Subscribe: துளசிதளம்
http://thulasidhalam.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade A rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: துளசிதளம்

துளசிதளம்நினைத்தது, கண்டது, கேட்டது என்று எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன்:-)Updated: 2017-12-17T00:54:32.299+13:00

 காணாமப்போன ஜோடி .... (இந்திய மண்ணில் பயணம் 89)

2017-12-15T12:54:43.229+13:00

வழக்கத்தைவிடக் கொஞ்சம் சீக்கிரமா எழுந்ததால்  முதல் வேலையா பேக்கிங் முடிச்சு, குளிச்சு  ரெடி ஆனதும்  கீழே ரெஸ்ட்டாரண்டில்  காலை உணவுக்குப் போனோம்.  வழக்கமான இட்லி வடையுடன், கொஞ்சம் வெண்பொங்கலும் கிச்சடியும் எனக்கு!எட்டரைக்கு ஸ்தலம் விட்டாச்.  ஆனாலும் அடுத்த ரெண்டாம் நிமிட் ஒரு ஸ்டாப்பிங் போடச் சொன்னேன்.  நம்மவருக்கு வரதராஜர் தரிசனம் கிடைக்கட்டுமே!   பத்து நிமிட்டில்  ஸேவை சாதிச்சு, எனக்கொரு தாமரை மொட்டும், நம்மவருக்குக் கொஞ்சம் துளசியும் பிரஸாதமாக் கொடுத்தார்  பெருமாள்!அடுத்த ஸ்டாப் நமக்குக் காஞ்சிபுரம்தான்!  இந்த வரதரை ஸேவிச்ச கையோடு  காஞ்சி வரதரையும் ஸேவிக்கக் கிடைச்சுருக்கு. போற வழியில்  இருந்த   ரெண்டு ஆஞ்சி, ஒரு குருபகவான் கோவில் !கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவா போறோமுன்னதுக்கு,   அது கொஞ்சம்  அதிக தூரம்.  170 கிமீ வரும். நாம் உத்தரமேரூர் வழியாப் போகலாமேன்னார் நம்மவர். ஹைய்யான்னு மனசு துள்ளுச்சு :-)இங்கே  போனால் ஒன்பது பெருமாளை ஒரே இடத்தில் தரிசனம் செஞ்சுக்கலாம்!முதல்முறை போனது   இங்கே!அடுத்த முறையும் லபிச்சது.  விவரம் இங்கே :-)இப்போ மூணாவது முறை!  ஏற்கெனவே  ரெண்டு முறை எழுதுனதால்.... இப்பவும் வேணாமேன்னு தோணுச்சு.   முதலில்  கோபுரவாசலைப் பார்த்தபடி இருக்கும் ஆஞ்சியையும், அப்புறம் மூலவரையும் ஸேவிச்சுட்டு, பட்டர்ஸ்வாமிகளிடம் அனுமதி வாங்கிக்கிட்டு  மேலே மாடிக்குப் போய் கொஞ்சம் க்ளிக்ஸ்.எனக்குப் பிடிச்ச கோவில்களில் இதுவும் ஒன்னு!  அழகான மூலவர்கள்!  நாராயணா.... நாராயணா.... நவநாராயணா.....அடுத்தாப்லே சிவன் கோவில் ஒன்னு இருக்கு. அங்கே போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்து  கீழே வரும்போது  சட்னு மனசில் இருந்து சிவன் ஒளிஞ்சுக்கிட்டார்.  வேளை வரலை. அவர் [...]பாண்டியில் பதிவர் சந்திப்பு ! (இந்திய மண்ணில் பயணம் 88)

2017-12-13T13:07:07.913+13:00

மரத்தாண்டை ஆல்ட்டோ நிக்குதான்னு பாருங்க......  நம்ம சீனிவாசனிடம் சொல்லிக்கிட்டு இருந்தேன்.   என் கண்ணும் தேடுச்சுன்னாலும்....  எட்டரை மணி இருட்டுலே என்னாத்தன்னு  கண்டேன்.  நம்ம சீனிவாசன் தொழில்முறை ஓட்டுனர் என்பதால் அவர் கண்ணு கண்டு பிடிச்சுறாதா என்ன?நண்பர் வீட்டுக்குச் சரியான பாதையில்தான் போறோமான்னு தெரிஞ்சுக்க அவரை செல்லில் கூப்டு விசாரிச்சதில்தான்  'அந்த அடையாளம்' சொன்னார் :-)வண்டி கண்ணில் படுமுன்னேயே   மனிதர் கண்ணில் பட்டுட்டார். முதல்முறை நேரில் சந்திக்கப்போறோம். ஆனால் முகம் ரொம்பவே பரிச்சயமா இருக்கே!  எல்லாம்  ஃபேஸ்புக் காமிக்கும் ஃபேஸ் காரணம் :-)வணக்கம், ஹலோ , ஹை எல்லாம் சொல்லிட்டு வீட்டுக்குள்ளே கூப்ட்டுப் போறார்.  அவருடைய தங்க்ஸ்  கண்ணும், முகமும்  சிரிக்க  நம்மை 'வாங்க'ன்னாங்க.சிலரைப் பார்த்ததும் மனசுக்குச் சட்னு பிடிச்சுப்போகுது பாருங்க.... இவுங்க அந்த வகை!  எனக்குப் பொதுவா கண்ணைப் பார்த்துப்பேசும் பழக்கம் இருப்பதால்....  சிரிக்கும் கண்கள்  கிட்டத்துலே கூப்புட்டுப் போயிரும் :-)நண்பர், பல்துறை மன்னன்!  எழுத்தாளர், பாடகர்,  இசை அமைப்பாளர்,  இப்படி இருந்தாலும்.... ஒரு பெரிய  நிறுவனத்தில் உயர் அதிகாரியாக(வும்) இருக்கார்.  நாம் சந்திக்கும் சமயம்,  (ஆஃபீஸ்)வேலையில் இருந்து  ஓய்வுன்னு  ஆகி இருக்கார்!   இதில்லாம   பல நிறுவனங்கள்,  அவுங்க  ஸ்டாஃப் மேனேஜ்மென்ட் பயிற்சிக்கு இவரைக் கூப்பிட்டு  நடத்திக்கறாங்க.   ரொம்பவே பேத்துவாரோன்னு   வலைப்பதிவு பெயரை வச்சு நினைக்கப்டாது கேட்டோ!  அவருடைய இதயம்தான்  பேத்துமாம் :-)  இதுதான்  அவருடைய வலைப்பதிவின் பெயர்.  புது வாசகர்கள் எட்டிப் பார்க்கலாம் !  ஏமாறமாட்டீர்கள் !!! சுயமுன்னேற்றக் கட்டுரைகளின[...]பாதிதான் பார்த்தேன். இப்ப மீதியையும்.... (இந்திய மண்ணில் பயணம் 87)

2017-12-11T12:29:11.852+13:00

முதல்வேலை முதலில்னு  அடுத்தாப்லே இருக்கும் சத்குருவுக்குப்போய்  நமக்கு காஃபியும் சீனிவாசனுக்கு டீயுமா ஆச்சு. அப்பதான்  சேதி வருது ஸ்பெஷல் வடை இருக்காம்.   வடைன்னா  விடமுடியுதா?   ப்ச்....  கொண்டு வாங்க....  ஆச்சு :-)அப்பதான் நம்மவர் சொல்றார், இவருக்கு இந்தக் கோவில் சமாச்சாரம், போன இடத்தில் கிடைச்சதாம்.  மீட்டிங்கில் சின்னப்பேச்சு :-)முத்தியால்பேட்டை என்ற இடம்.  அட!  இதே பெயரில் நம்ம சிங்காரச் சென்னையில் ஒரு பகுதி இருக்கே!  எங்க அம்மாவின் அம்மம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச இடமாம்!அதிக தூரமில்லை. ஷெண்பகாவில் இருந்து வெறும் 2.7 கிமீதான்னு  கூகுளார் சொல்லிட்டார். இதே மஹாத்மா காந்தி சாலையில்  வடக்கே நேராப்போய் நம்ம  காய்தே மிலத் நூற்றாண்டு வளைவுக்குப் பக்கம்  ரைட் எடுக்கணும்.   மேலே படம்:   வலையில் ஆப்ட்டது அந்தப்பேட்டைக்குள் போய் கொஞ்சம் விசாரிச்சதும் கோவிலுக்கு வழி தெரிஞ்சது. இங்கே அதுக்குள்ளே இருட்டிப்போச்சு பாருங்க.....   கோபுரம் இருக்கா என்ன?  முன்னால் பந்தல் போட்டுருப்பதால் கண்ணுக்கு ஆப்டலை....வீடு போல இருந்த ஹாலுக்குள் போனால்  தகதகன்னு மின்னும் கொடிமரம், கம்பி கூண்டுக்குள் ....  அந்தாண்டை பெரிய திருவடிக்கான சந்நிதி. இவருக்கும் தகதகன்னு  'தங்கச்சுவர்' !மூலவருக்குத் திரை போட்டுருந்தாங்க. அஞ்சு நிமிஷம் ஆகுமாம்.   அடுத்தாப்லே இருந்த இன்னொரு ஹாலுக்குள் போனால்.... அங்கேயும் திரை!  உற்சவர் எழுந்தருளும் மண்டபமாம்!அங்கே இருந்த படங்களைப் பார்த்தும்,  சுவரில் இருந்த  அஹோபில நரசிம்ஹர்களைப் பற்றிப் போட்டுருந்த தகவல்களைப் படிச்சுக்கிட்டும்  இருந்தப்பதான், இதன் மேல் மூலையில்  பத்து நரசிம்ஹர்களை மேல் சந்நிதியில் தரிசிக்கலாம் னு எழுதி இருப்பதைக் கவனி[...]குருவும் சிஷ்யனும்..... என்று சொல்லலாமா?(இந்திய மண்ணில் பயணம் 86)

2017-12-08T12:59:39.376+13:00

எத்தனை முறை இந்தப் பாண்டிக்கு வந்துருக்கேன்.... ஆனாலும்  இந்த வீட்டுக்கு வர வாய்ச்சதோ?  இன்றைக்கு நல்ல வாய்ப்பு. விடக்கூடாதுன்னு,  நம்ம வரதராஜர் கோவிலில் இருந்து கிளம்புனது  'நம்ம முண்டாசு'அங்கே வசிச்ச வீட்டுக்குத்தான்.ரொம்பக் கிட்டக்க...  அடடா.... தெரியாமல் போச்சே.... ஈஸ்வர தர்மராஜா கோவில் தெரு  முனையில்  இருக்கு வீடு. இப்ப இதை நினைவகமா மாத்தி இருக்காங்க. கூடவே  பாரதியின் எழுத்துகளை ஆராயும் ஆராய்ச்சி மையமாவும்!சுமார் பத்து வருசம் இங்கே குடி இருந்துருக்கார்.  1908 முதல்.......     பிரிட்டிஷ் ஆட்சியைப் பற்றி கடிந்து பேசி, எழுதின்னு இருந்ததுலே  இவரைப் பிடிச்சு சிறையில் அடைக்கப்போற சேதி  தெரிஞ்சதும் புதுச்சேரிக்கு 'எஸ்' ஆனார்.  இங்கே தான் ஃப்ரெஞ்சு அரசாங்கத்தின் ஆட்சியா இருந்துச்சே.  வெவ்வேற மாகாணம். வெவ்வேற    ராஜ்ஜியம்!பாரதியைப் பத்தி நான் சொல்றது சூரியனுக்கே டார்ச் அடிக்கிற மாதிரி!  நம்ம வ.ரா எவ்ளோ சுவாரசியமா எழுதி இருக்கார் பாருங்க.  இந்தச் சுட்டியில் நூல் பிடிச்சுப் போங்க..... கட்டாயம் உங்களுக்கும் பிடிக்கும்!வாசலில்  உயரம் குறைஞ்ச திண்ணை/வராந்தா அமைப்பு தூண்களுடன்!   முன் பக்கம் இருக்கும் சின்ன ஹாலைக் கடந்து உள்ளே போனதும்  குட்டியா  ஒரு முற்றம், சுத்திவர   தூண்களோடு உள் வராந்தா.   முற்றத்தில்  தொட்டியில் இருக்கும்  சில செடிகளோடு நானும்!   சில பெண்கள்  புத்தக பைண்டிங் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.  அவுங்களிடம் படம் எடுக்க அனுமதி  வாங்கினேன்.இனி இது ஒரு படப்பதிவுன்னு  சொல்லிக்கலாம் னு நினைச்சேன். அப்படியும் சொல்ல நாலு சேதி ஆப்ட்டதே :-)நம்ம தில்லக்கேணியில் இருக்கும் பாரதியார் இல்லம் ஏற்கெனவே பார்த்ததால்....  இங்கே பிரமிப்பு[...]வரம் தரும் வரதராஜர் (இந்திய மண்ணில் பயணம் 85 )

2017-12-06T14:07:09.225+13:00

காலையில் சீக்கிரமா தயாராகி ஏழரைக்கெல்லாம் ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போயிட்டோம். வெண்பொங்கல், இட்லி வடை கிடைச்சது. சுமார் ரகம்தான். எனக்கென்னவோ நம்ம லோட்டஸை இந்த   ப்ரேக்ஃபாஸ்ட் விஷயத்தில் யாராலும்  பீட் பண்ணமுடியாதுன்னே தோணும்.கொஞ்சம் அக்கம்பக்கம் க்ளிக் பண்ணிக்கிட்டு, எட்டேகாலுக்கே செக்கவுட் செஞ்சுட்டு, ஷெண்பகாவுக்குக் கிளம்பியாச்சு.  நம்மவரை ஒன்பது மணிக்கு  அங்கே வந்து கூப்பிட்டுப் போவார்  நண்பர்.   எட்டே முக்காலுக்கு  ஷெண்பகாவில் செக்கின் ஆனதும்,   என்னை  பத்திரமா 'ஊர் சுத்த'ச் சொல்லிட்டு  (ஒரு நூறுமுறை)  இவர் கிளம்பிட்டார்.சீனிவாசன் சாப்பிடப்போயிருக்கார். கொஞ்சம் வலை மேயல் ஆச்சு.  அதுக்குள்ளே இன்றைக்கு எங்கெங்கே போகணுமுன்னு  பார்த்து வச்சுக்கிட்டேன்.  ஒரு நண்பரையும் சந்திக்கலாமுன்னு எண்ணம். நேத்து இன்னொரு தோழிக்கு, நான் பாண்டி வந்த விவரம் சொல்லி, சந்திக்க இயலுமான்னு  கேட்டுருந்தேன்.  அவுங்களுக்கு  திடீர்னு உடல்நலக்குறைவு காரணம் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னாங்க.  சீக்கிரம் நலம் பெறட்டும்.அதிதி இருக்கும் இதே சாலையில் ரெண்டு நிமிட் நடையில்  நம்ம வரதராஜர் இருக்கார்.  அங்கே போய் இறங்கினதும், சீனிவாசன் பார்க்கிங் தேடப்போனார். எப்பவும் கவனிச்சுருக்கேன்.... நம்மவர் இல்லாமல் நான் தனியா சுத்தும்போது, சீனிவாசன், ட்ரைவர் என்ற பொறுப்பு ஒரு பக்கம் இருந்தாலும்,  'மேடத்தின் பாதுகாப்புக் காவலராக' அவதாரம் எடுத்துருவார்.  நல்லதுதான்....போக்குவரத்து அதிகமா இருக்கும் மகாத்மா காந்தி சாலையில் இப்படி ஒரு கோவிலா!   அஞ்சடுக்கு ராஜகோபுரம். பார்க்க நல்ல உயரமாவே இருக்கே!கோபுரவாசலில் நுழைஞ்சதும்  பலிபீடம், கொடிமரம், பெரிய திருவட[...]நம்ம லக்ஷ்மியும், அம்மாவின் பக்தையும்(இந்திய மண்ணில் பயணம் 84 )

2017-12-06T14:04:47.590+13:00

ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து கிளம்புன  அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் சிதம்பரம் நகருக்குள்ளே இருந்தோம். வர்ற வழியில் எல்லாம் நல்ல பசுமைதான். விவசாயம் நடக்குது. நெல் போட்டுருக்காங்க.  கிட்டத்தட்ட முப்பத்தியெட்டு கிமீ தூரம். சேத்தியாத்தோப்பு வழிதான்.  சிதம்பரம்  வந்துட்டோமுன்னு  தில்லைகாளியம்மன் எல்லையில் நின்னு சொல்றாங்க!அந்தப்பக்கம்  காளியின் பெரிய சிலைகள் ஒன்னுரெண்டு அங்கங்கே  ......  கண்ணில் படாமப்போக ச்சான்ஸே இல்லையாக்கும்!ஊருக்குள்ளே நுழைஞ்சதும் அலங்கரிச்ச தேர்! உற்சவம்  நேத்துநடந்ததோ, என்னவோ?  அலங்காரம் முழுக்கக்  களையலை இன்னும்....நாம் நேராப்போனது  வாண்டையார் ஹொட்டேல்  மல்டி குஸீன்   ரெஸ்ட்டாரண்டுக்குத்தான்.  நேத்து மாதிரி  லஞ்ச் கிடைக்காமப் போச்சுன்னா? அநேகமா ரெண்ட்டாரண்ட் காலி.  மணி இன்னும் ஒன்னு ஆகலை. ரெண்டு மணிக்குத்தான் கூட்டம் வருமாம்.நம்மவருக்கு ஒருதயிர்சாதம், சீனிவாசனுக்கு ஒரு தாலி மீல்ஸ், எனக்கு ஒரு  ஸ்வீட் லஸ்ஸின்னு பகல் சாப்பாடு முடிஞ்சது.  இங்கே எந்தக் கோவிலுக்கும் போகும் எண்ணம் இல்லை. நேரா பாண்டிச்சேரிதான்.  அங்கேதான் தங்கல்  ரெண்டு நாளைக்கு!கடலூர் வழியா பாண்டிச்சேரி எல்லைக்குள்  நுழைய சரியா ஒருமணி பத்து நிமிட் ஆகி இருந்துச்சு. அறுபத்தியெட்டு கிமீ! அவ்வளவா ட்ராஃபிக் இல்லாத ஹைவே!சாலையைப் பார்த்தபடி நின்னுருந்த  காளியைக் க்ளிக்குமுன் வண்டி பறந்துருச்சு.  விடமுடியாதேன்னு  திரும்பிப்போய் ஒரு க்ளிக் ஆச்சு:-)முதலில் ஹொட்டேலுக்குப்போய் செக்கின் செஞ்சுக்கணும்.  நண்பர் ரூம் போட்டு வச்சுருந்தார். க்ராண்ட் ஸெரீனாவாம்.  அதைத்தேடிப் போறோம். புதுச்சேரி நகருக்கான நுழைவு வாயிலுக்குள் நுழைஞ்சு ப[...]பூவராஹர் ஸ்வாமி ஸ்ரீமுஷ்ணம் (இந்திய மண்ணில் பயணம் 83 )

2017-12-01T14:14:50.030+13:00

வராஹர் எப்படி இங்கேன்னு சொல்றதுக்கு முன்னே கொஞ்சம் (!!) திரும்பிப் பார்க்கத்தான் வேணும்.....நம்ம ப்ரம்மா இருக்காரு பாருங்க, அவர்  வேலையில் சேர்ந்த  முதல்நாள், முதல் ட்யூட்டி என்னன்னா.... பூமியில் மக்கள்  பல்கிப்பெருக ஆவன செய்யணும்.  படைத்தல்! முதல் படைப்பா ஒரு நாலு பேரை  உண்டாக்கினார்.  இவுங்கதான் சனகாதிகள். சனகர், சனாதனர், சனந்தனர் அண்ட் சனத்குமாரர் என்று பெயரும் வச்சுட்டார். அடுத்த விநாடியில் நாலு பொண் குழந்தைகளைப் படைச்சிருக்கணும் இல்லையோ?  அங்கெதான்  கோட்டை விட்டுட்டார் :-( பெயர் சூட்டுதலில் பிஸியாகிட்டாராக இருக்கும்.இந்த சனகாதிகள்  மக்கள் தொகையைப் பெருக்க தங்களால் ஆனதைச் செய்யாமல்  சாமிகளைக் கும்பிட்டுக்கிட்டு தேவலோகத்திலேயே சுத்திக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொரு நாளுக்கு  ஒரு இடமுன்னு  சிவலோகம், வைகுண்டம், ப்ரம்ம லோகம் இப்படி  தொடர் பயணம்தான்:-)ஒரு நாள்  மஹாவிஷ்ணுவைப் பார்க்க  ஸ்ரீவைகுண்டம்  போறாங்க. அங்கே வழக்கமா வாசலைக் காவல் காக்கும் ஜய விஜயர்கள்  ட்யூட்டியில்!  ( பெருமாள் கோவில்களில் மூலவர் இருக்கும் கருவறைக்கு வெளியில் பக்கத்துக்கொன்னா நிப்பாங்களே  அவுங்கதான். )  மேலே: சிங்கைச்சீனு கோவில்  மூலவரும்  கேட் கீப்பர்ஸும் :-)எங்கியாவது போனால், கேட்டில் இருக்கும் வாட்ச்மேன்கிட்டே யாரைப் பார்க்க வந்துருக்கோம்னு சொல்லிட்டுப் போறோமே  அந்த லௌகீகம் எல்லாம் தெரியாது போல இந்த சனகாதிகளுக்கு.கேட் கீப்பரைச் சட்டை செய்யாமல் உள்ளே நேராப்போக ஆரம்பிச்சவங்களை  ஜயவிஜயர்கள் தடுத்து நிறுத்தி, நீங்க யாரு?  என்ன விவரமா வந்தீங்க?  நாங்க உள்ளே போய் நீங்க வந்திருக்கும் சமாச்சாரத்தைச் சொல்லி ஐயா கிட்டே  அனுமதி வா[...]ஸ்ரீதேவியின் வாக்கு பலித்தது! (இந்திய மண்ணில் பயணம் 82 )

2017-11-29T13:05:55.248+13:00

எண்ணி மூணாம்நாள் இப்படி  நம்ம ஸ்ரீதேவியின் வாக்கு பலிக்குமுன்னு  கனவிலும் எதிர்பார்க்கலை!  உண்மையான  ஆசிகளின் மகிமை இதுதான் போல!  அதுவும் ரெண்டு முறை நூத்தியெட்டு ஸேவிச்ச நல்ல மனசு!நேத்து சாயங்காலம் என்ன ஆச்சுன்னா....  நாம்தான் காட்டுமன்னார் கோவில் வீரநாராயணரை தரிசனம் பண்ணிக்கிட்டுத் திரும்ப கும்பகோணம் வந்தோமில்லையா.....  அப்பவும்  கங்கை கொண்ட சோழபுரம் வழியாத்தான் வந்தோம்.  கோவில் அப்போ திறந்துருக்க மாட்டாங்க என்பதால்   அங்கே போகாமல் நேரா ராயாஸ் என்று  முடிவு. அப்படியே  போய்க்கிட்டும் இருக்கோம்....ஆனால் பாருங்க....   எதுவுமே  கண்ணுலே பட்டபிறகு  போகாமல்  இருக்க முடியுதா?  பசி மயக்கமோ என்னவோ அரைத்தூக்கத்தில்  இருந்தவ கண்ணில் கோயில் போர்டு விழுந்துருச்சு. ஜெர்க் ஆனேன்.  இந்த வழியாவா வர்றோம்!  பூமாவைப் பார்த்துட்டே போகலாமே....  போனமுறை வந்தப்ப  குழந்தை    கேம்ப் போயிருந்தாள்... சந்நிதி திறக்கலைன்னா கூடப் பிரச்சனை இல்லை.... இவளைப்பார்த்தால்  அவனையே பார்த்த பலன் தான் :-)வண்டியை நிறுத்தச் சொல்லி, இறங்கி உள்ளே போனால் ரெண்டு தரிசனமும்  கிடைச்சது! ஏற்கெனவே பலமுறை  பதிவில் எழுதுன  கோவில் என்பதால்  இதைப்பத்தி எழுதப்போறதில்லைன்னு  நம்மவரிடம் சொன்னேன்.விண்ணிலும் மண்ணிலும், இந்த ஈரேழு உலகத்திலும் எதற்கும்  எந்த விதத்திலும்  ஒப்புவமை சொல்ல  முடியாத  அந்த  ஒப்பில்லாதவனைப் பார்த்து  வணங்கிட்டுப்போகணும்.  அம்புட்டுத்தான்!  அதே போல ஆச்சு.பூமாவும்  தன்னந்தனியா போரடிச்சு நின்னுக்கிட்டு இருந்தாள்.  பாகரைக்கூடக் காணோம்..... இப்பத்தான் கோவில் திறந்துருக்கு.  பக்தர்கள் வர நேரமாகும்.... இன்றைக்க[...]வா... இந்தப் பக்கம்..... கூப்ட்டமாதிரி இல்லே? (இந்திய மண்ணில் பயணம் 81 )

2017-11-27T12:34:31.507+13:00

அதுவரை இங்கே போகணுமுன்னு ஒரு திட்டமும் இல்லை. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வளாகத்தைப் பார்த்துட்டு மெயின் ரோடுக்கு வந்து சேர்ந்தால்  'இதோ இங்கே வா'ன்னு கூப்பிடறாப்போல கண்முன்னால் கடந்து போன பஸ் சேதி  சொன்னதோ?எங்காத்து வேளுக்குடின்னு நான் பெயர் வச்சுருக்கும் எங்க தாம்பரம் அத்தையைப் பத்தி  துளசிதளத்தில் அப்பப்பச் சொல்லி இருக்கேன்.  நீண்டகால வாசக நண்பர்களுக்கு நினைவு இருக்கலாம்.  'இந்த கும்பகோணம் போயிட்டு வந்தேன்,  சிதம்பரம் போனேன், சீரங்கம் போயிட்டு வந்தேன்'னு  போய் வந்த  கோவில் விவரங்களைச் சொல்லும்போது  'காட்டுமன்னார்குடி போகலையா'ன்னு எப்பவும்  கேப்பாங்க. 'போணும். ஒருநாள் போவேன்'னு சொல்லி சமாளிச்சுருவேன்.  அது எங்கேயோ இருக்குன்னு ஒரு எண்ணம்.இப்ப பஸ்ஸில் எழுதி இருந்ததைப் பார்த்ததும் காட்டுமன்னார்குடிக்கே போகலாமுன்னு  தோணுச்சு. நம்மவரும் அவர் செல்லில் கூகுளாரைக் கேட்டுப் பார்த்துட்டு, ரொம்பப்பக்கம்தான், ஒரு பதினெட்டு கிமீ தூரமுன்னு சொன்னார்.அட! அவ்ளோதானா? சலோ....    ரெண்டுங்கெட்டான் நேரம். போட்டும்.... அங்கே போய் தேவுடு காத்தால் ஆச்சு !கண்ணுக்கெட்டிய தூரம்,  போற வழியில் பசுமை!தாம்பரம் அத்தைக்கு ஏன் இந்த ஊர் மேல் இவ்வளவு கரிசனம்? பொறந்த ஊர்ப் பாசம். 'அங்கே கோவிலுக்குப் போனால்  நாதமுனி ஸ்வாமிகள் எழுதுன ' 'ஆராவமுதே அடியேனுடலம் நின்பாயே......' தொடங்கி பத்துப்  பாசுரம் ஒரு கல்வெட்டுலே செதுக்கிச் சுவரில் பதிச்சுருப்பாங்க. அதைக் கட்டாயம் பார்த்துட்டு வாங்க'ன்னும் சொல்வாங்க.  அதுலே  அப்படி என்ன விசேஷம்?    முக்கியமான  பல விசேஷங்கள் இருக்குன்னாலும்.... தாத்தா (தாம்பரம் அத்தையின் தகப்பனார்) கோவிலுக்கு[...]தந்தையைப் பின்பற்றிய தனயன்(இந்திய மண்ணில் பயணம் 80 )

2017-11-24T13:19:50.341+13:00

 ராயாஸில் இருந்து கிளம்பி அணைக்கரை வழியாக் காவேரியைக் கடந்து,   கங்கைகொண்ட சோழபுரம் வந்து சேரும்போது  சரியா ஒரு மணி. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கட்டி இருக்கார்,  ராஜராஜசோழனின்  மகன் ராஜேந்திர சோழன்னு  வாசிச்சது முதல்  போகணும் என்றது  என்  கனவு. அது இன்றைக்கு இப்படி சட்னு நிறைவேறுமுன்னு நான் நினைச்சுக்கூடப் பார்க்கலை !ரொம்பச் சின்ன ஊரா இப்போ இருக்கு.  செம்மண் பூமியோ.....இந்தக் கோவிலை உலகின் பாரம்பரியக் கட்டடங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துருக்கு.   இந்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் இருக்கு.தாத்தா கட்டுன தஞ்சை பெரிய கோவில்,  மகன் கட்டுன  கங்கைகொண்ட சோழபுரம்  ப்ரஹதீஸ்வரர் கோவில், பேரன் கட்டுன ராஜராஜேச்சரம் என்ற தாராசுரத்து  ஐராதவதேஸ்வரர் கோவில் இப்படி மூணு தலைமுறை சோழர்கள் கட்டுன இந்த மூணுகோவில்களுமே நம்ம நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் கட்டடக்கலை நுணுக்கங்கள் நிறைஞ்சவைதான்.ஆனாலும்....  வடக்கே இருக்கும் தாஜ்மஹல்தான்  இந்தியான்னதும் வெள்ளையர்களின் விருப்பப்பட்டியலில்  இடம் பிடிச்சுருது, இல்லே?  முக்காவாசி வெள்ளைப் பயணியர்  தென்னிந்தியா பக்கமே வர்றதில்லை.  வாரணாசி,   தில்லி, ஆக்ரா, ராஜஸ்தான்னு  முடிச்சுக்கறாங்க. ப்ச்....தஞ்சைப்பெரிய கோவிலுக்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலுக்கும்  வெறும் இருவது  வயசுதான் வித்தியாசம்!   அப்ப  அந்தக் கோவிலை நிர்மாணித்த சிற்பக்கலைஞர்கள்  பலர் இங்கேயும் கூட வந்திருந்து  சிற்பங்களைச் செதுக்கி இருக்கலாம், இல்லே?வலைக்கம்பி அடிச்சு வச்ச பெரிய வளாகம்.  கம்பியினூடா பசும்புல்தரை பளிச்! வண்டியை நிறுத்திட்டு உள்ளே போற[...]அவள் பெயர் தெய்வநாயகி (இந்திய மண்ணில் பயணம் 79 )

2017-11-22T12:46:59.472+13:00

பனிரெண்டு நிமிட்டில்  தாராசுரம் போயாச்சு! நம்மவர்  ஐராவதேஸ்வரரை நோக்கி வெளிமுற்றத்துப்  படிகளில் இறங்கிப்போறார்.  எனக்கென்னவோ....  கோவிலுக்கு முன்னால் இருக்கும் சிதிலமான இன்னொரு கோவிலுக்குப் போய்ப் பார்க்கணுமுன்னு  இருக்கு.  அங்கே போயிட்டு வரலாமுன்னு சொன்னேன்.ஐய்ய....  அது கோவில் இல்லை.  இந்தக் கோவிலுக்கு வரும் வாசல்னு சொல்றார் இவர்.  நெசமாவா.....   ஆமாம். அது ராஜகோபுர வாசல். கோபுரம்  கட்டலை போல.... இல்லே ஒருவேளை  கட்டுன கோபுரம்  இடிஞ்சு போயிருச்சா? ஸ்டைலே இப்படித்தானோ?இன்னும் நல்லாக் கவனிச்சால்..... நாந்தான் அங்கே கோவில் இருக்குன்னு நினைச்சு ஏமாந்துருக்கேன். இப்படித்தான் பாலியில்  ஒரு டிஸைனை ரெண்டா வகுந்து  இடவலம் மாற்றி வச்சதுபோல் இருப்பதைப் பார்த்து அந்தாண்டை என்ன கோவில்னு நினைச்சு குழம்பினது :-)அப்ப   நாமெல்லாம் பின்வாசல் (?) வழியாதான் வந்துக்கிட்டு இருக்கோமா!!!அம்மன் சந்நிதி இங்கே தனிக்கோவிலா பக்கத்துலேயே இருக்குன்னு தெரிஞ்சாலும் போனமுறை நேரம் அமையலை. இங்கே ஐராவதேஸ்வரர் கோவிலுக்குள்ளே நுழைஞ்சபோது  அப்படியே நம்மைக் கட்டி இழுக்கப்போகுதுன்னு  யாருக்குத் தெரியும்? அப்படியும்  முக்கால்வாசி பாக்கி வச்ச மாதிரிதான்! நாப்பாதாயிரம் சிற்பங்கள்!!!!   மூணு மணி நேரம் எப்படிப்போதும்?  மூணு மாசம் வேணாமோ?அப்போ ஐராவதேஸ்வரர் கோவிலைப்பற்றி எழுதுனது இங்கே!இப்பவும் நேரக்குறைவுன்றதால் முதலில் அம்மன் கோவிலைத் தரிசனம் செஞ்சுக்கிட்டு வந்துடலாமேன்னு.....நம்ம ஜம்புலிங்கம் ஐயா அப்பவே கேட்டார் அம்மன் கோவிலைப் பார்க்கலையான்னு....    வேளைன்னு ஒன்னு வரணுமே....  இப்ப  வந்துருக்கு :-)தொல்[...]சுடச்சுட சக்கரைப் பொங்கல் ! (இந்திய மண்ணில் பயணம் 78 )

2017-11-20T13:01:50.119+13:00

நன்றி சொல்ல வந்துருக்கோம். ஒரு மரியாதைக்கு  மாலை போட்டு  சக்கர ராஜாவைக் கும்பிடலாமுன்னு தோணுச்சு!  பூமாலை ஒன்னு  வாங்கினோம். கோவில் வாசலில் சிரிச்ச முகத்தோடு   மங்களகரமா இருக்கும் பூக்காரம்மாவிடம், அர்ச்சனைத் தட்டு ஒன்னும் வாங்கிக்கிட்டுக் கோவிலுக்குள் போறோம்.ரொம்ப விசேஷமானவர் மூலவர். முக்கண் படைத்தவரா இருக்கார்!  உலகத்துலேயே இப்படி இருக்கும் வைணவக்கோவில் மூலவர் இவர் மட்டும்தானாம்!  பெருமாளின் சக்கரத்துக்குன்னே  இருக்கும் ஒரே கோவிலும் இதுதானாம்! திருமழிசை ஆழ்வார் இவரைப்பாடி மங்களாசாஸனம் செஞ்சுருக்கார். ஆனால் இந்தக் கோவில் 'அந்த 108 லிஸ்ட்' டிலே இல்லை !!!!      (ஏனாம்?    ஙே......  )போனமுறை உத்தராயண வாசல் வழியாப்போனோம். இப்ப ஐப்பசி மாசம் நடப்பதால் தக்ஷிணாயண வாசலில் பிரவேசம்.சக்கரராஜா... சூரியன், பிரம்மன், மார்க்கண்டேயர், அகிர்புதன்ய மகிரிஷி, அக்னிபகவான் ஆகியோருக்கு   நேரில்  தோன்றி தரிசனம் கொடுத்துருக்கார். முகத்தில் வேற  முக்கண்!  அதனால்  இவர்களுரிய செவ்வரளி, செம்பருத்தி, வில்வம், வன்னி, துளசி , குங்குமம் ஆகிய பொருட்களை கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யறாங்க.  உலகில் வேறெங்கும் இப்படி இல்லையாம்.போனமுறை நம்ம துளசிதளத்தில் எழுதுனது இப்படி  :-) ரெண்டு அர்ச்சனை சீட்டுகள் வாங்கி இருந்தோம்,  மகள்களுக்காக!  அர்ச்சனை முடிஞ்சதும், நம்ம கோபு  சக்கரைப்பொங்கலைக்  கொண்டு வந்து  சமர்ப்பித்தார்.  அமுது படைச்சாச்சு.பாத்திரத்தை எடுத்துக்கிட்டு நம்ம கோபு எங்களை வரச்சொல்லிட்டு  படி இறங்கிப்போய்  எதிரிலிருந்த மண்டபத்திண்ணையில்  வச்சுட்டு, ஒரு நிமிஷம் னு சொல்லி[...]காசிக்குப் போகாமலேயே பாவத்தைத் தீர்க்கணுமா? (இந்திய மண்ணில் பயணம் 77 )

2017-11-17T12:38:43.471+13:00

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பேட்டர்ன் இருக்கே...  காலையில் கண் முழிச்சதும்  இங்கே குளம் பார்க்கணும்.  கரைக்கு  இந்தாண்டை இருக்கும் கோவில் கோபுரத்தைப் பார்த்து கும்பிடு போட்டுக்கணும். சூரியன் வந்துட்டானான்னு  தேடணும் :-)  அதே போல் எல்லாம் ஆச்சு.  கோபுரதரிசனம்  கோடி புண்ணியம் இல்லையோ?அந்தக் கோவில் என்னன்னு தெரியலையேன்னு....  கெமெரா மூலம்   கோபுரத்தைக் கிட்ட வரவழைச்சுப் பார்த்தேன். காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் !  போகணுமுன்னு தோணல். இன்றைக்கே போனால் என்ன?அறைக்குத் திரும்பினால் காஃபி வந்து காத்திருக்கு!  நம்மவர்  சொல்லி இருக்கார்!  அப்போ அவ்ளோ நேரமாவா ஜன்னலாண்டை  நின்னுருக்கேன்!சட்னு குளிச்சு முடிச்சுத் தயாராகிக் கீழே வந்து ரைஸ் அன் ஸ்நாக்ஸ் போனோம்.  நம்ம  ஹயக்ரீவா போலவே   ராயாஸ்லேயும்   காலை உணவு  ஹொட்டேல் தராது.  அறை வாடகை குறைவு என்பதால் இது பிரச்சனையே இல்லை. தோ....வாசலில் எல்லாம் கிடைக்குதே!எதிரில் இருக்கும் கோவிலுக்குப்போய்ச் சேர்ந்தோம்.  ராஜகோபுரம் பளிச்ன்னு புது வண்ணங்களோடு இருக்கு.  இங்கே மஹாமகத்து சமயம், இந்தக் கோவிலுக்கு ரொம்பவே மகத்துவம் என்பதால்  இப்போ ஒரு எட்டு மாசத்துக்கு முன் நடந்த கும்பமேளாவுக்காக புதுவண்ணம்  பூசி இருக்கலாம்.தெருவின் ஆரம்பத்துலேயே கோவிலுக்கு ஒரு அலங்கார வாசல் வேற வச்சுருக்காங்க. ஆனா  இதுலே அஷ்டலக்ஷ்மிகள் இருக்காங்களே!!!சனம் பாவம் தீர்த்துக்கப் புண்ணிய நதிகளில் போய் நீராடுவது  பழக்கம்.  செஞ்ச பாவம் எல்லாம் அப்படியே  உடம்பில் இருந்து தண்ணியோடு போயிரும்னு ஒரு நம்பிக்கை. (மனசு அழுக்கை  போக்க என்ன பண்ணனு[...]பெயருக்கும் ப்ரஸாதத்துக்கும் தொடர்பு இருக்கோ? (இந்திய மண்ணில் பயணம் 76)

2017-11-15T12:35:38.996+13:00

ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடி எனக்கு விருப்பமான ஊர்களின் பட்டியல்னு ஒன்னு இருந்தால் அடுத்து வர்றது கும்மோணம்தான் ! ஹைய்யோ.....  கோவிலான கோவில், தாராசுரம் போல  கண்ணில் ஒத்திக்கும் வகையா சிற்பமான சிற்பங்கள்!ஊர் முச்சூடும் கோவில்கள்தான், ரொம்பப்பக்கத்து பக்கத்துலேதான்னு சொன்னாலும்..... மக்கள் தொகை  அளவுக்கு மீறிப் பெருகிக்கிடப்பதாலும், அதைவிட அதிக அளவில் வாகனங்கள் ரொம்பி  வழிவதாலும்....  போக்குவரத்து கொஞ்சம் கீக்கிடமாத்தான்....  ப்ச்....1.7 கிமீ போக இருவது நிமிட் ஆகி இருக்குன்னா பாருங்க. கோவில்வாசலில் நம்மை இறக்கி விட்டுட்டுப் பார்க்கிங் தேடிப்போனார் சீனிவாசன்.  உள்ளே போன நாங்க தேடிப்போனது நம்ம கோபுவை!கோபு யார்?  சக்கரைப்பொங்கல் ஸ்பெஷலிஸ்ட்!  சக்கரபாணி கோவிலில் ரொம்ப டிமாண்ட் இருக்கும் முக்கிய நபர் :-)கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான்!  நம்மால் ஒன்னும் செய்ய இயலாத நிலையில் 'நீயே கதி'ன்னு  விழுந்தால் தூக்கி விட்டுரும் ஒரு அரிய  கண்டுபிடிப்பு!போனமுறை  கும்பகோணம் போறேன்னு  நெருங்கிய தோழிகளில் ஒருவரிடம் பேச்சுவாக்கில் சொன்னப்ப,  'சக்கரபாணி கோவிலில் சக்கரைப்பொங்கலுக்குக் கொடுங்க. மகள் கல்யாணத்தடை  நீங்கிடும்' னு சொன்னாங்க. நாம்தான் 'எத்தைத் தின்னால் பித்தம்  நீங்கும்'னு  கிடக்கோமே....கோவிலுக்குப்போய்,  அங்கிருந்த  அர்ச்சனை டிக்கெட் கவுன்ட்டரில் சக்கரைப்பொங்கலுக்குத்  தரணுமுன்னு  சொன்னவுடனே, கோபுகிட்டே கொடுத்துருங்கன்னார்.     ஙே.....  நம்ம முழியைப் பார்த்த இன்னொருவர், ஆள் அனுப்பின அஞ்சாவது நிமிட் கோபு வந்து சேர்ந்தார்.  அவரிடம் சொன்னதும், என்ற[...]தாயின் மடியில் கொஞ்சநேரம்.... (இந்திய மண்ணில் பயணம் 75)

2017-11-13T13:02:13.143+13:00

மாதா பிதா குரு தெய்வம் வரிசையை இன்றைக்கு மாத்திப்போட்டுக்கலாமேன்னு  குருவந்தனத்துக்குப் போறோம். ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி!  வாசலில் அறிவிப்பு பார்த்ததும் திகைப்பு!அடடா....  மாலை நாலு மணிக்கு நாம் ஊரைவிட்டே போயிருப்போமே.....  காலை நேரம் கோவிலுக்கு வந்தப்பயே குரு வணக்கம் செஞ்சுருக்கலாம். ஹூம்.....  மன்னிச்சுருவார்... நம்ம நிலை அவருக்குத் தெரியாதா என்ன?குரு தரிசனம் இல்லைன்னதும் ஓடிப்போய் அம்மா மடியில் விழலாமுன்னு  நந்தவனப் பாதையில் போறோம்.  எங்க ரெண்டுபேருக்குமே  பூவுலக மாதா பிதா இல்லை . மேலுலக மாதா பிதாதான் இருக்காங்க!  போற வழியில் மறக்காம சக்கரத்தாழ்வாரை தரிசனம் பண்ணிக்கிட்டோம்.  மரமல்லி பூக்கும் காலம். தரையெல்லாம் கொட்டிக்கிடக்கு!வஸந்தமண்டபம் வழியாத் தாயார் சந்நிதியாண்டை போயாச்சு. பதினோரு மணி வெயில் தன் வேலையைக் காமிக்குது.  சின்னதா ஒரு ரெஸ்ட் நம்மவருக்கு. நான் மட்டும் ஓடிப்போய் லக்ஷ்மிநாராயணரையும் அஞ்சு குழியையும் பார்த்துட்டு வந்தேன்.தாயார் சந்நிதியில் அவ்வளவாக் கூட்டம் இல்லை.  மூணு பேரும் தரிசனம் கொடுத்தாங்க.   அரைச்ச மஞ்சள் ப்ரஸாதம்.... ஹம்மா.... எவ்ளோ அருமையான வாசனை!  கூடவே சாமந்தியும் ரோஜாவுமா ( இது என்ன காம்பினேஷன்? )  ஒரு துண்டு பூச்சரம் கிடைச்சது.  சூடிக்கொண்டேன்.  கனம்தான்....   தாய்க்காகத் தாங்கிக்கலாம்.....பிரகாரம் வலம் வந்து வில்வமரம், துளசிமாடம் வணங்கி  உள்ப்ரகாரத்திண்ணையில் கொஞ்ச நேரம் உக்கார்ந்தோம்.  தியானம் பண்ண மனசு ஒருமுகப்படலை. வேடிக்கை பார்க்கலாம்....வெளியே வந்து கம்பர் மண்டபத்தின் அருகே உக்ர நரசிம்ஹர் சந்நிதிக்க[...]லலிதையும் ஸ்ரீதேவியும் பின்னே துள்ஸியும்.... (இந்திய மண்ணில் பயணம் 74)

2017-11-10T12:32:41.025+13:00

தூங்கப்போகுமுன்....  'ஏங்க  நாளைக்குக் காலையில் நாலு மணிக்கு...'ன்னு ஆரம்பிக்கும்போதே...  'நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. நாளைக்குப் பயணம் இருக்கு'ன்றார் இவர்."அதான்....நாளைக்குக் கிளம்பிடுவோமில்லே....   ஆண்டாள் கூடவே  அம்மா மண்டபம் வரை....  ""அதான் இன்றைக்கு ஆண்டாளைப் பார்த்தாச்சுல்லே! நாளைக்குக் காலையில் முழிப்பு வந்தவுடன் எழுப்பறேன்"எழுப்பிட்டாலும்..........பின்தூங்கி பின் எழும் பழக்கம் எனக்கு என்பதால்தான் பிரச்சனையே....காலையில் விழிப்பு வந்தபோது மணி ஆறு பத்து. சுத்தம்..... அப்படியும் கீழே ஓடிப்போய் தெருவைப் பார்த்தேன்.  நம்மைக் கடந்துபோகும்போது  கண்ணில் படமாட்டாளா?"போயாச்!"   சொன்னவர்  கீழே இருக்கும் செக்யூரிட்டி.ஆனது ஆச்சுன்னு  குளிச்சு தயாராகி  காலை காஃபிக்கு கீழே பாலாஜி பவனில் சரணடைந்தோம்.  டிஃபன் ரெடியாம்.  ஆய்க்கோட்டே.... இட்லி வடை பொங்கல் காஃபி .  சாப்பிடும்போது ஒரு குட்டி தோசையும் வந்தது! மினி டிஃபனாம் :-)அறைக்குப்போய் துணிகளை பேக் செஞ்சு முடிச்சுட்டுக் கோவிலுக்குப் போனோம். இணக்கமான புன்னகை  கவுன்ட்டர் இன் சார்ஜிடமிருந்து.  இன்றே கடைசின்னு தகவலும் சொல்லியாச்:-)கோவிலில் நல்ல கூட்டம்!  நம்மவராண்டை சொன்னேன்.... 'ஓடக்கூடாது. நின்னு நிதானமாப் பார்த்துட்டுத்தான்  போகணும் ' தலையாட்டினார் :-)ரங்கவிலாஸ் மண்டபத்தையொட்டி இருக்கும் கல்கொடிமரத்தில் ஆரம்பிக்கலாம்.  பூட்டுக்கள் அளவு கொஞ்சம் குறைஞ்சுருக்கு  :-)தேங்காய் உடைக்கும் அமைப்பும், தேங்காய்த் தண்ணீர் பிடிச்சுக்க அண்டாவும்!  அட!   இது எப்போ?ஒன்பது படிகள் ஏறிப்போகும் அளவுக்கு  இருக[...]குறையொன்றுமில்லை..... !! (இந்திய மண்ணில் பயணம் 73)

2017-11-08T19:55:01.238+13:00

நேத்து கோவிலுக்குப் போனப்ப உற்சவம் நடக்குதுன்ற விவரமே தெரியாமல் போனதுதான். இன்றைக்கு அப்படியா? அதான் கோலாகலமா நடக்கும் விழாவுக்கு நாமும் கொஞ்சம் பளிச்ன்னு போனா ரங்கனுக்குப் பிடிக்காதா என்ன?கீதாம்மா வீட்டில் இருந்து ஹயக்ரீவாவுக்கு வந்து ஒரு ஷவர் எடுத்துட்டு, உடைகள் மாத்திக்கிட்டுக் கோவிலுக்குக் கிளம்பிட்டோம்.  சீனிவாசன், வழக்கம்போல் நம்மை ரங்கா கோபுரத்தாண்டை கொண்டுவிட்டார்.ஓட்டமும் நடையுமா ஊஞ்சல் மண்டபத்துக்குப்போனா, நம்பெருமாள் ஏற்கெனவே வந்துருந்தார். பூஜைகள் நடந்துக்கிட்டு இருக்கு.அவருக்கு வலப்புறமா இருக்கும் படிக்கட்டுப் பக்கம் ஒரு கூட்டம். நாமும் போய் என்னன்னு பார்த்தால்.... அங்கே இருக்கும் வரிசையில் போனால் நம்பெருமாளைக் கிட்டக்க இருந்து ஸேவிக்க முடியுமாம்!அடிச்சக்கை!  நாமும் வரிசையில் சேர்ந்து நின்னோம்.  சுமார் இருபது இருபத்தியஞ்சு நிமிஷமாச்சு  நம்பெருமாளாண்டை போக ! என்ன கிட்டக்கவாம்? அப்படியும் நமக்கும் அவருக்குமிடையில் ஒரு ஏழெட்டடி தூரம் இருக்கே!  பெருமாளுக்கு வலது கைப்பக்கம் போய்  அவர் முதுகு பார்த்து (எங்கே... அங்கேயும் ஒருத்தர் நின்னு சாமரம் வீசறாரே!) அப்படியே அவர் இடது கைப்பக்கம்  போயிடணும். ஸைடு  ஸேவைதான்! allowfullscreen="true" allowtransparency="true" frameborder="0" height="476" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fgopal.tulsi%2Fvideos%2F10210884287925778%2F&show_text=0&width=267" style="border: none; overflow: hidden;" width="267">போதாக்குறைக்கு அவரைச் சுத்திப் பட்டர்கள் கூட்டம்.  நாமும் எட்டி எட்டித்தான் பார்க்கணும்.  படங்கள் எடுத்தால் ஒரே முதுகுகள்தான். இது நமக்குச் சரிப்படாது....கிடைச்ச இடைவெளியில் எடுத்த&nb[...]பதிவர் குடும்ப சந்திப்புகள் !!(இந்திய மண்ணில் பயணம் 72)

2017-11-06T13:26:16.755+13:00

எனக்குத் தெரிஞ்சு (!) மூணு பதிவர்கள் அதுவும் ஸ்ரீரங்கத்தில் ஒரே வீட்டுலே இருக்காங்கன்னா....  இவுங்களாத்தான் இருக்கும்! ஏற்கெனவே வரவைத் தெரிவிச்சதால் அவுங்களும் நம்மை எதிர்பார்த்திருந்தாங்க.ஏற்கெனவே போன இடம் என்பதால் நம்ம சீனிவாசன்  பிரச்சனை இல்லாம அங்கே கொண்டுபோய் சேர்த்தார்.குட்டிப்பதிவர் ஓடி வந்து ஒரு புன்னகையுடன்  வரவேற்று மாடிக்குக் கூட்டிப்போனாங்க.வாசலில் நின்னுக்கிட்டு இருக்காங்க  ரோஷ்ணியம்மா !  வீடு பளிச்ன்னு மின்னுது!  புது வீடுதான்னாலும் அதை புதுக்கருக்கழியாமல்  வச்சுருக்கும் பாங்கு.... பாராட்டத்தான் வேணும்.கொஞ்சநாளைக்கு முன்னால்தான் களையெடுத்தாங்களாம். அது இருக்கும் ஒரு மூணு நாலு மாசத்துக்கு முந்தி :-)  வேண்டாமுன்னு தீர்மானிச்சவைகளை உள்ளூரில் தானம் பண்ணப்போறாங்கன்னு  அப்போ தெரிஞ்சதும்,  நாம் வர்ற விவரம் சொல்லி அப்படியே எடுத்து வையுங்க. நான் வந்து அள்ளிக்கிட்டுப் போறேன்னு சொல்லி வச்சுருந்தேன்.எங்க ஊர் லைப்ரரியில் கூட  அப்பப்ப வீடிங்க் என்ற களையெடுப்பு நடக்கும்.  இங்கே என்ன கணக்குன்னா....  ரெண்டு வருசம் வெளியே போகாமல் ஷெல்ஃபிங்  உக்கார்ந்துக்கிட்டு இருந்தால்..... தூக்கிடணும்!   எனக்குத்தான் மனசே ஆகாது. சில பல புத்தகங்கள் புதுக் கருக்கு அழியாமல் அப்படிக்கப்படியே இருக்கும். பிள்ளைகளுக்கு  அப்பீல் ஆகாத எதோ ஒன்னு  இதுலே இருக்கு.... அட்டைப்படமோ, இல்லை உள்ளே இருக்கும் சமாச்சாரமோ  ஏதோ ஒன்னு!  எதுன்னு கவனமாப்பார்த்து  மூளையில் முடிச்சுப்போட்டுக்குவேன். அடுத்த முறை  லைப்ரரிக்குப் புத்த[...]முன்னழகுக்குச் சளைக்கலை பின்னழகு!!(இந்திய மண்ணில் பயணம் 71)

2017-11-03T12:20:02.243+13:00

இருவர்ன்னு தப்பாக் கணக்குப் போட்டுட்டேன்.  உண்மையில் மூவர் !  கடையின்  உள்ளே போனால், 'எப்பம்மா  இந்தியா   வந்தீங்க? ஸார் வரலையான்னு ' கேள்விகளோடு நம்ம ஸ்ரீதர்!  சின்னப்பேச்செல்லாம் ஆனதும், 'பெருமாள் தரிசனம் ஆச்சா?  கூட்டிட்டுப்போகவா?'ன்னார். அதெல்லாம் நேத்தே ஆச்சுன்னேன்.புதுசா என்ன வந்துருக்கு இப்போன்னதுக்கு  பழசு ஒன்னு வந்துருக்குன்னார்!  ஸ்ரீதர், கோவில் கடையில் ஸ்வாமி  விக்கிரஹங்கள் விக்கறதோட ஒரு ஆன்ட்டீக்  டீலரும் கூட!  நல்ல கலெக்‌ஷன்ஸ் எல்லாம் வச்சுக்கார்.பார்க்கலாமான்னதும்,  கடைக்குள் இருக்கும் இன்னொரு அறைக்குள் இருந்து  கொண்டு வந்து  கையில் கொடுத்தார்!  இங்கெதான்   அந்த  மூவர்!சின்ன உயரம்தான்! ஆனால் அற்புத அழகு!   காளிங்க நர்த்தனமாடும் கண்ணனின் இடுப்புச்சரம் பார்த்து அசந்துதான் போனேன் .  கிருஷ்ணன் கையில் வெண்ணை உருண்டையுடன்! பாம்பு வாலைப் பிடிச்சுக்கிட்டே ஆட்டம். ஆடிக்கிட்டே தின்னணுமாமே!  தலையில் ரெண்டு பக்கமும் பிரபை கூட இருக்கு!இடுப்புச் சங்கிலியில் கோர்த்த சலங்கைகள் ஒவ்வொன்னும் தனித்தனியா   இருக்கு பாருங்க!  ஹைய்யோ!!!!தலை உச்சியில்    'க்ருஷ்ணகொண்டை' வேற !!! இன்னொருத்தர் லக்ஷ்மியும்   நாராயணருமா இருவர் !  இடதுமடியில் லக்ஷ்மி கையில் தாமரை மலருடன்! நாராயணன் காலில்  ஓப்பன் ஷூ !அஞ்சுதலை ஆதிசேஷன் குடை பிடிக்கறார்!  கண்ணெல்லாம் குறுகுறுன்னு நம்மையே பார்க்குது!சேஷனின் பின்பக்கம் ஹைய்யோ!!!!"உங்க கலெக்‌ஷனுக்கா இல்லை விக்கறீங்களா?"கொஞ்ச நேரம் யோசிச்சவர்,  'உங்களுக்கு[...]அழகை அழகுன்னுதான் சொல்லணும்!(இந்திய மண்ணில் பயணம் 70)

2017-11-02T12:52:48.134+13:00

உத்திரை வீதி (கிழக்கு) வரைக் கொஞ்சம் போகவேண்டி இருக்கு. அக்காவைப் பார்த்துட்டு ஒரு ஹை சொல்லிட்டு வரணும்! நெருங்கிய தோழியின்  அக்கா நமக்கும் அக்காதானே?  அக்கா கையால் காஃபி ஒன்னு குடிச்சுட்டு வான்னு தோழியின் அன்புக்கட்டளை எப்போதும்  ஒரு ஸ்டேண்டிங் ஆர்டர்:-)  ஆனால் நாம் போற நேரம் காஃபிக்கானது இல்லை :-(இந்தத்  தெருவில் இன்னுமொரு விசேஷம் இருக்கு!  நம்ம ஆண்டாளின்  அறை இங்கேதான்.  பாவம்.... உடல்நிலை சுகமில்லை. சக்கரை இருக்காம் உடம்பில். அதனால்  கோவில் வேலைகளில் காலை அபிஷேகத்துக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துட்டு அறைக்குப் போயிடறாள்.  ரங்கவிலாஸில் இருக்கும்  மணல் நிரப்பிய இடம் இப்பெல்லாம் காலியாத்தான் இருக்கு.உண்மையில் இந்தத் தெருவில் மூணு விசேஷம் உண்டு.  மூணாவது வெள்ளைக் கோபுரம்!  அதன் வழியா நுழைஞ்சால்  மணல்வெளி நிகழ்ச்சிகளைப் பார்க்க ரொம்ப நடக்க வேணாம்!அக்கா வீட்டில்தான் இருந்தாங்க. தினம் ஸ்ரீராமஜெயம் எழுதும் வழக்கம். இன்னொரு  நோட்புக்கில் ஸ்ரீராமா எழுதறாங்க. இதுக்குன்னே நோட்டுப் புத்தகங்கள்  கிடைக்குதாமே! எழுதி முடிச்சுட்டுக் கோவிலுக்குக் கொடுத்துடலாமாம்.அப்பதான் எனக்கு நம்ம சண்டிகர் கோவில் விஷயம் ஒன்னு நினைவுக்கு வந்தது!  அங்கே சபா ஹால் தூண்கள் ஒவ்வொன்னுக்கு அடியிலும், அஸ்திவாரம் போடும்போதே  ஒரு லக்ஷம் ராமஜெயம் வச்சுருக்கறதா நம்ம ராஜசேகர் சொல்லி இருந்தார். அப்புறம்  ராஜகோபுரத்துக்கு அஸ்திவாரப் பூஜை போட்டப்ப நாமும் அதில் கலந்துக்கிட்டு ராமஜெயத்தை வச்சோமே!நாம் எழுதிட்டு[...]அழகு நடை போட்டு வரும் ஆண்டாள் செல்லம் ......(இந்திய மண்ணில் பயணம் 69)

2017-10-30T13:05:04.166+13:00

"காலையில் நாலு மணிக்கு எழுப்பி விடுங்க!""எதுக்கு? அவ்ளோ சீக்கிரம்?"  "வேலை இருக்கு..... அஞ்சு மணிக்கெல்லாம் ரெடியாகி கீழே போயிடணும்.""அதான் எதுக்கு?""ஆண்டாள் கூடவே அம்மா மண்டபம் போய் வரப்போறேன்..."சரி சரின்னு தலையாட்டிட்டு, எழுப்பி விடும்போது காலை  மணிஅஞ்சு :-(ஐயோன்னு அரக்கப்பரக்கக் குளிச்சுட்டுக் கீழே ஓடிப்போய் பார்த்தால் தெருவே விரிச் !  பக்கத்துக் கட்டிட வாசலில் நின்ன  ஹயக்ரீவா வாட்ச்மேன் தாத்தா....  என்னம்மான்னு கேட்டுக்கிட்டு ஓடிவந்தார்."ஆண்டாள்  போயாச்சா? ""போயாச்சு""எந்தப் பக்கம்?"  ஒரு நிமிசம் யோசனை பண்ணிட்டுப் போயாச்சு....ன்னு இழுக்கறார். தினப்படி பார்க்கும் சமாச்சாரம் என்பதால்....  அதுலே மனசு பதியலை போல....திடுதிடுன்னு  ஓடிவந்து  சேர்ந்துக்கிட்ட நம்மவர்,  மேளசத்தம் கேட்டே ரொம்ப நேரமாச்சுன்றார்.....ப்ச்....  கொடுத்து வைக்கலை.    ஆனாலும் இன்றைய சண்டைக்கு அடி எடுத்துக் கொடுத்துட்டாள் ஆண்டாள் :-)கோவிலுக்குப் போறமாதிரிதான் சத்தம் கேட்டுச்சாம்....நல்லவேளையா இன்னும்  அவ்வளவா   ட்ராஃபிக் ஆரம்பிக்கலைன்னு  கோவிலைப் பார்த்து  நடக்கறோம்.  வழியில் முரளிக்கடையில் நல்ல கூட்டம்!  விடமுடியுதா?  நமக்கும் ஆச்சு.குடிச்சு முடிக்கிற  நேரம்   லேசா   மேள சத்தம்  காதுலே விழ சுத்தும் முத்தும் பார்த்தால்.....ஹைய்யோடா......  தங்கக்குடையும், தங்கக்குடமுமா.....துலா மாசம் முழுசும் தங்கக்குடமாம்!எங்கிருந்து வருதோன்னு  அப்படி ஒரு ட்ராஃபிக்!  சட்னு எப்போ ஆரம்பிச்சது?  ஆண்டாளுக்காகவே காத்திருந்தாங்க[...]துள்ஸி, உன் ஆசைக்காக......(இந்திய மண்ணில் பயணம் 68)

2017-10-27T12:22:35.587+13:00

கண்ணுக்கு முன்னால் தெரியும் ராஜகோபுரம் வழியா நேராப்போய் கோவிலுக்குள் நுழையலாம்தான்....  இவ்ளோ போக்குவரத்து இல்லாமல் இருந்தால்.......  காலைத் தெருவுலே வைக்க இடமில்லையே.....  கோவிலையே வலம் வந்து  அங்கே இங்கேன்னு  போய் ரங்கா கோபுரத்தாண்டை இருக்கும் பார்க்கிங் பகுதியில் வண்டியைக் கொண்டுபோய் நிறுத்தியதும்,சகுனம் ரொம்பவே சரியா அமைஞ்சு போச்சு!ஆனால் இவள், அவள் இல்லையாக்கும்...... !!!புதுசா  காலணி பாதுகாப்புக்கு ஒரு கட்டடம்  கோபுரத்துக்கு அந்தாண்டைப்பக்கம்  கட்டியிருக்காங்க.   ரொம்ப நல்லது.  நிதானமா, நிம்மதியா  சாமி தரிசனம்  செஞ்சுக்கலாம் :-)ரங்கா கோபுரவாசலுக்குள் போய்  ரெங்கவிலாஸ் மண்டபத்துக்குள் போறோம்.  நல்ல  கூட்டம் இருக்கேன்னு பார்த்தால்.... நம்ம ராமானுஜரின் ஆயிரம்  ஆண்டு விழாவின் அங்கமா சிறப்பு சொற்பொழிவு நடக்கறது.  தினமும் நடக்குதாமே!  இன்றைக்கு  சென்னை திரு வேங்கட கிருஷ்ணன்!  மாலை அஞ்சு முதல் ஆறுவரை. நாம் சரியா  அஞ்சு நாப்பத்தியெட்டுக்குப் போயிருக்கோம்.....  :-(  ப்ச்...பத்து நிமிட் கேட்டுட்டு, கவுன்ட்டரில் போய் கெமெரா டிக்கெட் ஒன்னு வாங்கினேன். செல்ஃபோன் கேமெராதான் கையில் இருக்கு.  போகட்டும்....ஆர்யபடாள் வாசலுக்குள் போய்  பெரிய திருவடியைக் கும்பிட்டுத் திரும்பினா ஊஞ்சல் மண்டபத்தாண்டை கூட்டம். என்னன்னு போய்ப் பார்த்தா....  ஹைய்யோ!!!!பலமுறை ஸ்ரீரங்கம் போயிருந்தாலும், நம்பெருமாளை  இங்கே ஊஞ்சலில் பார்ப்பது இது முதல்முறை! ரொம்ப வருசத்துக்கு முந்தி,  கருவறையில் இர[...]குமரி, அன்றைக்குப் பார்த்தபடியே .... இருக்குமா? (இந்திய மண்ணில் பயணம் 67)

2017-10-25T13:15:43.149+13:00

ஒரு இருபத்தியொன்னு கிமீ அம்பது நிமிட்.... கணக்கு சரியா வருதா பாருங்க. திருப்பதிசாரத்துலே இருந்து கிளம்பி, சுசீந்த்ரம் வழியாப் போனாலும் எங்கேயும் நிறுத்தாம  கன்யாகுமரிக்குப்போய் ஸீவ்யூலே செக்கின் ஆச்சு. எல்லாம் புது ஆட்கள்.  அதானே....  போனமுறை வந்தது 2009 இல். இன்னுமா அதே மக்கள்ஸ் இருப்பாங்க?வரவேற்பில் வைக்கும் உருளி அலங்காரம் மட்டும் இன்னும் தொடருது போல!  பழைய அழகும் கவனமும் இல்லையோ....அறைக்குப் போனவுடன், ஐயனை க்ளிக்கினேன். பவர்கட்   அவருக்குமா?  ரொம்பவே மசமச.....கொஞ்சம் ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டு, கெமெரா பேட்டரிகளைச் சார்ஜரில் போட்டு வச்சுட்டுக்  குமரியைப் பார்க்கக் கிளம்பியாச்சு.  காலார நடக்கணும்.  வழியெல்லாம் எப்பவும் போலவே பயங்கரக் கூட்டம்! புதுசுபுதுசா பல வியாபாரங்கள். எங்கே பார்த்தாலும் இட்லிசட்டி!மல்லிப்பந்துகளைப் பார்த்தா விடமுடியுதா?கோவில்வாசலும் கலகலன்னு இருக்கு.  இங்கேயும் உள்ளே போகும் வழியெல்லாம்  மாற்றி வச்சுருக்காங்க. பக்கவாட்டுலே  வாசல். வர்ற கூட்டத்தை இப்படியெல்லாம்தான் சமாளிக்கணும் போல....இங்கே அங்கேன்னு நுழைஞ்சு போய், கடைசியா குமரியம்மன் தரிசனம் ஆச்சு. சந்நிதியில் அவ்வளவாக் கூட்டம் இல்லை. போத்திகள்தான் குறுக்கும் நெடுக்குமாப் போய் அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  ஆனாலும் அம்மன் அதே சிரிச்ச முகத்தோடு சந்தனக்காப்பில் மின்னிக்கிட்டு  இருக்காள்.  அவளை அதிகாரம் பண்ணாமல் இருந்தால் சரின்னு இருக்காள் போல!வெளியே வரும் வழியில் ஒரு மண்டபத்தி[...]திருப்பதி சாரம் என்னும் திருவண் பரிசாரம் (இந்திய மண்ணில் பயணம் 66)

2017-10-23T13:12:52.179+13:00

சின்னதாத் திறந்த கோவில் கதவுக்குள் நுழைஞ்சால் நேரெதிரே கொடிமரம்!  இடதுவலதுபக்க மண்டபத்துத் தூண்களில் பாவைகள் கையில் விளக்கோடு!ஆஹா.... திருவட்டார் கோவிலில் இருக்கற  மாதிரியே !!  என்ன ஒன்னு இங்கே போதுமான வெளிச்சம் இல்லை. மசமசன்னு....சாவிக்காரர் சொன்னபடி வலம் போறோம். நம்மாழ்வார் பாசுரம் !வண் பரிசாரத்திருந்த  திருவாழ்மார்பனை.... பாடறார்!  ஸ்ரீ மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் மார்புக்கு உடையவன்!  நெஞ்சாங்கூட்டில்   வச்சுருக்கான்னு சொன்னது ரொம்பச் சரி! புராணப்பெயர் வண்பரிசாரம்.  மரியாதைக்குரிய திரு சேர்த்து திருவண் பரிசாரம் ஆச்சு.  காலப்போக்கிலோ என்னவோ....   திருப்பதிசாரம் ஆகிப்போச்சே!ஆழ்வார்கள் பாசுரங்கள் பாடி    மங்களாசாஸனம் செய்த நூத்தியெட்டு   திவ்ய தேசக் கோவில்களில்  இந்தக் கோவிலும் ஒன்னு!பெருமாளே   'இவர் நம்ம ஆழ்வார்'னு  சொன்னதால்  சடகோபருக்கு நம்மாழ்வார் என்ற பெயர் நிலைச்சுப் போச்சு.  நாம் பெருமாளின் திருப்பாதங்களைத் தாங்கி இருக்கும்   சடாரி சேவிக்கிறோமே.....  அது  இவரே தான். பொதுவாப் பெருமாள் கோவில்களில்  திருவிளக்கொளியில் தரிசனம் ஆனதும்  துளசி ப்ரஸாதம் கிடைச்சாலும், சடாரி நம் தலையில்  வாங்கினால்தான் பூரண திருப்தி  கிடைக்குது.   சடாரி தலைக்கு வரும் அந்த நொடி, நாம் ரெண்டு கைகளையும் கூப்பி கண்மூடி அதை வாங்கிக்கணும்னு எங்க அம்மம்மா சொல்வாங்க.  அதைமட்டும் விடாமல் நினைவு  வச்சுக்குவேன்!நம்மாழ்வார் அவதார ஸ்தலமுன்னும்  சொல்றா[...]உண்மையாவே தேவுடு காக்க வச்சுட்டான்! (இந்திய மண்ணில் பயணம் 65)

2017-10-20T12:44:13.177+13:00

இவ்ளோ கிட்டேன்னு தெரியாமப்போச்சே.....    ஒன்னே முக்காலுக்குக் கிளம்பி  அம்பதே நிமிட்லெ கோவில் வாசலுக்கு வந்து சேர்ந்துருந்தோம்.  இன்னும் கொஞ்சம் லேட்டாக் கிளம்பி இருக்கலாம், இல்லே?அங்கேயும்தான் கோவில் மூடியாச்சு.  ராமானுஜம் வீட்டுலேயே உக்கார்ந்துருக்க முடியுமா?   அங்கே உக்கார்றதுக்குப் பதிலா இங்கே உக்கார்ந்தால் ஆச்சுன்னு நம்மவர்  ஒரு கட்டைச் சுவர் மேல் உக்காந்தார்.  வர்ற  வழியில் எருவாடி தாண்டித்தான் வரணும். பச்சபிள்ளை அம்மா தற்காகூட ஒன்னு பார்த்தேன்.மனநிலை சரி இல்லாதவங்களை இங்கிருக்கும் ஒரு  பெரிய தர்காவுக்குக் கூட்டி வந்து மந்திரிப்பாங்கதானேன்னதுக்கு அது கீழக்கரையாண்டை இருக்கும் ஏர்வாடி, இது நெல்லை எருவாடின்னு  பதில் கிடைச்சது. பெயர் குழப்பம் வந்துருச்சே....தோழியின் பெயர் கூட ஒரு இடத்தில் பார்த்தேன்!  வள்ளியூர் கடக்கும்போது எங்கே பார்த்தாலும் காற்றாலைகள் !  காத்தே இல்லாததால் எல்லாம் ச்சும்மா நின்னுக்கிட்டு இருக்கு.ஆரல்வாய்மொழி  பெயர்ப்பலகை பார்த்ததும்.... ஹைய்யோ  எவ்ளோ அழகான பெயர்னு  இப்பவும் ஆச்சரியம்தான்!திருவண்பரிசாரம் என்ற திருப்பதிசாரம் கோவிலுக்குத்தான்  வந்துருக்கோம்.கோவிலுக்கான  அலங்கார வாசல் அழகு! கடந்து போய் கோவில் வாசலுக்குப் பக்கம் வண்டியை நிறுத்தினார் சீனிவாசன்.எதிரில் ஒரு பெரிய குளம்! கோவில் புஷ்கரணி.  உள்ளே போக சின்னதா ஒரு மண்டபம். கருங்கல் இருக்கையும் கட்டைச்சுவருமா இருக்கு! மரத்தடியில் புள்ளையா[...]