Subscribe: பெரியார்
http://periyaarr.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: பெரியார்

பெரியார்



சமூகப் போராளியின் வாழ்வும், பணியும்!



Updated: 2015-09-17T08:15:11.027+02:00

 






சமூக சீர்திருத்தமும் அரசியலும் காங்கிரஸ் என்றால் என்ன?

2011-02-20T10:46:16.565+01:00

தோழர்களே!சமூக சீர்திருத்தமும் அரசியலும் இரண்டும் ஒன்றேயாகும். நமது நாட்டில் சமூக உயர்வால் ஒரு கூட்டம் மக்கள் பாடுபடாமல் வயிறு வளர்க்கத் தக்கபடி சமூகம் அமைக்கப்பட்டதாலும் அரசியலை அந்த சமூக உயர்வுக்காரர்களே கைவசப்படுத்திக்கொண்டதாலும் சமூக சீர்திருத்தத்தை அடியோடு விட்டுவிட்டு சமூக சீர்திருத்தத்துக்கு சம்பந்தப்படாத அரசியலைப் பற்றி பேசிக் காலம் கழித்து வருகிறார்கள். சமூக சீர்திருத்தமில்லாத அரசியல் சிலரின் சுயநலத்துக்குத்தான் பயன்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பயன்படாது. இந்த நாடு சுமார் ஆயிரம் வருஷத்துக்கு முந்தியே சமூக சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டியதாகும். அந்தப்படி செய்யப் பட்டிருக்குமானால் இன்று இந்தியா, உலகில் ஒரு நாகரீகமுள்ள மக்கள் அடங்கிய நாடாக ஆகி இருக்கும். இந்தியாவில் இன்று உள்ள கீழ் ஜாதி மேல் ஜாதி கொடுமை இருந்திருக்காது. அந்நிய ஆட்சியும் இந்தியாவுக்கு அரை நிமிஷம்கூட வேண்டி இருக்காது.ஆனால் இன்று இந்தியா ஒரு காட்டுமிராண்டி நிலையில் இருக்கிறது. இங்கு கூடியுள்ள மக்கள் ஆளுக்கு ஒரு வேஷம் கொண்டு இருக்கிறார்கள்; ஆளுக்கு ஒரு ஜாதிப்பேரும் கொண்டு இருக்கிறார்கள். உடையில் பேதம், அணியில் பேதம், குறியில் பேதம், மதத்தில் பேதம், உண்பன தின்பன கிடையாது; கொடுப்பன கொள்வன கிடையாது. ஒவ்வொருவனும் அவனவன் பழமையைப் பேசி பெருமையடைகிறான். வீணாக சமயத்துக்கும் ஜாதிக்கும் சண்டை போடுகிறான். தன்னை அந்நியன் கீழ் ஜாதி என்று கூப்பிடுவதை சகித்துக்கொண்டு மற்றவனை கீழ் ஜாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும் பெருமையும் அடைகிறான். இதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளமாகும்.தன்னை வேறு ஜாதியான் என்று பிரித்து காட்டுவதில் ஒவ்வொரு வனுக்கும் ஆசை இருக்கிறது. தேச ஒற்றுமையும். சமத்துவமும் விடுதல[...]



திருவாங்கூர் ஆலயப் பிரவேச உரிமை

2011-02-20T10:03:23.931+01:00

தலைவரவர்களே! தோழர்களே!திருவாங்கூர் மகாராஜா அவர்கள் தனது சகல இந்து பிரஜைகளுக்கும் ஜாதி வித்தியாசமில்லாமல் இந்து பொதுக்கோவில்கள் எல்லாவற்றிலும் பிரவேசிக்க அனுமதி அளித்ததைப் பாராட்ட இக்கூட்டம் கூட்டப்பட்டது என்றாலும் எனக்கு முன் பேசியவர்கள் பலர் இந்த மாதிரி உத்திரவு இப்போது திருவாங்கூரில் வெளியாவதற்கு 12வருஷங்களுக்கு முன் நானும் எனது மனைவியாரும் இருந்து வைக்கத்தில் நடத்தி வெற்றிபெற்ற சத்தியாக்கிரகமே முக்கிய காரணமென்று சொன்னார்கள். பல பத்திரிகைகளும் அந்தப்படி எழுதி இருக்கின்றன.ஆனால் நான் அதை ஒப்புக்கொள்ள முடியாது. நானும் ஒரு அளவுக்கு காரணஸ்தனாய் இருக்கலாம் என்றாலும் வைக்கம் சத்தியாக்கிரகம் மூலம் என்பதை ஒப்புக்கொள்ள முடியாது. சத்தியாக்கிரகம் காரணம் அல்ல வென்றால் மற்ற எந்த விதத்தில் நானும் காரணமாய் இருக்கலாம் என்று கூறுகிறேன் என்பதாக நீங்கள் கேட்கலாம்.சத்தியாக்கிரகத்துக்கு உலகில் மதிப்பில்லை, அதை சண்டித்தனம் என்றுதான் நானே கருதிவிட்டேன். சத்தியாக்கிரகம் நடத்தப்பட்ட விஷயங்களில் 100க்கு 5 கூட வெற்றி பெறவில்லை. ஏதாவது பெற்று இருந்தால் நம் எதிரிகள் சண்டித்தனமும் தொல்லையும் பொறுக்கமாட்டாமல் இசைந்து வந்ததாயிருக்கலாம்.ஆதலால் திருவாங்கூர் மகாராஜா இந்த உத்திரவு போட கருணை கூர்ந்ததற்கு காரணம் தற்சமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையேயாகும்.என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்[...]



தமிழ் எழுத்து சீர்திருத்தம்

2010-12-28T13:09:03.546+01:00

தமிழ் பாஷை எழுத்துக்கள் விஷயமாய் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது அனேகருக்குள் வெகுகாலத்திற்கு முன்பு இருந்தே ஏற்பட்டிருந்த அபிப்பிராயங்களாகும்.தோழர் குருசாமி அவர்கள் எழுதியது போல் பெருத்த பண்டிதர்களில் கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி வந்திருக்கிறார்கள்.தமிழ் எழுத்துக்களைப் பற்றி அழுக்கு மூட்டைப் பண்டிதர்கள் எவ்வளவு தத்துவார்த்தம் சொன்னாலும் அது எவ்வளவோ விஷயத்தில் சீர்திருத்தமடைய வேண்டும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.ஒரு பாஷையோ, ஒரு வடிவமோ அல்லது வேறு பல விஷயமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்ளுகின்றோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவற்றில் சீர்திருத்த வேண்டிய அவசியமிருக்கின்றது என்பது அதன் உண்மைத் தத்துவமாகும்.உதாரணமாக நெருப்புக்கு சுமார் நூறு ஆயிரம், பதினாயிரம் வருஷங் களுக்கு முந்தி சக்கி முக்கி கல்லுகள் தான் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இது ஒரு "கடவுளால்" ஆதியில் பொதிய மலையில் இருந்தோ, கைலாச மலையில் இருந்தோ கண்டுபிடிக்கப்பட்டதாகவோ, உபதேசிக்கப் பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் இன்று நெருப்புக்கு ஒரு பொத்தானை அழுத்துவதோ, ஒரு முளையை திருப்புவதோ ஆகிய காரியத்தில் வந்து விட்டது.இது போலவே பஞ்ச பூதங்களிலும் அவைகள் உற்பத்தி, சேர்க்கை, அனுபவம் ஆகியவைகளிலும் நாளுக்கு நாள் எவ்வளவு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் இன்னும் எவ்வளவு செய்ய வேண்டியிருக்கின்றன என்று மக்கள் கருதுகிறார்கள் என்பதும் தெரிந்தால் கேவலம் ஒரு புராதன பாஷை எழுத்துக்கள் என்பதில் எவ்வளவு சீர்திருத்தம் அவசியமிருக்கும், அல்லது செய்யக் கூடும் என்பது தானாய் விளங்கும்.சாதாரணமாய் 500 வருஷத்திற்கு முந்தி இரு[...]



இரு மசோதாக்கள் யார் வகுப்புவாதிகள்? முன்னேற்றத்துக்கு யார் முட்டுக்கட்டை! பார்ப்பனீயத்தின் விளைவு

2010-12-27T07:45:25.321+01:00

இந்தியாவில் இன்று இரண்டு வகுப்பார்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் சிறிது கூட விவகாரமே இருக்காது என்று கருதுகிறோம். அதாவது ஒன்று : பெண் மக்கள். இரண்டு : தீண்டப்படாத மக்கள் என்பவர்கள். இவ்விரு கூட்டத்தாரும் கல்வியில் 100க்கு ஒருவர் இருவர் கூட படித்தவர்கள் இருக்க மாட்டார்கள் என்று சொல்லத்தக்கதாகத்தான் இருக்கிறார்கள். செல்வத்திலோ பெண்களுக்கு சொத்துரிமையே கிடையாது. ஏனெனில் சட்டப்படியே பெண்களது வாழ்க்கை என்பது ஆண்களுக்கு அடிமை என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். பெண்கள் கற்று இருப்பதும் சொத்து வைத்திருப்பதும் மிக அருமையாகத்தான் இருக்கும். அதுபோலவே தீண்டப்படாதவர்கள் என்கின்றவர்கள் நிலையும் சமுதாய ஒழுங்குப்படியே மனிதத்தன்மை அற்றவர்கள் ஆவார்கள். அவர்கள் பிறவித் தொழிலாளிகள், செல்வம் சேர்க்க சந்தர்ப்பமும், சமசுதந்திரமும் இல்லாதவர்கள். சட்ட நிர்பந்தத்தினாலல்லாது படிக்கவோ அரசியல் ஸ்தானம் பெறவோ முடியாதவர்கள். இப்படிப்பட்ட இரு சமூகத்தாரையும் பற்றி அரசாங்கம் கவனித்ததல்லாமல் இதுவரை எந்த ஜனத் தலைவர்களும் பொது நல ஸ்தாபனங்களும் கவனிக்கவே இல்லை. சமூகப் புரட்சி ஸ்தாபனமாகிய ஜஸ்டிஸ் கட்சி அதாவது பார்ப்பன ரல்லாதார் இயக்கம் ஒன்று தோன்றி அதன் கிளர்ச்சியின் பயனாகவும் அது பார்ப்பனர்களுக்கும் காங்கிரசுக்கும் எதிராக அரசியலிலும் சமூக இயலிலும் சிறிது ஆதிக்கம் பெற்றதின் பயனாகவுமே இந்த இரு கூட்டத்தாருக்கும் இப்போது சிறிது காலமாய் பல நன்மைகள் ஏற்பட வசதி ஏற்பட்டிருக்கிறது. அதாவது பெண்கள் அரசியலில் பங்கு பெறவும் ஓட்டர்களாகவும் ஸ்தானம் பெறவும் நிர்பந்தமாய் சில இடங்களில் படிக்கவும் சௌகரியம் ஏற்பட்டிருக்கிறது. தீண்டப்படாதவர்கள் என்ப[...]



இயந்திரமும் கை இராட்டினமும்

2010-06-15T11:54:27.328+02:00

நூல் நூற்கும் விஷயத்தில் விசை இயந்திரத்திற்கும் கை இராட்டினத் துக்குமுள்ள தார தம்மியத்தை நமது நாட்டாரில் சிலர் நன்கு அறிந்து கொள்ளவில்லையென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இராட்டை சுற்றுவதினால் நமக்கு வேண்டிய அளவு நூல் உற்பத்தி செய்வது கஷ்ட மென்றும், போதுமான கூலியும் இதில் கிடைக்காதென்றும், இயந்திரத்தினால் அதிக நூல் உற்பத்தி செய்யக்கூடுமென்றும், கூலிக்காரர்களுக்கு அதிகக் கூலி கிடைப்பதுடன், முதலாளிகளுக்கும் நல்ல லாபம் வருகிறதென்றும் இவர்கள் சொல்லுகிறார்கள். நமது நாட்டின் கொடிய வறுமைக்கு முக்கிய காரணம் மேற்சொன்ன இயந்திரங்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயந்திரப் பெருக்கினால் ஒருசில கூலிகளும் தனிப்பட்ட முதலாளிகள் சிலரும், பிறநாட்டு இயந்திர வியாபாரிகளுந்தான் பிழைக்க முடியுமே தவிர ஜனங்கள் பிழைக்க முடியாது. நமது ஏழை நாட்டில் வேலையில்லாமல் கஷ்டப்படுவோர் எத்தனையோ பேர் குறைந்த அளவு கூலியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இவர்களெல்லோருக்கும் இயந்திர ஆலைகளில் வேலை கொடுக்க முடியாது. ஒவ்வொரு தொழிலிலும் இம்மாதிரியே அநேகம் பேருடைய கூலியை இயந்திரங்கள் விழுங்கி விடுகின்றன. நம் தேசம் உள்ள நிலைமையில் பெருவாரியான ஏழைக் கூலிக்காரர்களுக்கு வேலை கிடைத்தால்தான் வறுமை நீங்கும். ஒரு சில முதலாளிகளும், அந்நிய நாட்டு இயந்திரத் தொழிலாளரும் பிழைப்பதினால் தேசத்தின் தரித்திரம் நீங்காது. உதாரணமாக, நம் நாட்டில் மில்கள் என்று சொல்லப்படும் நூல் ஆலைகள் அதிகமான நூல் உற்பத்தி செய்கின்றன. ஆனால், இவை எவ்வளவு பேருடைய கூலியைக் கெடுத்து விடுகின்றனவென்பது யோசித்துப் பார்த்தால் தெரியும்.சாதாரணமாக 20 அல்லது 25 லட்சம் ரூபா மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நூல் யந்திர ஆ[...]



குடி அரசு - தலையங்கம் - 02.05.1925

2010-06-13T13:19:40.630+02:00

தாய்த்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்றளவு ஆற்றி வரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம். ஒரு சிறு பத்திரிகையையேனும் செவ்வனே நடாத்தும் ஆற்றல் ஒரு சிறிதும் எமக்கில்லை என்பதை நன்குணர்வோம். பேரறிவும், பேராற்றலும், விரிந்த கல்வியும், பரந்த அனுபவமும் உடையவர்களே இத்தொண்டினை நடத்தற்குரியார். இவ்வருங் குணங்கள் எம்பால் இல்லாமல் இருந்தும் ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே’ என்ற பெரியார் வாக்கை கடை பிடித்தே வலிமையால் இப்பத்திரிகை நீண்டகாலம் இத்தமிழுலகில் நிலவித் தேசத்தொண்டு ஆற்றி வரும் என்னும் நம்பிக்கையும், உறுதியும் பெரிதுமுடையோம்.இஃதோர் பத்திரிகை யுகமாகும். நமது தமிழ்நாட்டில் நாளடைவில் பத்திரிகைகளின் தொகை பெருகிக்கொண்டே வருகிறது. இதுகாறும் எத்துணையோ பத்திரிகைகள் தோன்றின ; அவைகளுள் சிறிதுகாலம் நின்று மறைந்தொழிந்தன சில; நின்று நிலவுகின்றன பல. பத்திரிகைகள் பல தோன்றுவதற்குக் காரணம் தமிடிநமக்கள் உலகியலை அறிய உளங் கொண்டமையேயாகும். ‘கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்’ என்ற குறுகிய நோக்கம் அருகி வருகின்றது. ‘இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டா லென்ன’ என்று எண்ணி வாடி நாட்களை வீண் நாட்களாக்கி வந்த காலம் கழிந்துவிட்டது. உறங்கிக் கிடந்த நமது நாட்டார் புத்துயிரும், புத்துணர்ச்சியும் பெற்று நாட்டின் விடுதலையைக் கருதிப் பல துறைகளிலும் உழைக்க முன்வந்து நிற்கிறார்கள். அவ்வுணர்ச்சி நன்றாக வேரூன்றி, மேன்மேலும் தழைத்தோங்க ஒவ்வொருவரும் பாடுபடல் வேண்டும். இக்கடனை ஆற்றப் பல வழிகள் உண்[...]



குடி அரசு 28 நூல் தொகுதிகள்

2010-06-13T13:13:20.658+02:00

பெரியார் எழுதிய, பேசிய கருத்துக்கள் பெரும் பகுதி கிடைக்காமலிருந்தது. குடி அரசு இதழில் பெரியார் 1925 முதல் 1938 வரையில் எழுதிய கட்டுரைகள் மற்றும் பேச்சுக்களை 2000 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் உழைத்து, சட்டப் போராட்டம் நடத்தி பெரியார் திராவிடர் கழகம் 28 தொகுதிகளாக நூல் வெளியிட்டுள்ளது. இந்த சிறந்த முயற்சியில் பல இலட்சம் ருபாய்களை அவர்கள் இழந்திருக்கிறார்கள். பெரியார் கருத்துக்கள் அடுத்த தலைமுறையினர் அனைவருக்கும் செல்ல வேண்டும் என்ற அவர்களது நோக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்க குடி அரசு தொகுதிகளை வாங்கி படியுங்கள்.

பெரியாரது சிந்தனை எல்லா காலகட்டத்திலும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. காலத்திற்கும், சூழலுக்கும் அவரது போரட்ட பயணத்தின் தேவைக்கும் ஏற்ப மாற்றம் பெற்று பெரும் சமூக மாற்ற இயக்கமாக உருமாறிருக்கிறது. அவற்றை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள குடி அரசு தொகுப்பை படிப்பவர்கள் உணர முடியும். இந்நூல்களை சிறப்பாக கடும் சட்டப் போராட்டத்திற்கு பிறகு வெளியிட்டுள்ள பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

குடி அரசு தொகுதியிலுள்ள கட்டுரைகள் மற்றும் உரைகள் அனைவருக்கும் சென்று சேரும் விதமாக இவ்வலைப்பதிவில் வெளிவரும்.



கல்வியென்பது வயிற்றுப் பிழைப்புக்காக மாத்திரமல்ல - ஆசிரியர் மாநாட்டில் பெரியார் உரை

2009-12-13T22:17:44.388+01:00

சகோதரர்களே! சகோதரர்களே!!இன்று நீங்கள் எனக்குச் செய்த வரவேற்பு, ஆடம்பரம், உபசாரம், வரவேற்புப் பத்திரம் முதலியவைகளைக் கண்டு எனது மனம் மிகவும் வெட்கப்படுகிறது. இவ்வித ஆடம்பரங்களுக்கு நான் எந்தவிதத்தில் தகுந்தவனென்பது எனக்கே தெரியவில்லை. கல்வி கற்பிக்கும் ஆசிரியர் என்று சொல்லப்பட்ட பெருத்த கல்விமான்களாகிய உங்களது மாநாட்டுக்கு, அக்கல்வியை ஒரு சிறிதும் பயிலாத நான் எவ்விதத்தில் தகுதியுடையவனாவேன்? உங்களின் அன்பான வேண்டுகோளை மறுக்கப் போதிய ¨தைரியமில்லாத காரணத்தாலேயே ஒருவாறு இப்பதவியை ஏற்கவேண்டியவனாக இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் சுமார் 2 வருடகாலந் தான் நான் பள்ளியில் படித்திருப்பேன். அவ்விரண்டு வருடமாகிய எனது 8 வயதுக்கு மேற்பட்டு 11 வயதுக்குட்பட்ட காலத்தில் நான் படித்த காலத்தைவிட உபாத்தியாயாரிடம் அடிபட்ட காலந்தான் அதிகமாயிருக்கும். இதையறிந்த என் பெற்றோர்கள், இவன் படிப்புக்கு இலாயக்கில்லை என்பதாகக் கருதி நாங்கள் செய்து வந்த தொழிலாகிய வர்த்தகத்தில் என்னுடைய 11 ஆவது வயதிலேயே ஈடுபடுத்தி விட்டார்கள். இந்த 2 வருடக் கெடுவிலேயும் என் கையெழுத்துப் போடத் தான் கற்றுக் கொண்டேன் என்று சொல்லலாம். ஆகவே கல்விமுறையிலும் உங்கள் குறைகளைப் பற்றியும் நான் உங்களுக்கு எந்த விடயத்தையும் சொல்லக்கூடிய சக்தி என்னிடத்தில் இல்லை. ஏதோ என் புத்தி அனுபவத்திற்கெட்டிய வரையில் சில வார்த்தைகளைச் சொல்கிறேன்.தற்கால ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கும் ஆசிரியத் தொழிலை ஒரு புனிதமான கடமை என்பதாகக் கருதிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சாரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு அத[...]



ஆதிக்கத்திற்கு கேடு ஏற்படுவதால் வெள்ளையனை எதிர்க்கிறார்கள்!

2008-10-28T16:01:01.575+01:00

இந்நாட்டில் இன்று எங்கே பார்த்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷகாலமாகத்தான் வெளிப்படையாகவும் தைரியமாகவும் கிளர்ச்சி செய்ய சந்தர்ப்பமும் சவுகரியமும் பெற்றிருக்கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. தமிழ் அரசர்கள், மூவேந்தர்கள் முதலியவர்களுடைய ஆட்சிக் காலத்திலும் நீங்கள் மிகக் கேவலமாகவே உயிர் வாழ்ந்ததாகத்தான் காணக்கிடக்கிறது. இந்து அரசர்கள் அல்லாத முகமதியர் அரசர்கள், கிறிஸ்துவர் அரசர்கள் ஆகியவர்கள் ஆட்சிக்காலமே - உங்களை ஓரளவுக்காவது மனிதர்களாக நடத்தப்பட்டதாகச் சரித்திரமும் பிரத்தியட்ச அனுபவமும் காணப்படுகின்றன.மற்ற காரியங்களில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படி நடந்து கொண்டு வந்தது என்றாலும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களாகிய உங்களைப் பொறுத்தமட்டில் யோக்கியமாகவும் கூடிய அளவுக்கு நீதியாகவும் ஆட்சி புரிந்திருக்கிறது என்று தைரியமாய்ச் சொல்லுவேன். இன்று தாலுக்கா போர்டு, ஜில்லா போர்டு, பஞ்சாயத்து சபை, சட்டசபை, இந்திய சட்டசபை ஆகியவைகளில் உங்களுக்கு ஸ்தானம் அளித்து பெரிய சாஸ்திரிகள், கனபாடிகள், சங்கராச்சாரிய சுவாமிகள், ராஜாக்கள், ஜமீன்தார்கள் என்பவர்களுக்குச் சமமாய் நடத்துகிறார்கள். ஆனால், ராமராஜ்யத்தில் இந்தச் சபைகளுக்கு கக்கூஸ் வாரவோ, பங்கா போடவோகூட உங்களை அனுமதிக்க மாட்டார்கள்.இப்படி பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களைப் பொறுத்தவரை, எவ்வளவோ நன்மை செய்து [...]



இந்து மகாசபையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும்-பெரியார்

2008-04-01T22:19:59.586+02:00

இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும் பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும், இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக்கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான், முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை அடியோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவைகளிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்.அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக்கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்போது, தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள் மறுபடியும் வருணாசிரம சபையென்று ஒன்றுகூட்டி, அதிலும் உட்கார்ந்து கொண்டு தீண்டாமை வேத சம்மதம் என்றும், மநுதர்மவிதியென்றும், வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றவேண்டும் என்றும் இதற்கு விரோதமாய் இருக்கும் மகாத்மா காந்தியை ஒழிக்க வேண்டுமென்றும் தீர்மானம் செய்வதை நாம் பார்க்கிறோம்.சென்னை மாகாணத்தின் இந்து மகாசபையின் கிளைத்தலைவர் [...]



தர்மம் செய்வது அக்கிரமம்

2008-04-01T22:19:59.588+02:00

தர்மம் அதாவது ஏழைகளுக்குப் பிச்சை இடுதல் முதல் மற்றவர்களுக்குப் பலவித உதவிகள் செய்வது என்பதுவரை, அனேக விஷயங்கள் தர்மத்தின் கீழ் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த மாதிரி தர்மத்தைப் பற்றி எல்லா மதங்களுமே முறையிடுகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் முதலிய மதங்களில் இந்த தர்மத்தை பிச்சை கொடுத்தலை மிக நிர்பந்தமாகக் கட்டாயப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.எப்படியெனில், தர்மம் கொடுக்காதவன் பாவி என்றும் அவன் நரகத்துக்குப் போவான் என்றும், கடவுள் அவனை தண்டிப்பார் என்றும் இப்படியெல்லாம் பயமுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. இவை கடவுள் வாக்கெனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்து மதம் என்பதில் தர்மத்தை 32 விதமாகக் கற்பித்து 32 தர்மங்களையும் ஒருவன் செய்ய வேண்டும் என்றும், அந்தப்படி செய்தால் அவனுக்கு இன்ன இன்ன மாதிரி புண்ணியம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.அதுபோலவே, இஸ்லாம் மதம் என்பதிலும் அன்னியனுக்குப் பிச்சை கொடுத்தாக வேண்டும் என்றும், அது ஒருவனுடைய வருஷ வரும்படியில் அவனது செலவு போக மீதி உள்ளதில் 40இல் ஒரு பாகம் வருஷந்தோறும் பிச்சையாக பணம், சாப்பாடு, துணி முதலியவைகளாய் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப்படி செய்யாவிட்டால், மதத் துரோகம் என்றும் இந்தப்படி செய்யாதவன் இஸ்லாம் ஆகமாட்டான் என்றும்கூட கூறப்படுகிறது.அதுபோலவே, கிறிஸ்தவ மதத்திலும் தர்மம் கொடுக்க வேண்டியது மிக முக்கியமானதென்றும், தர்மம் செய்யாதவனுக்கு மோட்சமில்லை என்றும், உதாரணமாக ஒரு ஊசியின் காதோட்டை வழியாக ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையுமே ஒழிய, பிச்சை கொடுக்காத பணக்காரன் ஒரு காலமும் மோட்சத்துக்கு[...]



ஆண்களின் ஆணவமே விபச்சாரத்திற்குக் காரணம்-பெரியார்

2008-04-01T22:19:59.589+02:00

‘விபச்சாரம்' என்பதற்குச் சாஸ்திரங்களில் கூறப்படும் பொருள் பலவகையாகும். பொதுவாக, இப்பொழுது "பொருள் வாங்கிக் கொண்டு ஆடவர்களின் இச்சையைப் பூர்த்தி செய்வதையே தொழிலாகக் கொண்டு ஜீவனம் பண்ணுவதையே விபச்சாரம்' என்று உலக மக்கள் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. பொருள் பெறாமல் சிற்றின்ப ஆசையுடன் கண்டவர்களையெல்லாம் காதலிக்கும் ஆண்களின் செய்கையையும் பெண்களின் செய்கையையும் "விபச்சாரம்' என்றே கூறலாம்.ஜன சமூகத்தை அரித்துக் கொல்லும் புழுக்களில் ‘விபச்சார'த்தைப் போன்ற வேறொரு கொடிய புழு இல்லையென்றே சொல்லலாம். பண்டைக்காலந்தொட்டு வழங்கி வரும் அநேக தீய விஷயங்களில் ‘விபச்சார'மும் ஒன்றாகும். இந்த ‘விபச்சாரம்' என்னும் கொடிய வழக்கம், இன்று நேற்று ஏற்பட்டதல்ல என்பதையும், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே நமது நாட்டில் நிலைத்து வருகிறதென்பதையும் அறியலாம்.சிற்றின்ப வேட்கை கொண்ட முரட்டு ஆண்கள் பலரால் பலவந்தப்படுத்தப்பட்டு விபச்சாரியானவர்கள் பெருகியே விபச்சாரிகள் அதிகமானார்கள் என்று கூறுவது, எவ்வகையிலும் பொருந்தாமற் போகாது. இரண்டாவது, சமூக வாழ்க்கையில் ஏற்படுத்தப்பட்ட பல கொடுமையான சட்ட திட்டங்களும் விபச்சாரத்தை மிகுதிப்படுத்தின என்பதில் அய்யமில்லை.காதல் மணமில்லாமை, விதவை மணம் இல்லாமை, விவாக விடுதலை உரிமை இல்லாமை, பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமை முதலிய சமூகக் கட்டுப்பாடுகள், பெண்கள் விபச்சாரிகளாவதற்கு முக்கிய காரணமாயிருப்பனவாகும். ஒருவர் மேல் ஒருவர் காதல் கொள்ளாத ஒரு தம்பதிகளின் வாழ்க்கை, தூய வாழ்க்கையாக இருப்பது கஷ்டம். அத்தம்பதிகள் இருவரும் தங்கள் மன இச்சையைத் தகாத வழி[...]



கான்பூர் குடியரசுக் கட்சி ஊழியர்களிடையே பெரியார் உரையாடல்

2008-04-01T22:19:59.592+02:00

சாதியை ஒழிக்க நீங்கள் வழி சொல்லுங்கள்?பொதுவாக இரண்டு வழிகள் உண்டென்று சொல்லலாம். ஒன்று, சட்ட வரம்புக்குட்பட்ட முறையில் போராடுவது. மற்றொன்று, சட்டத்தைப் பற்றி லட்சியம் செய்யாது சட்டத்தை மீறிக் கிளர்ச்சி செய்வது. என்னுடைய இயக்கத்தைப் பொறுத்தவரை, நாங்கள் சட்ட வரம்புக்கு மீறிய வகையில் பல கிளர்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறோம். நம்முடைய கீழ் சாதித் தன்மை நீங்க வேண்டுமானால், நீங்கள் அவசியம் பின்வரும் முறைகளையாவது பின்பற்ற வேண்டும் :1. எந்த இந்துக் கோயிலுக்கும் நீங்கள் பிற்படுத்தப்பட்ட, கீழ்சாதி மக்கள் யாரும் போகக்கூடாது2. இந்து மதக் கடவுள்களைக் கும்பிடக்கூடாது3. இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது4. நெற்றியில் எந்தவிதமான குறிகளையும் சின்னங்களையும் அணியக்கூடாது 5. உச்சிக் குடுமியை ‘சோட்டி' யாரும் வைத்துக் கொள்ளக்கூடாது6. வைதீகச் சடங்குகள் எதையும் செய்யக்கூடாது7. எந்தவிதமான சடங்குகள், நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கும் பார்ப்பானை அழைக்கவே கூடாது8. இந்துக் கடவுள்களின் படங்களை உங்கள் வீட்டில் எங்கும் மாட்டக் கூடாது9. பார்ப்பனர்களால் நடத்தப்படும் உணவுச் சாலை, சிற்றுண்டிச் சாலைகளுக்குப் போகக் கூடாது.‘குடியரசுக் கட்சி'யாகிய எங்கள் கட்சியோடு சேர்ந்து வேலை செய்வீர்களா?எந்த வகையான உதவியை நீங்கள் சாதி ஒழிப்பிற்காக வேண்டுகிறீர்களோ, எங்களால் முடிந்த அளவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால், உங்கள் கட்சித் தலைவர்கள் எனப்படுபவர்களுக்கு, சட்டசபையையும், ‘பார்லிமென்ட்'டையும் கைப்பற்றுவது எப்படி என்பதுதான் குறிக்கோள். ஆகவே, அதற்கெதிராக இருக்கின்ற எங்களை அவர்கள் விரும்புவதில்[...]



ஜாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளுக்கு-பெரியார்

2008-04-01T22:19:59.594+02:00

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள், 4,000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தும், அப்படி இருந்தும் இன்னும் நம்மவரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை ‘வேளாளர்' என்று சொல்லுபவர்களில் ஒரு சிலர் மேற்படி சாதிக் கிரமத்தை அதாவது ‘ஆதிசாதி' என்பவைகளான பிராமணன், ஷத்ரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக் கொண்டு தங்களை மாத்திரம் ‘சற்சூத்திரர்' என்று அழைத்துக் கொண்டும், மற்றொரு சிலர் அச்சாதிக் கிரம வார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொள்கின்றனர்.அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும், ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய அடிமையாய் இருக்க வேறு பல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் "பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்' என்பது என்றும் ஒரு புதிய ஏற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.அந்தப்படிக் கூறப்படும் "பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்' என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணி செய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டõன்[...]



இந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்-பெரியார்

2008-04-01T22:19:59.595+02:00

‏இந்திய நாடு எவ்விதமான வளத்திலும் குறைந்தது அல்ல. இந்தியாவில் ராஜாக்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள், ஆச்சாரிய பீடங்கள், கோடீஸ்வரர்கள் மற்ற நாட்டிலுள்ளவர்களுக்குக் குறையாமல் உள்ளார்கள். விவசாயத் துறையிலும் ஏராளமான பூமிகள் இருப்பதும், அவற்றிற்கு அனுகூலமாக நீர் வசதிகள் இருப்பதும், ஒவ்வொரு மிராசுதார்கள் 1000 ஏக்கர், பதினாயிரம் ஏக்கர், சிலர் லட்சம் ஏக்கர் நிலங்களை உடையவர்களாக இருப்பதும், விவசாயம் செய்யப்பட வேண்டிய பூமிகள் இன்னும் எவ்வளவோ இருப்பதுமான நாடாக உள்ளது.இப்படிப்பட்ட பல்வளமும் பொருந்திய இந்திய நாடு ஏன் தரித்திரமான நாடு என்றும், அடிமையான நாடு என்றும், ஏழைகள் பெருத்த நாடு என்றும் சொல்லப்பட்டு வருகின்றது? முதலாவது, மேற்கண்ட வளமுள்ள செல்வம் எல்லா மக்களும் அடையத்தக்க மாதிரியான சமூக அமைப்பு இல்லாமல் செல்வங்கள் சில வகுப்பு மக்களுக்கே உரியவையாகவும் அனுபவிக்கத் தக்கவையாகவுமான சமூக அமைப்பு முக்கிய காரணமாகும்.அதாவது, வருணாசிரம தருமப்படி இன்ன இன்ன வகுப்புக்கு இன்ன இன்ன தொழில், இன்ன இன்ன உரிமை என்பதான திட்டமே, நாட்டின் செல்வம் எல்லோருக்கும் பரவுவதற்கில்லாமல் தடைபடுத்திக் கொண்டிருக்கிறது என்பது முதல் காரணம். வெள்ளைக்கார அரசாங்கத்தின் பயனாய் இந்த தர்மங்கள் சிறிது சிறிது மாற்றமடைந்து ஏதோ நூற்றில் ஒருவர், ஆயிரத்தில் ஒருவர் செல்வவான்கள் ஆகவும், வருணமுறை தவறிப் பணம் சம்பாதிக்க உரிமை உடையவர்களாகவும் ஆனாலும்கூட, அந்தப் பணமானது மநுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல் அதாவது, ‘சூத்திரன் செல்வத்தைப் பிராமணன் எந்தவிதத்திலானாலும் கொள்ளை அடி[...]



சாதி அமைப்புமுறை இருக்கும் வரை ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற முடியாது-பெரியார்

2008-04-01T22:19:59.597+02:00

ரஷ்யா போன்ற நாட்டில் பார்ப்பானும் இல்லை; பறையனும் இல்லை. அந்த நாடுகளிலே என்னதான் அடக்குமுறைகள் இருந்ததாகச் சொல்லப்பட்டாலும், அறிவுக்கும் சிந்தனைக்கும் உரிமை இருந்தது. இந்த நாட்டைப் போல் அதை நினைத்தாலே கடவுள் கண்ணைக் குத்திவிடுவார்; அந்த சங்கதியை ஆராய்ந்தாயானால் நரகத்திற்குப் போய் விடுவாய்; இது கடவுளுக்கு விரோதம் என்கிற மாதிரியான நிலைமை இல்லை.மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ் முதலியவர்கள் இந்தப்படிதான் முயற்சி செய்ய வேண்டும் என்று சொன்னார்கள் என்பது, கம்யூனிஸ்டுகளின் வாதம். நம்டைய வாதம் என்னவென்றால், இந்த நாட்டின் நிலைமையும் தன்மையும் காரல் மார்க்சுக்கோ, லெனினுக்கோ அல்லது ஏங்கெல்சுக்கோ தெரியாது. இந்த நாட்டிலே பார்ப்பான் என்று ஒரு ஜாதி பிறவியிலேயே மேல் ஜாதியாகவும், மற்றவர்கள் எல்லாம் கீழ்ஜாதியாகவும் இருக்கிற சதாய அமைப்பு இந்த நாட்டிலே இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. அதனால் மார்க்ஸ் வழியோ, லெனின் தலைறையோ இந்த நாட்டுக்கு ஒத்து வராது என்பது நம்முடைய வாதம்.உண்மையாகவே இந்த நாட்டுக் கம்யூனிஸ்டுகள் நினைக்க வேண்டும்; அவர்களுடைய ஆதரவாளர்கள் என்பவர்களும் அறிய வேண்டும். தன் முதலில் இந்த நாட்டில் சமதருமப் பிரச்சாரம் செய்து அதற்கு ஆகவென்றே சிறைக்குப் போனவன் நான். 30 வருடமாக இந்த அடிப்படையில் தானே நாங்கள் பொதுப்பணி புரிகிறோம்! கம்யூனிஸ்டுகள் வெறும் பொருளாதாரத்தை மட்டும் முன்னிறுத்திச் சொல்லுகிறார்கள். நாங்கள், பொருளாதாரத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிய வேண்டியதுதான் ஆனால், சமுதாயத் துறையிலே இருக்கிற பேதம் ஒழிந்தால்தான் சமத்துவ[...]



கிராமச் சீர்திருத்தம்-பெரியார் உரை

2008-04-01T22:19:59.599+02:00

"தலைவர் அவர்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் கிராமாதிகாரி ஆவதற்குப் பயிற்சி பெறும் மாணவர்கள் கூட்டமானாலும், இதற்குத் தலைமை வகிப்பவர் ஒரு கல்வி அதிகாரி ஆவார்; இங்கு அருகில் வீற்றிருப்பவர் கிராமாதி காரிகட்கு அதிகாரியாக இருக்கும் "டெப்டி கலெக்டர்" ஆவார்; இருவர்களும் தக்க அதிகாரமும், பொறுப்பும் பெற்ற அதிகாரிகள். அரசியல்வாதியும், பொதுமக்களின் வெறுப்பைப் பெற்ற சமுதாயப் "புரட்சிக்காரனும்" சகல துறையிலும் இந் நாட்டில் செல்வாக்குப் பெற்றிருக்கும் மேல் சாதிக்காரர்களால் தங்கள் சமுதாயத்திற்கே எதிரி என்று எண்ணும்படியான விரோதியுமாவேன் நான். இந்த லட்சணத்தில் நான் பழமை வழமை, பெரியோர் கருத்து, சாஸ்திரம், ஆதாரம் என்பவைகளைக் கண்மூடிப் பின்பற்றாத ஒரு பகுத்தறிவுவாதி என்று சொல்லப்படுபவன். நானும் என்னைப் பொதுவாக ஒரு சீர்த்திருத்த உணர்ச்சியுள்ளவன் என்று உரிமை பாராட்டிக் கொண்டாலும், என்னுடைய சீர்திருத்தம் என்பதானது பழைய அமைப்பு - மத - அடிப்படை என்பவைகளைக் கூட லட்சியம் செய்யாமல் அநேக காரியங்களை அடியோடு அழித்து நிர்மாணிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவன், இதனால் என்னை நாசவேலைக்காரன் என்று பலர் சொல்லும்படியானவனுமாவேன்.இந்த நிலையில் இப்படிப்பட்டவர்கள் முன்னிலையில் "கிராமச் சீர்த்திருத்தம், கிராமத்தின் எதிர்காலத்திட்டம்" என்பதைப் பற்றிப் பேசுவதென்றால், அது இச்சபைக்கு அவ்வளவு திருப்தியாயும், பொருத்தமாகவும் இருக்குமா என்பது கவலைப்படத்தக்கதாக இருக்கிறது. இருந்தாலும் நாடகத்தில் நகைச்சுவை என்பதன் மூலம் எப்படித் தலை கீழான - [...]



திருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும்-பெரியார்

2008-04-01T22:19:59.601+02:00

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான் தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 'விடுதலை' நாளேட்டில் 28.6.1973 அன்று எழுதிய கட்டுரை



சூத்திரனும், பஞ்சமரும் மந்திரியாகி விட்டால் பரம்பரை இழிவு நீங்கி விடுமா?-பெரியார்

2008-04-01T22:19:59.603+02:00

நாங்கள் இவ்விதக் காரியத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் எல்லாம் முதலாவதாக, எங்களுக்குள்ள இழிநிலையும் சூத்திர, பஞ்சமன் என்ற இழிவுப் பட்டம் நீங்க வேண்டும் என்பதற்கேயாகும். ஆனால், இவ்வித இழிவையும் கீழ்சாதிப் பட்டத்தையும் எண்ணி இதை ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் நாங்கள்தான். வேறு யாரும் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ஆனால், இவ்வித இழி நிலைமை நீங்க வேண்டுமென்பது, தனிப்பட்ட என்னுடைய சுயநலத்திற்கு மட்டுமல்ல; இதனால் எனக்கு மட்டும் இழிவு கிடையாது. சூத்திரர்கள் என்றும் பஞ்சமர்கள் என்றும் அழைக்கப்படுகிற திராவிட மக்கள் அத்தனை பேருக்கும் உள்ள இழிவைப் போக்கவேயாகும்.இன்று மந்திரியாக இருக்கும் சூத்திரன், மந்திரி என்பதால் சூத்திரன் என்ற இழிநிலை போகாது. இன்று மந்திரியாக இருக்கிற பறையர், மந்திரியாக இருப்பதால் அவருடைய பறையர் என்ற பட்டம் போகாது. வேலை முடிந்ததும் ஊருக்குப் போகிற அவர்கள், தங்கள் தங்கள் பறைச்சேரிக்குத்தான் போவார்கள். இன்று சூத்திரர்களும், பஞ்சமர்களும், மந்திரியாகவும், சட்டசபை மெம்பராகவும் (உறுப்பினராகவும்) வந்தார்கள் என்றால், நாங்கள் கூப்பாடு போட்டதால்தான் முடிந்தது. இன்றைக்குப் பறையரும், பள்ளரும் ஓரளவு கல்வி கற்க போதிய வசதியும் சலுகையும் அளிக்கப்பட்டு, அதனால் படிக்கவும் முடிந்தது என்றால், அதுவும் எங்களது முயற்சியினால்தான். எனவே, இவர்கள் யாரைக் கொண்டு முன்னுக்கு வர முடிந்ததோ, அவர்களையே எதிரிகளாக நினைக்கின்றனர். ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினால், எங்களை வகுப்புவாதி என்கின்றனர்."உலக உத்தமர்' என[...]



தமிழைப் புதுமொழியாக்க முயல வேண்டும் - பெரியார்

2008-04-01T22:19:59.605+02:00

எந்த ஒரு மொழியின் சிறப்பும், பெரும்பாலும் அம்மொழியின் மூலம் அறியக் கிடக்கும் கருத்துகளைப் பொறுத்துத்தான் இருக்கும். அந்தந்த மொழியிலுள்ள கருத்துகளைக் கொண்டுதான் பெரும்பாலும் அந்தந்த மொழி பேசும் மக்களின் நாகரிகத்தைக் கூட, அறிவைக்கூட ஒருவாறு அறிந்து கொள்ள முடிகிறது.ஒரு மொழியின் சிறப்புக்கும், வளர்ச்சிக்கும் மற்றொரு காரணம் உண்டு. ஒரு மொழியை எவ்வளவுக்கு எவ்வளவு சுலபமாகக் கற்றுக் கொள்ள முடிகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ச்சியடைவதும் சுலபமாகிறது. சுலபமாகக் கற்றுக் கொள்ளப்படுவதற்கு, எழுத்துகள் சுலபத்தில் எழுதக் கூடியனவாகவும் எண்ணிக்கையில் குறைவாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.வடநாட்டு ஆதிக்கமும், வடமொழி மோகமும் குறையக் குறைய ஆந்திரர்களும், மலையாளிகளும், கன்னடியர்களும் தம் தாய் மொழி ‘தமிழ்'தான் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ந்து கொள்வார்கள் என்பதில் எனக்குத் திடமான நம்பிக்கையுண்டு. இத்தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் புத்துயிர் அளித்த ஒரு பெரிய இயக்கத்தை நான் நடத்தினேன். அதாவது, ‘தமிழ் மொழி தாய்மொழியாக உள்ள இந்நாட்டில், இந்தியைப் புகுத்தக் கூடாது' என்று கிளர்ச்சி செய்தேன்.அது என் தாய்மொழிப் பற்றுதலுக்காக என்று அல்ல; அது என் நாட்டு மொழி என்பதற்காக அல்ல; சிவபெருமானால் பேசப்பட்டது என்பதற்காக அல்ல; அகத்திய முனிவரால் திருத்தப்பட்டதென்பதற்காக அல்ல; மந்திர சக்தி நிறைந்தது; எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுக்கும் என்பதற்காக அல்ல; பின் எதற்காக?தமிழ் இந்நாட்டுச் சீதோஷ்ண நிலைக்கேற்ப [...]



கலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக? - பெரியார்

2008-04-01T22:19:59.608+02:00

சுயமரியாதை இயக்கத்தார் மத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற காலத்தில் அதற்குச் சரியான சமாதானம் சொல்ல யோக்கியதை இல்லாத நமது பண்டிதர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காகப் பழைய கலைகள் என்னும் சாக்கின் பேரில் அதன் நிழலில் போய் மறைந்து கொண்டு, "சுயமரியாதை இயக்கத்தார் பழைய கலைகளை நாசம் செய்கின்றார்கள்' என்று பழி சுமத்துவதன் மூலமே அவைகளைக் காப்பாற்றப் பார்க்கிறார்கள்.கோயில்களைக் குற்றம் சொல்லி, அவற்றில் உள்ள விக்ரகங்களின் பாசங்களை எடுத்துக் காட்டி, இம்மாதிரிக் காட்டுமிராண்டித்தனமான உணர்ச்சியை மக்களுக்கு வளர்க்கலாமா என்றும், இந்த பாசத்திற்காக இவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்யலாமா என்றும் கேட்டால் ஓவியம் என்னும் நிழலில் புகுந்து கொண்டு "அவைகள் அவசியம் இருக்க வேண்டும்' என்றும் "அவைகள் அழிந்தால் இந்திய ஓவியக் கலை அழிந்துவிடும்' என்றும், "சாமி பக்திக்காகத் தாங்கள் கோயில்களைக் காப்பாற்றுவதில்லை' என்றும் "ஓவியக் கலை அறிவுக்காகக் கோயில்கள் காப்பாற்றப்பட வேண்டும்' என்றும் சொல்லுகின்றார்கள்.நமது பண்டிதர்களின் ஓவியக் கலையும், காவியக் கலையும் போகின்ற போக்கைப் பார்த்தால், அவர்களுக்கு உள்ள பகுத்தறிவுக் கலை எவ்வளவில் இருக்கின்றது என்பது ஒருவாறு தானாகவே விளங்கும். மக்களுக்கு ஓவியம் வேண்டுமானால், இந்தியக் கோயில் ஓவியமும் இந்துக் கடவுள்கள் ஓவியமும் கடுகளவு அறிவுள்ள மனிதனும் ஒப்ப முடியாத, மதிக்க முடியாத ஓவியங்கள் என்பதோடு, அவை மனிதத் தன்மையும் பகுத்தறிவும் உள்ள மக்க[...]



பஜனைப் பாட்டுப் பாடவா தமிழ் இசையை வலியுறுத்தினோம்? - பெரியார்

2008-04-01T22:19:59.609+02:00

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்' என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்' என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ' என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்' என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்' என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்திய[...]



சமஸ்கிருதம் தேவையா? - பெரியார்

2008-04-01T22:19:59.611+02:00

இந்த நாட்டில் பல காலமாக ‘சமஸ்கிருதம்’ என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் - நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன ‘மேலோர்’ மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக[...]



இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா? - பெரியார்

2008-04-01T22:19:59.613+02:00

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும், கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந[...]