Subscribe: Welcome to your senses
http://avyukta.blogspot.com/feeds/posts/default
Added By: Feedage Forager Feedage Grade B rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: Welcome to your senses

Welcome To Your Senseswww.Krty.netUpdated: 2017-09-29T02:21:17.447-07:00

 நடை பழகு

2017-06-23T22:13:19.331-07:00

"வா. வாக்கிங் போலாம்" என்று அனந்துவை அழைத்தேன்."ஓகே" என்று சொல்லி கிடு கிடு என்று பிஞ்ச செருப்பு ஒன்றை மாட்டிக்கொண்டான். எப்பொழுதுமே அதையே ச்சூஸ் செய்வதன் காரணம் அறியேன். "அதுவேண்டாம். ப்ளூ போட்டுக்கோ" என்று அவன் மகிழ்ச்சியையும் என் மானத்தையும் தராசில் நிறுத்தி, மானமே மானப்பெரிது என்று தீர்ப்பு வழங்கி கட்டளையாய் அவனிடம் திணித்தேன்.ஹ்ம்ம்..  சாதா மேட்டருக்கெல்லாம் இப்படி சீமான் கணக்காய் பொங்கத் தேவையில்லையே.. ! ஆனால் இப்படி Responsible Parentஆய் யோசிப்பதுதான் டிரெண்ட். குழந்தைகளின் தனித்துவத்தைப் பேணுவது என்பது கேனத்தனமான ஒரு விஷயம், என்பது என் தனித்துவமான கருத்து. எனிவே.. ப்ளூ க்ராக்ஸ் செருப்பு மாட்டிக்கொண்டு, படிகளில் துள்ளிக் குதித்து எனக்கு முன்பாக சென்று கொண்டிருந்தான்.வீட்டிலிருந்தாலும், மழ மழ என்று தரைபுரள எட்டு முழ வேட்டியே கட்டியிருந்த நான், வேளச்சேரி குடிபெயர்ந்ததும், இரண்டு நாடா வைத்த அரை டிராயர் வாங்கி வைத்திருந்தேன். அதில் ஒன்றில் ஜம்ப் அடித்து நானும் அனந்துவுடன் கிளம்பினேன்.ரெண்டுங்கெட்டான் காலை வேளை. மணி எட்டரை ஆகியிருந்தது. வீட்டில் இன்னும் இட்லி, குக்கரில் liquid state to solid state ஆகிக்கொண்டிருந்தது. கிழக்கு நோக்கி நடந்தோம். சுளீரெனச் சூரியன் அனந்துவைப் பார்த்துக் கண் அடித்தான்."அப்பா.. ஒம்ப ஹாட்டா இக்கு !" என்றான் அனந்து. இன்னும் "ர" வரவில்லை. நா பிரளவைக்க நானும் ப்ரயத்தனப்படுகிறேன். "இட்ஸ் ஓகே ! கொஞ்ச தூரம்தான், அப்புறம் நிழல் வந்துடும்" என்று அவன் கைபிடித்து இழுத்துக்கொண்டே நடந்தேன்.ஏழுமாதமாக அயராது வேலையில் மூழ்கி இகபர துக்கங்களனைத்தும் அனுபவித்து, திடீரெனப் பனியாக விலகிய பளுவினால், ஒருவழியாக இலஃகுவாகியிருந்தொரு சனிக்கிழமை அது. குழந்தையோடு இன்றைக்கு ஒரு மெமரி செய்யவேண்டும் என்ற முனைப்பில், இந்த [...]சுபஜனனம்

2014-06-29T01:04:42.664-07:00

"சார்.. இன்ஷூரன்ஸ் க்ளியர் ஆயிடுச்சா..""ஸ்ரீலக்ஷ்மி தானே... பாத்துட்டு இருக்கோம் சார்.. உங்கள்துதான்.. கொஞ்சம் லேட்டாவும்.. ரூமுக்குப் போங்க.. ஃபோன் பண்ணி சொல்லறோம்.""தாங்க்ஸ்.. கொஞ்சம் சீக்கிரம் முடிச்சுருங்களேன்.. !""பாத்துட்டுதானே இருக்கோம். இந்த சாரைப் பாருங்க"ஒரு அவஸ்தையான முகத்துடன் உட்கார்ந்திருந்த ஒருவரை நோக்கி கை காட்டினார்."இவரு, நேத்திலேந்து வெய்ட்டிங். சிஸ்டம்ல அப்ரூவல் வந்துருச்சுன்னா உடனே டிஸ்சார்ஜ் பண்ணிரலாம்."சனிக்கிழமை வேறு. இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆனாப்லதான் என்று ரூமுக்கு வந்தேன். மணி ரெண்டேகால்.மூன்று நாட்களுக்கு முன்னால் டெலிவரி. நினைவில் இன்னும் நுணுக்கமாய் ஞாபகம் வருகிறது. நானும் பல சினிமாக்கள் பார்த்து, லேபர் வார்டுக்கு வெளியில் குறுக்கவும் நெடுக்கவும் வாள்நுதல் நெற்றியில் கீற்றாய் ஒரு வியர்வைத் துளியுமாய் நடப்பதுதான் தந்தையாகப்போகிறவனின் முதல் கடமை என்று நம்பியிருந்தேன். The first step as a father is the several steps outside the delivery room. ஆனால், அந்த சமயம் என்று வரும்போது, வயிற்றில் தானாய்ப் பட்டாம்பூச்சி பறந்தது. பட்டாம்பூச்சியா அது ? பதினைந்து பருந்துகள் மாதிரியல்லவா இருந்தன. நிலையாக உட்கார முடியவில்லை. எழுந்து நடப்போம் என்று என்னைக்கேட்காமலேயே வாலன்டரி ரிஃப்ளெக்ஸாக எழுந்து நடப்"கங்ராட்ஸ். அப்பா ஆயாச்சு." என்றார் நர்ஸ்.நான் பார்க்கவே பார்திறாத, பழகாத, தெரியாத ஒரு உயிருக்காக அனிச்சையாக கண்ணீர் மல்கியது. சுற்றியிருந்தவரெல்லாம் கை கொடுத்தனர். தன் மகனைத் தந்தை எனக்கேட்ட தாயாக என் அம்மா அடைந்த சந்தோஷத்தை வார்த்தையில் விவரிக்க முடியாது. "அய்யனாரப்பா !" என்று கை கூப்பி நன்றி சொன்னார் என் அப்பா. யாரும் வீணை வாசிக்காமலே, அந்தக் கூச்சல்களெல்லாம் ஒரு மங்கள இசையாக என் காதிலும், என் நினைவுகளிலும் இன்னும் [...]Nausea

2014-06-05T21:00:37.241-07:00

விருமாண்டி படத்தில் "கருமாத்தூர் காட்டுக்குள்ளே" பாடலில் வரும் வரி.. சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல தாக்கி முகம் சுழிக்க வைக்குது என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க போங்கினானே பேய்க்காமனே!சைவ சமையலின் - அதாவது பொங்கல் வைத்துப் படைக்கும் பேச்சியம்மாவின் சமையலின் - வாசனை முகம் சுளிக்க வைக்கிறதாம் பேய்க்காமனுக்கு. அதெப்படி !.. அசைவ சமையலாவது அப்படிச் சொல்லலாம்.. பொங்கல் நல்லா கமகமன்னுதான...ே இருக்கும் ? ஒரு கதாபாத்திரத்தின் குரூரத்தை இது காட்டுகிறது. நீட்டி முழக்கி ஒரு கதாபாத்திரத்தை எழுத்தில் செதுக்க முடியும். ஆனால், ஒரு பாடலில் ஆரம்பித்து, மூன்றாவது பத்திக்குள் ஒருவன் தீயவன் என்று கேரக்டர் பில்டப் செய்திருக்கிறது இந்தப்பாடல். "மாட்டுக் குடல் எடுத்து மாலையாகப் போட்டுத்தான், பேச்சியம்மா இடத்துக்கவன் வந்தானே" என்று பாடல்வரி வரும்போதே நம் மனம் "பேய்க்காமன்" குணத்தை Evil = Evil + 1; என்று கணக்கெழுதிக்கொள்கிறது. ஆங்கிலத்தில் "ஸேவ் தி கேட்" என்று ஒரு புத்தகம் உண்டு - திரைக்கதை எழுதுபவர்களுக்காக. அதில் இந்த "ஸேவ் தி கேட்" என்னவென்றால், பழங்காலப் படங்களில் கருப்பு வெள்ளையிலும் வெள்ளையாக ஹீரோ திரையில் நுழையும்போதே ஏதாவது நல்லது செய்வார்... உதாரணத்துக்கு ஒரு விழப்போகும் அல்லது அடிபடப்போகும் பூனையைக் காப்பாற்றுவார். ஒரே காட்சியில் எப்படி இரத்தின சுருக்கமாக ஒரு கருத்தை அல்லது குணாதிசயத்தை உணர்த்துவது என்பது உட்பட ஒவ்வொரு காட்சியையும் எப்படி "பத்தி பத்தியான" கதையை திரைக்கு ஏற்றார்போல் காட்சியாக எழுதுவது என்று விளக்கும் புஸ்தகம். நானும் வாங்கிப் படித்திருக்கிறேன்.. இன்னும் திரைக்கதைதான் எழுதவில்லை. இதையெல்லாம் ஏன் யோசிக்கிறேன் ?!இப்படித்தான்.. மனம் எங்கேயோ ஆரம்பித்து எங்கெங்கோ அலைந[...]ஓராயிரம் வார்த்தைகள்

2014-06-05T21:01:28.759-07:00

இந்தக் கடவுள்கள் எல்லாம் காலையை எப்படித்தான் கழிக்கிறார்களோ, தெரியவில்லை.. ஆனால், மனிதர்கள் எல்லாம் விஜய் டி.வி யைப் போட்டு பக்தி வெள்ளத்தில் பகவானை தெளியவைத்துத் தெளியவைத்து மூழ்கடிக்கிறார்கள். பக்திப்பரவசத்தில் காதில் பால் ஊற்றினால் ஒரு நிமிடத்திற்குள் தயிர் ஆகும் அளவுக்குப் புளிக்கிறது. புரானக் கதை சொல்பவர், தன் இஷ்டத்துக்கு தான் நல்லது என்று நினைப்பதையெல்லாம் பகவான் சொன்னதாகவும், உணர்த்துவதாகவும் சொல்கிறார். தெருவுக்குப் பத்து கோயில் இருக்கும் தமிழகத்தில் சென்ஸஸ் கணக்குப்படி ஒரு பதினைந்து லட்சம் கடவுள்கள் இருப்பார்கள். இவர்களையெல்லாம் விட்டு விட்டு புரந்தரதாசரை "பம்பாய் நடிகை" கணக்காய் நம்மூருக்கு இட்டாந்து பாண்டுரங்க பஜனை பாடிக்கொண்டிருப்பார்கள். இதிலே இந்த பஜனை பாட சங்கீத ஞானமோ, குரல் வளமோ தேவையில்லை போலும். "விட்டலா !!!" என்று டோலக்குக்குப்போட்டியாக ரிதம் போட்டுப் பாடினால், ஆடியன்ஸில் ஒரு மாமி சீட்டுக்கு வெளியே வந்து முதுகிலிருந்து திருப்பாச்சி அருவாள் எடுப்பதுபோல, இரண்டு கோல்களை எடுத்து  நயமாக (கொஞ்சம் பயமாகவும்) ஆடுகிறார். போட்டிக்கு ஒரு மாமா, இருந்த இடத்தில் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு எம்பி எம்பி குதித்து தன்னைப் பாண்டுரங்கஸ்வரூபமாக எண்ணிக்கொண்டு ஆடுகிறார். இதெல்லாம் உண்மையான பக்திதானோ என்னவோ.. போகிற போக்கில் பகவானே நாத்திகனானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு மட்டும் சேனலை அவசரமாக மாற்றவேண்டும் என்ற சிந்தையுள் நின்றததனால் , அவனருளாலே அவன் தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சேனலை மாற்றினேன்.கஷ்டகாலம்

2013-05-28T22:42:29.609-07:00

ஆடியபாதம் வீட்டில் பவர் கட்டாகியிருந்தது. மணி இரவு பத்தைத் தாண்டிவிட்டது. அவர் வீட்டில் இன்வர்ட்டர் பேட்டரி ரிப்பேர் வேறு. சுழலாத காற்றாடியும் எரியாத மின்விளக்கும்தான் இனி தமிழ்நாட்டின் தேர்தல் சின்னங்கள். இரண்டு மணி நேரம் மின்சாரம் தினம் மிச்சம் பிடித்தது போக உபரியாக இப்படி இரவில் அணைத்து ப்ராணனை வாங்குகிறார்கள் கிராதகர்கள். ஆடியபாதத்திற்கு கும்பகோணம் பூர்வீகம். அங்கிருந்து பிச்சையான பிச்சையடித்து டிரான்ஸ்ஃபர் வாங்கி குழந்தைகள் படிப்பிற்காக சென்னை வந்து தினம் க்ளோரின் தண்ணியில் தலைக்கு குளித்ததாலும், நடுத்தர வர்கத்தின் கனக்கும் சுமைகளின் வலியினாலும் தலைமுடியெல்லாம் கொட்டி, அங்கே தடையில்லாமல் வியர்வை அருவியாய் கொட்டிக்கொண்டிருந்தது. குத்தாலத் துண்டை ஈரத்தில் நனைத்துப்பிழிந்து சட்டை போடாத உடம்பில் சுற்றிக்கொண்டார். ஒரத்தில் லேசாகத் தையல் பிரிந்த இரும்பு ஈஸி சேரில் அன்-ஈஸியாக உட்கார்ந்திருந்தார். வெளியை விட உள்ளே அதிகப் புழுக்கம். "வந்துப் படுங்க.. அரை மணி நேரத்துல வந்துரும்". "...."ஆடியபாதம் காதில் இதுவும், இதற்கு இருபது மணி நேரம் முன்னரிலிருந்து பேசியது எதுவுமே விழவில்லை. மனம் வேறெங்கோ சிக்கியிருந்தால், சதா திறந்த காதும் இறந்த காதுதான். ஏழையாகிப்போன பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவர் ஆடியபாதம். பதினைந்து வயதிலிருந்தே முதுமை ஆரம்பித்துவிட்டது. படிக்கும்போதே பாத்திரக் கடை வேலை செய்து அப்பாவின் எஞ்சிய சில நிலங்களில் பலதை விற்று அக்காவுக்கு கல்யாணம் செய்தாயிற்று. வேண்டாத சகவாசத்தால் சீட்டுக் கச்சேரியில் பாகவதராகிப்போனார். தீம்பழக்கத்தால் கொஞ்ச கொஞ்சமாக வருமானமும், கடைசியில் வேலையும் முற்று பெற்றது. அம்மா ஒரு நாள் ஒப்பாரிவைத்து உடம[...]விஸ்வரூபம் !

2013-01-06T05:31:40.824-08:00

Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai Vendru Sarithiram Padaippavan, Nyabagam Varugiradha ! Yarendru Purigiradha ! Ivan Thee Ena Therigiradha ! Thadaigalai [...]2013 ஜோ(ஹா)ஸ்யம்.

2012-12-31T01:05:22.659-08:00

1. மின்சாரத் தட்டுப்பாடு கணிசமாகக் குறையும். விசிறிக்காம்பில் முதுகு சொறிந்துகொண்டபின்னர், பக்கத்தாத்து மாமா மாதிறி ஒரு பத்து லட்சம் மாமாக்கள் மாநிலம் முழுதும் விசிறிக்கொள்வதால், காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகமாக வாய்ப்பு உள்ளது. 

2. மதுபானக் கடைகளில் திருட்டு குறையும். எல்லாவற்றிலும் பூட்டுப்போடப்பட்டு விட்டதால், பாதுகாப்பாக வியாபாரம் நடக்கும்.

3. கேபிள் டி.வி. டிஜிட்டல் மயமாக்கல், கார்க் கண்ணாடிகளில் சன் பிலிம் பிய்த்தல், தலைகளில் ஹெல்மெட் அணிதல் போன்ற சட்டங்கள் எல்லாம் சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் கட்டாயமயமாக்கப்படும்.

4. மே மாசம் வெய்யில் சென்ற வருடங்கள் இல்லாத அளவிற்கு கொளுத்தும். (இது எந்த வருடத்துக்கும் பொருந்தும் ஜோஸ்யம்).

5. விலைவாசி வெகுவாகக் குறையும். சம்பளம் எக்கச்சக்கமாக உயரும். அப்புறம் விடிந்ததும் விழிப்பு வந்து க்னவு கலைந்துவிடும்.

6. ஒபாமாவுக்கு ரிட்டையர்மென்ட் இன்னும் நான்கு வருடங்களில் என்பதால், ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் பென்ஷனை நமது ஆறாவது சம்பளக் கமிஷன் மாதிரி உயர்த்த வாய்ப்பு உள்ளது.

7. இந்த வருடம் ஆப்பிரிக்காவின் எந்த நாட்டில் கிளர்ச்சி விழா வைக்கலாம் என்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும்.

8. சுஷ்மா ஸ்வராஜ் 2014 பிரதம மந்திரி பதவிக்கு பாஜக சார்பில் போட்டியிட முன்மொழியப்படுவார். மூன்றாவது அணி என்ற தமாஷ் மீண்டும் செய்தித்தாள்களில் ஜோக்குகளுக்கு பதிலாக வெளியாகும்.

9. பெண்கள் பாதுகாப்புக்காக சட்ட மாற்றங்களும் சில கட்டுப்பாடுகளும் உருவாக்கப்படும். அதை முன்னர் சொன்ன Point 3யோடு சேர்த்துக்கொள்ளவும்.

10. இரண்டு புதிய புயல்கள் வீசும். ஒன்றுக்காவது  நமீதா பெயர் சூட்டப்படும்.

11. படம் வெளிவரும் நாள் முன்பே DTH என்பது பழகிப்போய், அடுத்தகட்டமாக சிலர் படம் எடுக்கும்போதே DTHல் காண்பிப்பர்.

12. செல்போன்களின் அகலம் உள்ளங்கையைத் தாண்டும். டேப்லட் கம்ப்யூட்டர்கள் க்ரோசினை விட அதிகமாய் விற்கும்.

13. தஞ்சாவூர் வரை சென்னை விரிவாக்கப்பட்டு, சென்னையிலிருந்து கல்லெறி தூரத்தில் இருக்கும் ஜெயங்கொண்டானில் முன்னூறு சதுர அடியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட அதி நவீன வசதிகளுடன் இன்டிபெண்டன்ட் வில்லா எழுபது லட்சங்களுக்கு விற்கப்படும்.

14. வால்மார்ட்டில் இந்த வருடம் ஆடித் தள்ளுபடி விளம்பரம் இருக்கும்.

15. IRCTCல் லாட்டெரி டிக்கெட் அறிமுகம் செய்வார்கள். குலுக்கல் எல்லாம் கிடையாது. டிக்கெட் வெறுமன வாங்க முடிந்தாலே உங்களுக்குப் பரிசு நிச்சயம்.

16. நவம்பர் 12, 2013 (11/12/13)ல் உலகம் அழியும் என்று மாயாண்டி காலெண்டரில் தினப்பலன் போட்டிருக்கும்.

17. ஃபேஸ்புக்கின் குறைந்தபட்ச வயது வரம்பு குறைக்கப்படும். 66A இவர்களுக்குப் பொறுந்தாது.

18. பேருந்தில் படியில் தொங்கும் வயதானவர்களுக்கு பஞ்சப்படி கிடையாது என்று சட்டம் வரும்.

19. புதிது புதிதாய் பழமையான கோயில்கள் தோன்றும்.

20. 2013 போனதே தெரியலை.. கண்மூடிக் கண் திறக்கறத்துக்குள்ளே.. அவ்ளோ ஃபாஸ்ட். ஓடியே போயிடுத்து.. என்று எல்லோரும் நம்புவோம்.

சுபம்.வெய்யத்தாழ !

2012-06-17T23:20:41.960-07:00

சென்னையில் இன்று காலை காரோட்டி வந்தது, ஆலப்புழையின் பேக்வாட்டர்ஸில் போஹவுஸில் பயணிப்பதுபோன்ற சுகானுபவம். இன்றைக்கு புதிதாக சென்னை வந்து இறங்கியவர்கள், அவர்கள் போனில்கேட்ட வெய்யில் புலம்பல்களை நம்பப்போவதில்லை. அதுவும் எனக்கு மிகவும் இஷ்டமான திங்கட்கிழமையில் (!) இப்படி ஒரு மந்தாரமான காலைப்பொழுது.. மெல்லிதாக தூரல் போட்டு முடிந்து நான் செல்வதற்காக சென்னை புறவழிச் சாலையை மொழுகித்தயாராக வைத்திருந்தது இயற்கை. அரிசிமாவு புள்ளிக்கோலம் போட்டிருந்தால், திருவைய்யாறு தியாகராஜனின் தேரில் பயணம் செய்த அனுபவம் இருந்திருக்கும். இந்த வழவழப்பான ஒயிலாக வளைந்து செல்லும் அழகான தார்ச்சாலைகள் இன்னுமும் நீளாதா என்ற ஏக்கத்தோடு, கார் கண்ணாடியை இறக்கிவிட்டு ஜிலுஜிலு காற்றில் நேற்று வெட்டிய சம்மர் ஷார்ட் கட்டில் தப்பித்த தக்குணூண்டு முடிகள் கொஞ்சமாக அசைந்தபடி அலுவலகத்திற்குப் பயணம். இந்தக் காப்பி குடித்தால் சுறுசுறுப்பாக மூளை இயங்கும் என்பார்களே.. அது எந்த அளவுக்குப் பொய்யோ.. அப்படித்தான், இந்த மாதிரி புத்துணர்வு தரும் climate settingsல் புத்துணர்வு வருவதில்லை (அனேகமாக எனக்கு மட்டும்).. மாறாக இரண்டு கைகளை நீட்டி யேசு நாதரைப்போலே சோம்பல்முறித்தால் அப்பப்பா ! என்ன சுகம். மதியவேளைகளில் தூங்கமாட்டேன்.. "பாடம் !" என்று அம்மாவுக்கு உபநயனத்தில் சத்தியம் செய்ததை மீறும் தைரியத்தைத் தரும் சோம்பல். சோம்பேறித்தனம்போன்ற போதை எதுவுமே இல்லை.ஸ்வாரஸ்யமில்லாத இரண்டு மணி நேரம்

2012-05-16T04:16:19.967-07:00

டீஸல் அம்பாஸடரின் அதிர்வான ஓட்டத்தில் கன்னத்து சதைகள் குலுங்கியபடி மாயவரம் இரயிலடிக்கு வந்து சேர்ந்தபோது மணி சரியாக பத்தரை. மயிலாடுதுரை சந்திப்பு என்று ஒளிர்ந்துகொண்டிருந்த பச்சை நியான் விளக்கின் வெளிச்சத்தில் டிக்கிக்குள் சாவியை நுழைத்து திறந்து பைகளை இறக்கிவைத்துக் கொண்டிருந்தான் டிரைவர் கிருஷ்ணன். இரண்டு நாட்கள் சுற்றிய சுற்றில், அந்த அம்பாஸடரின் சோபா செட்டிலிருந்து கிஸான் டொமேட்டோ கெட்சப் மாதிரி அவஸ்தையாக கீழிறங்கிக்கொண்டிருந்தோம். நான், என் சகதர்மினி, என் அம்மா. அப்பா மட்டும் பின்சீட்டிலேயே இன்னும் அமர்ந்திருந்தார். வண்டிக்கூலி செட்டில் செய்ய கிலோமீட்டர்களை கூட்டி கழித்து சலவை நோட்டுகளை எண்ணிக்கொண்டிருந்தார்.கீழிருந்த பைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு பதினோறு படிகள் மேலேறிக் கொண்டு வைத்தேன். எங்கள் இரயில் வரவேண்டிய நேரம் பன்னிரண்டு முப்பத்து எட்டு. இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது. டிக்கெட் கவுண்டரில் மட்டும் ஃபேன் ஓட அதன் காற்றுப்பாதையில் இருந்த ஒரு மெல்லிய புஸ்தகம் திறந்து மூடி சப்தம் செய்துகொண்டிருந்தது. தரையில் நாலைந்துபேர் லுங்கி போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருந்தார்கள். பத்தரை மணி நிசப்தம் அம்பாசடரின் கதவு அடைக்கப்படும்போது மட்டும் அகன்று திரும்பியது. அப்பா வந்தார். பின்னாலேயே கிருஷ்ணன் "சரி சார்.. ! நான் வரேன்.. நல்லபடியா போயிட்டுவாங்க.. அடுத்தாலே வரப்போ செல்லுக்கு அடிங்க.. நான் வந்துர்ரேன்.." என்றபடி கைகுலுக்கி கொஞ்சமாகச் சிரித்து விடைபெற்றுக்கொண்டான். அப்பா அதிகமாக பேரம் பேசியிருக்கக்கூடும்."எப்போடா நம்ம வண்டி ?""இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கு" உறவினர்களை உறங்கவிடாமல்செய்ய மனமில்ல[...]குலதெய்வம்

2012-05-14T22:17:52.879-07:00

என் குலதெய்வக் கோயிலில் நடக்கும் ஸம்வத்ஸராபிஷேகத்தில் கலந்துகொள்ள வருடா வருடம் மே மாசம் மாத்தூர் செல்கிறேன். என் குல தெய்வம் மாயவரம் செம்பனார்கோயில் ஆக்கூர் அருகில் உள்ள மாத்தூர் எனும் கிராமத்தில் இருக்கும் காவல் தெய்வமான அய்யனார், ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத சாஸ்தா பணீச்சரயப்பர். ஐயப்பனின் சொரூபம். இந்தக்கோயில் கடந்த பதினெட்டு வருடங்களில் அடைந்திருக்கும் வளர்ச்சியை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.நிற்க.இந்த "குலதெய்வம்" கான்செப்ட் என்ன ?என் அப்பா, அவர் அப்பா, அவர் அப்பா என்று ஒரு இன்ஃபைனைட் லூப் போட்டு அது போய் முடியும் இடத்தில் உள்ள அப்பா, எந்த தெய்வத்தை வழிபட்டு வந்தாரோ, அந்த தெய்வம் என் குலதெய்வம் ஆகிறார். சில வழக்கங்களில், நமது முன்னோர் ஒருவரையே தெய்வமாக வழிபட ஆரம்பித்து வழிவழியாக வணங்கி "Demi God" என்று சொல்வார்களே, அந்த மாதிரி மனிதனாக இருந்து கடவுளாக மற்றவர்கள் வழிபட ஆரம்பித்து, காலத்தால் தெய்வமாகவே மருவிவிடுகிறார்கள்... அவ்வழிகளில் அவரே குலதெய்வமாகிறார். பல ஊர்களில் காவல்தெய்வங்கள் குலதெய்வமாக இருப்பதின் சரித்திரம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.முக்கியமாக, நமது குலதெய்வத்தை நமது முன்னோர்கள் வழிபட்டு இருக்கின்றனர். நமது தாத்தாவை அந்த தெய்வம் பார்த்திருக்கிறது. அவரது தாத்தா, பாட்டனார், முப்பாட்டனார் என்று ஆதிசந்ததி முன்னோர்கள், அதாவது நமது இரத்தசம்பந்தங்களை பார்த்த ஒரே தெய்வமாக இருப்பது அனேகமாக நமது குலதெய்வம் மட்டும்தான். திரைகடலோடித் திரவியம்தேட நமது முன்னோர் திக்கெட்டும் பறந்திருந்தாலும், அவர்கள் ஆரம்பித்த இடத்தில் நங்கூரமாக நின்றுகொண்டிருக்கும் தெய்வம் - The குலதெய்வம்.இப்பொழுது ப[...]டெக்னாலஜி ஹாஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச் யா !

2012-05-10T03:26:37.276-07:00

ஆபிஸில் இரண்டு, வீட்டில் மூன்று, பின் எங்கு சென்றாலும் ஒன்று என்று தகவல் தொடர்பு சாதனங்கள் அளவுக்கு அதிகமாக என்னைச் சுற்றி சூழ்ந்திருக்கின்றன. எனது டெஸ்க்டாப், லேப்டாப், ஐபேட், ஸ்மார்ட்ஃபோன், ஸ்மார்ட் டிவி இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் தொழில்நுட்பம் விரயமாய் இறைந்து கிடக்கிறது. ஒரு நாள் அனந்தசயனத்தில் ஐபேடை இயக்கிக்கொண்டிருக்கையில், முதன் முதலில் கம்ப்யூட்டரை நேரில் பார்த்த நாள் நினைவுக்கு வந்தது.வில்லிவாக்கம் பாபா நகர், தூய யோவான் மேனிலைப்பள்ளி (St Johns என்பதன் தமிழாக்கம்).  உத்தேசமாக ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில்... அப்போதைய மரபில், ரிஸெஸ் பிரேக் என்று தனியாக கிடையாது. கஜேந்திர மோட்சக் கதையில் "ஆதிமூலமே !" என்று கஜேந்திரன் கதறியதைப்போல யாராவது அடிவயிற்றைப் பற்றிக்கொண்டு "மிஸ்ஸ்ஸ்ஸ் !" என்று எழுந்தால் போதும், எங்கள் கிளாஸ் டீச்சர், "ஆல் ஆஃப் யூ ஃபார்ம் எ லைன். ஹாண்ட்ஸ் அட் தி பேக்" என்று கார்கிலில் போருக்குத் தயாராகும் சைனியங்களைப்போல வரிசைப் படுத்தி, ஓரத்தில் ஒரு பினாயில் நாற்றமடிக்கும் பாத்ரூமுக்கு சிற்றுலா அனுப்பிவைப்பார். அப்படி ஒருமுறை நகர்வலம் வந்தபோது புதிதாக ஒரு அறை தயாராகிக்கொண்டிருந்தது தென்பட்டது. நான் படித்த பதினாலு வருடங்களில் அந்தப்பள்ளி செங்கல் செங்கலாக வளர்ந்த வளர்ச்சி எனக்கு நன்கு பரிச்சயமானது. பள்ளித் தாளாளர் அறைக்கு அருகில் இன்னொரு குளிரூட்டப்பட்ட அறை. கண்ணாடி ஜன்னல், திரைச்சீலை, வாசலில் ஃப்ளோர் மேட் என அந்தக்காலத்து அந்தப்புரமாய் ஜொலித்தது. மேன்மக்கள் (seniors) மட்டும் உள்ளே சென்று வந்தனர். "அதுதான் கம்ப்யூட்டர் லேப்" என்று என் பக்கத்தில் இருந்த ஆரு[...]Just before Baghwat Gita

2012-05-06T23:35:49.214-07:00

பார்த்தசாரதி பாஞ்சஜன்யம் ஊதினான். பார்த்தன் தேவதத்தன் என்னும் சங்கை ஊதினான். இன்னபிற பாண்டவாதிகள் மற்றும் சேனையர் தத்தம் சங்குகளை எடுத்து முழங்கியதை சஞ்சயன் சொன்னதிலேயே திருதராஷ்டிரனின் மார்பு நடுங்கியது.

அர்ஜுனன் சொன்னான், "பரந்தாமா, என்னை இரு சேனைகளுக்கும் இடையில் நிறுத்திவை. யாரோடு சேர்ந்து யாரை எதிர்த்து நான் யுத்தம் செய்யப்போகிறேன், என்று பார்க்கவேண்டும்."

ரதோத்தமனான கிருஷ்ணன், இரு சேனைகளுக்கு மத்தியில், மிகத்தேர்ச்சியான பாகன் போல மிகச்சரியாக தேரை நிறுத்தினான்.

எதிரணியில் திரண்டிருக்கும் சேனாதியோரைக் கண்டு பார்த்தனின் மனம் கலங்குகிறது. அவன் உடம்புத்தசைகள் வலுவிழந்தன. நா வறண்டது. உடம்பு நடுங்கியது. காண்டீபம் கையில் வழுக்குகிறது. மேனி சுடுகின்றது. சாந்தம் குலைந்து அமங்கல நிமித்தங்கள் மனதில் தோன்றின.

"ஹே கோவிந்தா ! ஆச்சார்யர்களும், பித்ருக்களும், மித்ருக்களும், மாமனார்கள், தாத்தாக்கள், மைத்துனர்கள் மற்றும் இன்ன பிற பந்துக்களும் தங்கள் ராஜ்ஜியம், சுகசம்பத்துக்கள் எல்லாவற்றையும் இழக்கத்தயாராய் நிற்கிறார்களே.. இவர்களை யுத்தம் செய்து வெற்றி காண்பதில் என்ன சந்தோஷம் வரப்போகிறது ? இந்த வெற்றியில் மூவுலகும் கிட்டினாலும் நான் வேண்டேன். நான் மடிந்துபோனாலும் கவலையில்லை" என்றான்.

நாற்பது லட்சம் சேனைப்படைகள் யுத்தத்துக்கு தயாராக அணிவகுத்து நின்றுகொண்டு, சேனைத்தளபதிகளின் போராரம்ப சிமிஞைக்குக் காத்துக்கொண்டிருக்கும் வேளையில், இப்படிப் பேசிய அர்ஜுனனைப் பார்த்து பரந்தாமன் சொன்னான், "You've gotta be fuckin kidding me !".
Only Kamal !

2012-05-04T08:41:45.696-07:00

This segment is not very difficult. The next set will be a tad more distorted. But i still bet, Kamal fans can eaily decipher.KRTY.[...]Viswaroopam Starts

2012-05-03T23:40:32.090-07:00

கமல்ஹாசன் படம் வருகிறது என்றாலே "சித்தம் எல்லாம் கமல் செயல்" ஆகிவிடுகின்றது. அன்னாரது படங்களைப் பார்த்து அதன் பாதிப்பில் செதுக்கப்பட்ட சிந்தனைகள் என்னுடையவை. என்னுடைய கலாரசனை, தொழில்நுட்ப ஆளுமை, தமிழ் affinity (பற்று இல்லை), சமுதாயக் கோபங்கள், சைவமும் வைணவமும் பரிமளிக்கும் நாத்திகம் எல்லாம் கமல்ஹாசன் என்ற ஃபினாமினானினால் வந்தவை. பாரதியாரையும், பட்டினத்தாரையும், சுஜாதாவையும், இந்திரா பார்த்தசாரதியையும், களேபரர் காலத்தையும், வல்லவரையன் வந்தியத்தேவனையும், கோபுலு கார்ட்டூனையும், க்ரேஸி மோஹன் காமெடியையும் நாடி, தேடிச் செல்லவைத்த ஒரு காம்பஸ், கமல். 

அவர் படம் விஸ்வரூபம் கூடிய சீக்கிரம் திரையில் வருகிறது என்றால், சும்மா இருப்போமா ?!

My photoshop attempts using the Movie logo.


Kamal and Sujatha

2012-05-03T01:14:38.894-07:00விக்ரம் ஒரு வட்ட வடிவப் படுக்கையில் படுத்திருந்தான். எதோ ரோமாபுரி மன்னன்போல் லூஸாக உடையணிந்திருக்க, இந்தப்பக்கம் திராட்சை ரசம் ஒருத்தியும், அந்தப்பக்கம் மாதுளை ரசம் இன்னொருத்தியும் தர, அருகே பிறிதொருத்தி உடம்பு பிடித்துவிட, கைத்தாங்கலாக ஒரு கை ராஜகுமாரி மேலும், மற்றொருகை ப்ரீத்தி மேலும் போட்டுக்கொண்டு கோப்பையைச் சீப்பிக்கொண்டிருந்தான்.

"அப்படியா ! இப்ப எப்படி இருக்கே ? எங்க இருக்கே ?" என்றார் ராவ் புன்னகையுடன்.

"ஆஸ்பத்திரியில் ! சலாமியா ஆஸ்பத்திரியில். நல்ல அடி!"
இளவழகன் ரிஸீவரைப் பற்றிக்கொண்டு, "எங்கெல்லாம் வலிக்குது ?"
"உடம்பு பூராங்க,:" அவர்கள் இருவரும் புஜங்களைப் பிடித்துவிட,
"கை கால் எல்லாம் அமுக்குறாப்ல வலியா ?"
"ஆமாங்க கரெக்டாச் சொன்னீங்க!"
"மருந்து சாப்பிடறியா?"

"ஆமாங்க. இப்பக்கூடச் சாப்பிட்டுகிட்டு இருக்கேன்!" என்றான் கோப்பயை நாக்கு நுனியால் நிரடி.

"மாம்பழம், மாதுளை, எலந்தை இப்படிப் பழங்களாகவே நிறைய சாப்பிடு!"

"அது இந்த ஊர்ல நிறையக் குலுங்குதுங்க. ராவ்கிட்ட சொல்லுங்க. இந்த மாதிரி உடம்பு சரியில்லாததால.."

ராஜகுமாரி எதிரே இருந்த காமிராவைக் காட்டினாள். விக்ரம் அதை உடனே உணர்ந்து, "மிஸ்டர் ராவ், ஏம் ஐ ஆன் டிவி ? மை காட் !"

"ஆமா, வீடியோ கூட எடுத்திட்டு இருக்கோம்."

"இது ரொம்ப அநியாயம்," என்று இந்தப்பக்கம் அந்தப்பக்கம் பார்த்து ஒரு ஆப்பிள் வெட்டும் கத்தியைத் தேர்ந்தெடுத்துக் காமிராவின்மேல் குறி வைத்து எறிய, "சிலுங்" என்று சப்தம் கேட்டு பிம்பம் கரைந்து போய் மணல் வாரியது.

"முழுக்கக் காட்டாம முடிச்சுப்புட்டானே!" என்று அங்கலாய்த்தார் இளவழகன்.

(முற்றும்)வெயிலோடு பகைபாடி !

2012-04-05T01:27:23.722-07:00

வெய்யில் சென்னையில் ஆரம்பிக்கும்போது, அதை மக்கள் வெகு உற்சாகமாக வரவேற்பதுண்டு. கர்சீப்பால் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துப் பிழிந்து  "ப்ச்சேய் !" என்று உச்சரித்து வரவேற்பது சென்னை மரபு. ஏழு குதிரைகள் பூட்டி அழகிய தேரில் காலச்சக்கரம் சுழல ஆதித்ய பகவான் வந்ததெல்லாம் அந்தக்காலம். இப்பொழுதெல்லாம் 300bhpல் அக்னிபகவான் விஜயம்தான் சென்னையில், மே - ஜூன் மாதங்களில். ஒவ்வொரு வருஷமும் தமிழகத்தில் இரண்டு வாக்கியங்கள் இலகுவான உரையாடல்களில் இடம்பெறும். ஒன்று : "கருணாநிதி இந்த வருஷம் தாண்டமாட்டார்". இன்னொன்று : "போன வருஷத்தை விட இந்த வருஷ வெய்யில் ரொம்ப ஜாஸ்தி". பல ஆண்டுகளாக இரண்டில் ஏதாவது ஒரு விஷயம் பலித்துக்கொண்டே வருகிறது. லயோலா காலேஜின் ப்ளாட்பாரங்களில் தர்பூசணிக்கடைகள் வருடம் தவறாமல் தோன்றும். பைக்கை சைடு ஸ்டேண்டு போட்டு ஒரு பெத்தை தர்பூசனியை வாங்கி புல்லாங்குழல் வாசிக்கும் பாவனையில் தாகம் தணித்துக்கொண்டு இருப்பார்கள். அவர்களில் பலர் ஸேல்ஸ் அல்லது மெடிக்கல் ரெப் என்பது எனது ஸ்டாடிஸ்டிகல் கணக்கு. தர்பூசணி எனக்குப் பிடிக்காத ஒரு பழம் / காய். யாரோ சின்ன வயதில் யானை முட்டை என்று சொன்னதாலோ என்னவோ, தெரியவில்லை. திமுக, தேமுதிக, அதிமுக, அம்பேத்கார் கழகம், சுபாஷ் தெரு ஆட்டோ சங்கம், வில்லிவாக்கம் வியாபாரிகள் சங்கம் என்று சங்கம் சங்கமாக தண்ணீர்ப் பந்தல்கள் முளைக்கும். அதற்கு நன்கொடை கடை கடையாகப் பிடுங்கப்படும். பின் ஒரு பானை வாங்கி அதில் நீர் ஊற்றி பேண்டு வாத்தியங்கள் முழங்க சங்கத்தலைவரை வைத்து திறந்துவைத்து, மத்திய அரசின் வண்மைப் போக்கையும், ஒபாமாவின[...]கதாகாலமென்டரி !

2012-03-29T05:08:56.542-07:00

காலையில் கலாகேந்த்ரா.com ல் பணம் கட்டி டி.எஸ் பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் தியாகராஜ ராமாயணம் டவுன்லோடு செய்ய உட்கார்ந்தேன். பதினோறு ஃபைல்களாகப் பிரித்துவைத்திருந்தும் ஒரு ஃபைலுக்கு மேல் முழுதாக வந்து சேறவில்லை. சரி வந்தவரைக்கும் எப்படி என்று ப்ளே செய்தேன்.. நடுவிலிருந்து ஆரம்பித்து  "ராவணன் "I see !" அப்படின்னானாம்" என்று சொல்லிக்கொண்டிருந்தார். கேட்டவுடன் களுக் என சிரிப்பு வந்தது. ஒரு ஹரிகதா காலட்சேபத்தில் ராவணன் "ஐ சீ !" என்று சொல்லக்கேட்பது ஹாஸ்யம்தானே. தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.. முதலிலிருந்து கேட்கவேண்டும் என்ற ப்ரயாசையில் கலாகேந்த்ரா குழுவினருக்கு ஈமெயில் அனுப்பியிருக்கிறேன். பார்ப்போம்..இந்த மாதிரி கதாகாலட்சேபங்கள் கேட்பது எனது ரசனையில் உண்டு. புலவர் கீரனின் வில்லிபாரதம் கேட்டதுண்டா ? ரயில் பயணம் மாதிரி.. மெதுவாக ஆரம்பித்து, மொள்ளமாக நகர்ந்து கட கடவென வேகமடுத்து அசுரவேகத்தில் பயணித்து.. மீண்டும் சகஜவேகத்துக்கு திரும்பி, கேட்போரை அயர வைக்காமல், சொல்லாலும், சப்தத்தாலும் கட்டிப்போடும் உரையாடல் திறன் கொண்டவர்."ஐவருக்கு மனதையும்.. ஐவருக்கு.. ஐவருக்கு.. ஐவருக்கு மனதையும் எங்களிடம் வேலைபார்த்து எங்களிடம் வயிற்றையும்.. ஐவறுக்கு மனதையும் எங்களிடத்தில் வயிற்றையும் வைத்து... நீ பொதுமகளுக்குப் புதல்வன் என நிரூபித்துவிட்டாயே.. விதுரா... போ !".  அடைப்புக்குறி ஆரம்பம் முதல் முடியும்வரை மூன்று வினாடிகளில் உணர்ச்சிபொங்க துரியோதனன் விதுரனிடம் வசைபாடுவதுபோல் படியுங்கள் பார்க்கலாம். அதிலும் அந்தக் கடைசி "போ !"வில் நுரையீரலிலிருந்து சப்தம்வர[...]மரண (ச்) சம்பவம் !

2012-03-27T04:49:59.016-07:00

இரண்டு வாரம் முன்பு எங்கள் ப்ளாட்டின் கீழ் போர்ஷனில் இருந்த ஒரு பாட்டி செத்துப்போய்விட்டார். ரொம்ப வயதாகி, தள்ளாமல் போய் படுத்தபடுத்தையாய் கிடந்து ஒரு லாஜிக்கல் கன்க்ளூஷனுக்கு வந்துவிட்டபடியால், அவர் மரணம் யாருக்கும் அதிர்ச்சியளிக்கவில்லை. இதற்கு மேலும் அவஸ்தைப்படாமல் போய்ச் சேர்ந்தாரே என்ற ப்ராக்டிகல் தாட் தான் எல்லார் மனதிலும். என் அப்பா ஃப்ரீஸர் பாக்ஸ் ஏர்பாடு செய்தார். இன்னொரு வீட்டுக்காரர் டெத் சர்டிஃபிக்கேட் டாக்டரிடம் வாங்கித்தந்தார். அம்மா காப்பி இரண்டு வேளை கலந்து கொடுத்தார். வாத்தியார் ஏற்பாடு, மின்ஸார சுடுகாடு புக்கிங் என அனைத்து வேலைகளும் யாரும் சொல்லாமல் அக்கம்பக்கத்தினர் ஏற்பாட்டில் நடந்து முடிந்தது. வில்லிவாக்கம் நடுத்தர வர்க்கத்தினரின் ஸ்வர்க்கம்.

இதெல்லாம் முடிந்து பத்தாம் நாள் காரியங்கள் நடந்துகொண்டே இருக்கும்போது, எதிர்த்த ப்ளாட்டின் கீழ் போர்ஷனில் ஒரு தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக். பில்ரோத் அழைத்துச்சென்று ஆஞ்சியோ செய்து தேறாது என்று முடிவுசெய்து வென்டிலேட்டர் போட்டு வைத்துவிட்டனர். பையனை தனியாக அழைத்துச் சென்று மேலும் சில டாக்டர்களை வைத்து ஒப்பீனியன் சொல்கிறோம், இரண்டு நாட்கள் ஐ.சி.யூவில் இருக்கட்டும் என்று பேரம் பேசியிருக்கின்றனர். எவ்வளவு பணம் செலவாகும் என்று கேட்டதற்கு "உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ?" என்று கேட்டிருக்கிறார்கள். உங்களை மாதிரியே எனக்கும் ரமணா படம் பார்த்த உணர்வுதான் என்றாலும், பதிவு அதைப்பற்றி அல்ல என்பதால் அடுத்த காட்சிக்கு போவோம்.

இரண்டு நாள் கழித்து.
 
எனது காரை சர்வீஸ் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்தேன். வீட்டில் பரபரப்பு.  எதிர்த்தாத்து மாமா இன்னும் ஹாஸ்பிடலிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால் அப்படி ஆன மறு நிமிடம் இறந்துவிடுவார் என்று சொல்லப்பட்டது. வாத்தியாருக்கு சொல்லியாச்சு. டெத் சர்டிஃபிக்கேட் எங்கே வாங்குவது என்று குழப்பம். நைட் சாப்பாடுக்கு சொல்லிவிட்டாயிற்று. சுடுகாடுக்கு போன் செய்தால் எக்ஸாக்ட் டைம் வேண்டும் என்று படுத்துகிறான். பார்ட்டி இன்னும் சாகவில்லை என்பது அவனுக்குத் தெரியாது. இவ்வாறான குழப்பங்கள்.

நிற்க. இதைப் படிக்கும்போது, ஒரு சாவை இவ்வளவு சுலபமாகவும், ஒருவரின் உயிரை இவ்வளவு அல்பமாகவும் மதிக்க முடியுமா ? கீழ்த்தரமாக இல்லையா ? என்று எனக்கும் தோன்றுகிறது. அதனால் நான் அவர்களின் உரையாடலை இடைமறித்துச் சொன்னேன். "கொஞ்சம் வெய்ட் செய்யலாமே. என்னத்துக்கு இவ்வளவு ப்ரிபேர்டா இருக்கனும்". அவர்கள் எல்லாம் என்னை கேள்விக்குறியோடு பார்த்தார்கள். அவர் டிஸ்சார்ஜ் ஆன பிற்பாடு இறக்காமல் புஷ்டியாக வீடு வந்தால், இவர்கள் கொஞ்சம் டிஸ்ஸப்பாயிண்ட் ஆவார்களோ என்று தோன்றியது.

ஆனால் அவர்களது கோணத்தில் மாமாவின் இறப்பு இன்று நிஸ்சயம் என்று ஆனபிறகு இதையெல்லாம் ஜரூராக வைத்திருப்பது புத்திசாலித்தனம்தான். மரணமாகப்போகும் மாமாவின் மனைவியும் தைரியமாக இருந்தார். இதெல்லாம் எனக்குப் புதிது. ஜெயகாந்தனின், இந்திரா பார்த்தசாரதியின் கதையில் வரும் வெகு பக்குவமான கதாபாத்திரங்களின் சம்பாஷனைகள் மாதிரி இருந்தது அந்த உரையாடல். இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும் இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில், ஒரு உயிர் இதயத்துடிப்பை கடைசியாக இயக்கி நிறுத்தியது.

பத்து நிமிடங்களில் மாமா இறந்துவிட்ட செய்தி செல்போனில் உறுதிசெய்யப்பட்டது. ஒரு முனை "ஆச்சு !" என்றும், மறுமுனை "ம்ம் !" என்றும் சொன்னது.வாத்தியார், வெட்டியான், டாக்டர், சமையல்காரன், ஃப்ரீஸர் பாக்ஸ் காரன் எல்லாரும் வேலைக்குத் தயார் ஆனார்கள்.

அம்மாவை காப்பி கலக்கச்சொல்லி, இந்த ப்ளாக் எழுதினேன்.செ.மா. மெ !

2012-03-22T23:53:06.464-07:00

பங்குனி வெயிலையே தாங்கவொண்ணாமல், டிராபிக் காண்ஸ்டபிள்கள் அட்டைக்கூழால் செய்த காக்கித்தொப்பிக்களை அணிந்து கொண்டு, இருபது லட்ச ரூபாய் காரை இருனூறு ருபாய்க்காக ஓரந்தள்ளுகிறார்கள். தலைவியின் இரும்புக்கர-ஆணையால், தலைக்கவசம் இல்லாமல் பயணிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. நடுத்தர வகுப்பின் இன்ஸ்டால்மென்டில் வாங்கிய டூ வீலரின் பெட்ரோல் டாங்கின்மேல் ஸ்கூல் பையன், அவன் தலைமேல் ஒட்டகச்சிவிங்கி போல கழுத்து நீட்டி எட்டிப்பார்த்து கை கால்களை கஷ்டப்பட்டு நீட்டியபடி குடும்பத்தலைவர், பின்னம் டேஞ்சர்லைட்டின்  நுணிப்பகுதியில் மூன்று பைகளை சுமந்தபடி தர்மபத்தினி, இருவருக்கும் நடுவில் போதிய இடைவெளி இல்லாமல் ஒரு மூன்றாம் க்ளாஸ் படிக்கும் நசுங்கிய சிறுமி என மூனேமுக்கால் சதுர அடியில் நாலுபேர் பயணித்தாலும், ஹெல்மெட் ரூல்ஸை மிஸ்டர் கு.த. ஃபாலோ செய்கிறார். எல்லாவற்றையும் பார்த்தபடி, பித்துக்குளி முருகதாஸின் "மதுர மதுர" என்ற பாடலை ரசித்தபடி காரை இரண்டு அங்குலம் நகர்த்தி நிறுத்தினேன் - லக்ஷ்மன் ஸ்ருதி சின்கலில். ஒரு பாடலை அங்குலம் அங்குலமாக ரசிப்பது என்றால் இதுதானோ !?சென்னையில் மெட்ரோ ரயில் போடலாம் என கடப்பாறையை எடுத்தாலும் எடுத்தார்கள், டோட்டல் சென்னையே திக்குமுக்காடிப்போயிருக்கிறது. எனக்கு 2004ல் காலில் ஃப்ராக்சர் ஆனபோது டாக்டர் சொன்னார், "ஒரு ரெண்டு மாசம் லேசா வலிக்கறாப்ல இருக்கும்.. தட்ஸ் ஆல் !"என்று. "அதுக்கப்புறம் சரியாயிடுமோ ?" ... அனுபவஸ்தாரான டாக்டர் பொய் சொல்லாமல், "அதுக்கப்புறம் you get used to the pain, and that my dear friend is the cure" என[...]மறு-மறு-மறுபடியும் !

2012-03-13T23:22:26.140-07:00

சென்ற வருடம் சென்னை வந்ததிலிருந்து இந்த ப்ளாக் பக்கம் அனேகமாக வரவே இல்லை. அதற்கு முன்பு ஒன்றும் சோபனமாக இருக்கவில்லை என்றாலும், சென்னை வந்த பிற்பாடு அறவே எழுத விழையவில்லை. வந்தவுடன் திருமணம், அதன்பிறகு மலேசியா, தலை ஆடி, தலை காலாண்டு, தலை தீபாவளி, தலை கார்த்திகை,  தலை பொங்கல் என்று அனேகமாக இன்னும் ஒரு மாதத்தில் வாரண்டி பீரியட் முடியப்போகிறது. அடுத்த சீதனம் டெலிவரிக்கு அப்புறம் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள். அது இல்லாமல், கார் வாங்கியது, ப்ரமோஷன் கிட்டியது, கமலஹாசனை தொடும்தூரத்தில் பார்த்தது என்று பல அச்சீவ்மென்ட் தருணங்கள். காருக்கு கடன் வாங்கியது, ப்ரொமொஷனால் நொந்துபோனது என்று வேறு கோணத்தில் ஏமாற்றங்கள் என்றாலும் "இடுக்கன் வருங்கால் இட்ஸ் ஓகே என்றிருக்க" என்ற பாலிசியை மனதில் தினம் மூன்றுவேளை உச்சரித்ததால் நிம்மதி குலையாமல் இருக்கிறேன்.நீங்களும் நலமாக இருப்பதாக நம்புகிறேன்.மேற்கண்ட காரணங்கள் அல்லாது ஃபேஸ்புக்கில் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்ததும் ஒரு காரணம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை இரண்டு வரிகள் புத்திசாலித்தனமாக எழுதுவது, அவ்வப்போது நான் எடுத்த போட்டோ போடுவது, பிரபல எழுத்தாளர்களின் கருத்துக்களை impulsiveஆக மறுப்பது, இரா.பார்த்திபனின் கிறுக்கல் கவிதைக்கு அதைவிட புத்திசாலித்தனமான கிறுக்கல் பதில் கவிதை எழுதுவது, என்று இன்னும் ஃபேஸ்புக் மோகம் தொடர்கிறது. இன்னும் அதில் ஸ்வாரஸ்யம் குறையவில்லை. டில்லியில் நில நடுக்கம், அங்கே உணரப்படும்போதே  ட்வீட்டப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மலிங்கா அடிவாங்க[...]Distilled Waters

2011-06-16T12:26:27.267-07:00

சென்னை பைபாஸ் என்றொரு நெடுஞ்சாலை இருக்கிறது. புழலுக்கும் தாம்பரத்துக்கும் இடையே சென்னையை வேண்டா வெறுப்பாய் புறந்தள்ளி நீட்டிக்கொண்டிருக்கும் இந்தச் சாலையில், அம்பத்தூர் இடுக்கு வழியாக உள்ளே நுழைந்து தினமும் தாம்பரம் செல்கிறேன், பணம் சம்பாதிக்க. செவ்வாய் அன்று ஸ்கூட்டரை உதைத்து தாம்பரத்திலிருந்து வீடு நோக்கி முப்பது கிலேமீட்டர் தீர்த்த யாத்திரை (அதாவது பெட்ரோல் தீர்த்த யாத்திரை) யைத் தொடங்கினேன்.

தாம்பரத்திலிருந்து புறப்பட்ட நானும், கார்மேகத்திலிருந்து புறப்பட்ட இரண்டேமுக்கால் கோடி மழைத்துளிகளும் வெளிப்படையாக மோதிக்கொண்ட இடம் திருநீர்மலை. ஹெல்மெட்டுக்கடியில் காதுகளின் ஓரம் கிசுகிசுப்பாய் பாடிக்கொண்டிருந்த பேலா ஷேண்டே கொஞ்சம் பதற்றமானார். அப்புறம் ம்யூட் ஆனார்.ஒவ்வொரு மழைத்துளியும் பாராங்கல்லாய் பறந்தன. எனது ஹோண்டா ஆக்டிவா மணிக்கு எண்பது கிலோமீட்டர் வேகத்தில் சென்றிருந்ததாலும் மழைத்துளி உத்தேசமாக 9.8 மீட்டர் பர் செக்கண்ட் என்ற கணக்கில் விழுந்து கொண்டிருந்ததாலும், அந்த மோதல் மிகவும் வலிமையாக இருந்தது.. அதாவது, எனக்கு வலித்தது. சுரீர் சுரீர் என்று கூர்மையான ஈட்டிகள் போலப் பாய்ந்து தோலைத் துளைக்க எத்தனித்தன.

சென்னை பைபாஸ் சாலையில் ஒதுக்குப்புறம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. ஓரமாக ஒரு பப்ஸ் கடையில் நிறுத்தி மழைக்கு ஒதுங்கிய சாக்கில், ஒரு வெஜிடபிள் பப்ஸையும் இன்னபிற சமாச்சாரங்களையும் கபளீகரம் செய்து மழை நிற்காது என்று அரைமணி நேரம் கழித்து உறுதிப்படுத்திக்கொண்டு நனைந்தபடியே செல்வது வழக்கம். ஆனால், இந்தச் சாலையில் அது நடக்கப்போவது இல்லை. அப்போது சம்பந்தமே இல்லாமல் இரண்டு மகாபாரத நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன.

குருக்ஷேத்திரத்தில் காண்டீபன் எய்த அம்புகள் மழையாய் எழுந்து பீஷ்மர் உடம்பைத் துளைத்தது முதலில் நினைவுக்கு வந்தது. அதுவும் குறிப்பாக பி.ஆர். சோப்ரா ஞாயிற்றுக்கிழமைகளில் காண்பித்த மகாபாரதத்தில், அம்புகள் புறப்பட்டு சுமார் இருபது மாத்திரை அளவுக்கு வானத்தில் பறந்து வர்ண ஜாலங்கள் காட்டி புகைகக்கி, நெருப்பு உமிழ்ந்து, நீர் தெளித்து பொறி பறந்து கடைசியாக பீஷ்மரின் மார்புக் கவசத்தைத் துளைத்து நிற்கும். தனியாக காலியாக இருக்கும் நீண்ட நெடிய சாலைகளில் செல்கையில் இம்மாதிரி கற்பனைகள் கைகொடுக்கின்றன. அந்த நிமிடத்தில் பீஷ்மர் அம்பு மழையில் நனைவதைப்போல எனக்குத் தோன்றியது.. பீஷ்மர் மாதிரியே வாயைத் திறந்தால் வாயில் நீர் தெளித்தது.. ரியர் வ்யூ மிரரைப் பார்த்து "ஆயுஷ்மான் பவ: !" என்று தனக்குத்தானே ஆசிர்வதித்துக்கோண்டேன்.

இனிமேல் நனைவதில் தடையில்லை. ஆனால், மடியில் கனம். செல்போன், வாட்ச், பர்ஸ் போன்ற வஸ்துக்களை ஓரமாக இறங்கி வண்டிக்குள் வைத்தேன். ஹேராம் படத்தில் கமலஹாசன் காசிக்குப்போய் சன்யாசம் வாங்குவாரே.. அந்த மாதிரி, ஒரு பற்றற்ற நிலை.. இனிமேல், இழப்பதற்கு ஏதும் இல்லை.. "ஏகம் நித்யம் விமலம் அசலம் சர்வதே சாக்ஷி பூதம் !" எல்லாம் அந்த திருநீர்மலை ஸ்ரீ நீர்வண்ணப்பெருமாள் காப்பாற்றுவார் என்று total surrender ஆகிவிட்டேன். பரிபூரண சரணாகதி.. ! த்ரௌபதி துகிலுரியப்பட்டபோது இரண்டு கைகளையும் இழுக்கப்பட்ட புடவையைப் பிடித்து இழுக்காமல், சரணாகதியாய் மேலே தூக்கி அந்தப் பரம்பொருளைப் ப்ரார்த்தனை செய்தாளே !! Now thats what i call a total surrender !

அப்படி ஒரு நிலை.. ஓரத்தில் தேங்கியிருந்த நீரை அரக்கத்தனமான வேகத்தில் வந்த லாரி வான்மார்க்கமாக தெளித்து, அருவியில் குளிப்பாட்டுவது போல் குளிப்பாட்டிவிட்டுச் சென்றது.. சாதாரணமான நாளாக இருந்திருந்தால் கோபம், அருவறுப்பு எல்லாம் வந்திருக்கும்.. இப்போது சிரிப்பு வந்தது.. பேரின்பமாய் இருந்தது.. கட்டுப்பாடற்ற எல்லையற்ற கவலையற்ற நிலை.. சட்டை பேண்ட் எல்லாம் தாண்டி உள்ளாடைகள் வரை தொப்பமாய் நனைந்தாகிவிட்டது.. ஹெல்மெட்டுக்குள் "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்று கேட்டது அனேகமாக ப்ரமைதான்.

மழை விட்டது. வீடு வந்து சேர்ந்தபோது, ஈரம் பிசு பிசுவென உடம்பில் ஒட்டியது கடுப்பாக இருந்தது. !வனவிலங்குப் பூங்கா !

2011-01-23T18:46:59.110-08:00

title="YouTube video player" class="youtube-player" type="text/html" width="853" height="510" src="http://www.youtube.com/embed/CnghvAHmzBU?hd=1" frameborder="0" allowFullScreen>விமர்சனப் படம்

2010-12-09T21:11:12.009-08:00

படம் பார்த்தபின் விமர்சனம் செய்வது ஒரு வகை.. படம் பார்த்த்துக்கொண்டிருக்கும்போதே, டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் குறு-விமர்சனம் செய்வது ஒரு வகை.. படம் வருவதற்கு சில நாட்கள் முன்பே ஊகத்தில் கருத்து தெரிவிப்பது ஒரு வகை.. படம் தயாரிக்க தயாரிப்பாளர் நோட்டு அச்சடிக்க உட்காரும்போதே ஸ்பெக்குலேட் செய்து, இவள்தான் கதாநாயகி, இது அந்த ஆங்கிலப்படத்தின் தழுவல், தெலுங்கு பட உல்டா என நாமாக கதையளப்பது ஒரு வகை..

சும்மா இருக்காமல், இன்னும் ஒரு வகை செய்வோம்..அதற்குமுன், lets hold that thought. !


சினிமா விமர்சனம் என்கிற ஈக்குவேஷனில் மூன்று entityக்கள் உள்ளன. முதலில் சினிமா (சினிமா என்கிற வஸ்து, அதன் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் பயன்).. அடுத்து விமர்சகர்.. அடுத்து வாசகர் அல்லது விமர்சன நுகர்வோர்.


இதில் மிக முக்கியமான இரு variables - விமர்சகர் & வாசகர்.

பெரும்பாலான விமர்சகர்களின் வரிகளைப் படிக்கும்போது, ஒரு அதிமேதாவி தன் பூதக்கண்ணாடியால் பலகோடி ரூபாய் பெருமானமுள்ள, பல பேரால், பல நாட்களாக  செதுக்கப்பட்ட முயற்சியை, தனது வாழ்க்கைத் தரம், தனது மன நிலை, தனது அனுபவ அறிவு, தனது கற்பனை, தனது ஆசை, தனது விரக்தி, தனக்குத் தெரிந்த "வெகுஜன" விருப்ப/வெறுப்பு - ஆகிய மட்டக்குறிகள் கொண்டு அளக்கப்பட்ட தேர்ந்த அல்லது தேறாத கருத்தாகத் தோன்றுகிறது.

சில விமர்சகர்கள், அந்தப் படம் தனக்கென ப்ரத்யேகமாக எடுக்கப்பட்டதாக பாவித்து, சிலாகித்தோ அல்லது சின்னாபின்னமாக்கியோ எழுதுகிறார்கள்.
 சிலர், "மக்கள்" என்ற பெயர்ச்சொல்லுக்கு "தன்னைத் தவிர உள்ள இதர உயிரினங்கள்" என்ற பொருள் கொண்டு ஒரு படத்தை "மக்கள்" எவ்வாறு க்ரஹிக்கிறார்கள் என்று க்ரஹிக்கிறார்கள்.


இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். "சினிமா விமர்சனம்" என்ற ஒரு கோட்பாடு எவ்வாறு உட்கொள்ளப்படுகிறது.. Contrary to the popular belief, விமர்சனத்துக்கும் பட வெற்றிக்கும் பெரிய சம்பந்தம் இல்லை (என சில பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன). Metacriticல் அதிக மார்க் வாங்கிய படங்கள் எல்லாமே வெற்றிபெற்ற படங்கள் இல்லை. ஆனந்தவிகடனில் நாற்பதுக்கு மேல் மதிப்பெண் பெற்று டெப்பாசிட் இழந்த பல படங்களும் அதற்கு ஆதாரம்.

அடிப்படையில் சினிமா என்பது சீரியசான ஒரு விஷயம் இல்லை என்பதால், அதன் தரம் "அளவிடப்பட்டு" நுகரப்படுவதில்லை. விளம்பரம் என்னும் மாயைதான் இன்னும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்கின்றது. விமர்சனம் அளவுகோல் இல்லை - வெறும் Arguement தான் (என்பது என் கருத்து). இன்னும் ஒரு பரிமாணத்தில், ஒரு சுய பரிசோதனையாகத் தோன்றுகிறது. படம் பார்த்தபின் விமர்சனம் படிப்பது இதில் சேர்த்தி. விமர்சகர் அறிவைத் தட்டிக்கொடுப்பதோ அல்லது முகவாயில் விளாசுவதோ - நாம் எப்படி அவருடைய கருத்தோடு ஒப்பிட்டுப் போகிறோம் என்பதைப் பொறுத்து உள்ளது.

சரி, lets bring back the thought. இன்னும் ஒரு வகை.

எனது பழைய பாஸ் கூப்பிட்டு எல்லார் முன்னிலையில் மேனி கூச அளவில்லாமல் பாராட்டி, அடுத்த காரியத்தை கையோடு பணித்து சிரமேற்று செய்யச்சொல்லுவார்... - "I've given you the Oscars.. go make the movie !" என்பார்.

அப்படிச் செய்தால் என்ன.. ? ஒரு மகத்தான சினிமா.. மாசற்ற தயாரிப்பு.. - இன்னும் அப்படி ஒரு படம் வரவில்லை என்ற ஊகத்தின் அடிப்படையில் - ஒரு விமர்சனம் எழுத வேண்டும். A review of a perfect movie, that is still a pre-concept. யோசிப்போம்.. !

அதற்குப் பிறகு சினிமா எடுக்கலாம்.Unstoppable

2010-11-12T19:57:40.674-08:00UnStoppable.. நம்ம ஸ்பீட் படம் மாதிரி விறுவிறுவிறுவிறுப்பான படம்.  லாஜிக் புடலங்காய் எதுவும் கவனிக்காமல், ஒரு லார்ஜ் கொக்க கோலாவை சப்பிக்கொண்டே பார்த்தால் படம் முடியும்போது பாத்ரூமுக்கு ஓடுவீர்கள்.. அதாவது, நடுவில் நகர முடியாமல் கட்டிப்போடும் "High Octane" திரைக்கதை.. டோனி ஸ்காட் (டென்ஸல் வாஷிங்டனின் ஆஸ்தான டைரக்டர் - க்ரிம்ஸன் டைட், மேன் ஆன் ஃபையர், டேக்கிங் ஆஃப் பெல்ஹாம், டேஜாவூ) நம்ம ரஜினிகாந்தை வைத்துப் படம் பண்ண ஆண்டவனை ப்ரார்த்திக்கிறேன்..

என்ன நடந்தாலும் நம்ம டென்ஸல் வாஷிங்டன் காப்பாத்திவிடுவார் என்று நம்பினார் கைவிடப்படார். இப்பொழுதெல்லாம் ஆபீஸில் ப்ரொடக்ஷன் இஷ்யூ வந்தால் கூட, அடுத்த லிஃப்ட்டில் டென்ஸல் வாஷிங்டன் வந்து அபயஹஸ்தம் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.. !


ஒரு ரயில் இஞ்சினீயரின் சின்ன சொதப்பலில் ஒன்றரை மணி நேரப் படம் ஆரம்பிக்கிறது.. இப்படி எல்லாம் நடக்குமா ? இவ்வளவு கவனக்குறைவாக யாராவது இருப்பார்களா ? என்ற லாஜிக் எல்லாம் வீட்டுக்கு வந்த பிறகுதான்.. தியேட்டரில் " நிவந்தன புருவம், நல் நுதலில்".. !

ஆளில்லாத ரயில், நம்ம ஊர் வியாசர்பாடி ரயில் மாதிரி வேகம் எடுக்கிறது.. கூடவே திரைக்கதையும்.. அந்த ரயிலை அதிக சேதம் இல்லாமல் எப்படி நிறுத்துவது.. அட.. அதற்கென்ன ?! ஹெலிகாப்டரில் ஆளை இறக்கி இண்டிகேட்டர் போட்டு ப்ரேக்கை அமுக்கினால் போச்சு.. ஆனால் மனித மனம் வித்தியாசமாக யோசிக்கிறது.. இப்பொதானே பத்து நிமிஷம் ஆச்சு.. அதெல்லாம் வேண்டாம்.. என்று ஓரமாக ஒரு விருப்பம் எழுகிறது.. இயக்குனர் நமக்கு அடிபணிந்து டாப் கியரில் "அமுக்குடா ஆக்ஸலேட்டரெ !!" என்று தூக்கு தூக்குகிறார். Sheer adrenaline !

படத்தின் பின்னனி இசை.. வாவ் !! முதல் சில சீன்களில் ப்ரிட்ஜின் மீது வெறும் இஞ்சினில் டென்ஸல் வாஷிங்டன்னும், க்ரிஸ் பைனும்  நகர்கின்ற காட்ச்சிகளில் இனிமையோ இனிமை.. ! அதே போல படத்தின் திரைக்கதையோடு போட்டி போட்டு ரத்த நாளங்களில் படபடப்பை ஏற்படுத்துகிறது - பின்னனி இசை.. டாப் க்ளாஸ் !

கேமரா, எடிட்டிங் எல்லாமே பக்கபலம்.. இன்ஃபாக்ட்,  சில பல சொதப்பல்கள் தெரியாமல் இருக்கவும்,  நடு நடுவில் இரண்டு நிமிட இடைக்கதை செறுகல்களால் படம் தொய்வடையாமல் இருக்கவும் கேமராவும் எடிட்டிங்கும் உதவுகின்றன..

ஆக மொத்தத்தில் another hollywood action movie.. just a class apart !0 Comments

2010-11-07T22:26:04.741-08:00

Whats the difference between Villain and Super Villain ?

PRESENTATION !!!!!!

--------------------------------------------


All men must choose between two paths. Good is the path of honour, friends and family. Evil... well, it's just cooler. Hit it!