Subscribe: சமூகநீதி காக்கும் பெரà®
http://periyaarpaasarai.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language:
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: சமூகநீதி காக்கும் பெரà®

பெரியார் பாசறை



1: கடவுள் மறுப்பு 2: சாதி ஒழிப்பு 3: பெண் விடுதலை 4: தமிழர் நலன் 5: தமிழருக்கான நாடு



Updated: 2015-09-17T03:59:58.577-07:00

 






தமிழக அரசே; குற்றவாளிகளை தப்பவிடாதே!

2012-07-22T08:06:22.417-07:00

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பாக கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் மாலை 5 மணியளவில் தோழர் பழனிச்சாமிக்கு வீர வணக்க நிகழ்வு, மாவட்ட தலைவர் அன்புரோசு தலைமை யில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர பொறுப் பாளர் சிங் கண்ணன் முன்னிலை வகித்தார். ஆதித் தமிழர் பேரவை சூரியன் துவக்க உரையாற்றினார். தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் பால். பிரபாகரன் விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ.அ.குமார், பொருளாளர் மதன், தூத்துக்குடி நகர செயலாளர் பால் அறிவழகன், அமிர்தராசு, கனகராஜி உள்ளிட்ட சுமார் 50 தோழர்கள் கலந்து கொண்டனர்.



இன்று(10.07.2012) இரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பெரியார்திக தலைவர் கொளத்தூர் மணி பேசுகிறார்

2012-07-10T07:36:18.265-07:00

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இன்று இரவு (10.07.2012)  9 மணி அளவில் நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பெரியார் திக கிருட்டிணகிரி அமைப்பாளர் தோழர் பழனி படுகொலை தொடர்பாக பெரியார் திக தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் பல அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் பேசுகிறார்.

(object)



ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமா…? – கொளத்தூர் மணி உரை [காணொளி]

2012-06-17T06:43:16.820-07:00

[காணொளி] சிங்கள இந்திய அரசுகளால் தமிழீழ விடுதலைப்போராட்டமானது 2009 மே 18இல் முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டப் பின்னர் ஈழத்தமிழர் அழிவுக்கு காரணம் திராவிடமே என்று சிலர் மக்களை குழப்பிவருகின்றனர். அவர்களுக்கு தெளிவினை ஏற்படுத்தும் வகையில் சென்னை பெரம்பூரில் நடைபெற்ற குடி அரசு வாசகர் வட்ட நிகழ்வில் கொளத்தூர் மணி ஆதாரங்களுடன் விளக்கமளித்து உரையாற்றியுள்ளார்.


(object) (embed)

http://www.periyarthalam.com/2012/04/20/eelam-tamil-tamilar-dravidar-kolathurmani-periyardk/



பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! - கொளத்தூர் மணி அறிக்கை

2012-06-12T20:09:57.668-07:00

பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று ... மேலும்>> 10 நாட்கள்: 80 ஊர்களில் சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம் சென்னை-காஞ்சிபுரம் மாவட்டக் கழகம்: சாதி தீண்டாமைக்கு எதிராகவும் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கியும் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கழகச் செயல் வீரர்கள் 10 நாள் பரப்புரைப் பயணத்தைத் தொடங்குகிறார்கள். ஜூன் 22 ஆம் தேதி சென்னை மந்தைவெளியில் ... மேலும்>> அரசியல் சட்டத்துக்கு சவால் விடும் மனுதர்மம் கேள்வி : மனு.... மனு... என்கிறோமே, அது அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கை களை எழுதித் தருகிறோமே, அந்த மனு தானே! பதில்: அதுவும் மனு தான்; ஆனால், நாம் கூறுவது மனுதர்ம சா°திரம் பற்றி. கேள்வி : அது என்ன மனுதர்ம சா°திரம்? பதில் : ... மேலும்>> களப் பணியில் கழகத் தோழர்கள் பல்லடம் ஒன்றிய கழக முடிவுகள் 20.5.2012 அன்று பல்லடம் ஒன்றிய கழக அமைப்புக் கூட்டம் ஜி.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணம், அய்ந்துநாட்கள், 14 பகுதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டது. பல்லடம் ... மேலும்>> பெண்ணின் பெயர் அடையாளத்தையும் பெயர்த்து எறியும் மனுதர்மம் நாட்டில் ‘மனுதர்மமே’ அதிகாரத்தோடு ஒவ்வொரு துறையிலும் கொடிகட்டி திமிரோடு பறந்து கொண்டிருக்கிறது என்பதற்[...]



‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

2012-06-06T01:48:30.672-07:00

‘திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (11) டாக்டர் நாயர் மரணத்தை இனிப்பு வழங்கி கொண்டாடிய பார்ப்பனர்

(image)
1919 - இந்திய சீர்திருத்த விஷய மாக நாயர் கொடுக்கப் போகும் சாட்சியமானது, மிக முக்கியமானது என்று கருத்தறிவித்த, சர். தாம° பார்கோ என்ற நாடாளுமன்ற உறுப் பினரின் தூண்டுதலின்படி படுக்கையி லிருந்த நாயரிடம் சாட்சியம் வாங்க ஜாயிண்ட் பார்லிமெண்ட் கமிட்டி ... மேலும்>>



எது திராவிடம்…? – தமிழேந்தி

2012-06-04T07:04:45.504-07:00

மார்ச் 2 ஆம் பக்கல் 2006 ஆம் ஆண்டில் புரட்சிப்பெரியார் முழக்கத்தில் எது திராவிடம்…? என்ற தலைப்பில் தோழர் தமிழேந்தி எழுதிய இப்பாவை தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் பெரியார் தளத்துக்கு தெரிவித்து வெளியிட சொன்னார். இந்த இதழை பெரியார் முழக்கம் பொறுப்பாளர் தோழர் செல்வா தேடி எடுத்து நமக்கு அனுப்பியுள்ளார்.





நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு

2012-05-29T22:47:10.917-07:00

சிங்களத்திற்கு பணிந்து போகுமாறு தந்தை செல்வாவிடம் பெரியார் சொன்னாராம்: நாம் தமிழர் கட்சியின் புதிய கண்டுபிடிப்பு ஈழத் தந்தை செல்வா, தந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்; இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமே, திராவிடம் தான் என்றுகூறும் இந்த “ஆராய்ச்சி” ஆவணம், அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.. [விரிவாக படிக்க]பெரியார் முழக்கம் இதழ் 31.05.2012 நாம் தமிழர் கட்சி – இந்திய ஒருமைப் பாட்டைக் காப்பாற்ற தொண்டர்களுக்கு அறைகூவல்! திராவிடர் இயக்கம் உருவாகிய பின்னணி (10) ‘விந்து’ வங்கியிலும் வீரியம் பெற்றுள்ள மனுதர்மம் கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையிலிருந்து ‘பார்ப்பனக் குரல்’ இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்][...]



கடைக்கோடித்தமிழனின் விடுதலைக்கும் ஆயுதம் திராவிடமே: கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், அப்துல் சமத் உரை

2012-05-27T05:48:35.908-07:00

திராவிட இயக்க நூற்றாண்டான இன்று திராவிடர் இயக்க போராட்டத்தால் முன்னேறிய பலர் திராவிடர் இயக்க செயல்பாட்டை மறந்துவிட்டும் மறைப்பதற்கும் முயற்சித்து வருகின்றனர். திராவிடம் தான் தமிழர் விடுதலைக்கு எதிரானதாகவும், ஈழத்தமிழர் அழிவுக்கு காரணமே திராவிடர் இயக்கம்தான் என்று மேடையில் பேசி இந்தியப் பார்ப்பனிய அரசுக்கு ஆதரவாக மறைமுகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு தெளிவினையும் வரலாற்றையும் அளிக்கும் வகையில்


(object) (embed)

http://www.periyarthalam.com/2012/05/01/%e0%ae%95%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f/



[புரட்சிப்பெரியார் முழக்கம் 24.05.2012] இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி உரை

2012-05-25T10:37:59.238-07:00

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது; ஈழ விடுதலை மலரும் வரை இந்த முழக்கம் ஓயாது மக்கள் கடலில் கழகக் கூட்டம் [படங்கள்] ஈழத்தில் முள்ளி வாய்க்காலில் மே 16, 17, 18 தேதிகளில் ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களுக்கும், தமிழ் ஈழத்தில் ராணுவத்தால் மரணத்தைத் தழுவிய பல லட்சம் தமிழர்களுக்கும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு உருக்கத்துடனும் உணர்வலைகளுடனும் கடந்த 19 ஆம் தேதி ... மேலும்>> தலையங்கம் நாடாளுமன்றத்தில் சாதி எதிர்ப்புக் குரல்! “ஜனநாயகமும்-சாதி அமைப்பும், ஒன்றையொன்று சார்ந்து பயணிக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனநாயகம், சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. சாதி அமைப்போ, சமூகத்தில் மேலானவர், கீழானவர் என்ற வேறுபாடுகளின் மீது நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு அமைப்புகளில் ஏதேனும் ஒன்று சாகடிக்கப்பட வேண்டும். ... மேலும்>> ‘விவாக’ங்களை நிர்ணயிக்கும் மனுதர்மம்: நியாயப்படுத்தும் பார்ப்பன ஏடுகள் ‘மனுதர்மம்’ இப்போது எங்கே இருக்கிறது? இப்படி ஒரு கேள்வி சிலரால் முன் வைக்கப்படுகிறது. அவர்கள் நாட்டின் நடப்புகளைப் புரிந்து கொண்டால், இந்தக் கேள்வியை கேட்க மாட்டார்கள். ‘மனுதர்மம்’ புதிய பதிப்புகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ‘தினமலர்’, ‘துக்ளக்’ போன்ற பத்திரிகைகள், அதன் உள்ளடக்கங் ... மேலும்>> இந்திய துரோகங்களை விளக்கி கழகத் தலைவர் உரை; சலகண்டாபுரம் – தாரமங்கலத்தில் கழகக் கூட்டங்கள் சேலம் (மேற்கு) மாவட்டக் கழகம் தீவிரமாக பரப்புரை இயக்கங்களை நடத்தி வருகிறது. பம்பரமாய் சுழலும் கழகத் தோழர்களின் செயல்பாடுகள். கடந்த இதழின் தொடர்ச்சி. சேலம் மேற்கு மாவட்டம் சலகண்டாபுரத்தில் 10.2.12 வெள[...]



[வீடியோ] ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள்: திருமாவளவன் ஆதங்கம்

2012-05-25T07:28:41.342-07:00

[வீடியோ] ஏன் என்னை புறக்கணிக்கிறீர்கள்: திருமாவளவன் ஆதங்கம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…” என்ற தலைப்பில் சென்னையில் (மே18) கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் “தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார்.

allowFullScreen='true' webkitallowfullscreen='true' mozallowfullscreen='true' width='320' height='266' src='https://www.youtube.com/embed/8BYtsl7bUuE?feature=player_embedded' FRAMEBORDER='0' />




[video]இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: ஆனூர் செகதீசன், கு.இராமகிருட்டினன், விடுதலை க.இராசேந்திரன்

2012-05-25T06:40:49.209-07:00

இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: ஆனூர் செகதீசன், கு.இராமகிருட்டினன், விடுதலை க.இராசேந்திரன் உரை

(object) (embed)
allowFullScreen='true' webkitallowfullscreen='true' mozallowfullscreen='true' width='320' height='266' src='https://www.youtube.com/embed/Q-iPDRbIhr8?feature=player_embedded' FRAMEBORDER='0' />

allowFullScreen='true' webkitallowfullscreen='true' mozallowfullscreen='true' width='320' height='266' src='https://www.youtube.com/embed/g8bN13v5AFw?feature=player_embedded' FRAMEBORDER='0' />




இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: கொளத்தூர் மணி [Video]

2012-05-24T22:03:40.259-07:00

[Video] இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: கொளத்தூர் மணி உரை

allowFullScreen='true' webkitallowfullscreen='true' mozallowfullscreen='true' width='320' height='266' src='https://www.youtube.com/embed/Et7wEBajdHc?feature=player_embedded' FRAMEBORDER='0' />

http://www.periyarthalam.com/2012/05/21/periyardk-voice-for-tamileelam-election-19052012/



இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது: வைகோ[Video]

2012-05-24T07:44:51.540-07:00

[Video] ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து என்ற உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில் வைகோ உரை..  இனப்படுகொலை ஆட்சியில் இணைந்து வாழ இயலாது, ஈழவிடுதலை மலரும்வரை இந்தமுழக்கம் ஓயாது.ஜ.நாவே! இந்தியஅரசே!

allowFullScreen='true' webkitallowfullscreen='true' mozallowfullscreen='true' width='320' height='266' src='https://www.youtube.com/embed/q5yf6-c7LzA?feature=player_embedded' FRAMEBORDER='0' />




ஈழம் விடுதலை அடையும் கொளத்தூர் மணி, வைகோவுடன் இணைந்து நானும் ஈழம் செல்வேன்: சத்தியராஜ்

2012-05-23T10:12:58.859-07:00

தமிழீழ விடுதலைக்காகவும் தமிழக மக்களுக்காகவும் பல்லாண்டுகளாக தொடர்ந்து போராடும் பெரியார் திராவிடர் கழகம், மறுமலர்ச்சி திமுகவின் போராட்டங்களுக்கு தமிழக மக்கள் தங்கள் தார்மீக ஆதரவினை வழங்க வேண்டும், இவர்களின் போராட்டத்தால் ஈழம் விடுதலை அடையும் அப்பொழுது கொளத்தூர் மணி, வைகோ அவர்களுடன் சேர்ந்து நானும் தமிழீழம் செல்வேன் என்று சென்னை எம்.ஜி.ஆர் நகர் சந்தையில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய “அய்.நாவே தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்து” உரிமை முழக்க பொதுக்கூட்டத்தில் நடிகர் சத்யராஜ் உரையாற்றியுள்ளார்.
allowFullScreen='true' webkitallowfullscreen='true' mozallowfullscreen='true' width='320' height='266' src='https://www.youtube.com/embed/XS2OMbBI9vM?feature=player_embedded' FRAMEBORDER='0' />





http://www.periyarthalam.com/2012/05/20/sathyaraj-periyardk/



கலைஞர் அவர்களே பாவம் செய்துவிட்டீர்களே நீங்காத பழியை தேடிக்கொண்டீர்களே: வைகோ

2012-05-23T09:21:34.418-07:00

இந்திய அரசு சிறீலங்காவுக்கு ஆயுதங்களையும், ரேடார்களையும், இராணுவத்தளவாடங்களையும், இந்திய முப்படை இராணுவ அதிகாரிகளையும் அனுப்பியதை தடுக்க கலைஞர் கருணாநிதி தடுக்கவில்லையே, முத்துக்குமாரனின் தொடர்ந்து திமுக வினர் இருவர் தீக்குளித்த பொழுதுகூட கலைஞர் இரண்டு வரி இரங்கல் கூட தெரிவிக்கவில்லையே, கலைஞர் கருணாநிதி அவர்களே பாவம் செய்துவிட்டீர்களே நீங்காத பழியை தேடிக்கொண்டீர்களே என்று முள்ளிவாய்க்கால் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
முழு உரை:
allowFullScreen='true' webkitallowfullscreen='true' mozallowfullscreen='true' width='320' height='266' src='https://www.youtube.com/embed/OSpZqxsrJ9A?feature=player_embedded' FRAMEBORDER='0' />

periyarthalam17052012-1

Picture 1 of 34
http://www.periyarthalam.com/2012/05/18/mdmk-vaiko-urai/



மும்பையில் பெரியாரியல் பயிலரங்கம் தோழர் பால்.பிரபாகரன் நடத்தினார்

2012-04-06T20:48:01.203-07:00

மும்பையில் பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பெரியாரின் அர்பணிப்பும், சமுக பணிகளையும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் இந்த பெரியாரியல் பயிலரங்கம் நடத்தப்பட்டது ,

04/03/2012 அன்று தாராவி காமராஜர் பள்ளி யில் பெரியார் திராவிடர் கழக தலைமை கழக செயற்குழு உறுப்பினர் தோழர் பால் .பிரபாகரன் சிறப்பாக பயிலரங்கத்தை நடத்தினர் ,இதில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் , பெரியார் - நேற்று ,இன்று ,நாளை என்ற தலைப்பில் தலைவர் பெரியார் இன்றைக்கு தேவை என சுமார் இரண்டு மணி நேரம் பயிலரங்கத்தை நடத்தினர் ,இறுதியில் கேள்வி -பதில் பகுதியும் நடத்து ,முழுமையா திராவிட இயக்கம் நடத்திய இன விடுதலையும் ,சமுகவிடுதளையும் கிடைத்தது ,சமுக நீதி கிடைத்திட ஜாதி அடையாளங்களை தொலைக்கவேண்டும் , கல்வி இல் சமசீர் வேண்டும் ,அறிவை முடக்குவது ஆரியம் அடிமை விலங்கை உடைப்பது பெரியாரியம் என பெரியாரின் தேவை நேற்று எப்படி இருதது ,இன்று எப்படி இயங்கிறது ,நாளை பெரியார் எப்படி தேவைபாடுவர் மிக அருமையா விலகினர் தோழர் பால் .பிரபாகரன் அவர்கள் ,

புதிய தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்கள் ,தோழர் பால்வண்ணன் அவரளின் சிறப்பான முயற்சியில் நடந்த இந்த பயிலரங்கத்தில் பெரியார் திராவிடர் கழக மும்பை பொறுப்பாளர் மா .கதிரவன் வரவேப்புரை அற்ற ஆசிரியர் ஜெயகண்டிபன் தலைமை தாங்கினார் ,நாடோடி தமிழன் ஜஸ்டின் ,மேட்டூர் ராஜா ,தூத்துக்குடி முத்து, இறைச .ராஜேந்திரன், தமிழ் நேசன் ,ஜார்ஜ் என தோழர்கள் கலந்து கொண்டனர் .




(image)
(image)
(image)
(image)
(image)



கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள்

2011-09-29T03:43:00.046-07:00

1. கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரஷ்ய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (Site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.2. தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப் பணித் துறை) அணுமின் நிலையத்தி லிருந்து 2 கி.மீ. தூரத்திற்குள் அணுமின் கட்டிடங் களைத் தவிர வேறு எதுவும் இருக்கக் கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ. சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization zone) இருக்கும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக் கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட் டுள்ளன. அரசின் உண்மை நிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.அ. aerb எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20000 பேருக்கு மேல் வசிக்கக் கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ. சுற்றளவுக்குள் 10,000-த்திற்கு அதிகமான மக்கள் வாழும் ஊர்கள் இருக்கக் கூடாது. ஆனால் கூடங்குளம் அணுமி[...]



மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அறிக்கை

2011-09-05T06:29:16.318-07:00

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மூன்று தமிழர்களுக்கு இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கின்ற மரண தண்டனை,இன அடிப்படையில் ஆனது என்றால்,மத்தியில் அஃப்சல் குருவிக்கு வழங்கப்பட்டு இருக்கிற மரண தண்டனை மத அடிப்படையில் ஆனது.இன்றைக்கு இருக்கும் சட்டங்கள் எல்லாம் செல்வந்தர்களுக்கு சாதகமானதாகவே இருக்கின்றன.பணம் படைத்தவனுக்குதான் நீதி; கை ஏந்துபவனோ நிர்க்கதியில் தான்.சமூகத்தில் கீழ்த்தட்டில் இருப்பவனைக் காக்க வேண்டிய சட்டமே.அவனை அழித்து,ஒழிக்கும் முயற்சியில் இறங்குகிறது.

இன்றைக்கு மரண தண்டனைக் கைதிகளைப் பாருங்கள்….. அவர்கள் நசுக்கப்பட்ட இனத்தை சார்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.மாறாக,ஒரு பணக்காரரை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?அல்லது இதுவரை எந்த ஒரு பணக்காரராவது தூக்குமேடை ஏறி இருப்பாரா?

நமது சட்டங்கள் ஒரு வகையில் பண்ணையார் தத்துவத்தையே நியாயப்படுத்துகின்றன.ஒரு சிவில் வழக்கில் தனிநபர் ஒருவர் இன்னொரு தனி நபருடன் வாதாடலாம்.ஆனால் கிரிமினல் வழக்குகளிலோ தனிநபர் ஒருவருக்கு எதிராக,அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதாடுவார்.அதாவது,ஒவ்வொரு குற்ற வழக்கும் போலீசால் பதிவு செய்யப்பட்டு,அரசு தனக்கு எதிரானவரை எதிர்க்க வழக்கறிஞர் ஒருவரை நியமிக்கிறது.வழக்கில் ஒவ்வொரு நகர்வையும் போலீசுதான் தீர்மானிக்கிறார்கள்.வாக்குமூலம் பெறுவதிலேயே எவ்வளவு வன்முறைகளைப் பிரயோகிக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதானே?

’அரிதிலும்,அரிதான’ குற்றங்களில் தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள்.போலீசாரால் என்கவுன்ட்டர் என்ற பெயரில் பலர் சாகடிக்கப்படிகிறார்களே…..அதுவும் கூட ’அரிதிலும் அரிதானது’ தானே? ஆக சட்டத்துக்கு புறம்பாக போலீசார் கொலை செய்தால்,அது என்கவுன்ட்டர்கள்.அதையே நியாயப்படி செய்ய வேண்டும் என்றால்,அதற்குப்பெயர் மரண தண்டனை.இது தான் உங்கள் நீதி?

பண்டைய கிரேக்க,எகிப்திய நாடுகளில் இருந்த அடிமைகள் அந்த நாட்டின் குடிமகன்களாக அங்கிகரிக்கப்படவில்லை.அவர்களின் உரிமையாளர்கள் மட்டுமே குடிகளாக அங்கிகரிக்கப்பட்டார்கள்.உரிமையாளர்களுக்கு மட்டுமேதான் சட்டம்,நீதி,நியாயம்,தீர்ப்பு எல்லாம்…………………அடிமைகளுக்கு எப்போதும் மரணம் ஒன்றுதான்.தண்டனையாகவும்,தீர்ப்பாகவும்,நியாயமாகவும்,நீதியாகவும் அவர்களுக்கே இருந்து வந்ததிருக்கிறது.இன்றைக்கு நிராகரிக்கப்பட்டு இருக்கிற கருனை மனுக்களைக் குறித்து நாம் எண்ணிப்பார்க்கையில்,ஒருவகையில் நாம் எல்லோரும் இந்த நாட்டில் அடிமைகள் தானோ?

சாமன்யன் செய்த குற்றம் ஒன்றுக்கு மரண தண்டனை வழங்குவதன் மூலம் சட்டம் இன்னொறு குற்றம் செய்வது எப்போதும் சமமாகாது;நீதியும் ஆகாது

நன்றி:விகடன் குழுமம்

(image)

View the Original article



கொளத்தூர் மணி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் சாட்சி புத்தகம் [படங்கள்]

2011-09-04T21:57:30.859-07:00

கொளத்தூர் மணி தலைமையில் சென்னையில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் சாட்சி புத்தகம் [படங்கள்] சென்னையில் கடந்த 04.09.11 அன்று 'முள்ளிவாய்க்கால் சாட்சி' என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தக வெளியிட்டு விழா திரு அன்பரசன் தீனதயாளன் மற்றும் எழில் சுரேசு அவர்களின் திருமண நிகழ்வோடு சேர்ந்து நடைபெற்றது. நோர்வேயிலும் லண்டனிலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட இப்புத்தகத்தை தமிழகத்தில் மருத்துவர் ... மேலும்>> allowtransparency="true" hspace="0" marginwidth="0" marginheight="0" vspace="0" id="aswift_1" name="aswift_1" style="left:0;position:absolute;top:0;" frameborder="0" height="90" scrolling="no" width="728"> தங்களையே அழித்துக்கொள்ளும் முறையை தொடர வேண்டாம்: பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஈழத்தமிழர் உரிமைப்பார்வையில் போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க தமிழக மக்களும் தமிழக அரசும் வலியுறுத்தி வந்த நிலையில், தமிழர் உணர்வுகளை உதாசீனப்படுத்தியதல்லாமல் மனிதமே அதிர்கிற வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் கழித்துவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரணதண்டனையை நிறைவேற்ற மைய அரசு ... மேலும்>> allowtransparency="true" hspace="0" marginwidth="0" marginheight="0" vspace="0" id="aswift_2" name="aswift_2" style="left:0;position:absolute;top:0;" frameborder="0" height="90" scrolling="no" width="728"> மரணதண்டனையை ஒழிப்போம்! நூல் அறிமுகம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணதண்டனை குறித்து கொளத்தூர் மணி அவர்களின் அறிக்கையும், விடுதலை இராசேந்திரன், தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரின் கட்டுரைகளும் அடங்கிய சிறுநூல். பெரியார் திராவிடர் கழக வெளியீடு. தொகுப்பு: விடுதலை க. இராசேந்திரன் நன்கொடை ரு 5.00 நூல்கள் கிடைக்குமிடங்கள் - பெரியார் படிப்[...]



மூவரை காக்க மக்கள் மன்ற பெண் தோழர் செங்கொடி தீக்குளித்து மரணம் [கடிதம் இணைப்பு]

2011-08-28T08:22:42.204-07:00

மூவர் உயிரைக் காப்பாற்றக்கோரி காஞ்சிபுரத்தில் 27 அகவையுடைய செங்கொடி (மக்கள் மன்றம் இயக்கத்தைச் சேர்ந்தவர்) வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை ரத்து செய்யக்கோரி காஞ்சீயில் இளம்பெண் தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் ஓரிக்கையைச் சேர்ந்தவர் செங்கொடி ( 27). இவர் மக்கள் மன்றம் இயக்கத்தில் உள்ளார்.

இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன், முருகன், சாந்தன் தூக்கை எதிர்த்து முழக்கமிட்டபடி தீக்குளித்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செங்கொடி உயிரிழந்தார். இந்நிலையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் உயிரை காப்பாற்ற அரசுக்கு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார் செங்கொடி. இந்த கடிதம் தற்போது கிடைத்துள்ளது.

21 ஆண்டுகளாக சிறையில் வாடும் மூவரின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கடிதத்தில் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இந்த விசயத்தில் தலையிட்டு தூக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.

முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.

(image)

View the Original article



வேலூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகன பேரணி

2011-08-18T04:27:31.683-07:00

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்தியராஜ், இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் அருகே நடிகர் சத்தியராஜ் இந்த பேரணியை துவங்கி வைத்தார். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த பெண்கள் உள்பட பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.20 ஆண்டுகள் சிறையில் இருந்த மூவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது நாகரீகம் ஆகாது என்று பேரணியில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், மரண தண்டனைக்கு எதிராக காந்தியடிகள் சொன்னதற்கு மேலாக நான் ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. நியாயம் கிடைக்க வேண்டும். அந்த இளைஞன் வாழ்க்கையில் தண்டனை குறைக்கப்பட வேண்டும். நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் எங்களால் முடிந்த போராட்டங்களை செய்வோம் என்றார்.[Show as slideshow] View the Original article[...]



பெரியார் திராவிடர் கழகப் பிரச்சாரக் கட்டமைமைப்பு நிதி: கொளத்தூர் மணி முக்கிய வேண்டுகோள்

2011-08-18T00:44:29.235-07:00

பெரியாரியலுக்கு அடிப்படை ஆவணங்களான குடிஅரசு, புரட்சி, ரிவோல்ட், பகுத்தறிவு இதழ்களைத் தேடித் தேடி தொகுத்து குடி அரசு தொகுப்பு நூல்களாக வெளியிட்டோம். சட்டப் போராட்டம் நடத்தி பெரியாரின் கருத்துக் கருவூலங்களை மக்கள் சொத்தாகவும் மாற்றிவிட்டோம். நண்பர்களின் கணினிகள், ஆதரவாளர்களின் அச்சகங்கள், தாள் விற்பனை ... மேலும்>> allowtransparency="true" hspace="0" marginwidth="0" marginheight="0" vspace="0" id="aswift_1" name="aswift_1" style="left:0;position:absolute;top:0;" frameborder="0" height="90" scrolling="no" width="728"> இந்தியா உருவானது எப்படி? – விடுதலை க.இராசேந்திரன் ஆங்கிலேயர்கள் இந்தியா வருவதற்கு முன், இப்போது இருக்கும் இந்தியா என்ற நாடு இருந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்பதே எல்லோருக்கும் தெரிந்த பதில். வட இந்தியாவை எடுத்துக் கொணடால், அதன் 1800 ஆண்டு வரலாற்றில், ஒரே பகுதியாக இருந்ததாக வரலாறு கிடையாது. ... மேலும்>> allowtransparency="true" hspace="0" marginwidth="0" marginheight="0" vspace="0" id="aswift_2" name="aswift_2" style="left:0;position:absolute;top:0;" frameborder="0" height="90" scrolling="no" width="728"> பெரியார் ‘கைத்தடிகளோடு’ திரளுவோம்! – விடுதலை இராசேந்திரன் வீட்டுக்குள் தனி மனிதர்களின் நம்பிக்கையோடு முடங்கியிருந்த விநாயகன் வழிபாட்டை வீதிக்குக் கொண்டு வந்து அரசியலாக்கின மதவெறி சக்திகள். மத நம்பிக்கையாளர்களாக இருப்பது அவரவர் தனி உரிமை. மத உணர்வுகளை மதவெறியாகக் கட்டமைத்து, சமூகத்தில் பிளவுகளையும், கலவரங்களையும் உருவாக்குவது சமூக, சட்ட விரோத செயல்பாடுகளேயாகும். ... மேலும்>> திராவிடத்தால் அல்ல; தமிழன் சாதியால் பிரிந்ததால் தான் வீழ்ச்சி ஜூனியர் விகடன் ஏடு வெளியிட்ட கழுகார் கேள்வி-பதி[...]



தூக்கிலிருந்து விடுதலை பெற்ற சி.ஏ.பாலன்

2011-08-17T00:45:52.396-07:00

குடியரசுத் தலைவர் தூக்குத் தண்டனைக்கான கருணை மனுவை தள்ளுபடி செய்த பிறகு கேரளத்தில் சி.ஏ.பாலன் என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தோழர், தூக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வரலாறும் உண்டு. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ணய்யர், நீதிபதியாவதற்கு முன் கேரளாவில் உள்துறை அமைச்சராக இருந்தார். ... மேலும்>> allowtransparency="true" hspace="0" marginwidth="0" marginheight="0" vspace="0" id="aswift_1" name="aswift_1" style="left:0;position:absolute;top:0;" frameborder="0" height="90" scrolling="no" width="728"> உலக நாடுகளில் விடைபெறும் தூக்குத் தண்டனை கடந்த 10 ஆண்டுகளில் 22 நாடுகள் தூக்குத் தண்டனையை தங்கள் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கி விட்டன. இப்போது 95 நாடுகளில் தூக்குத் தண்டனை சட்டப்படி ஒழிக்கப்பட்டு விட்டது. அய்ரோப்பிய ஒன்றியம் முழுதும் (பெலாரஸ்என்ற நாட்டைத் தவிர) தூக்குத் தண்டனை ஒழிக்கப்பட்டு விட்டது. ... மேலும்>> allowtransparency="true" hspace="0" marginwidth="0" marginheight="0" vspace="0" id="aswift_2" name="aswift_2" style="left:0;position:absolute;top:0;" frameborder="0" height="90" scrolling="no" width="728"> 2 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நிறைவேற்றப்படாத தூக்குத் தண்டனைகளை ரத்து செய்த உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான வழக்கு ஆதாரங்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பிறகு, நீண்டகாலம் அதை நிறைவேற்றாமல் தள்ளிப் போடுவது கூடுதல் தண்டனை வழங்குவதாகும் என்று கூறி பல வழக்குகளில் உச்சநீதிமன்றம், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகாலம் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாவிட்டாலே அதை ... மேலும்>> புலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா? (9) – விடுதலை க.இராசேந்திரன[...]



சமச்சீர் கல்வி திட்ட ரத்தைக்கண்டித்து திமுக போராடதது ஏன்...?

2011-06-02T22:32:57.356-07:00

src="http://www.youtube.com/embed/1kEreupFOBE" allowfullscreen="" frameborder="0" height="349" width="425">