரிங் காலேஜில் ராமர் பட்டித்தாரோ யாருக்குத்[...]வெட்கமாக இல்லையா திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே?

2015-01-07T03:11:46.171+05:30

ஆராயப் படாமலேயே  மக்கள் முதல்வர் என்ற பெயரில் ஒரு அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று குற்றவாளி என தீர்ப்பும் சொல்லப் பட்டு தன் வீட்டை விட்டு எதற்காகவும் வெளியேற முடியாத  சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட இழந்த ஒரு கட்சியின் தலைமை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அரசாங்க நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் சுயமரியாதைப் பேரொளிகளில் ஒருவராக இருந்த பன்னீர்செல்வத்தின் பெயரைத் தாங்கி நிற்பவருமான பினாமி முதல்வர் இன்று வரை கூட மக்கள் முதல்வரின் வழிகாட்டுதலுக்கு இனங்க என்று அறிவிப்புகள் செய்வதும் தமிழகம் இதுவரை காணாத கேலிக் கூத்து.இந்தியத் தலை நகரில் முதல்வர்களின் கூட்டம் அங்கே செல்லும் பினாமி முதல்வர் கூடவே தன் துணைக்கென்று ஜெயலலிதாவின் புகைப் படம் அடங்கிய கோப்பை கொண்டு செல்கிறார். எல்லா ஊடகங்களிலும் வெளியாகிறது இந்தப் படம். ஒரு தலை முறைக்கு முன்னால் திராவிட இயக்கங்கள் என்றாலே கோவனத்தை அவிழ்க்காமலே மூத்திரம் போன ஆட்கள் எல்லாம் தமிழகம் என்றாலே நகைக்கிறார்கள்.இன்று வரை நீங்கள் முதல்வர் அறையில் அமர்ந்ததில்லை, உங்கள் வீட்டுக்கு முன்னால் முதல்வர் என்ற பெயர்ப் பலகை இல்லை, உங்கள் படம் தாங்கிய அரசாங்க காலண்டர், நாட்குறிப்பு இல்லை, உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன் யார் நீங்கள்?அம்மா என்ற பெயருக்கு ஏதும் தடையில்லை ஆனால் இரட்டை இலைக்கு , இயற்கை காட்சிக்கு தடை என்றதும் நாடளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மறைத்த ஸ்டிக்கர்கள் இன்று இல்லை. சுய உதவிக் குழுக்களை முடக்கும் மோடியின் அரசாங்கத்துக்கு எதிராக பினாமி முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். நாடாளும் [...]நெகிழ வைத்த திரைப்படங்கள் -5 The Tin Drum

2015-01-12T01:46:01.166+05:30

சில திரைப்படங்கள் காணும் போது உங்களை வெறும் நெகிழ்வுக்குள் ஆழ்த்தி விட்டு வேறெந்த கேள்விகளையும் கிளப்பாமல் சும்மா இருந்துவிடும், சில படங்கள் புதிய புதிய கதவுகளை திறந்துகொண்டே இருக்கும். சில படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் கதையைச் சொல்கிறேன் என்று கிளம்பி அவர்களை கழிவிறக்கத்துக்குள்ளான மனிதர்களாய் சித்தரிப்பதோடு முடிந்து விடும். இல்லை நகைச்சுவையாக்கி பழி வாங்கி இருக்கும். ஆனால் சில படங்கள் மட்டும்தான் விளிம்பு நிலை மனிதர்களின் உணர்வுகளை நமக்கு உணர்த்துவதோடு சமுதாயத்தின் மீதான மதிப்பீட்டின் மீது நாம் கட்டி வைத்திருக்கும் பிம்பங்களை கேள்விக்குள்ளாக்கி அதன் மேல் தன் தாக்கத்தையும் விட்டுவிட்டுப் போகும். அப்படியான ஒரு படம்தான் இது.The Tin Drum (1979)இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியின் டான்சிங் (Danzing) என்னும் நகரத்தில் நடக்கிறது கதை, ஆஸ்கார் என்னும் சிறுவன்  முதலில் போலந்தில் இருந்து வந்து ஜெர்மானியர்களால் தேடப்பட்டு தன் பாட்டியை தாத்தா மணந்து கொண்ட கதையைச் சொல்லி பின் தன் தாயின்  (அக்னெஸ்) இரண்டு பேர் (ஜான் ப்ரொன்ஸ்கி, ஆல்ஃபிரட் மாட்செரத்)  மீதான காதலையும் சொல்லிக்கொண்டிருக்கும் போது வயிற்றில்தான் இருக்கிறான் . ஆஸ்காரின் மூன்றாவது வயதில் தன் தந்தைகளுள் ஒருவரான (?)  ஜான் ப்ரொன்ஸ்கி (ஆம் ஆஸ்காரின் தந்தை யார் என்பது கடைசி வரை சொல்லப் படவே இல்லை. ஆஸ்காரின் தாய் இரண்டுபேரையுமே காதலிக்கிறாள்.ஆனால் ஆல்ஃபிரட் மாட்செரத்தை மணம் முடிக்கிறாள் ) ஆஸ்காருக்கு ஒரு ட்ரம்மை பரிசாகக் கொடுக்கிறார். ஆஸ்காரின் மூன்றாவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது தன்னைச் சுற்றி நடக்கும் முறை தவறிய பெரிய மனிதர்கள[...]நெகிழ வைத்த திரைப்படங்கள் -4 The Boy in the Striped Pajamas

2014-12-29T09:09:38.157+05:30

ஜெர்மனியை ஹிட்லர் ஆண்டு கொண்டிருந்த இரண்டாம் உலகப் போரின் காலத்தில் நடக்கிற கதை.The Boy in the Striped Pajamas (2008)சீக்ரட் சர்வீசஸ் அல்லது சுருக்கமாக எஸ்.எஸ் என அழைக்கப் பட்ட ஹிட்லரின் நாட்ஜி ராணுவத்தில் கமாண்டராக இருக்கும் தன் தந்தையின் பணி உயர்வின் காரணமாக தன் தாய் , சகோதரி, வேலைக்காரி சகிதமாக  யூதர்களை இன ஒழிப்பு செய்யவென்றே உண்டாக்கப் பட்ட கான்ஸன்ட்ரேஷன் கேம்புகளுக்கு அருகிலேயே ராணுவம் ஒதுக்கித் தந்த ஒரு வீட்டில் குடியேறுகிறான் எட்டு வயது சிறுவன் (ப்ரூனோ). கேம்பில்  தன் வேலை என்னவென்று குடும்பத்தில் யாரும் அறிந்து விடாமல் ரகசியம் காக்கிறார் தந்தை,கேம்பில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருக்கும் போது ப்ரூனோ சும்மா சுற்றிப் பார்க்கப் போன இடத்தில் கேம்பில் இருக்கும் ஒரு யூதச் சிறுவனோடு (ஷ்யூல்ட்ஸ்)  யாருக்கும் தெரியாமலேயே நட்பு கொண்டு விடுகிறான். நடுவில் இரண்டு பேரையும் பிரித்து வைத்திருக்கும் மின் வேலியின் அர்த்தம் தெரியாமலேயே. தினசரி வீட்டுக்குத் தெரியாமல் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள். ப்ரூனோ வீட்டுக்குத் தெரியாமல் தின்பண்டங்கள் கொண்டு வந்து கொடுக்கிறான்.இதனிடையே ப்ரூனோவின் தாய் தன் வீட்டில் வேலை செய்யும் ஒரு லெப்டினென்ட் மூலம் கேம்பில் இருந்து வரும் புகையும் அதன் துர் நாற்றம் குறித்தும் கேட்கப் போய் அங்கே நடைபெற்று வரும் படுகொலைகளை குறித்து தெரிந்து கொண்டு தன் கணவனோடு சண்டை பிடிக்கிறாள். இதை சொன்னதற்காக லெப்டினென்ட் போர் முனைக்கு அனுப்பப் படுகிறான். லெப்டினென்ட்டுக்கும் ப்ரூனோவின் அக்காவுக்கும் ஒரு ரகசிய காதல் வேறு ஓடுகிறது.போர் நடைபெற்று கொண்டிருக[...]கோட்சேவின் பெயரால் விருது கொடுப்போம் !

2014-12-27T22:50:53.419+05:30

நாதுராம் வினாயக் கோட்சேவை தெரியாதவர்கள் காந்தியைக் கொன்ற இந்து மகா சபை உறுப்பினர் என்றால் உலகுக்கே தெரியும். காந்தியைக் கொன்றதன் மூலம் இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்டும் விதமாக தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டது தொடங்கி சாவர்கர், மாளவியாக்களின் அங்கீகரிக்கப் பட்ட பிரதிநிதி அல்லவா கோட்சே.பாஜகவின் ஆட்சியை இந்து மத வெறியர்களின் ஆட்சி, பஜகோவிந்தங்களின் ஆட்சி, காவிகளின் ஆட்சி என்று விமர்சித்தால் நம்மை ஏதோ தாலிபான்களின் அளவுக்கு வெறுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் இந்த இடைச்சாதி இந்துக்கள். அவர்கள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் ஒட்டு மொத்தமாக எழுதுபவனின் அறிவைச் சோதிக்கும் விதமாக சில நண்பர்கள் அறிவாளித்தனமாக நம்மை சொறிய ஆரம்பித்து விடுகிறார்கள்.கோட்சே பற்றியோ மாளவியா பற்றியோ வாஜ்பாய் பற்றியோ அத்வானி பற்றியோ ஏன் மோடியைப் பற்றியோ சொல்ல ஒன்றுமே இல்லை. பாபர் மசூதி இடிக்க முக்கிய காரணமான அத்வானி, வெள்ளைக்கார துரைகளுக்கு உளவு வேலை பார்த்த வாஜ்பாய், குஜராத் கலவரங்களின் பிதா மகன் மோடி, பூரண இந்துத்துவ நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று முழங்கிய மாளவியா குறித்து நல்லவிதமாக எதாவது இருந்தால் அல்லவா இவர்கள் நம் எழுத்தை விமர்சிக்க முடியும்?கோட்சேவுக்கு கோவில் கட்டுகிறார்கள் காந்தியின் நினைவு நாளில் திறக்கப் போகிறார்களாம், கூடவே, இந்திராவைக் கொன்ற சீக்கியருக்கும், அதற்கு காரணமான பிந்தரன் வாலேவுக்கும், ராஜீவைக் கொன்ற தனுவுக்கும் சிவராசனுக்கும், பிரபாகரனுக்கும் சிலைவைக்கப் போகிறோம் என்று யாராவது கிளம்பி[...]நீங்கள் இந்துவா இல்லை இந்தியனா?

2014-12-27T22:50:53.399+05:30

இந்த காவிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியாயிற்று, தமிழ் தேசியம் பேசுவோரின் இனத் தூய்மையை விட இந்து தேசியம் பேசும் தொகாடியாக்களின் பேச்சு ஆயிரம் மடங்கு அதிகம் வன்மம் கக்குவதாக மாறிக் கொண்டே போவது  மத்திய கிழக்கின் இசிஸ், இசில், தாலிபான், அல்கொய்தாக்களின் வளர்ச்சி போல ஒரு புற்று நோய் போல உலக சமூகத்தை அச்சத்துக்குள் தள்ள ஆரம்பித்திருக்கிறது.இன்று கூட December 22, 2014 இந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம் என்று வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கொக்கரித்திருக்கிறார். இவர்கள் சொல்லும் இந்து நாடென்பது முதலில் யாரையெல்லாம் உள்ளடக்காது என்பதற்கு ஏகப்பட்ட ஆவணங்கள் உண்டு, சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினர் அல்லாத இந்துக்களின் தேசமாக ஆக்கப் போகிறார்களாம்.கூடவே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வரப் போகிறார்களாம். நாசூக்காக "கட்டாய" என்றை சொல்லைச் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் எந்த சிறுபான்மை ஆட்கள் மேல் வேண்டுமானலும் என்னை இவர் "கட்டாயப்" படுத்தி மதம் மாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்ட ஏதுவாக. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த ஜெயலலிதா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து பின்வாங்கினார் என்பதெல்லாம் மோடி மஸ்தான்கள் அறிவார்களோ இல்லையோ?இதைத்தானே மத்திய கிழக்கில் இஸ்லாமியத்தின் பெயரால் செய்கிறார்கள்? சிங்கள பவுத்தத்தின் பெயரால் இலங்கை இனவாத அரசாங்கம் செய்கிறது? பங்களாதேஷ், பர்மா, ஆப்பிரிக்க நாடுகள் சூடான் இஸ்ரேல் எல்லாம் இதைத்தானே செய்தன? ஜெர்மனி இதைத்[...]திமுகவின் ஊளைச் சதைகள்.

2014-12-27T22:50:53.258+05:30

எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து இன்று நெப்போலியன் வரை நடிகர்களுக்கும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் ஏழாம் பொருத்தம்தான். நடிகர்கள் என்று மட்டும் இல்லை எந்த கொள்கைகளும் அற்ற பதவிக்காகவும், புகழுக்காகவும் மட்டுமே திமுகவோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்து விட்டு சீ சீ இந்த பழம் புளிக்கும் என்று தனிக்கடை போட்டு திமுகவின் ஓட்டு வங்கியில் சேதாரம் செய்தவர்களால் திமுகவின் கொள்கைகளை சேதப் படுத்த முடியாது என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டே இருக்கிறது.கட்சியின் பொருளாளராக இருந்து கொண்டே பொதுக் கூட்ட மேடையில் கட்சியின் கணக்கு வழக்குகளை கேட்ட எம்ஜிஆர் ஆகட்டும், ஏதாவது ஒரு விதத்தில் ஏதாவது ஒரு பதவியை அடைந்து விட மாட்டோமா என்று தன்னைத் தானே கழகத்தில் முன்னிலைப் படுத்திக் கொள்ள முயன்ற கண்ணதாசன் ஆகட்டும், ஏன் எஸ் எஸ் ஆர் முதல் ராதாரவி, சரத்குமார், ஏன் இன்றைய குஷ்பு வரை ஏதாவது ஒரு விதத்தில் கட்சியை விட்டு விலகும் போதோ அல்லது அங்கிருந்துகொண்டோ கலகச் செயல்களில் ஈடுபடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.முக முத்து முதல் முக அழகிரி வரை கலைஞரின் குடும்பத்துக்குள்ளேயே சிலர் இந்த வேலையை செய்யத் துணியும் போது மற்றவர்களை குறைகூறிப் பயணில்லை.எந்த விதத்திலும் கட்சியின் கொள்கைகளான சமத்துவம் சமூக நீதி ஜனநாயகம் சாதி ஒழிப்பு திராவிட சித்தாந்தங்கள் அற்றவர்களை ஏதாவது ஒரு வகையில் மக்கள் அறிந்த முகம் என்பதனாலேயே கட்சியில் முன்னிலைப் படுத்தியதன் விளைவுகளை திமுக இப்போது அறுவடை செய்து கொண்டிருக்கிறது.  இதெல்லாம் ஆரம்பகாலத்தில் எம்ஜிஆர் என்ற பிம்பம் கட்சியை உடைத்ததும் அதனால் ஏற்பட்ட[...]வினையூக்கி சிறுகதைகள்- ஆண்களின் மறைக்கப் படாத உலகம்.

2014-12-17T21:54:27.288+05:30

செல்வகுமார் ராமச்சந்திரன் என்கிற செல்வகுமார் வினையூக்கிக்கும் எனக்கும் அத்தனை ஒன்றும் பூர்வஜென்ம பந்தம் இல்லை, இரண்டு பேரும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து கொஞ்சமாவது இந்த இணைய கடலில் ஒரு சிறு கல்லையாவது வீசி, சிற்றலைகளை உண்டாக்கிவிட முடியாதா என்ற பல ஆயிரம் பேர்களின் கனவுகளின் பிரதிநிதிகளாக எங்களை நாங்களே முன்னிறுத்திக் கொள்ள முயன்றதைத் தவிர.

சமூக நீதி, சமத்துவம், இட ஒதுக்கீடு, பெரியார், திராவிடம் என்று கண்ணுக்குத் தெரியாத இழைகளால் இணைக்கப் பட்ட இணைய உலகம் எங்களுக்கானது என்று இருவரும், தனித் தனியே தங்களின் பாதையை வகுத்துக் கொண்டு இரண்டு பேருமே பத்தாண்டுகளில் என்ன என்னவோ செய்து தொலைத்திருக்கிறோம். அவரும் நானும் ஒரே பாதையில் பயணப் பட்டவர்கள் என்பதை தவிற அதிகம் நான் ப்ளாகுகளில் எல்லாம் உரையாடிக் கொண்டது கூடக் கிடையாது.

செல்வாவின் கதைகள் எல்லாம் கார்த்திக், அம்மு, அஞ்சலி பாப்பா என்கிற மூன்று பேருக்குள்ளேயே அடங்கி விடுகிறது. ஒவ்வொரு கதையும் படிக்கும் போதும் நாம் கார்த்திக்கையும் அம்முவையும் வேறு வேறு கார்த்திக் அம்மு அஞ்சலிகளியும் பார்க்கிறோம். அது வெறோனிக்கா ஆகட்டும் இல்லை வேறெந்த ஐரோப்பிய பெண்ணாகட்டும் எல்லாமே அம்முதான். தனித் தனி சிறுகதைகளை எல்லாம் ஒரு நாவல் போலவே படிக்க முடிவதற்கு காரணம் இதுதான் வேறு வேறு ஆட்கள் பெயர்கள் மட்டும் ஒன்றே.

இடையிடையே சில விஞ்ஞானக் கதைகளும் உண்டு. போகிற போக்கில் அப்பாவி கணேசனை அத்தனை எளிதாக கடந்து செல்ல கொஞ்சம் நகைச்சுவை உணர்வும் வேண்டும், ஆனால் ஒட்டு மொத்த கதைகளையும் படிக்கையில் கார்த்திக் மேல் பொறாமையே வரும் அளவுக்கு திகட்டத் திகட்ட பெண்கள், காதல் , காதல். பிரிதல் என்ற ஒன்றைக்கூட வெகு எளிதாக கடந்து வந்த என் போன்ற ஆட்களுக்குள் இருக்கும் கார்த்திக்குகளை நிச்சயம் படிக்கிற எல்லோருக்கும் பிடிக்காமல் இருக்காது.

ஆண்கள் எல்லாம் உத்தமர்களாகவோ இல்லை கேடு கெட்ட பொறுக்கிகளாகவோ மட்டும் கதை செய்யத் தெரிந்த ஆட்களுக்கு நடுவே ஆண்களின் இன்னொரு உலகத்தை ஒவ்வொரு கதையிலும் ஜன்னல் ஜன்னலாக திறந்து கொண்டே போகிறார். சமூக நீதி பேசும் இடங்களில் எல்லாம் கிளிமூக்கு அரக்கனும் எட்டிப் பார்க்கிறார். விஞ்ஞானக் கதைகளில் வினையூக்கி எட்டிப் பார்க்கிறார். இப்படி ஆங்காங்கே கதாசிரியர் தன் முகத்தை காட்டிக் கொண்டே இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.

நிறைய பயணங்களும் அதில் சந்திக்கும் பெண்களும் என்று சில இடங்கள் இழுவை போட்டாலும் ஐரோப்பிய அம்முகளுக்காகவே படிக்கத் தூண்டும் கதைகள் பக்கம் பக்கமாய் இருக்கின்றன. ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலம் கடவுளை காணும் கதை இன்னொரு அன்பே சிவம்.

ஒவ்வொரு கதையுமே ஒரு குறும்படத்துக்குண்டான நிகழ்வுகளை கொண்டவை, யாராவது குறும்பட இயக்குனர் இதைப் படித்தால் செல்வாவிடம் முன் அனுமதி பெற்று படமாக்க முயலலாம்.

"தேவதைகளை பெற்றெடுத்தவுடன் மனைவிகள் பிசாசுகள் ஆகி விடுகின்றனர், தேவதைகளுக்காகவே பிசாசுகளை பொறுத்துக் கொண்டிருக்கவேண்டியிருக்கிறது"

இது போல ஏகப்பட்ட சுவாரஸ்யம் மிகுந்த வரிகள் நூல் முழுதும் காணக் கிடைக்கிறது.

பிடிஎஃப் கோப்பாக முழு நூலையும் தரவிறக்கம் செய்ய
http://freetamilebooks.com/ebooks/vinaiooki-short-stories/


பா.ஜ.க எனும் பாசிச நச்சு.

2014-12-27T22:50:53.338+05:30

ஆர்.எஸ்.எஸ், பாஜக என்னும் பாசிஸ்டுகள் ஆட்சியில் அமரும் போதெல்லாம் இந்தியா என்ற துண்டுகளால் ஒருங்கமைக்கப் பட்ட தேசம் மத, சாதி விரோதங்களால் அழிவையும், நிலையற்ற தன்மையும் சந்தித்தே வந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் என்றும் சிவ சேனா என்றும் பாஜக என்றும் பெயர்கள் மட்டும்தான் வேறு வேறு மற்றபடி இவர்களின் கொள்கை எல்லாம் இந்தியாவை ஒரு இந்துக்களின் நாடாக, பாகிஸ்தான் முஸ்லிம்களின் நாடாக ஆனது போல மத்திய கிழக்கு நாடுகளில் மதத்தின் பெயரால் துண்டாடப் பட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வன்முறை வெறியாட்டங்களால் மக்கள் ஒரு அச்சத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போல இந்தியாவையும் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நிலையில் இருந்து ஒற்றுமை என்கிற பெயரால் வேற்றுமை விரோதங்களால் துண்டாடிவிட வேண்டும் என்பதே.ஆர் எஸ் எஸ் காலத்திலேயே தொடங்கப் பட்ட இவர்களின் செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களுக்குள் ஒற்றுமை எனும் ஒரே முழக்கத்தோடு திட்டம் போட்டு தங்கள் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்ற ஆரம்பித்த பின் முழு வீச்சில் இப்போது செயல் படுத்த தொடங்கி விட்டனர். பாபர் மசூதி இடிப்பு தொடங்கி சேது சமுத்திர திட்டத்தை முடக்கியது வரை, இவர்கள் மதத்தாலும் தேச நலனாலும் தங்களுக்கு, தங்கள் மதத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்பதையே இப்படி புதுப் புது திட்டங்களாலும் அறிக்கைகளாலும் மிரட்டல்களாலும் செயல் படுத்த துணிகின்றனர்.சமஸ்கிருத தினிப்பு, பள்ளியில் சரஸ்வதி வணக்கம், எங்கே  சென்றாலும் ஹிந்தியில் உரையாற்றும் பிரதமர், என்று தங்களின[...]நெகிழ வைத்த திரைப்படங்கள்-3 Dancer in the Dark

2014-12-27T22:52:55.511+05:30

இந்த படம் என்னை மட்டுமல்ல பார்க்கும் யாரையும் இளகவைக்கும் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை 2002ல் இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு இவ்வளவு ஆச்சரியம் இல்லை ஆனால் இப்போது இருக்கிறது, காரணம் 2002க்கு  பிறகுதான் வெறிபிடித்தது போல  உலக சினிமாக்களை தேடித் தேடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 2 TB கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்கில் முழுக்க முழுக்க உலக சினிமாக்கள் ஆங்கில சினிமாக்கள் என்று வகை வாரியாக 3000 படங்களுக்கும் மேல் சேமித்து வைத்திருக்கிறேன். இன்னும் டவுன்லோடிக் கொண்டிருக்கிறேன். எல்லாம் டோரண்ட்ஸ் தந்த வரம்.Dancer in the Dark.பொதுவாகவே வசனங்கள் நிறைந்த சினிமாக்களை ரசிப்பவன் நான். அதிலும் Lars van Trier படங்களை சொல்லவே வேண்டியதில்லை, நிம்போமேனியாக் ஆகட்டும் ஆன்ட்டி கிரிஸ்ட் ஆகட்டும் மனுஷன் பின்னி இருப்பார். இந்த படத்தை பொருத்தவரையில் இசையும் பாடல்களும் வசனங்களும் என்று எந்த ஒரு இரும்பு இதயத்தையும் கொள்ளை கொள்ளுகிறது. அதிலும் முக்கியமாக வழக்கம் போல ட்ரையர் இந்த படத்தையும் கதாநாயகியை முன்னிலைப் படுத்தியே எடுத்திருக்கிறார். ஒட்டு மொத்தமாக காதாநாயகி பட்டுமே படத்தை தூக்கி சுமந்திருக்கிறார் அதுவும் ஜோர்க்குக்கு சொல்லவா வேண்டும் படத்தை சுண்டு விரலில் சுமந்திருக்கிறார். கதை இதுதான் கதையின் நாயகி சல்மா தன் மகனுடன் செக்கோஸ்லோவாக்கியாவில்  இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்தவர், சல்மாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை பறிபோய்க்கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தன் மகனுக்கும் அதே குறைபாடு என்பதால் மகனுக்கு மருத்துவம் பா[...]நெகிழ வைத்த திரைப்படங்கள்-2 A Serbian Film (Un Serbski Film)

2014-12-27T22:52:55.520+05:30

இந்த படத்தை ( எ ஸெர்பியன் ஃபில்ம் ) , ( Un Serbksi Film ) நெகிழவைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதை விட அதிர வைத்த திரைப்படங்கள் வரிசையில் சேர்ப்பதுதான் மிகச் சரியாக இருக்கும் என்றாலும் நான் அப்படி ஒரு தொடரை எழுத இதுவரை உத்தேசித்திருக்கவில்லை என்பதால் வேறு வழியே இல்லாமல் இதையும் நெகிழ வைத்த திரைப்படங்களின் வரிசையிலேயே சேர்க்க கட்டாயப் படுத்தப் பட்டுள்ளேன் ஒரு வேளை டின்ட்டோ பிராஸ் காவியங்களை (?) எழுதும் போதோ அல்லது ஸ்பார்ட்டகஸ் ப்ளட் அண்ட் சேண்ட் , காட்ஸ் ஆஃப் அரேனா, ரோம் சீரியல்கள் குறித்தோ எழுதினால் அந்த தலைப்பை வைக்கலாம் என உத்தேசித்திருக்கிறேன்.முதலிலேயே சொல்லி விடுகிறேன், கற்பினிப் பெண்கள், குழந்தைகள் 18+ வயதாகாதவர்கள், இளகிய மனமுடையவர்கள், என்னை பிடிக்காதவர்கள் இந்த படத்தை தவிற்பது உங்களுக்கும் எனக்கும் நலம் பயக்கும்.கிடக்கட்டும் நம் கதைக்கு வருவோம். படத்தின் ஆரம்பத்திலேயே வரும் அறிமுகக் காட்சியில் அதிர ஆரம்பிக்கும் நாம் படம் முடியும் வரை அதில் இருந்து மீளப் போவதே இல்லை என்பதை கதாநாயகனும் மனைவியும் தன் மகன் பார்க்கும் "அந்த" காட்சியில் உணர்த்தி விடுகிறார்கள். கதை இதுதான். ஸெர்பியாவின் ஒரு முன்னாள் "ரிட்டயர்டு" பாலுணர்வு தூண்டும் சினிமாக்களின்  நடிகர் தன் குடும்ப பொருளாதார சூழலால் மீண்டும் அந்த பாலுணர்வு பட்டங்களுக்குள் நுழைந்து அதன் பின்னனியில் வலையில் சிக்கிக் கொள்ளும் ஒரு பாலியல் வன்முறைகள் நிறைந்த படம்தான் இது ஆனாலும் அதிர்வுகளுக்கு மட்டும் பஞ்சமே இல்லை.மிலோஸ், மரியா, பீட்டர் என்ற அழகான குடும்பம், மிலோ[...]நெகிழ வைத்த திரைப்படங்கள்- 1 Room in Rome

2014-12-27T22:52:55.502+05:30

இப்போதெல்லாம் எந்த படத்தை பார்த்தாலும் சில காட்சிகள் என்னை ஒரு நிமிடம் குபுக் என்று நெகிழ்த்தி விடுகிறது. முன்பெல்லாம் சில காட்சிகளை பார்த்தால் என்ன கொடுமைய்யா இதெல்லாம் ரொம்பவே செண்டிமெண்ட் போட்டு தாளிக்கிறார்களே என்ற கிண்டலோடு படம் பார்த்த நானா இப்படி ஆகிவிட்டேன் என்று யோசிக்க வைப்பது என் நாற்பதை நெருங்கும் வயதா இல்லை சுமார் பத்தாண்டுகளாக நீண்ட இடைவெளிகளில் குடும்பத்தை பிரிந்து வாழும் துயரா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் கிடக்கட்டும் என்னை எத்தனை முறை திரும்பத் திரும்ப பார்த்தாலும் நெகிழ்த்திய படங்கள் என்று ஒரு தொடரை உத்தேசித்திருக்கிறேன். டாப் டென் போல இது வரிசைப் படுத்துவதற்காகவோ இல்லை படங்களை விமர்சிப்பதற்க்காகவோ அல்ல. வெறுமனே என்னை நெகிழச் செய்த படங்களை, காட்சிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள. Room In Rome.இரண்டு முற்றிலும் அறிமுகமில்லாத (ஆல்பா, நடாஷா ) பெண்களின் ஒரு நாள் இரவின் கதை, கொஞ்சம் பிசகினாலும் பாலியல் படங்களின் (Porn) வரிசையில் சேர்ந்துவிடக் கூடிய திரைக்கதை, ஆனால் அதை காட்சிப் படுத்திய விதத்திலும், பின்னனி இசையிலும் கொஞ்சம் கூட ஆபாசம் எட்டிப் பார்த்துவிடாமல் நிர்வாணத்தை அழகாக்கி இருக்கும் இயக்குனர், Julio Medem ( ஒளிப்பதிவாளர் Alex Catalán இரண்டு பேரையும் விட இரண்டு கதை நாயகிகளும் Elena Anaya, Natasha Yarovenko கூட படத்தை ஒரு சேர அழகாக்குகிறார்கள்.சரி இது ஏன் நெகிழ வைத்தது என்ற விஷயத்துக்கு வருகிறேன் , ஏனென்றால் படத்தை நான் விமர்சிக்க விரும்பவில்லை.  இரண்டு பெண்களும் ஒரு நாள் இரவில் அறிமுகமாகி ஆல்பா நடா[...]தமிழ் பாஸ்போர்ட் !!!

2014-12-27T22:50:53.424+05:30

என் அறை நண்பர்கள் ஈழத் தமிழர்கள். ஒருவர் மட்டக் களப்பு, மற்றொருவர் யாழ்ப்பாணம். மட்டக்களப்பு நண்பர் எனக்கு ஒரு எட்டாண்டுகளாய் தெரியும் அரசியல் , ஈழவிடுதலை, கருணாநிதி, ராமச்சந்திரன், ஜெயலலிதா, பிரபாகரனை விமர்சனம் செய்வது என்பதில் எனக்கும் அவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் எலிக்கும் பூனைக்கும் இருக்கும் ஒற்றுமை என்பது என்னைச் சுற்றி இருக்கும் நிறைய பேருக்கு தெரியும். எங்கள் இருவரையும் நட்பைத் தவிற வேறெதுவும் இணைக்கவில்லை.சென்ற வாரத்தில் என் அறையில் தங்கியிருக்கும் யாழ் நண்பர் அவருக்கு தமிழ்நாடு இந்தியாவில் தான் இருக்கிறதா என்பது தொடங்கி பிரபாகரன் வரை பயங்கர அரசியல் பூகோள அறிவு ஆனாலும் அறியாமையில் இருக்கும்ஆட்கள் தமிழ் நாட்டுக்கு மட்டுமே சொந்தமா என்ன? ஆனாலும் அவர் என் அறையில் இருக்கும் இன்னொரு மலையாள நண்பரைக் காட்டிலும் பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.மலையாளிகளின் அரசியல் என்பதுதான் சுயநல அரசியலையும் தாண்டி சுய சொரிதலுக்கான அரசியல் என்பது உலகப் பிரசித்தம். பிரபாகரனே மலையாளி என்பவர்கள் ஆயிற்றே அதோடு மாடுமல்ல உலகில் முதலில் நடக்கும் எல்லாம் மலையாளிகளால் தான் என்று இன்றும் ஐய்யப்பன் மேல் சத்தியம் செய்கிறார்கள். ஒருபக்கம் அச்சுவையும் உம்மன் சாண்டியையும் கடவுளுக்கு(?) நிகராக தூக்கிச் சுமப்பார்கள் பாஜகவின் ராஜகோபால் தோற்றுப் போன காரணத்துக்காகவே சசி தரூரை கேவலமாக்குவார்கள். அதெல்லாம் கிடக்கட்டும்.நான் சொல்ல வந்ததே அது அல்ல. அந்த மலையாள நண்பரின் பாஸ்போர்ட்டை எதற்க்காகவோ பார்த்த ய[...]ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா?

2014-12-27T22:50:53.362+05:30

1947 ஆகஸ்டு 15 இந்தியா,  பாகிஸ்தான் பிரிவிற்குப் பிறகான ஒரு தனி நாடாக கட்டமைக்கப் பட்ட பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், தேசிய இனங்கள், ஏழைகள், திருடர்கள், எளிய மக்கள் , ஏமாற்றும் கடவுள்கள், அவர்களை பயன் படுத்தும் மூடர்கள், அவர்களின் வயிற்றில் அமிலத்தை வார்த்த இடதுசாரிகள், திராவிட சித்தாந்த பேரலைகளை உண்டாக்கிய பெரியார்கள், இந்துக்களின் முகத்திரையை முடிந்த அளவுக்கு கிழிக்க முற்பட்ட பேராசான் அம்பேத்கர்.... இதற்கெல்லாம் மேல் இவரால் தான் இதனால்தான் என்று இன்று மோடியை கட்டமைத்த மீடியா பிம்பங்களின் ஒரே உருவமான திருவாளர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி.இத்தனை சிக்கல்களுக்கும் மத்தியில்தான் இந்தியா இங்கிலாந்து என்ற ஒரு பேரரசில் இருந்து விடுபட்ட ஒரு சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட்டது,  குண்டூசி முதல் குண்டி கழுவும் காகிதம் வரை பாகப் பிரிவிணைகள். சேர்களும் நாற்காலிகளையும் விட மனிதர்கள் அத்தனை மதிப்பு பெற்று பாகம் பிரிக்கப் படவேண்டிய பொருளாய் இல்லாத காலம்.ஜவஹர்லால் நேருவும், இரும்பு மனிதர் படேலும் இந்தியாவை ஒரு குடையின் கீழ் கொண்டு வர முயன்று தங்களை பிரபல்யம் செய்துகொண்டிருந்தபோது ஒரு கோவணாண்டி மனிதர் கல்கத்தாவில் வழக்கம் போல முதல் தர உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தார். அவரி நாடகத்தை வழக்கம் போல பேராசான் பெரியார் கிழித்து தொங்கவிட்டுக் கொண்டிருந்தார். பேரறிஞர் அண்ணா சில கோப தாபங்களால், கருத்து வேறுபாடுகளால் கருப்புக் கொடி தேவையில்லை எனக்கென்று கலகம் செய்து கொண்டிருந்தார்,[...]அம்மான்னா சும்மா இல்லடா!!!

2014-12-27T22:50:53.354+05:30

எங்கள் இதயமே,குருதியில் ஓடும் ரத்தமே,நடுவில் இருக்கும் சென்டரே,ஓரத்தில் இருக்கும் சைடே, நதியில் ஓடும் ஆறே,கடலில் இருக்கும் ஆழியே,காற்றில் மிதக்கும் வாயுவே,மூச்சில் இருக்கும் சுவாசமே,கண்ணில் தெரியும் பார்வையேஇப்படி எல்லாவற்றிலும்இரண்டிரண்டாக இருக்கும்இரட்டை இலையின்இயற்கை காட்சியே.குதிரைக்கு ரெக்கை முளைக்கவைத்த கோமகள் ஆட்சியேஎங்கள் தங்கத் தலைவியேதன்னிகரற்ற முதல்வியேமாண்புமிகு இதய தெய்வமேஎங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும்பயமே....17 ஆண்டுகளாய் வாய்தாவாங்கி சாதனை படைக்கப் போகும்எங்கள் பெண் கஜினியே.ஃப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பஆ ஆ ஆ மூச்சு விட்டுக்கொள்கிறேன். ஒரு முறை எழுதுவதற்கே நாக்கு தள்ளி விடுகிறது ஆனால் சலிக்காமல் மலைக்காமல் சட்டமன்றத்தில் எல்லா எதிர் கட்சிகளையும் கவனமாக கலாட்டா என்ற பெயரில் வெளியேற்றிவிட்டு ஆளுங்கட்சி நடத்தும் காமெடி தர்பார் மேலே நீங்கள் படித்த கவிதையை (?) விட மரண மொக்கையாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.110 விதி என்பதே இன்னொரு நாள் அவகாசம் இல்லாத அப்போதே அவையில் சொல்லிவிட வேண்டிய அறிவிப்புகளை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்ற என்றே ஆட்சியாளார்களுக்கு ஒரு அவசரத் தேவைகளுக்காக உருவாக்கப் பட்டிருக்கிறது.அம்மையார் ஆட்சியில் 110 விதி என்பதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள் என்பதற்கு நகைச்சுவையாக ஒரு உதாரணம் சொல்ல ஆசைதான் ஆனால் அம்மையாரின் 100க்கும் மேற்பட்ட 110 அறிவிப்புகள் எல்லாம் நகைச்சுவைதானே? ஒரு அறிவிப்பு, இன்று முதலமைச்சர் [...]ஆப் கி பார்..... அரசாங்கமா இல்லை ஆர்.எஸ்.எஸ் சாங்கமா?

2014-12-27T22:50:53.325+05:30

மோடியின் அரசாங்கம் பதவியேற்ற இத்தனை நாட்களில் குறைந்த பட்சம் மக்கள் நலத் திட்டங்கள் என்று விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட ஒரு திட்டத்தை வகுக்கும் அளவுக்கு வக்கில்லாமல் மோடி தர்பாரில் காற்றாடிக் கிடக்கிறது.சூப்பர் மேன் , ஸ்பைடர் மேன் அளவுக்கு மோடியை, ஆஞ்சநேயர் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களும் பாஜக தலைவர்களும் வாயைத் திறந்தாலே முத்துக்களை உதிர்க்கும் மோடிகளும் கூட மூடிக்கொண்டு கிடப்பது காலத்தின் கோலம் மட்டுமல்ல அவர்கள் மட்டும் என்ன வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?தேர்தலுக்கு முதல் நாள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதே தெரிந்து விட்டது மோடியின் அரசாங்கம் எப்படி இருக்கப் போகிறது என்பது. இத்தனை நாட்களில் மோடியின் குஜராத் மாடல் ஃபேக் அரசாங்கம் கிழித்ததெல்லாம் காங்கிரசின் கொள்கைகளை இவர்கள் காப்பி அடித்தது மட்டுமல்லாமல் அதை கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், ஈழ விவகாரம் முதல் கட்சத் தீவு வரை, சுவிஸ் வங்கியின் கருப்புப் பணம் முதல் ரயில்வே கட்டணம் வரை, பெட்ரோல் முதல் மரபணு மாற்றப் பயிர் வரை என்று ஏகபோகமாய் விளையாடிக் கொண்டே ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது.அன்னிய முதலீட்டில் அவர்கள் படிப்படியாக உள்ளே விட்டார்கள் என்றால் பாஜக ஒட்டு மொத்தமாக கதவைத் திறந்து விட்டிருக்கிறது. ராணுவம் முதல் இன்ஸூரன்ஸ் வரை, ரயில்வே தொடங்கி, கக்கூஸ் கழுவுவது வரை, ரீடெய்ல் மார்கெட்டிங்கில் 100 சதவீதத்துக்கு பொங்கிய பாஜக இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறது?இவர்கள் ஆட்சிக[...]நாத்திகம், பகுத்தறிவு பேசாமல் சமூக நீதி சாத்தியமாகுமா?

2014-12-27T22:50:53.313+05:30

சில வாரங்களாகவே முகநூலெங்கும் தோழர்கள் குறிப்பாக திமுக உடன்பிறப்புகள் உட் கட்சி மோதலோ என்னவோ என்று நினைக்கும் அளவுக்கு நாத்திகம், பகுத்தறிவு,சமத்துவம், சமூக நீதி என்ற தளத்தில் தொடர்ச்சியாக ஒரு விவாதத்தில் ஈடுபட்டுக் கொள்ளுகின்றனர்.இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்கு இன்னும் தெரியவில்லை. அடிப்படை சமூக நீதிகள் மறுக்கப்பட்டு அதற்கெதிராக கிளர்ந்தெழுந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கமான நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக திராவிடர் கழகமும், கேட்கும் இடத்தில் இல்லாமல் சமூக நீதியை கொடுக்கும் இடத்தில் இருந்தால் தான் எதுவும் எளிதில் சாத்தியமாகும் என்ற அண்ணாவின் ஏற்பாட்டுக்கு இணங்க ஆரம்பிக்கப் பட்ட திமுக என்று இது ஒரு சமூக நீதிக்கான தொடர்ச்சி மட்டுமே.சமூக நீதி சமத்துவம் எல்லாம் ஏன் மறுக்கப் பட்டன ? அவற்றுக்கான தீர்வு என்ன என்று தேடித்தேடி தேய்ந்த சமூக சமத்துவ முன்னோர்களான டி.எம்.நாயர், பி.டி தியாகராயர், முனுசாமி நாயுடு, போன்றவர்களும் அவர்களின் தொடர்ச்சியான தந்தை பெரியாரும் வளர்த்தெடுத்த தத்துவார்த்தமான சிந்தனைகளே திராவிடச் சிந்தனைகளானது. பின்னர் திராவிடர் கழகமான பின் தேர்தல் அரசியலில் இருந்து தன்னை முற்றாக விடுவித்துக் கொண்ட தி.க சமத்துவம் சமூக நீதி ஆகியவற்றை வெல்ல வேண்டுமானால் முதலில் இவற்றுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் சாதிய கட்டுப் பாடுகளையும் அதை மிகக் கவனமான ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து மனு தர்ம ஆட்சியை நிலை நாட்டும் பார்ப்பனீயத்தையும[...]