Subscribe: சம்பூகன்
http://sampoogan.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: சம்பூகன்

சம்பூகன்உன்னை சூத்திரன் என்றால் ஆத்திரங் கொண்டு அடி - தந்தை பெரியார்Updated: 2018-03-05T09:08:17.909-08:00

 கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...

2008-05-12T21:13:13.143-07:00

குறிப்பு: கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் முற்போக்காளர்களை மோதவிடும் திருக்காரியத்தை தொடர்வதற்காகவும், தமது புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டு அவதூறுகளை பரப்பி பார்ப்பன எதிர்ப்பு முகாமை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழ்மணத்திற்குள் மீண்டும் நுழைந்திருக்கிறார் திருவாளர் 'பார்ப்பன'மணி, தமிழ்மணத்தில் வாய்சவடால் அடித்துக் கொண்டும், விக்கிபீடியாவை கையில் வைத்துக் கொண்டு விவாதம் என்ற பெயரில் மொக்கையடித்துக் கொண்டும் தமிழ்மணி என்ற நாமகரணத்தோடு தமிழ்மணத்த்தில் உலவிவந்தது ஒரு சதிகார பார்ப்பன கும்பல் என்பதையும், அதில் ஆர்.எஸ்.எஸ் பாசிசவாதிகளும் அங்கம் வகிக்கிறார்கள் என்று எண்ணுவதற்கு இடமிருக்கிறது என்பதையும் சில மாதங்களுக்கு முன்பு நாம் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினோம்., அப்படி எழுதிய பதிவுகளில் நாம் எழுப்பிய தார்மீக ரீதியான‌ எந்த கேள்விகளுக்கும் விடையளிக்காமல், ஆதாரத்தோடு மறுக்கவும் வக்கில்லாமல் கள்ள மெளனம் சாதித்து வந்த பார்ப்பனமணி கும்பல் அதன் பின்பு ஒருநாள் திடீரென‌ காணமல் போனாது., இந்த நிலையில் சும்மா இருக்கப் பொறுக்காமல் அரிப்பெடுத்து போன தமிழ்மணி, தனது சதி செயலுக்கு அச்சாரம் போடுவதற்கு மீண்டும் தமிழ்மணத்தில் பிரவேசித்திருக்கிறார். 'தமிழ்மணியின் இந்த இரண்டாம் வருகையை பற்றியும் அவரை மனதார வரவேற்றும் பத்து நாட்களுக்கு முன்பு நான் ஒரு பதிவிட்டிருந்தேன், அந்த பதிவில் அவர் இதுவரை பதிலளிக்காமல் தவிர்த்து வரும் கேள்விகள் அடங்கிய நம்முடைய பழைய‌ பதிவுகளையும் பட்டியலிட்டிருந்தேன். ஆனால் தமிழ்மணி தரப்பிலிருந்து எப்போதும் போலவே இப்போதும் நமக்கு மெளனம்தான் விடையாய் கிடைத்திருக்கிறது, அதே போல "சம்பூகன் கம்யூனிஸ்ட்தான்" என்ற எப்போதும் போலவே பின்னூட்டத்தில் பல பெயர்களில் முத்[...]தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணியின் இரண்டாம் வருகை: வருக வருக என வரவேற்கிறேன்...

2008-05-03T05:19:42.994-07:00

தமிழ்மணி என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு தமிழர்களுக்கு எதிராகவும், முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கோடும் பார்ப்பனமணி கும்பல் எழுதிவந்ததும் அதற்கு எதிராக சம்பூகனில் பல பதிவுகள் எழுதப்பட்டு தமிழ்மணி கும்பலுக்கு கேள்வி எழுப்பப்பட்டதும் பலரும் அறிந்த விசயங்கள்தான், நாம் கேட்ட எந்த கேள்விக்கும் வாயே திறக்காத பார்ப்பனமணி கும்பல் திடீரென ஒருநாள் காணமல் போனது... பதிலளிக்கப்படாத நம்முடைய கேள்விகள் நிராதரவாய் நிற்கிறதே என்று நானும் வருந்திக் கொண்டிருந்தேன்.. அந்த வருத்தங்களை போக்கும் வகையில் மீண்டும் பிரசண்ணமாகியிருக்கிறார் திருவாளர் தமிழ்மணி, உண்மையிலேயே எனது மனம் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடுகிறது, இந்த முறையாவது நம்முடைய கேள்விகளூக்கும், மறுப்புகளுக்கும் தமிழ்மணி தரப்பிலிருந்து விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன், அந்த நம்பிக்கையை மூடநம்பிக்கையாய் மாற்றிவிடாமல் தமிழ்மணியை நான் முன்னர் அம்பலப்படுத்தி எழுதிய பதிவுகளுக்கு மறுப்பு எழுதி உதவ வேண்டும் என்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அவருக்கு நினைவுபடுத்தும் வகையில் தமிழ்மணியை விமர்சித்து நம்மால் எழுதப்பட்ட பதிவின் சுட்டிகளையும் கீழே தருகிறேன்.

1. கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி
2. தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....
3. தமிழ்மணி’ கும்பலில் RSS இந்துமதவெறி பாசிசவாதிகள் - கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை.
4. கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...
5. முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்
6. ‘ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?
7. ஒரு பார்ப்ப‌ன‌ சொறிநாய்க்கு க‌லைஞ‌ர் மீது வ‌ந்த‌ திடீர் அபிமானம்!!
8. இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன?இராமதாஸ்-திருமா இணைவினால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைத்தது என்ன?

2008-02-26T17:04:40.621-08:00

சாதிய‌ வ‌ர்ணாசிர‌ம‌ அடுக்கில் ம‌க்க‌ளை ஒருவர் மேல் ஒருவராக‌ க‌ட்ட‌மைத்து ஆக உயர்ந்த இடத்தில் இருந்து கொண்டு ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ம‌றுக்கக் கூடிய‌து 'பார்ப்ப‌னீயம்' என்னும் அருவெறுப்பான ஜனநாயக விரோத கொடுங்கோண்மை த‌த்துவ‌ம்.இப்ப‌டிப்ப‌ட்ட ஜனநாயக விரோத‌ பார்ப்ப‌னீய‌ இந்துத்துவ‌ க‌ருத்துக்க‌ள் த‌மிழ்ம‌ணியின் த‌ள‌த்தில் விர‌விக் கிட‌ப்ப‌தைதான் சில‌ வார‌ங்க‌ளுக்கு முன்பாக‌ எடுத்துக்காட்டி ஜ‌ன‌நாய‌க‌ம் ப‌ற்றி வாய்கிழிய‌ பேசும் தமிழ்மணியின் இல‌ட்ச‌ண‌த்தை நாம் திரைகிழித்துக்காட்டினோம், அதை ப‌ற்றி இதுவரை எதுவும் பேசாமல‌ க‌முக்க‌மாக‌ இருந்து வரும் த‌மிழ்மணி த‌ற்பொழுது ஒரு ப‌திவை போட்டிருக்கிறார். அதில், தலித் மக்களும் வன்னியர் சாதியினரும் மோதிக் கொள்ள வேண்டும் என்று கம்யூனிஸ்ட்கள் விரும்புவதாகவும் அதற்கு எதிராக தான் "த‌லித் வ‌ன்னிய‌ர்" ஒற்றுமையை வ‌லியுறுத்துவதாகவும் ஒரு ச‌மாதான‌ தூதுவ‌ன் போல‌ புது 'கெட்டெப்'பை போட்டிருக்கிறார் தமிழ்மணி.,"சிதம்பரம், ஸ்டாலின், மருத்துவர் அய்யா, தொல் திருமாவளவன், சரத்குமார், விஜயகாந்த், ஜெயலலிதா ஆகியோரும் சிறந்த மக்கள் தலைவர்களே". என்ப‌தான‌ காமெடியும் வ‌க்கிர‌மும் க‌ல‌ந்த‌ ந‌ம் காதில் பூ சுற்றும் க‌ருத்துக்க‌ள‌ட‌ங்கிய‌ அப்ப‌திவு, எப்போதும் போல த‌மிழ்ம‌ணியின் ஜ‌ன‌நாய‌க‌ விரோத‌ முக‌த்தை தெளிவாக‌வே வெளிக்காட்டுகிற‌து.//கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களும் வன்னியர்களும் ஒரே வளங்களுக்கு போராடுபவர்கள் என்பதாலும், வன்னியர்களது பொருளாதார நிலைமைக்கும் தாழ்த்தப்பட்டவர்களது பொருளாதார நிலைக்கும் அதிக வேறுபாடு இல்லையென்றாலும், வன்னியர்கள் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று பரவாயில்லை என்ற நிலையிலேயே இருக்கிறார்கள் என்பது[...]'இந்து' நாட்டிற்கு ஆப்படித்த கம்யூனிஸ்ட்களை வருக வருக என வரவேற்கிறேன்.

2008-02-18T00:35:01.586-08:00

"உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா" என்ற கதையாகிவிட்டது இந்துமதவெறியர்களின் நிலைமை, அவர்களது அகண்ட பாரத கனவினை அடிக்கடி கலைத்துக்கொண்டிருக்கும் காஷ்மீரையும், வடகிழக்கு மாகாணங்களையும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் சதி, தூண்டுதல் என்று புளுகி வந்த இந்துமதவெறியர்கள், அமெரிகாவின் காலை பிடித்தாவது அகண்ட பாரதத்தை அமைத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தார்கள், இந்த நிலையில்தான் உலகின் ஒரே இந்து நாடு என்று சொல்லப்பட்ட நேபாளத்திற்கு ஆப்பு அடித்திருக்கிறார்கள் அங்கிருக்கும் கம்யூனிஸ்ட்கள்.காஞ்சிமடத்து காமக்கேடி ஜெயேந்திரன் தனது கையில் வைத்திருக்கும் தண்டத்தை போட்டுவிட்டு ஒரு தமிழ் நடிகையை தள்ளிக் கொண்டு போய் உல்லாசமாய் இருக்கவும், சங்கர்ராமன் என்ற பார்ப்பனரை போட்டுத்தள்ளிவிட்டு போய் பதுங்கிக் கொள்ளவும் தனது பாதுகாப்புக்கு உகந்ததாக‌ அவன் தேர்ந்தெடுத்த இடம் இந்து நாடான‌ நேபாளம், அந்த நாட்டு மன்னனின் வீட்டு விழாக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் ஆரிய இந்துமத வெறியர்கள் சென்றுவருவது கூட வாடிக்கையான ஒரு நிகழ்வு. அந்த அளவுக்கு மோசடி பேர்வழிகளுக்கும், கிரிமினல்களுக்கும் சொர்க்கபுரியாய் அமைந்திருந்தது நேபாளம்.,மூச்சுக்கு முந்நூறு தடவை "இந்து நாடு" என்று ஆரிய வெறியர்கள் இறுமாந்திருந்த‌ நேபாளத்தை மதசார்ப்பற்ற குடியரசாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து போராடிய மாவோயிஸ்ட்கள் அங்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள், இனி அந்த நாடு இந்து நாடாக நிலைத்திருக்க முடியாது என்ற நிலை அங்கு ஏற்பட்டிருக்கிறது முன்பே கூறியது போல “உள்ளதும் போச்சுடா நொள்ளை கண்ணா” என்ற கதையாகிவிட்டது, இந்து ராஷ்டிர கனவு கண்டு வந்த கும்பலின் நிலை.,இனி இங்கு ஏதாவது சில்மிஷ வேலை செய்து விட்டு ஜெயேந்திர[...]ஒரு பார்ப்ப‌ன‌ சொறிநாய்க்கு க‌லைஞ‌ர் மீது வ‌ந்த‌ திடீர் அபிமானம்!!

2008-02-12T18:06:37.183-08:00

பெரியாரிய‌, திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளுக்கும், க‌ம்யூனிச‌ ப‌திவ‌ர்க‌ளுக்கும் இடையில் சிண்டு முடியும் நோக்கோடு இய‌ங்கி வ‌ந்த 'பார்ப்ப‌ன‌'ம‌ணி முழுமையாக‌ அம்ப‌ல‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தும், அவ‌ரை குற்ற‌ம்சாட்டி நாம் எழுப்பிய‌ கேள்விக‌ளுக்கு இதுவரை அவர் விள‌க்கமோ, ப‌திலோ அளிக்காம‌ல் க‌முக்க‌மாக‌ இருந்து வ‌ருவ‌தும் நீங்க‌ள் அனைவ‌ரும் அறிந்த‌துதான்.

'இவ‌ருக்கு கேள்வி, அவ‌ருக்கு கேள்வி' என்று விக்கிபீடியாவை கையில் வைத்துக்கொண்டு உல‌க‌ அறிஞ‌ர் போல மொக்கை போட்டுக் கொண்டிருந்தவர்தான் இந்த தமிழ்மணியாகிய திருவாளர் மொக்கைமணி மற்றவர்களையெல்லாம் கேள்வி கேட்டு சவடால் அடித்தவர் தன்னை பற்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாக கள்ள‌ மெளனம் சாதித்துக்கொண்டிருக்கிறார்., அதற்கு பின்பு மூன்று பதிவுகள் போட்டதோடு, நம்மிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறிவிட்டார் அதாவது அது ஒரு இந்துத்துவ கும்பல் என்று நாம் கூறியதை மெளனமாக ஏற்றுக் கொண்டுவிட்டார்.

இருப்பினும் "பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது" என்று கூறுவார்களே அது போல சதி செய்தே பழகிப்போன 'பார்ப்பன'மணியின் பார்ப்பன மூளை இப்பொழுது மீண்டும் கலைஞருக்கு வக்காலத்து வாங்குவது போல் பதிவு போட்டிருக்கிறது, அத்தோடு சம்பூகனிடமிருந்து கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான‌ ஆத்திரமான பதிவை எதிர்பார்க்கிறேன் என்றும் ஒரு பின்னூட்டத்திலும் அது கூறியிருக்கிற‌து.

ஆக‌ இதுதான் அவ‌ர‌து நோக்கம், அதாவ‌து க‌லைஞ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ பேச‌ வேண்டுமென்ப‌த‌ற்காக அவர் இப்ப‌திவை போட‌வில்லை, க‌லைஞ‌ரை விம‌ர்சிக்கும் க‌ம்யூனிஸ்ட்க‌ளை சுட்டிக்காட்டி "போய் அவனை தாக்கு" என்று திராவிட பதிவர்களை தூண்டிவிடுவது, இந்த விசயத்தில் மோதிக்கொள்ளூம் இருவரையும் நிரந்தர எதிரிகளாக மாற்றுவது, முற்போக்கு முகாமை பலவீனப்படுத்துவது இதுதான் 'பார்ப்பன'மணியின் நோக்கம். இதனை நான் சொல்வதைகாட்டிலும் தமிழ்மணியின் கொள்கைசால் நண்பரான‌ 'கால்கரி சிவா' கூறியதை இங்கு எடுத்துக்காட்டினால் இன்னும் சிறப்பாக இருக்கும்..

கால்கரி சிவா said...
எப்பிடியோ கருநாநிதியை கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக
திருப்பிவிட்டீர்கள்?
ஐயா தாங்கள் சதுரங்கத்தில் புலியாக இருப்பீர்கள் என
நினைக்கிறேன் சரியா?
சரியான அரசியல்வாதி ஐயா தாங்கள்
.(பதிவு இங்கே)

"த‌லைவர் க‌லைஞர்" என்று எழுதும் த‌மிழ்ம‌ணியின் உள்ள‌க்கிட‌க்கையை இந்த‌ பின்னூட்ட‌ம் தெளிவுற‌ எடுத்துக்காட்டுகிற‌து. இத‌னை நான் முன்பே இந்த‌ ப‌திவில் எழுதியிருக்கிறேன்., இதுதான் தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் பார்ப்பன வெறிநாயின் திட்டம்.

நமது பதிவுகள் வருவதற்கு முன்பு நமது திராவிட தோழர்கள் கூட தமிழ்மணியை நம்பிக்கொண்டிருந்த வேளையில், தமிழ்மணி கலைஞரை ஆதரிப்பது போல் எழுதுவது அவரை கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக நிறுத்துவதற்குத்தான், என்று பார்ப்பன இந்துமதவெறி ஆதரவாளரான 'கால்கரி சிவாவுக்கு' தெரிந்திருப்பது எப்படி, என்பதுதான் என‌க்கு விய‌ப்பையும், ச‌ந்தேக‌த்தையும் கொடுக்கிற‌து., போத‌க்குறைக்கு இப்போது த‌மிழ்மணிக்கு பின்னூட்ட‌ம் பாலாவும் த‌ன‌து ஆத‌ர‌வை தெரிவித்திருக்கிறார், எப்ப‌டியோ 'இன‌ம் இன‌த்தோடு சேர்ந்தால் ச‌ரி'.என்ன எழுதுகிறோம் என்று தெரியாமலே எழுதும் கிறிஸ்தவ முக்காடு போட்ட இந்துத்துவ கும்பல்..

2008-02-10T23:24:30.715-08:00

பார்ப்ப‌ன‌ இந்துத்துவ‌ கும்ப‌ல்க‌ள் முற்போக்காள‌ர்க‌ள், சிறுபாண்மைய‌ர்க‌ள் மத்தியில் மோத‌லை ஏற்ப‌டுத்த‌ வேண்டும் என்ற திட்ட‌மிட்ட‌ அணுகுமுறையோடு த‌மிழ்ம‌ண‌த்தில் நுழைந்திருக்கிற‌து, அத‌ற்கேற்ப‌ ப‌ல்வேறு பெய‌ர்க‌ளில் த‌ள‌ம் ஆர‌ம்பித்திருக்கும் அக்கும்ப‌ல் தொட‌ர்ந்து மோதலை ஏற்ப‌டுத்துகிற வகையில் பதிவிட்டு வருவதோடு, சிறுபாண்மைய‌ர் பெய‌ரில் பெரியாரை வ‌சைபாடுவது போன்ற‌ வேலைகளையும் செய்து வ‌ருகிற‌து, இந்த‌ ச‌திதிட்ட‌ம் ப‌ற்றி இத‌ற்கு முன்பே அனானிக‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம் சுட்டிக்காட்டியிருக்கும் நிலையில், த‌மிழ்ம‌ணி என்று பெய‌ரிட்டுக்கொண்டு த‌மிழ‌ர்க‌ளுக்கு எதிராக‌ எழுதி வ‌ந்த ஒரு கும்பலை நானும் என‌து க‌ட‌ந்த‌ ப‌திவுக‌ளில் அம்பலப்படுத்தியிருக்கிறேன், இந்த‌ நிலையில் ஜ‌ன‌நாய‌க‌விரோத‌, ம‌னித‌ விரோத 'பார்ப்ப‌ன‌'ம‌ணிக்கு ஜ‌ன‌நாய‌க‌த்தை ப‌ற்றி பேசும் அருகதை கிடையாது என்று இன்று காலையில் நாம் ப‌திவிட்ட‌ அடுத்த‌ ஒரு ம‌ணி நேர‌த்திற்குள் த‌மிழ்ம‌ண‌த்தில் பெரியாரை வ‌சைபாடி ஒரு ப‌திவு வெளியானது.,முஸ்லீம் என்ற‌ பெய‌ரில் கிறிஸ்த‌வ‌ த‌ள‌ம் ந‌ட‌த்துவ‌தாக‌ காட்டிக்கொள்ளும் ஒரு பார்ப்ப‌ன‌ இந்தும‌த‌வெறி நாய் ஒன்று அதில் பெரியாரை ஒருமையில் எழுதியிருப்ப‌தோடு, தீண்டாமை ஒழிவ‌த‌ற்காக‌ ஒடுக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளை இஸ்லாமுக்கு மாற‌ச் சொன்ன‌ பெரியாரின் க‌ருத்துக்க‌ளை எடுத்துப் போட்டு அத‌னை முன்னுக்கு பின் முரணான‌து, பெண்ண‌டிமைத‌ன‌த்தை எதிர்த்த‌ பெரியார் இஸ்லாமுக்கு மாற‌ச் சொல்ல‌லாமா? என்ற‌வாறெல்லாம் கேள்வி எழுப்பியப‌டி பெரியாரின் மீதும், இஸ்லாத்தின் மீதும் த‌ன‌க்கிருக்கும் வெறுப்பை வெளிப்ப‌டுத்திக் கொண்டிருக்கிறது.,1934ம் வ‌ருட‌த்தில் [...]‘ஜனநாயகம்’, ‘விவாதம்’ பற்றி பேசும் யோக்கியதை தமிழ்மணிக்கு உண்டா?

2008-02-10T19:43:54.920-08:00

தமிழ்மணி என்ற பெயரில் எழுதி வரும் இந்துத்துவ கும்பல் பற்றி ஆதாரங்களோடு நாம் எழுதி வாரம் இரண்டாகிறது, தமிழ்மணி தரப்பிலிருந்து நம்முடைய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்த விளக்கமும் இல்லை, தனது கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்யவில்லை என்றும் அதனால் தமிழில் தட்டச்சு செய்யமுடியவில்லை எனவே அடுத்த வாரம் மறுமொழி அளிக்கிறேன் என்று கூறியிருந்தார் தமிழ்மணி, காட்டமான மறுமொழி வருமென்று நானும் ஆவலோடு காத்திருந்தேன், இப்பொழுது தமிழ்மணியின் கணிப்பொறியில் ஈ கலப்பை வேலை செய்கிறது, அவரும் நமக்கு பதில் சொல்லியிருக்கிறார் என்ன பதில் தெரியுமோ?//சம்பூகனோடு எனக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லை. அவர் உண்மையிலேயே பெரியாரிஸ தொண்டராக இருந்தால், வாழ்த்துகிறேன். அவரது வழியில் அவர் சென்று கம்யூனிஸத்தை கண்டாலும் சரி, அல்லது பெட்டி பூர்ஷ்வாவாக ஆனாலும் சரி, அல்லது "தரகு முதலாளி(lol)" ஆக ஆனாலும் சரி. எனக்கு ஒன்றுமில்லை. அவர் முழுமையான கம்யூனிஸ்டாக ஆகி, அந்த கம்யூனிஸ பிரச்சாரத்தை அவர் செய்யும்போது அவருடன் விவாதிக்க தயாராக இருக்கிறேன்.//இதுதான் அவரது பதில், இப்படியொரு பதிலை தமிழில் தட்டச்சு செய்வதற்காகத்தான் இரண்டு வாரங்களாக காத்திருந்திருக்கிறார் தமிழ்மணி.,என்னோடு அவருக்கு பேசுவதற்கு ஒன்றுமில்லையாம், நான் எனது உழைப்பு நேரத்தை செலவு செய்து, தமிழ்மணி என்ற பெயரில் எழுதும் இந்த பார்ப்பன மதவெறி கும்பல் பற்றியும், பெரியாரியவாதிகளையும், மார்க்சியவாதிகளையும் மோதவிடுவதற்கு இந்த கும்பல் எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், இயல்பில் இந்த கும்பலுக்கு பெரியார் மீதும் அவரது அரசியல் மீதும் இருக்கும் வெறுப்பை பற்றியும் தகுந்த ஆதாரங்களோடு எழுதியிருக்கிறேன், நான் இவ்வளவு குற்றச்ச[...]தமிழ்மணி ஒரு கோமாளியா?: பரபரப்புத் தகவல்கள்!!

2008-02-08T21:57:35.514-08:00

நாம் முன்வைத்த குற்றசாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்காத தமிழ்மணி(எப்போதும் போல 'பார்ப்பன'மணின்னே படிங்க‌), தமிழ்மணத்தில் தனது முகத்திரை முழுவதுமாக கிழிந்து அம்பலப்பட்டு போய்விட்ட நிலையில். கோமாளித்தனமாக ஒரு பகடி செய்து தமிழ்மணத்தில் ஒரு ஜோக்கராகவாவது தன்னை தக்க வைத்துக் கொள்ள முயன்று பார்த்திருக்கிறார். அவருடைய சமீபத்திய பதிவை பார்த்தால் நமக்கு அப்படித்தான் தோன்றுகிறது, ஒரு கணவன் மனைவிக்குள் ஆம்லெட்டுக்காக நடந்த சண்டையை கம்யூனிசத்தோடு சம்பந்தப்படுத்தி ஒரு காமெடி முழக்கத்தோடு அந்தப்பதிவினை போட்டிருக்கிறார் தமிழ்மணி, வழக்கமான கம்யூனிச எதிர்ப்பு ஜல்லிதான் ஆனால் கொஞ்சம் கோமாளித்தனமான முறையில்.,இது போன்ற கோமாளித்தனமான செய‌ல்க‌ள் செய்வது தமிழ்மணிக்கு புதிதல்ல., த‌மிழ்ம‌ணியின் விவாத‌ங்க‌ளே கோமாளித்த‌ன‌மான‌துதான் என்று ச‌மீப‌த்தில் ஒரு ப‌திவில் ப‌டித்தேன், "அவரோடு விவாதம் இவரோடு விவாதம்" என்று சட்டை கிழித்துக்கொள்ளாத குறையாக தமிழ்மணி புரண்டு புரண்டு அரற்றிக் கொண்டிருந்த சமயத்தில் கார்க்கி என்பவர் அந்த பதிவினை எழுதியிருக்கிறார்., மேலும் தமிழ்மணி விவாதம் என்று போட்டிருக்கிற பதிவுகளை சென்று பார்த்து நானும் கூட‌ பல முறை ஏமாந்ததுண்டு ஏனெனில் அங்கு தமிழ்மணியும் அவரது கும்பலை சேர்ந்த ஏனைய பூணூல்களும்தான் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பார்களே தவிர, தலைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த அந்த பதிவர் இருக்க மாட்டார், தனியாக அரற்றிக் கொண்டிருப்பதைதான் தலைப்பில் விவாதம் என்று தமிழ்மணி குறிப்பிட்டிருப்பார்.,சரி இது போன்ற தமிழ்மணியின் கோமாளித்தனமான விவாத(?) முறைகளை நகைச்சுவையோடு விளக்குகிறது இப்பதிவு, இதில் கார்க்கியின் த[...]முற்போக்காளர்களை மோதவிட வாய்ப்பு தேடும் தமிழ்மணி கும்பல்

2008-02-05T21:26:23.520-08:00

தமிழ்மணி(எ)பார்ப்பனமணியின் இந்த சதிச்செயலை கண்டிக்கும் பார்ப்பன எதிர்ப்பாளர்களே, உங்கள் கண்டனங்களை இங்கே பதிவு செய்யுங்கள், "பெரியாரியவாதிகள் மெள‌னம் சாதிக்கிறார்க‌ள்" என்று திமிராக‌ பேசும் த‌மிழ்ம‌ணி கும்ப‌லுக்கு எதிராக‌ உங்க‌ள் குர‌லை உய‌ர்த்துங்க‌ள்...'தமிழ்மணி' என்கிற பெயரில் எழுதிவ‌ரும் பதிவர் கம்யூனிச எதிர்ப்பாளர், ஜனநாயகவாதி என்ற முகமூடியில் எழுதியிருந்த இந்துத்துவ கருத்துக்களையும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாகவும், இணையத்திலிருக்கும் முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் அவர் எழுதியிருந்த கருத்துக்களையும் என்னுடைய கடந்த சில பதிவுகளில் எடுத்துக்காட்டியிருந்தேன், அத்தோடு அவரது பதுவுகளில் “பழைய அனானி” என்கிற பெயரில் எழுதி வந்த இந்துத்துவ வெறியனின் திராவிட வெறுப்பியல் கருத்துக்களையும் கூட எடுத்துக்காட்டியிருந்தேன்.இதுவரை நாம் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாததமிழ்மணி(எ)பார்ப்பனமணி சரிந்து போன தனது இமேஜை தூக்கிநிறுத்துவதற்காகவும், இனியாவது தன்னை இந்துத்துவ எதிர்ப்பாளன் போல காட்டிக் கொண்டு முற்போக்காளர்களை மோதவிடும் சதியில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும், தங்களுக்கு தாங்களே குண்டு வைத்து சதிச் செயலில் ஈடுபட்ட இந்துத்துவவெறிபிடித்த பயங்கரவாதிகளை எதிர்ப்பதாக ஆங்கிலத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார்.,கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகவாதிகள் அல்ல என்று கூறியபடி அவர்களுக்கு எதிராக தொடர்ந்து பதிவிட்டு வந்த தமிழ்மணி, குஜராத்தில் ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களையோ, அவர்களது பாசிச பரிவாரங்களையோ கண்டித்து இதுவரை எழுதியதில்லை என்பது குறிப்பிடதக்கது, வர்ண[...]'ஆர்.எஸ்.எஸ்'காரர்கள் உயிருக்கு ஆபத்து!!!

2008-02-05T03:13:30.637-08:00

நாட்டில் தீவிரவாதமும் வன்முறையும் பெருக்கெடுத்திருக்கும் இன்றைய‌ நிலையில் ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னனிகாரர்களின் உயிருக்கு உத்திரவாதமில்லாத ஆபத்தான‌ நிலை ஏற்பட்டுள்ளது.'ராமன் ஒரு குடிகாரன்' என்று வால்மீகி ராமாயணத்திலிருக்கும் ஒரு உண்மையை கூறிய காரணத்திற்காக ஒரு மாநிலத்தின் முதலமைச்சரையே தலையை எடுப்போம் என்று கூறிய இந்துத்துவவாதிகள் தங்களது உயிருக்கும், தலைக்கும் எந்த சேதாரமும் இல்லாமல் சுதந்திரமாக உலாவிய‌ அமைதி பூங்காவான தமிழ்நாட்டிலேயே இந்த நிலை ஏற்பட்டிருப்பதுதான் குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் 24ம் தேதி தென்காசி ஆர்.எஸ்.எஸ் அலுவலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பும் அதையொட்டிய கைதுகளும் இதனை தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்துகிறது., தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னனி அலுவலகங்கள் இயங்கிவந்தன. கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி இரவு 8.45 மணியளவில் அந்த‌ அலுவ‌ல‌க‌த்தை பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிட்ட நிலையில் அதன் க‌த‌வ‌ருகே இர‌ண்டு பைப் வெடிகுண்டுகள் பெரும்சத்தத்தோடு வெடித்த‌ன‌, இவை சக்தி குறைந்த சாதாரண வெடிகுண்டுகள் என்று அதிகாரிக‌ளே கூறிய‌ போதும் கூட‌ அனைத்து ப‌த்திரிக்கைகளும் அங்கு ச‌க்திவாய்ந்த‌ வெடிகுண்டு வெடித்த‌தாகவே எழுதின, ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடித்த அதே சமயத்தில் தென்காசி பேருந்து நிலையத்தில் தேனி போவதற்காக‌ நின்று கொண்டிருந்த‌ ஆட்டோவிலும் குண்டுவெடித்தது அதில் ஒரு முதிய‌வ‌ர் காய‌ம் அடைந்தார்.யார் இப்ப‌டியெல்லாம் குண்டுவைத்திருப்பார்க‌ள் என்று ம‌க்க‌ளோ, போலீசோ யோசித்து நேர‌த்தை வீண‌டிக்க‌கூடாது என்று அவ‌ர்களது சிர‌ம‌த்த[...]கம்யூனிச எதிர்ப்பு என்ற பெயரில் தொடரும் பார்ப்பன சதி பற்றி...

2008-02-03T21:37:40.664-08:00

எவ்வளவு தூரம் குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் "நான் ரொம்ப உத்தமனாக்கும்" என்று அங்கலாய்த்து கொள்வதற்கும், தனது வழக்கமான புரளி மூட்டைகளை திரும்ப திரும்ப‌ அவிழ்த்து விடுவதற்கும் ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும், இந்த அசட்டு துணிச்சலானது பார்ப்பனர்களுக்கு இயல்பிலேயே கை கூடிய ஒன்று.,இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சட்டமன்றத்திலேயே "நான் ஒரு பாப்பாத்தி" என்று பிரகடனப்படுத்திக் கொண்ட ஜெயலலிதா.,எப்பொழுதுமே ஆரிய கொழுப்பேறி அதிகார போதையில் திரியும் ஜெயலலிதா இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த போதையின் உச்சத்தில் சட்டமன்றத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியிருக்கிறார், வன்முறை வெறியாட்டத்தின் முழு உருவமான ஜெயலலிதா, கலைஞர் அரசில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பேசியிருப்பதோடு, சபை உறுப்பினர்களின் கேள்விகளூக்கெல்லாம் பதிலளிக்க துப்பில்லாமல் மூத்த உறுப்பினரான “இனமானப் பேராசிரியர்” என்று கலைஞரால் புகழப்பட்ட பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டவர்களை தரக்குறைவாக‌ பேசியதோடு அவர் கொடுத்த பதிலடி தாங்கமுடியாமல் சபையை விட்டு வெளிநடப்பும் செய்திருக்கிறார். டான்சி வ‌ழ‌க்கில் நீதிம‌ன்ற‌த்தால் க‌ண்டிக்க‌ப்ப‌ட்டு, அந்த‌ நில‌த்தை திரும்ப‌ த‌ந்துவிடுவ‌தாக‌ க‌த‌றிய‌ இந்த‌ டான்சி ராணி,தி.மு.க‌ அர‌சு ஊழ‌ல் புகாருக்காக‌ முன்பு டிஸ்மிஸ் செய்யப்ப‌ட்ட‌து என்றும் புளுகியிருக்கிறார்.இப்ப‌டி தன்னை ப‌ற்றி எழுப்பும் எந்த‌ கேள்விக‌ளுக்கும் ப‌தில‌ளிக்காம‌ல் "நீ ரொம்ப யோக்கியமா? " என்ற‌ பாணியில் எதிரணியின‌ரை அச‌ட்டுத்துணிச்ச‌லோடு தாக்குவ‌து, பொய்மூட்டைக‌ளை அவிழ்த்துவிடுவ‌து என்ப‌தெல்லாம் எல்ல[...]‘தமிழ்மணி’ கும்பலில் RSS இந்துமதவெறி பாசிசவாதிகள் - கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதை.

2008-01-31T21:25:57.468-08:00

பார்ப்பன எதிர்ப்பாளர்களே, இந்த பதிவை அவசியம் படியுங்கள், உங்களை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளை புரிந்து கொள்ளுங்கள், இந்த சூழ்ச்சிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு முறியடிக்க ஆயத்தமாகுங்கள்.,கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பிய கதையாகிவிட்டது தமிழ்மணி விவகாரம், கம்யூனிச எதிர்ப்பு பதிவுகள் எழுதுவதாய் காட்டிக்கொண்டு தமிழர்க்கு விரோதமாகவும், முற்போக்காளர்களை மோதவிடும் நோக்கத்தோடும் தமிழ்மணி என்ற பெயரில் ஒருவர் எழுதி வந்தார்.இவர் ‘தமிழ்மணி’ என்று பெயர் சூட்டிக்கொண்டிருப்பது நயவஞ்சகமானது என்றும், தமிழ்மணி என்ற பெயருக்கு பின்னால் ஒளிந்து கொண்டு ஜனநாயக விரோத ஆரிய பார்ப்பன ஆதரவு கருத்துக்களையும், தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களையுமே அவர் எழுதி வருகிறார் என்பதையும் நமது கடந்த பதிவுகள் அம்பலப்படுத்தின‌, அதனை தமிழ்மணி வெளிப்படுத்தியிருந்த கருத்துக்களின் வாயிலாகவே நாம் செய்திருந்தோம்.நாம் கேட்டிருந்த கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்கிறேன் என்று தனது பார்ப்பன முகத்தை மீண்டும் வெளிப்படுத்திக் கொண்ட தமிழ்மணி, இதுவரையிலும் நாம் எழுப்பிய விமர்சணங்களுக்கு, குற்றச்சாட்டுகளுக்கு மறுப்போ, விளக்கங்களோ தெரிவிக்காமல் அமைதி காக்கிறார்.(இப்படி எழுதிய பிறகு உங்கள் பதிவை இப்பொழுதுதான் பார்த்தேன் என்று கூறி ஏதாவது எழுதக்கூடும்)இந்த நிலையில் தமிழ்மணியை அம்பலப்படுத்தியதற்காக பல நண்பர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்திருக்கிறார்கள், சிலர் தனிமடல் வாயிலாக “தாங்களும் தமிழ்மணி என்ற பெயரில் வந்த பதிவுகளை கவனித்து வந்ததாகவும்”, “அது உள்நோக்கம் கொண்டது என கருதி வந்ததாகவும[...]தமிழ்மணி (எ) 'இரட்டை நாக்கு அம்பி'யின் பொய்கள், புரட்டுகள்....

2008-01-30T19:54:01.516-08:00

தமிழ் வழிபாட்டுரிமையை வலியுறுத்தி சிதம்பரத்தில் நடத்த பொதுக்கூட்ட அழைப்பிதழை போட்டு தமிழ்மணி சில கேள்விகளை எழுப்பியிருந்தார், அதிலிருந்த கேள்விகள் பொதுவாக நாத்திகர்களை நோக்கி எழுப்பப்பட்டிருந்ததாலும், தமிழ்மணி எழுதிய அப்பதிவு சமஸ்கிருத ஆதரவு பார்ப்பனீய உள்ளடக்கத்தை கொண்டிருந்ததாலும் அதற்கு பதிலளிக்கும் முகமாக இந்த பதிவினை போட்டு, தமிழ்மணியின் கேள்விகளுக்கு பதிலளித்து அதனை விளக்கியிருந்ததோடு, அடிப்படையான சில கேள்விகளையும் நான் எழுப்பியிருந்தேன்.ஒரு நாள் முழுக்க அந்த பதிவு தமிழ்மண திரட்டியின் முகப்பிலேயே இருந்தது, காரணம் பதிவர் சதுக்கபூதம் என்பவர் தமிழ்மணிக்கு ஆதரவாக‌ நம்முடன் தொடர்ச்சியாக வாதிட்டார், கிட்டதிட்ட 80 பதிவர்களுக்கு மேல் அப்பொழுதே அந்த பதிவை படித்திருந்தனர், ஆனால் நாம் யாருக்காக விளக்கங்களையும், கேள்விகளையும் எழுப்பியிருந்தோமோ அந்த தமிழ்மணி இந்த பதிவினை படிக்கவில்லையாம்//நண்பர் சம்புகன்,உங்கள் பதிவுகளை இப்போதுதான் பார்த்தேன். அதனால், பதிவுக்கு பதில் எழுதாததற்கு மன்னிக்கவும். ஆனால், உங்களது இந்த கேள்விகளுக்கான பதில்களையும் ஏற்கெனவே பலர் கேட்டிருக்கின்றனர். அதற்கான பதிலையும் மறுமொழியாக என் பதிவிலேயே எழுதியிருக்கிறேன்.//என்று இப்போது கூறியிருக்கிறார். நாமும் நம்புவோமாக. தமிழ்மணி(எ)’பார்ப்பன’மணிக்கு எப்பொழுதுமே தூரப்பார்வைதான் போல தெரிகிறது, சீனா, ரஷ்யா, கம்போடியா, லாவோஸ், கியூபா, கொரியா, அமெரிக்கா என்று எப்பொழுதும் எல்லை கடந்து துலாவிக்கொண்டிருக்கும் தமிழ்மணி உள்ளூர் பிரச்சணைகளை பற்றியோ அதற்கான தீர்வினை பற்றியோ இதுவரை எழுதியதாக தெரியவி[...]கிழிந்து தொங்கும் தமிழ்மணி (எ) 'பார்ப்பன'மணியின் முகமூடி

2008-01-30T02:38:11.799-08:00

தமிழ்மணி என்ற பெயரில் ஒளிந்து கொண்டு எழுதிய பார்ப்பன சமஸ்கிருதமனியை அம்பலப்படுத்தி இந்த பதிவு நேற்று வெளியானது, ஜனநாயக முகமூடியை அணிந்து கொண்டு கம்யூனிச எதிர்ப்பு என்கிற போர்வையில், தமிழர்களுக்கு எதிராகவும், இணையத்தில் முற்போக்காளர்களூக்கு இடையில் சிண்டு முடியும் நோக்கோடும் எழுதப்பட்டிருந்த தமிழ்மணியின் பதிவினை எடுத்து போட்டு அதில் ஒளிந்திருக்கும் பார்ப்பனீயத்தை அம்பலப்படுத்தியதோடு, பார்ப்பனமணிக்கு சில அடிப்படையான கேள்விகளையும் அந்த பதிவில் எழுப்பியிருந்தேன், கேள்விகளுக்கு பதிலளிக்கமாலும், நாம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மறுக்க வக்கில்லாமலும் ஓடிய தமிழ்மணி என்பவர் தான் உண்மையில் பார்ப்பனமணிதான் என்பதை இப்போது நிரூபித்திருப்பதோடு, குட்டு வெளியாகிவிட்டதே என்ற பதட்டத்தில் என்ன செய்வது என்று அறியாது, அசுரன் என்ற பதிவருக்கு பதில் எழுதும் சாக்கில் தனது சமஸ்கிருத ஆதரவு அடையாளத்தை காட்டியபடி அம்மணமாக நிற்கிறார்.

இது எந்த அளவுக்கு போயிருக்கிறது என்றால், தமிழ்மணியை நேற்று சமஸ்கிருதமணி என்று சுட்டிக்காட்டி நாம் எழுதிய பொழுது, தமிழ்மணிக்கு ஆதரவாக வந்து வாதாடியவர் பதிவர் சதுக்கபூதம் அவர்கள், இவர் தமிழ்மணி எழுதிய கம்யூனிச எதிர்ப்பு பதிவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பின்னூட்டம் போட்டுவந்திருக்கிறார் என்பதோடு தமிழ்மணியின் ஜனநாயக விரோத பார்ப்பனீய முகம் அறியாமல், அவரை ஒரு ஜனநாயகவாதி என்றும் நம்பிவந்திருக்கிறார் என்பதனை அங்கிருக்கும் பதிவுகளை படிப்பவர்கள் பார்க்கலாம், தமிழ்மணியின் ஜனநாயக முகத்திரை கிழிந்து இன்று உண்மை முகம் அம்பலமாகியிருக்கும் வேளையில் இப்பொழுது அவர் அங்கே போட்டிருக்கும் பின்னூட்டத்தை பாருங்கள்

சதுக்க பூதம் said...
//அதே போல, பண்டைய இந்தியாவின் தொடர்பு மொழியாக இருந்தது சமஸ்கிருதம். இன்று
தொடர்பு மொழியாக இருப்பது ஆங்கிலம். இரண்டின் மீது வெறுப்பு கொண்டிருப்பவர்களும்
மக்கள் விரோதிகளே.//
நீங்கள் கூறுவது தமிழ் நாட்டு கோவில் பற்றி.சமஸ்கிருதம்
எந்த காலத்தில் தமிழ் நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தது?இந்த பதிவின் மூலம்
உங்களுடைய உண்மையான கம்யூனிச எதிர்ப்பின் அடிப்படை காரணம் சந்தேகத்தை
ஏற்படுத்துகிறது

தமிழ்மணியின் உண்மை அடையாளத்தை உணர்ந்து கொண்ட பதிவர் சதுக்க பூதத்திற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு பார்ப்பனர்களின் இந்த நாலாந்தர உத்தியை அனைத்து பதிவர்களூம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுகொள்கிறேன்.

குறிப்பு: நேற்று நாம் எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமலும், மறுக்காமலும் அடுத்த பதிவை போட்டிருக்கிறார் பார்ப்பனமணி, ஆனால் இப்போதைய பதிவு துலக்கமாகவே அவரை அம்பலப்படுத்தியிருக்கிறது, தற்சமயம் நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அதை பற்றி எழுத முடியாத நிலையில் இருக்கிறேன், ஆனால் நிச்சயம் நாளை எழுதுகிறேன், நாம் இப்படியெல்லாம் எழுதுகின்ற நிலையில், இனி முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை உணர்ந்து எதையாவது சொல்லி வைப்போம் என்கிற நோக்கில் பார்ப்பனமணி நமக்கு பதிலளிப்பார் என்று நினைக்கிறேன், பதிவர் சதுக்கபூதத்தை தாஜா செய்யும் வேலையிலும் இறங்கக்கூடும். அல்லது நேற்றே நான் கூறியபடி எனக்கு கம்யூனிச லேபிள் ஒட்டி தனது வழக்கமான சங்கதிகளை அவிழ்த்துவிடுவார் என்று நினைக்கிறேன், பார்க்கலாம்.தமிழர்களின் வழிபாட்டுரிமையை மறுக்கும் தமிழ்மணி(?)க்கு சம்பூகனின் கேள்விகள்!!

2008-01-28T19:37:42.630-08:00

மனித உரிமை பாதுகாப்பு மையம் என்ற அமைப்பின் தலைமையில் சிதம்பரம் கோவிலில் தமிழில் வழிபடுகின்ற‌ உரிமை வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழர்கள் போடும் பிச்சையில் வயிறு வளர்த்துக்கொண்டு தமிழில் அர்ச்சிப்பதை தடுக்கும் திருட்டு தீட்சிதர்களிடமிருந்து கோவிலை பிடுங்கி தமிழக அரசே நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியும் இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது, இந்த பொதுகூட்டத்தில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளோடு மக்கள் கலை இலக்கிய கழகம் என்றவொரு அமைப்பும் கலந்து கொண்டிருக்கிறது, அதன் பொது செயலாளர் மருதையன் என்பவரும், பேராசிரியர் பெரியார்தாசனும் இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றியிருக்கின்றனர்., இந்த‌ நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்ற‌ அமைப்புக‌ளில் ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌ கழ‌க‌ம் என்ற அமைப்பினை க‌ம்யூனிச‌ அமைப்பு என்று கூறுகிறார்க‌ள். தமிழர்களின் வழிபாட்டுரிமைக்காகவும், ஆரிய பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்குதற்காகவும் கட்சி வேறுபாடுகளை தாண்டி மார்க்சியவாதிகளும், பெரியாரியவாதிகளும், அம்பேத்கரியவாதிகளும் மற்ற முற்போக்கு சக்திகளும் ஓங்கி குரல் கொடுப்பதும், ஒன்றினைந்து ஒரே மேடையில் கலந்து கொள்வதும், கைகோர்த்து போராடுவதும், உண்மையில் தமிழர்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய ஒரு நிகழ்வு.இது ஒருபுறமிருக்க இங்கு வலைப்பூக்களில் தமிழ்மணி என்ற பெயரில் ஒருவர் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக எழுதிவருவதாக தெரிகிறது, அப்படியே அவர் எழுதிக்கொண்டிருந்திருந்தால் நாம் இந்த பதிவ[...]பார்ப்பன கட்சிகளாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள்!!

2008-01-03T17:58:04.508-08:00

"பணக்காரனை ஒழிப்பதைவிட பிறவி அந்தஸ்துக்காரனை ஒழிப்பது அவசியம்" என்ற தலைப்பில் அய்யா பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கம்.நம் நாட்டில் இன்றைய ஜனநாயக ஆட்சி என்பது, பொருளாதார சமத்துவம் என்னும் பேரால் உச்ச வரம்பு என்னும் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்து கொண்டு, ஒவ்வொருவனுக்கும் பூமி இவ்வளவுதான் வைத்துக் கொள்ள வேண்டும், ரொக்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும், தங்கம் இவ்வளவுதான் இருக்க வேண்டும் என்று சட்டம் செய்து கொண்டு, அந்த அளவுக்கு மேற்பட்ட சொத்துகளைப் பறிமுதல் செய்து, இல்லாதவர்களுக்குக் கொடுக்கப் போவதாகத் திட்டமிட்டிருக்கிறது.இன்றைய சமுதாய அமைப்பு நிலையில் இதற்கென்ன அவ்வளவு அவசியம், அவசரம் வந்தது? அந்தஸ்தும், சுகவாச வாழ்வும் பணத்தினால் மாத்திரம் இல்லையே! அப்படி ஏதாவது இருந்தாலும் அது நிரந்தரமானது அல்லவே!இன்றைக்குப் பணக்காரனாக இருப்பவன் யாரும், அவனிடம் இருந்து பிடுங்கிக் கொள்ளாமலே நாளைக்கு ஏழையாக இல்லாதவனாக ஆகிவிடுகின்றான். அதுபோலவே, இன்று ஏழையாக இருப்பவன் நாளைக்குப் பணக்காரனாக ஆகிவிடுகின்றான்.இதைவிட மோசமான பேத நிலைமை மக்களை வெட்கமும் வேதனையும் படத்தக்க நிலைமை; முட்டாள்தனமாகவும் மானங்கெட்டத்தனமாகவும்; அளவுக்கு அடங்காத அந்தஸ்தும் தேவையற்றதாக சுகபோகமும் உடைய நிலைமை, யாருக்கும் பயனற்ற தன்மையான சொத்து, செல்வம் உள்ள தன்மை ஏராளமாக ஒவ்வொரு மனிதனையும் பற்றிய தன்மை பல நம் நாட்டில் இருக்கின்றனவே! அவை பற்றி எந்த அரசாங்கம், எந்த ஆட்சி, எந்த சட்டசபை இதுவரை என்ன செய்தது? இதை மாற்றுவதை ஒழிப்பதை விடவா பணக்காரனை ஒழிப்பது இன்றைக்கு அவசரமாக ஆகிவிட்டத[...]பதிலடி

2008-01-03T17:39:30.725-08:00

பெரியாரின் பல கருத்துகளில் பிடிக்-காததை விட்டு விட்டு பிடித்ததை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த் பேசியிருக்கிறாரே? என்ற கேள்விக்கு விருந்து வைக்கப்பட்டிருக்கும் மேஜையில், விசக்கிருமிகள் பரவியிருந்தால் எதை எடுத்தாலும் ஆபத்துதானே! அந்த மாதிரி பிடித்த விசயம், வேறு பல விருந்துகளில் கிடைப்பவையே. அங்கே அவற்றை எடுத்துக் கொள்வது, ஆபத்தைத் தவிர்க்கிற வழி என்று வழக்கமான தனது விசமத்தனமான பதிலை 7.11.2007 துக்ளக் இதழில் வழங்கியிருக்கிறார் திருவாளர் சோ.ஆண்டாண்டு காலமாக எம் மக்களையும், நாட்டையும் பொய்களாலும், புரட்டுகளாலும் பக்தி போதை ஏற்றி, அறிவைக் கெடுத்து, சுரண்டிக் கொழுத்த கூட்டம் அப்படி எழுதுவதில் ஆச்சரியம் இல்லை.பார்ப்பன பனியாக்களால் விளைந்த கேடு-களை, அவலங்களை அனுபவித்து உணர்ந்த-வர்கள் கூட, ஆற்றாமையால் வாய் மூடிக் கிடந்த கால கட்டத்தில், அத்தனை அக்கிரமங்-களையும் துணிந்து நின்று தோலுரித்துக் காட்டிய ஈரோடு எரிமலையின், ஒப்பற்ற போராளியின் விருந்தில் விசக்கிருமிகள் பரவியிருந்ததாக, இந்த விசக்கிருமி சொல்வது ஒன்றும் புதிதல்ல. புரிந்துகொள்ளக்கூடியதே! நச்சரவங்களின் நடமாட்டம் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டே மேற்கண்ட கேள்வி பதில். பெரியார் வைக்கும் விருந்தில் விசக்கிருமி-கள் என்கிற சோ, அவருடைய துக்ளக்கில் வைக்கும் விருந்தையும் பார்ப்போம்.அதே (7.11.2007) இதழில் இரு வேறு பக்கங்களில் மக்களைக் குழப்புவதிலும், மூடக் குட்டையில் மூழ்கடிப்பதிலும் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்[...]வர்க்கத்தைக் கூறுபோடும் சாதி- தஞ்சை மாநாட்டில் வழக்கறிஞர் பானுமதி உரை!!

2008-01-03T17:25:34.931-08:00

“உலக நாடுகளில் உள்ளது தொழில் பிரிவினைதான்; இந்த நாட்டில்தான் தொழிலாளர் பிரிவினை இருக்கிறது” என்று வழக்கறிஞர் பானுமதி மே.19 இல் தஞ்சையில் கழகம் நடத்திய சாதி ஒழிப்பு மாநாட்டில் குறிப்பிட்டார். அவரது உரை: அன்றைக்கு சம்பூகனை கொலை செய்தான் இராமன். இன்றைக்கு பூணூலை அறுத்ததற்காக நமது தோழர்களை கைது செய்திருக்கிறது இந்த அரசாங்கம். இதற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்தால் இந்த சாதீய அமைப்பிற்கு பார்ப்பனீயத் திற்கு எவ்வளவு முக்கியத்துவம் இருந்திருந்தால் இப்படி தேசப் பாதுகாப்பு சட்டம் என்பது பாயும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாதியை ஒழிப்பது என்பது ஏதோ சாதாரண விசயம் இல்லைங்க. பல பேர் சொல்லுவாங்க சாதி எல்லாம் நில பிரபுத்துவ காலத்து மிச்ச சொச்சங்கள். அந்த நில பிரபுத்துவ காலம் முடிந்தாகிவிட்டது. பண்ணை அடிமை முறை முடிந்தாகிவிட்டது. எங்கங்க இருக்கு சாதி? என்று கேட்பவர்களும் உண்டு. எல்லா நாட்டி லும் நிலபிரபுத்துவ ஆட்சி ஒழிந்தது. முதலாளித்துவ ஆட்சி மலர்ந்தது. சாதிகள் ஒழிந்துவிட்டன என்று கூறினார்கள். அதை பொய் என்கிறார் அம்பேத்கர். சாதியையும் தொழிலோடு ஒப்பிட்டு, அது ஒரு தொழில் முறை. தொழில் பிரிவு என்பது உலகத்தில் எல்லா இடங்களிலும் இருந்திருக்கிறது, இந்தியாவில் மட்டும் அல்ல என்று கூறி சாதியத்திற்கு ஒரு சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார்கள். அதைய[...]