Subscribe: Tamil Christian Thiratti (கிறிஸ்தவ திரட்டி)
http://c-thiratti.blogspot.com/feeds/posts/default
Added By: bibleuncle Feedage Grade C rated
Language: Tamil
Tags:
Rate this Feed
Rate this feedRate this feedRate this feedRate this feedRate this feed
Rate this feed 1 starRate this feed 2 starRate this feed 3 starRate this feed 4 starRate this feed 5 star

Comments (0)

Feed Details and Statistics Feed Statistics
Preview: Tamil Christian Thiratti (கிறிஸ்தவ திரட்டி)

கிறிஸ்தவ திரட்டி





Updated: 2018-03-05T08:42:08.096-08:00

 







2010-08-18T22:55:19.955-07:00




பறவையின் எச்சமும் காமமும்

2010-03-19T04:38:41.361-07:00

சில நாட்களுக்கு முன்பு மதியவேளையில் நானும் என் நண்பரும், இளநீர் அருந்துவதற்காக சாலையோரம் கடைவைக்கப்பட்டுள்ள மரத்தின் அடியில்  எங்கள் வாகனத்தை நிறுத்தினோம். பின்பு இள நீருக்காக காத்திருந்த வேளையில் என் நண்பருடைய இருசக்கர வாகனத்தின் மீது ஒரு பறவை எச்சமிட்டது. அலுவல் நேரத்தில் நாங்கள் இருந்ததால், நண்பருக்கு அது தர்ம சங்கடத்தை உண்டாக்கியது.அன்பானவர்களே இன்று இப்படிப்பட்ட உலகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆம் இன்று சாத்தான் நம்முடைய தலையின் மீது பறக்கும் பறவைகள் போல நம்மீது அனேக காமவிகாரமான காரியங்களை நம்மைச் சுற்றிலும் பறக்கவிடுகிறான். அவைகள் மூலம் அசுத்தப்படுத்த முயல்கிறான், வேதம் நமக்கு ஒன்றை தெளிவாகச் சொல்லுகிறது ’வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய் பாவஞ்செய்கிறான்.’ (1கொரி6;16) என்று சொல்லுகிறது.என் நண்பர் பறவையின் எச்சத்தால் கரைபட்டு சங்கடத்தில் நெளிந்ததது போல, அனேகர் இன்று சாத்தானின் அசுத்த வலைகளில் வீழ்ந்து கரைபட்டு நெளிய ஆரம்பிக்கிறார்கள்.இன்னும் சிலரோ பறவைகள் தங்கள் தலையில் கூடுகட்டி வாழவே அனுமதித்து விட்டார்கள், நான் சாத்தானால் அனுப்பப்பட்ட விபச்சாரம், ஆபாசபடங்கள், ஆபாச உடையணிந்த பெண்கள் போன்ற பறவைகளைச் சொல்லுகிறேன்.பறவைகளின் எச்சத்தை தண்னீர்கள் மூலம் துடைத்துவிடலாம், ஆனால் காமவிகார எச்சங்கள் நம்மை மயக்கி நம்மை அது சாப்பிட்த் தூண்டும். சாப்பிட ஆரம்பித்தவுடன் தான். நமக்கு சாத்தான் ஏற்படுத்திய மயக்கம் தெளியும். அப்போது இந்த உலகத்தின் முன்னால் அவமானமே நமக்கு மிஞ்சும். நம் தலைமேல் பறவைகள் பறப்பதை எப்படித்தடுக்க முடியாதோ அப்பட[...]



உன் இஷ்டப்படி நடந்தால்..... (ஓர் உண்மை சம்பவம்)

2010-03-07T06:32:28.799-08:00

சில வருடங்களுக்கு முன்பதாக நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை உங்களோடு வேத வெளிச்சத்தில் ஆராய விரும்பிகிறேன்,  நீதிமொழிகள் 16;25 மற்றும் பிரசங்கி 12ம் அதிகாரம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை இது விளக்கும்,சில ஆண்டுகளுக்கு முன்பதாக எனக்குத் தெரிந்த ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தின் தலைவர், தன் வாழ்க்கையை தன் இஷ்டப்படி தன் வாழ்வை குடி, சூதாட்டம், விபச்சாச்ரம், என்று மிகவும் உல்லாசமாக வந்து வந்தார். அவரது இளம் மனைவி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமலும், மற்றவர்கள் சொல்லுவதை அசட்டை செய்து கொண்டும் வாழ்ந்து வந்தார். தீய நண்பர்களோடு சேர்ந்து கொண்டு குடிப்பதும், விபச்சாரத்தில் ஈடுபடுவது என்று இந்த உலகத்தில் சாத்தான் மனிதனை வீழ்த்த வைத்திருக்கும் மிகப்பெரிய ஆயுதமான சிற்றின்பம் என்ற சேற்றில் சிக்கி உழன்று கொண்டிருந்தார்.காலம் கடந்தது சாத்தானின் கன்னியில் வீழ்த்தப்பட்டார், உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவரிடம் சென்றார். மருத்துவர் உங்களுக்கு உயிர் கொல்லியான் எயிட்ஸ் வந்துள்ளது என்று அறிக்கை அளித்தார். அப்போது தான் உண்மையை அறிந்து கொண்டார். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள மிகவும் பிரயாசப்பட்டார். காரணம் தன் மனைவி மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள் அனாதையாகிவிடுவார்கள் என்று மிகவும் கவலை கொண்டார்.நாட்கள் கடந்தன அவரது நிலைமை மிகவும் மோசமானது, உடல் மெலிந்தார். உரோமங்கள் விழுந்தன, படுத்த படுக்கையானார். மருத்துவம் தன்னைக் காப்பாற்றாது என்று உணர்ந்து கொண்ட அவர். இனி கடவுள்தான் தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று அறிந்து அனேக தேவ ஊழியர்களை அழைத்து ஜெபித்தார். தான் எப்படியாகிலும் பிழைத்து விட வேண்டும் என்று தவியாய்த் தவித்தார். ஆனால் காலம் கடந்து விட்டது. தான் நன்றாக வாழ்ந[...]



நித்தியானந்தா செய்த தவறின் ஆணிவேர் எது?

2010-03-05T23:38:55.487-08:00

அன்பானவர்களே இன்று நாம் ஊடகங்கள் வாயிலாக இளம் சந்நியாசி நித்தியான்ந்தா என்ற வாலிபரைப்பற்றி சில விரும்பத்தகாத செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல, இன்று இப்படிப்பட்ட சம்பவங்களின் ஆணி வேரைப் பற்றி வேத வெளிச்சத்தில் ஆராயப்போகிறோம்மனிதர்கள் இன்று சம்பாதிப்பதற்காகவோ, அல்லது ஆர்வக்கோளாறினாலோ, மிக இளம் வயதிலேயே சந்நியாசி ஆகிவிடுகிறார்கள், ஆனால் இப்படி சந்நியாசி ஆவதாலேயே அவர்கள் புது மனிதர்கள் ஆகிவிடுவதில்லை, காலம் செல்லச் செல்ல அவர்களுக்கு பசி, கோபம், மகிழ்ச்சி, போன்ற கடவுள் மனிதனுக்குக் கொடுத்த உணர்வுகளில் ஒன்றான பாலுணர்வும் இயற்கையாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இதைத்தான் வேதம் மிகத்தெளிவாக நமக்கு சொல்லுகிறது. அது மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல (ஆதி2;18).ஒருவேளை மனிதன் இந்த வேத வார்த்தைக்கு புறம்பாக நடக்க ஆரம்பிக்கும் போது, அங்கே கடவுளை மறுத்து சாத்தானை தன் வாழ்வில் அனுமதிக்கிறான். இது எப்படி எனில், வெளிச்சம் உள்ள இடத்தில் வெளிச்சத்தைத் தடுத்தால் தானாகவே இருள் வந்துவிடும் அப்படியே சாத்தான் கடவுள் இல்லாத இட்த்தில் நுழைகிறான்.இங்கு சாத்தானின் குணநலன்கள் குறித்து வேதம் தெளிவாக ஒரு காரியத்தை சொல்லுகிறது அவன் திருடன் (யோவான் 10;10) என்று, இப்படிப்பட்ட திருடன் வரும்போது இயற்கைக்கு மாறான காரியங்களில் மனிதனை ஈடுபடுத்துகிறான், இதுவே மேலே நாம் பார்த்த விரும்பத்தகாத செய்திகள் ஆகும்.அப்படியானால் இயற்கையான முறையில் பாலியல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும், பைபிள் மிக மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது நீதிமொழிகள் 5;18-19, ஆகிய வசனங்களில் மனைவியோடு மட்டுமே இந்த காரியங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுகிறத[...]



சைட் அடிப்பது (எதிர்பாலரைப் பார்த்து இரசிப்பது) தவறா?

2009-11-25T22:47:12.685-08:00

(image)

அன்பானவர்களே பாலுனர்ச்சி கடவுளால் கொடுக்கப்பட்டது என்றும், எதற்காகக் கொடுக்கப்பட்டது என்றும் தெளிவாக சென்ற கட்டுரையில் கண்டோம், இன்று அனைவராலும் சாதாரணமாகக் க‌ருதப்படும் ஒரு காரியத்தைக்குறித்து வேதாகம அடிப்படையில் ஆராய்வோம்,

இன்று எதிபாலரின் அழகை ரசிப்பது தவறில்லை என்ற நிலை நிலவுகிறது, இது சரியானதுதான், இறைவன் படைத்த படைப்பின் அழகை இரசிப்பதில் தவறில்லை தான், ஆனால் அது வெறும் மலர்கள் அருவிகளை இரசிப்பதைப்போல எந்த இச்சைகளும் இல்லாமல் இருக்கும் போது அது பாவம் இல்லை என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 5;28) இதை பாவம் என்று கூட சொல்லாமல் விபச்சாரத்திற்கேதுவான பாவம் என்று தெளிவாகச் சொல்லுகிறது.

அப்படியெனில் எதிர்பாலரைபார்க்கவே கூடாதா?
பார்க்கவே கூடாது என்று சொல்லவில்லை, ஆனால் இச்சையோடு பார்க்ககூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது

இச்சைஎன்றால் என்ன?
முதலில் இச்சை எப்படி பாவமாகும்? என்று பார்ப்போம், பத்துக்கட்டளைகளில் ஒன்று "இச்சியாதிருப்பாயாக" எனவே இச்சை என்பது சாத்தானின் ஆயுதம் எனபதை அறிந்து கொள்ளலாம், இந்த கண்களின் இச்சையை எப்படி பாவமாக பிசாசு மாற்றுகிறான் என்று வேதம் மிகத்தெளிவாக எச்சரிக்கிறது பார்ப்பொம்,

ஆதியாகமம் 3; 6‍ ஐ வாசித்துப் பாருங்கள். ஏவாள் விலக்கப்பட்ட கனியை பார்த்து இரசித்திருந்தால் ஒரு பிரச்சனையும் இல்லை மாறாக "அவள் அக்கனியைப் பார்த்து" (பார்த்து இரசித்தல்) "புசிப்பதற்கு நல்லதென்று அறிந்து" (அந்த பழம் க‌டவுள் தன‌க்கு சாப்பிடக் கொடுக்கப்பட்டது அல்ல என்ற உண்மையை அவள் நினைவிலிருந்தும் சிந்தனையிலிருந்தும் எவ்வளாவு தந்திரமாக சாத்தான் எடுத்துவிட்டான் பாருங்கள், இப்படித்தான் பாலுணர்விலும் சாத்தான் விளையாடுகிறான், தன‌க்கு விலக்கப்பட்ட (சித்தமில்லாத) எதிர்பாலர் மேல் இச்சித்து பிரச்சனையில் மாட்டிக்கொள்கின்றனர், மேலும் சாத்தான் ஏவாளிடம் இதோடு நின்று விடுவதில்லை மாறாக; அந்த வசனத்தில் அடுத்த வார்த்தையை கவனித்துப்பாருங்கள்....."புத்தியைத் தெளிவிக்கத்தக்கது என ஆறிந்து" ஆண்டவர் நமக்கு புத்தியை ஏற்கெனவே தெளியவைத்து விட்டார் எனபதை மறந்து (ஆம் பிரியாமானவர்களே அந்த குறிப்பிட்ட எதிர்பாலரைத் திருமணம் செய்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருப்பேன், ( கடவுள் நமக்காக ஒரு துனையைப்(ஆதி.2;18) படைத்திருக்கிறார் என்பதை மறந்து) என்ற தவறான ஓர் எண்ணத்தையும் அந்த இச்சையினூடாய் நம் மனதிற்குள்  நம்மையும் அறியாமல் செலுத்திவிடுகிறான்). இந்த எண்ணம் நமக்கு செயல்வடிவம் பெறும்போது நாம் பாவத்தில் விழுகிறோம் இதையும் வேதம் அழகாக சொல்லுகிறது (யாக்கோபு 1;15) வாசித்துப் பாருங்கள் இச்சை பாவத்தை அடைகிறது பாவம் மரணத்தை விளைவிக்கிறது ( தற்கொலை, கொலை, கருசிதைப்பு,)

இது மட்டுமல்ல சாத்தானின் நோக்கம் இப்படி பாவத்தில் விழ வைத்து உங்களை தேவனுடைய அன்பிலிருந்து விலக்கி அவருடைய சாபத்திற்கு ஆளக்குவது தான். ஆகவே எச்சரிக்கையாய் இருங்கள்.

சரி இப்படிப் பட்ட சிக்கலில் சிக்காமல் இருப்பது எப்படி என்று அடுத்து வரும் கட்டுரைகளில் விரிவாகப் பார்ப்போம் காத்திருங்கள்.....



பாலியல் ஓர் அறிமுகம்

2009-11-25T21:38:37.975-08:00

(image)
அன்பானவர்களேஇந்த உலகில் கடவுள் மனிதனுக்கு கொடுத்த முக்கியமான உணர்ச்சிகளுள் பாலியல் மிக முக்கியமானதாகவும், அதிக சக்தி வாய்ததாகவும், இருக்கிறது. பாலியல் உணர்வு கடவுளால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்தமான உணர்வாகும், இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது. இந்த உணர்ச்சிக்குறிய வேட்கை இரு பாலரிடமும் பொதுவானதாகக் காணப்படுகிறது.

இது மனித உணர்ச்சிகளில் மிக முக்கியமானது என்று சொல்லக் காரணம்; சில சமயம் மனித வாழ்க்கையை மாற்றிவிடக்கூடியதாக இருப்பதால் தான், மேலும் இந்த உணர்ச்சி மிகவும் ஆபத்தானதும் கூட ஏனென்றால் மனிதனை வீழ்த்த பிசாசு இந்த உணர்ச்சியை கையில் எடுத்துக்கொண்டு, அவன் வாழ்க்கையையே வீழ்த்தி விடுகிறான்,

இந்த உணர்ச்சி எதற்காக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது? எனபதை ஆதியாகமம் முதல் சில அதிகாரங்களிலேயே நமக்கு சொல்லப்பட்டு விட்டது (பலுகிப்பெருகுங்கள் ஆதி;1.28),

மனிதன் முதன் முதலாகப் பாவத்தில் விழுந்த போது முதன் முதலாக பாதிக்கப்பட்டதும் பாலுணர்ச்சியாகும், ஆம் அதுவரை அவர்கள் நிர்வாணிகள் என அறியாமல் இருந்தனர். இத்தகைய பாலுணர்ச்சியை பிசாசு மனிதனின் வாழ்வை நாசமாக்குவதற்காக முற்றிலும் பழைய தந்திரங்களையே பயன்படுத்துகிறான், பாலுண‌ர்ச்சியை எப்படி பாவத்திற்கேதுவாக திருப்புகிறான் எனபதை நாம் அடுத்த கட்டுரையில் வேத அடிப்படையில் தெளிவாகக்காண்போம்.......



About

2009-11-15T21:35:48.567-08:00

அன்பானவர்களே....
இந்த வலைமலர் தேவனுடைய ஏவுதலின் பேரில் பரிசுத்தமான பாலுணர்வு குறித்த விழிப்புண‌ர்வையும், எச்சரிப்பையும், குறித்து எழுத ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கே பாலியல் குறித்த பிரச்சனைகள் குறித்து எழுதப்போவதில்லை, மாறாக வேத வெளிச்சத்தில் காதல், திருமணம், பாலுறவு, குறித்த பரிசுத்தத்தை காத்து பிரச்சனைகளில் சிக்காமல் இருக்க வழிகாட்டும் கட்டுரைகள் எழுதப்படவிருக்கிறது.... படித்து நீங்களும் பயனடையுங்கள் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்துக் காத்துக்கொள்வாராக....






இந்த இனைய மலருக்கு இனைப்பு கொடுக்க விரும்பினால் கீழ்கண்ட நிரலியைப் பயன்படுத்துங்கள் நன்றி


(image)



























contact me

2009-11-14T00:53:31.450-08:00

அன்பானவர்களே உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், அல்லது உங்கள் சந்தேகங்களையும், அல்லது கட்டுரைகளில் காணப்படும் தவறுகள் மற்றும், தாங்களுக்கு எழுத விருப்பம் இருந்தால் அது தொடர்பாக நீங்கள் எங்களை இங்கே தொடர்புகொள்ளலாம்.


* இது விவாதப்பகுதி இல்லை விவாதங்களைத் தவிர்க்கவும்। (கடவுளை விவாதப் பொருளாக்குவது எங்கள் நோக்கமல்ல )

* நீங்கள் தரும் தகவல்களை எங்கள் ஜெபக் குழுவினர் தவிர வேறு யாரும் பார்க்க முடியாது

* நீங்கள் தரும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்

தமிழில் தட்டச்சு செய்வதற்கு இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை இங்கு past செய்யவும் நன்றி

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதாமே உங்களையும் உங்கள் குடுபம்பத்தாரையும் ஆசீர்வதித்து வழி நடத்துவாராக‌.....



Name
Your Email Address
Sex:
Marital Status:
Place:
Contact Number: (optional)
Subject:
Message