Preview: தமிழில் செய்திகள்
தமிழில் செய்திகள்வழங்குபவர்கள் Jupiter Web Soft நிறுவனத்தார்Last Build Date: Sun, 18 Sep 2011 15:03:46 +0000
வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம் Sun, 18 Sep 2011 13:29:41 +0000 சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டது. மேலும் பாட்னா, கோல்கட்டா மற்றும் கவுகாத்தி, லக்னோ ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் இல்லை. மேலும் தகவலுக்கு
ஸ்பெக்ட்ரம் ஊழல் : தயாநிதி ராஜினாமா ; பிரதமரை சந்தித்து கடிதம் கொடுத்தார் Fri, 08 Jul 2011 02:45:49 +0000 புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய மத்திய அமைச்சர் தயாநிதி தனது அமைச்சர் பதவியை இன்று மதியம் ராஜினாமா செய்தார். தயாநிதி ராஜினமா கடிதம் கொடுத்தார் என்பதை பிரதமர் அலுவலகமோ, தி.மு.க., வட்டாரமோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வெளியிடவில்லை. முன்னதாக தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் தயாநிதி ஆலோசனை நடத்தியதாகவும், இதன் பின்னரே ராஜினாமா கடிதம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 2004- 2007 ஆம் ஆண்டு கணக்கில் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்ததாக [...]
ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள் Tue, 25 Jan 2011 07:06:14 +0000 திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு துவங்கியதால், ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து எனவும், பரிகாரமாக தெருவில் கோலமிட்டு விளக்கேற்ற வேண்டும் எனவும் வதந்தி பரவி வருகிறது. இதனால், பல கிராமங்களில் தெருக்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில், நேற்று முன்தினம் இரவு, பெண்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, கோலத்தின் மீது வாழை இலை வைத்து அதில் பச்சரிசியிட்டு, அதன் மீது வீட்டில் உள்ள ஆண்பிள்ளைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அத்தனை அகல் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.இந்த [...]
மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார் Sat, 11 Dec 2010 05:17:02 +0000 ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் சேர்ந்தவர் சின்னு. இவர் அரசு பஸ் கண்டெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் இளவரசி(12).இவர் இப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சரியாக படிக்கவில்லை என இளவரசியின் குரூப் லீடர் சத்யா, பயிற்சி ஆசிரியை பழனியம்மாளிடம் புகார் செய்துள்ளார். இதனையடுத்து இளவரசியை பழனியம்மாள் பலமாக தாக்கி உள்ளார். ஆசிரியை தாக்கியதால் கை, கால் மற்றும் தோள்பட்டை பகுதிகளில் பலத்த காயமடைந்த இளவரசி, வீக்கங்களுடன் [...]
எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது “இளசு’ Sat, 11 Dec 2010 05:16:13 +0000 திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ரத்னாம்பாள், எட்டாம் வகுப்பு தனித்தேர்வை ஆர்வமுடன் எழுதி வருகிறார். இவரது ஆர்வத்தை ஆசிரியர்கள் பலரும் பாராட்டினர். எட்டாம் வகுப்பு தனித்தேர்வு, கடந்த 7ம் தேதி முதல் நடந்து வருகிறது; இன்று அறிவியல் பாடத்தேர்வு நடக்கிறது. திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சமூக அறிவியல் பாடத்தேர்வை 216 பேர் எழுதினர். இத்தேர்வை, தாராபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனியை சேர்ந்த ரத்னாம்பாள் எழுதினார். இவருக்கு வயது [...]
இந்தியா “சூப்பர்’ வெற்றி: கோப்பை வென்று அசத்தல் Sat, 11 Dec 2010 05:15:05 +0000 சென்னை: காம்பிர் தலைமையிலான இளம் இந்திய அணி மீண்டும் அசத்தியது. சென்னையில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் "சூப்பராக' வீழ்த்தியது. இதன் மூலம் தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பையை கைப்பற்றியது. வெறும் 103 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து அணி மிகப் பெரும் ஏமாற்றம் அளித்தது. இந்தியா வந்த நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 4-0 என முன்னிலை [...]
மிரட்டல் இ மெயில் : உள்துறை ஆய்வு Wed, 08 Dec 2010 05:51:08 +0000 புதுடில்லி : வாரணாசியில் குண்டு வெடித்தது தொடர்பாக வந்த மிரட்டல் இ மெயில் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீரவிமாக ஆராய்ந்து வருகிறது. டிசம்பம் 6ம் தேதியன்று இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஜி மெயில் அக்கவுன்டில் இருந்து மெயில் அனுப்பப்பட்டதும், நவி மும்பை பகுதியில் இருக்கும் ஒரு கணினியில் இருந்து அனுப்பப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இ மெயில் குறித்து மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் தலைமையிலான அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாரம் பேசிய அரசு பஸ்டிரைவர், கண்டக்டர் : மொபைலில் பதிவு செய்து மிரட்டிய பயணிகள் Wed, 08 Dec 2010 05:50:05 +0000 திருவாடானை : திருவாடானைக்குள் நள்ளிரவில் செல்லமாட்டோம் என்று பேசிய பஸ் டிரைவர், கண்டக்டர் பேச்சுகளை மொபைலில் பதிவு செய்த பயணிகள், உயர்அதிகாரிகளிடத்தில் புகார் செய்வோம் ,'என, கூறியதால் திருவாடானைக்குள் சென்று இறக்கி விட்டனர். திருச்சியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரவு 12.50க்கும் 1.10க்கும் இரண்டு பஸ்கள் புறப்படுகிறது. இந்த பஸ்கள் அதிகாலை 3 மணியளவில் சின்னக்கீரமங்கலம் வழியாக செல்லும் போது 2 கி.மீ.தூரமுள்ள திருவாடானைக்குள் செல்லாமல் ராமநாதபுரத்திற்கு சென்று விடுகிறது. தினமும் திருவாடானையை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் சின்னக்கீரமங்கலத்தில் வலுக்கட்டாயாமாக [...]
ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : கடலூர் அருகே பரபரப்பு Wed, 08 Dec 2010 05:48:51 +0000 கடலூர் : கடலூர் அடுத்த, திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பு.மாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகே, கடந்த நவ., 24ம் தேதி இரவு ரயிலை கவிழ்க்க ரயில் பாதையில் "கான்கிரீட் சிலீப்பர்' கட்டையை மர்ம நபர்கள் வைத்திருந்தனர். சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்தில் இருந்து 17 கி.மீ., தூரத்தில் மே.புலியூர் அடுத்த பு.மாம்பாக்கம் தண்டவாளம் மீது "கான்கிரீட் சிலீப்பர்' கட்டை கிடந்ததை பார்த்து [...]
நான்கு தலைமுறையாக பஸ்களில் திருட்டு : ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது Tue, 07 Dec 2010 06:18:46 +0000 தேனி : நான்கு தலைமுறையாக பஸ்களில் திருடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகன்கள் உட்பட, நான்கு பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 219 சவரன் நகையை கைப்பற்றினர். திருமணம் உட்பட விசேஷங்களுக்கு செல்லும் பெண்கள், அங்கு அணிவதற்காக நகைகளை பைகளில் எடுத்துச் செல்வது வழக்கம். இவர்களை கண்காணித்து நகை பையை ஒரு கும்பல் திருடி வந்துள்ளது. இக்கும்பலை பிடிக்க தேனி இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ், நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. [...]
நடிகர் கமலுக்கு இந்து மக்கள் கட்சி நோட்டீஸ் Tue, 07 Dec 2010 06:16:59 +0000 சென்னை : மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கமல், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்கு இந்து மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வக்கீல் ராஜசெந்தூர் பாண்டியன் மூலம் அனுப்பியுள்ள நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடலில் இடம் பெற்றுள்ள நேரடி கருத்து தொடர்பாக இந்த நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த பாடல் இந்து [...]
ஒரு ரேஷன் கார்டுக்கு ரூ. 5,000 தமிழக அரசு வெள்ள நிவாரணம்? Tue, 07 Dec 2010 06:14:51 +0000 சென்னை : முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மழையால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது, முதன் முதலாக நிவாரண நிதியுதவியாக, ஒரு குடும்பத்திற்கு சுளையாக இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வழங்கி, இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. இதை பின் பற்றி, கடந்த 2008ல் கடும் மழையால் மக்கள் பாதித்தபோது, கருணாநிதியும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2,000 ரூபாய் வழங்கினார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருவதால் பொது மக்களும், விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, நிவாரண [...]
அம்மி, உரல், குந்தானிக்கு வெளிநாடுகளில் வரவேற்பு Mon, 06 Dec 2010 05:31:17 +0000 பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே, எசனை கிராமத்தில் வடிவமைக்கப்படும் அம்மி, உரல், குந்தானி போன்றவை வெளிநாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன.பெரம்பலூர் அருகேவுள்ள செஞ்சேரி கிராமத்தில் இருந்து எசனைக்கு குடிபெயர்ந்து வந்த 20 குடும்பத்தினர், அங்கு கிடைக்கும் கருங்கற்கள் மூலம் அம்மி, ஆட்டுக்கல், உரல், குந்தானி போன்ற வீட்டு உபயோக கல் சாதனங்களை சிறப்பாக செய்து வருகின்றனர். கற்களில் ராஜாக்கல், கருங்கல், வெள்ளைக்கல் என்று மூன்று விதம் உண்டு. இதில், கருங்கல்லைக் கொண்டே மேற்கண்ட சாதனங்கள் [...]
“ஏடிஎம்’ மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம்: நாடு முழுவதும் கண்காணிப்பு Mon, 06 Dec 2010 05:30:01 +0000 புதுடில்லி : “பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்க ஏ.டி.எம்.,கள் மூலமாக பயங்கரவாதிகள் பணப்பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்' என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் இந்த கைவரிசையை ஒழித்துக் கட்ட நாடு முழுவதும் புலனாய்வு நிறுவனங்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கடந்த 2009-10ம் நிதியாண்டில், சந்தேகத்திற்குரிய, 17 ஆயிரம் வங்கிக் கணக்கு விவரங்களையும், அவற்றின் பணப் பரிமாற்றங்களையும் ஆய்வு செய்த நிதி புலனாய்வுப் பிரிவினர், மத்திய நிதியமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:சந்தேகத்திற்குரிய பணப் பரிமாற்றங்களை, புலனாய்வு மற்றும் [...]
கனமழையால் கொடைக்கானல் காபி தோட்டங்கள் பாதிப்பு Mon, 06 Dec 2010 05:27:59 +0000 கொடைக்கானல் : கனமழை காரணமாக கொடைக்கானலில் காபி தோட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் 20 ஏக்கர் நிலப்பரப்பளவில் பன்னைக்காடு, தாண்டிக்குடி. கடுகுத்தடி, கே.சி., பட்டி. கும்பையூர். சின்னூர், தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் காபி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் காபி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வைகை அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு Fri, 03 Dec 2010 05:38:51 +0000 ஆண்டிப்பட்டி : நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால், வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலையில் அணையின் நீர்மட்டம் 69.65 அடியாக இருந்தது. மொத்த கொள்ளளவு 71 அடியாகும். அணையில் இருந்து கூடுதலாக நீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு நீர் வரத்து வினாவிக்கு 2949 கன அடியாகும், அதே சமயத்தில் அணையில் இருந்து 4924 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தர்மபுரியில் பேசும் குப்பைத் தொட்டி அறிமுகம் Fri, 03 Dec 2010 05:37:04 +0000 தர்மபுரி : தர்மபுரியில் இன்று மாலை 5 மணிக்கு கோட்டை ஆர்.கே., திருமண மண்டப வளாகத்தில் இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளை சார்பில் பேசும் குப்பைத் தொட்டி அறிமுகம் நடக்கிறது. மதுரை மேலூரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன். இவர், தர்மபுரியில் மாணவர்களுக்காக இந்தியன் அறிவியல் கல்வி அறக்கட்டளையை உருவாக்கியுள்ளார். அறக்கட்டளை மூலம் எளிய பொருட்கள் கொண்டு, பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்களே எளிதில் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இதுவரையில் ரோபோ துப்பாக்கி, மிதக்கும் படகு, வாட்டர் படகுகள் [...]
வழிதவறி ஊருக்குள் வந்த காட்டு யானையால் மக்கள் பீதி Fri, 03 Dec 2010 05:32:05 +0000 கோவை : மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வழிதவறி அன்னூர் பகுதிக்குள் காட்டு யானை ஒன்று வந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். மாவட்ட வனஅலுவலர் திருநாவுக்கரசர் தலைமையிலான வனத்துறையினர் காட்டு யானையை பிடிப்பதற்காக அன்னூரில் முகாமிட்டுள்ளனர். மேலும் முதுமலையில் 3 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களில் தொடர் மழை : பள்ளிகள் விடுமுறை: அணைகள் நிரம்புகிறது Thu, 25 Nov 2010 06:13:07 +0000 சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டஙகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிப்பதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் , திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக மழை விட்டு, விட்டும், சில பகுதிகளில் தொடர்ந்தும் பெய்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் [...]
விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல் : பதிலடிக்கு தென்கொரியா தயார் Thu, 25 Nov 2010 06:11:23 +0000 சியோல் : தென்கொரியத் தீவின் மீதான வடகொரியாவின் திடீர் தாக்குதலால் கொரிய தீபகற்பத்தில் பதட்டம் நிலவி வரும் சூழலில், தென்கொரியாவுடன் ராணுவ கூட்டுப் பயிற்சி மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரு விமானம்தாங்கி போர்க்கப்பலை அது தென்கொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. தென்கொரியாவுக்கு சொந்தமான இயாங்பியாங் தீவு மீது, வடகொரியா நேற்று முன்தினம் திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் தென்கொரிய கடற்படை வீரர்கள் இருவரும், பொதுமக்கள் இருவரும் பலியாயினர். இச்சம்பவத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக கண்டித்தன. [...]
“நடிகர் விஜயகுமாரின் ரகசியங்களை வெளியிடுவேன்’ : மகள் வனிதா பரபரப்பு பேட்டி Thu, 25 Nov 2010 06:09:52 +0000 சென்னை : ""என் கணவர் மீது பொய் புகார் கொடுத்து கைது செய்ய வைத்துள்ள தந்தையும், நடிகருமான விஜயகுமார் தொடர்பான ரகசியங்களைத் தொடர்ந்து வெளியிடுவேன்,'' என டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்க, குழந்தைகளுடன் வந்த, நடிகை வனிதா விஜயகுமார் கூறினார். நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவரது இரண்டாவது கணவர் ஆனந்தராஜன். இவர், சென்னை, நுங்கம்பாக்கம், கோத்தாரி ரோட்டில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி, விஜயகுமாரின் முதல் மனைவி முத்துக்கண்ணுவின் [...]
வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை Tue, 23 Nov 2010 05:30:30 +0000 ஆண்டிபட்டி: தென் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உள்ளது. அணைக்கு 18,390 கன.அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் முழுகொள்ளவான 71அடியை எட்ட 2.5அடிய மட்டும் இருப்பதால் வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் கனமழை : 3.5 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு Tue, 23 Nov 2010 05:29:38 +0000 ராஜபாளையம் : ராஜபாளையத்தில் பெய்து வரும் கனமயை காரணமாக கண்மாய்கள் நிறைந்துள்ளன. கண்மாய் மற்றும் ஏரிகளில் தண்ணீர் ஓடும் பாதையில் ஆகாய தாமரைகளும், குப்பைகளும் குவிந்திருப்பதால் தண்ணீர் சீராக ஓட முடியாமல் அருகில் இருக்கும் பள்ளிக்குள் வெள்ள நீர் புகுந்தது. ராஜபாளையம் சோமையாபுரம் பகுதியில் 3.5 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின.
பழங்கால நாணயங்களை விற்று ஊனமுற்றோருக்கு உதவ திட்டம் Tue, 23 Nov 2010 05:28:56 +0000 கள்ளக்குறிச்சி : பழங்கால நாணயங்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் தொகையில் தனது கடன் தொகை போக மீதத்தை, உடல் ஊனமுற்ற பள்ளி மாணவர்களுக்கு உதவ உள்ளதாக ஆசிரியர் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் முகமது அன்சர்பாஷா. ஆசிரியர். இவர், கடந்த 25 ஆண்டுகளாக பழங்கால நாணங்களை சேகரித்து வருகிறார். ஆசிரியராக 11 ஆண்டுகள் பணிபுரிந்த இவர், ஐந்து ஆண்டுகள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்துள்ளார். இவருக்கு ரமீஜாபானு என்ற மனைவி, பி.இ., முதலாமாண்டு படிக்கும் சையத்சபருல்லா [...]
சபல புத்தியால் போலீசில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் Mon, 22 Nov 2010 05:44:26 +0000 மதுரை : மதுரையில் பெண் சபல புத்தியால், தொடர்ந்து போனில் தொடர்பு கொண்டு பேசிய, பிளஸ் 2 மாணவர்கள் நான்கு பேர் மீது போலீசார் "ஈவ்-டீசிங்' பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த 17 வயதுடைய இவர்கள் நண்பர்கள். இவர்களில் ஒருவர், மூன்று நாட்களுக்கு முன் தனது மொபைல் போனில் இருந்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பெண் அதிகாரியிடம், ""இது "ரெட்லைட்' ஏரியா தானே. நாங்கள் நான்கு பேர் [...]
நடராஜர் வடிவத்தில் ஒபாமா : அமெரிக்க இந்துக்கள் எதிர்ப்பு Mon, 22 Nov 2010 05:43:38 +0000 வாஷிங்டன் : அமெரிக்காவின் பிரபல வார பத்திரிகை ஒன்று தனது சமீபத்திய இதழின் அட்டைப் படத்தில், அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமாவை, நடராஜர் வடிவத்தில் சித்தரித்து படம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல வார பத்திரிகை "நியூஸ்வீக்'. இதன் 22ம் தேதியிட்ட இதழின் அட்டைப் படத்தில் அதிபர் ஒபாமா, நடராஜர் வடிவத்தில் நிற்கிறார். அவருக்கு பல கைகள் இருக்கின்றன. ஒரே நேரத்தில் அவர் பல்வேறு அரசியல் கொள்கைகளை சமாளிக்கும் விதத்தை இந்த படம் சித்தரிக்கிறது. இதுகுறித்து, அந்நாட்டில் [...]
திருவண்ணாமலையில் மகா தீபம் : 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர் Mon, 22 Nov 2010 05:41:50 +0000 திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, 2, 668 அடி உயரமுள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. அதை 20 லட்சம் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். மகாதீபத்தை நேரில் காண முடியாத பக்தர்கள் ஏக்கத்தை போக்கும் வகையில் தினமலர் இணையதளம் நேரடி ஒளிபரப்பு ( வெப் டெலிகாஸ்ட்) செய்தது. இதன் மூலம் நமது வாசகர்கள் பலர் பார்த்து பயன் அடைந்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த [...]
ரஹ்மான் பங்கேற்கும் ‘நோபல் அமைதி விருது இசை நிகழ்ச்சி’!! Sat, 20 Nov 2010 05:40:21 +0000 மீண்டும் ஒரு சர்வதேச பெருமை தேடி வந்துள்ளது ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மானுக்கு!இந்த ஆண்டு நடக்கும் பெருமைக்குரிய ‘நோபல் பரிசு விருது இசை விழா’வில் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவரைக் கவுரவிக்க, மாபெரும் இசை நிகழ்ச்சி நடப்பது வழக்கம். கடந்த 17 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது. உலகின் மிக உயர்ந்த பரிசாகப்பார்க்கப்படும் நோபல் அமைதி விருது, இந்த ஆண்டு சீனாவின் ஜனநாயக தலைவர் லீ ஜியாபோ [...]
சபரிமலையில் ரூ.1.84 கோடி முதல் நாளில் வருமானம் Sat, 20 Nov 2010 05:12:44 +0000 சபரிமலை : நடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, ஒரு கோடியே 84 லட்ச ரூபாய், சபரிமலையில் வருமானமாகக் கிடைத்துள்ளது. இது, கடந்தாண்டை விட 56 லட்ச ரூபாய் அதிகம். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் 1ம் தேதி, மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படும். இவ்வாண்டும், அய்யப்ப சுவாமி நடை திறக்கப்பட்ட 17ம் தேதி அதிகாலை முதல் இரவு வரை, பக்தர்கள் மூலம் ஒரு கோடியே 84 லட்சத்து 30 ஆயிரத்து 486 ரூபாய் வருமானம் [...]
குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த பூஜை: கிடாய் வெட்டி போலீசார் வழிபாடு Sat, 20 Nov 2010 05:11:05 +0000 புதுக்கோட்டை: சாலை விபத்து மற்றும் குற்றச்செயலைக் கட்டுப்படுத்துமாறு புதுக்கோட்டையின் காவல் தெய்வமான பொற்பனையான் சுவாமியை வேண்டி இரவு விடிய, விடிய கிடாய் வெட்டி போலீசார் பூஜை செய்தது அம்பலமாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கடத்தல், செயின் பறிப்பு போன்ற குற்றச் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொலையாளிகளிடமிருந்து அப்பாவி மக்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகள் கூட தப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், தி.மு.க., நகரச் செயலாளர் மணிமாறன் கொலைகள் இதற்கு [...]
இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம் Sat, 20 Nov 2010 05:10:18 +0000 ஜகார்டா : இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சுமத்ரா தீவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகியது. சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
வெளிநாடுகளில் இந்தியாவின் கறுப்பு பணம் ; 20 லட்சம் கோடியாம் ; ஏய்., அப்பா ., 60 ஆண்டு சாதனை Fri, 19 Nov 2010 05:25:04 +0000 மும்பை: இந்தியாவில் இருந்து வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை போட்டு வைப்பதை தடுக்க இது வரை உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எத்தனிக்கும் கள்ளத்தனம் பெருமளவில் குவிந்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த 1948 முதல் 2008 வரை கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பணம் கறுப்பு பணமாக வெளிநாடுகளில் 20 லட்சம் கோடி வரை டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்திய பொருளாதார நிபுணர் தேவ்கர் என்பவர் இந்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்தல் [...]
கணவர் வீட்டு முன் மனைவி கைக்குழந்தையுடன் தர்ணா Fri, 19 Nov 2010 05:24:36 +0000 ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவி.,யில் கணவருடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி, அவரது வீட்டு முன் கைக் குழந்தையுடன் மனைவி தர்ணா போராட்டம் நடத்தினார். மல்லபுரம் தெருவை சேர்ந்தவர் ராமுவின் மகள் முத்துமாரி(23). இவருக்கும் மதுரையை சேர்ந்த பாண்டிக்கும் 2004ல் திருமணம் நடந்தது. இவர்களது மகள் பத்மஸ்ரீ(6). முத்துமாரிக்கு ஸ்ரீவி., வீரகுமார் (25) என்பவருடன் தொடர்பு இருப்பதாக கூறி, விவாகரத்து செய்து பத்மஸ்ரீயை பாண்டி தன்னுடன் கொண்டு சென்றார். இதன்பின், முத்துமாரி, வீரகுமார் 2006ல் கோவையில் திருமணம் செய்து குன்னூரில் வசித்து [...]
எந்திரன் திருட்டு கதை! ஷங்கருக்கு போலீஸ் நோட்டீஸ்!! Fri, 19 Nov 2010 05:21:58 +0000 "எந்திரன் சினிமா கதை விவகாரத்தில் இரண்டு எழுத்தாளர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் கதை திருட்டுக்கதை என சென்னை போலீஸ் கமிஷனரிடம் இரண்டு புகார்கள் தரப்பட்டன. எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் தனது, "ஜூகிபா கதையை திருடி படமாக்கி விட்டதாக புகார் அளித்தார். ஆர்னிகா நாசர் தனது, "ரோபாட் தொழிற்சாலை கதையை திருடி படமாக்கி விட்டதாக புகார் அளித்தார்; இவர்கள் [...]
“டிவி’யில் ஆபாச நிகழ்ச்சிகளா? ஒலிபரப்புத்துறை உத்தரவு Thu, 18 Nov 2010 08:46:02 +0000 புதுடில்லி : "டிவி'யில் ஆபாச நிகழ்ச்சியை, இரவு 11 மணியிலிருந்து அதிகாலை 5 மணிக்குள் ஒளிபரப்பும்படி மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. "என்.டி.டிவி' உள்ளிட்ட சில வடமாநில "டிவி' சேனல்களில் "பிக் பாஸ்' மற்றும் "ராக்கி கா இன்சாப்' என்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த், "ராக்கி கா இன்சாப்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் கணவனால் பாதிக்கப்பட்ட உ.பி., மாநிலம் [...]
இடத்தகராறில் சிறுவன் கழுத்து அறுத்து கொலை Thu, 18 Nov 2010 08:44:31 +0000 மேலூர் : மதுரை மாவட்டம் மேலூரில், பத்திரத்தில் கையெழுத்திடச் சொல்லி, பாட்டியை கட்டிப் போட்டு மிரட்டியவர்கள், பேரனை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். இப்பகுதியை சேர்ந்த லலிதா(45)வின் கணவர் கிருஷ்ணன் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். லலிதாவுடன், மூத்த மகள் சுஜியும் அவரது மகன் கி÷ஷார்குமாரும்(6) வசித்து வந்தனர். மேலூர் அருகே மலம்பட்டியில், கிருஷ்ணன் நான்கு சென்ட் இடத்தை பல ஆண்டுகளுக்கு முன் வாங்கி இருந்தார். [...]
காதல் மயக்கம்; போலீஸ் கலக்கம்: அதிகரிக்கும் மைனர் திருமணங்கள் Thu, 18 Nov 2010 08:42:51 +0000 கோவை நகரில் "மைனர் திருமணங்களும்',அது தொடர்பான ஆள்கடத்தல் புகார்களும் அதிகரித்து வருகின்றன. காதல் வயப்பட்டு காணாமல் போகும் சிறார்களை தேடி கண்டுபிடித்து, பஞ்சாயத்து பேசி தீர்வு காண்பதிலேயே போலீசாரின் பணி நேரம் விரயமாகிறது. திருமண வயது ஆணுக்கு 21, பெண்ணுக்கு 18 என்கிறது திருமணச்சட்டம். திருத்தப்பட்ட திருமணச் சட்டமோ ஆணுக்கு 23, பெண்ணுக்கு 21 வயது என்கிறது. இருவீட்டார் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்கள், பெரும்பாலும் சட்டப்படி நடக்கிறது. ஆனால் காதல் வயப்படுவோர், வயது வித்தியாசம் ஏதும் பார்ப்பதில்லை. [...]
பாதகமாகும் சலுகை: தவறான பாதைக்கு செல்லும் மாணவர்கள் Tue, 16 Nov 2010 07:05:43 +0000 திருப்பூர் : எட்டாம் வகுப்பு வரை ஆல்-பாஸ் நடைமுறை; மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது உள்ளிட்ட சாதகமான சலுகைகளை, மாணவர்கள் பாதகமாக்கிக் கொள்கின்றனர். மதுபானம் அருந்துவது; வகுப்பறையிலேயே புகைப்பிடிப்பது உள்ளிட்ட தீய பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை திருத்த முடியாமல், அரசு பள்ளி ஆசிரியர்கள் வருத்தப்படுகின்றனர். 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அரசு சார்பில் சீருடை, சத்துணவு, சைக்கிள், பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப் படுகின்றன.அதேபோல், பள்ளி [...]
இறந்த மகளை ஆற்றில் வீசிய தாய் : புதைக்க ரூ.500 கொடுத்த போலீஸ் Tue, 16 Nov 2010 07:03:53 +0000 மதுரை : மதுரையில் புதைப்பதற்கு பணம் இல்லாததால் வைகையாற்றில் வீசப்பட்ட இரண்டரை வயது பெண் குழந்தையின் உடல், யானைக்கல் பாலம் அருகே நேற்று கண்டெடுக்கப்பட்டது. அடக்கம் செய்ய போலீசார் நிதியுதவி செய்து மனிதாபிமானத்தை காண்பித்தனர். அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் மங்கம்மா (40). மீனாட்சி அம்மன் கோவில் அருகே பூ வியாபாரம் செய்கிறார். இவரது நான்கு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை கால் ஊனமாக பிறந்தது. இரண்டரை வயதான இக்குழந்தை மர்மகாய்ச்சல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் இறந்தது. இறுதி சடங்கிற்கு பணம் [...]
பெரம்பலூர் வாலிபர் மர்மச்சாவு Tue, 16 Nov 2010 05:54:00 +0000 பெரம்பலூர் : விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் திருமதுரை கிராமம் திருமால் மகன் புஷ்பராஜ். பெரம்பலூர் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் பி.பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி மகேஸ்வரி. ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). மகேஸ்வரியை புஷ்பராஜ் ஒருதலையாக காதலித்து வந்தார். இந்நிலையில் நேற்று மகேஸ்வரியின் புதிய வீட்டுக்கு இருவரும் சென்றனர். அங்கு வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர். புஷ்பராஜ் தன் காதலை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகேஸ்வரி [...]
இ-மெயில் சேவையை துவக்கியது பேஸ்புக் Mon, 15 Nov 2010 05:36:41 +0000 வாஷிங்டன் : சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களின் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், விரைவில் இ-மெயில் சேவையை துவக்குகிறது. இது மைக்ரோசாப்ட, யாகூ, கூகுள் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுக்கு கடும்போட்டியாக அமையும் என்று நாளிதழ்கள் அவ்வப்போது செய்தி வெளியிட்ட வண்ணம் உள்ளன. ஆனால் இதுகுறித்த அறிவிப்பு பேஸ்புக் தரப்பிலிருந்து வரவில்லை. இந்நிலையில், அமெரிக்காவின் சிலிக்கான வேலி பகுதியில் இருந்து வெளியாகும் தொழில்நுட்ப வலை இதழான டெக்கிரஞ்ச்சில், இதுகுறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது : சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற [...]
தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு Mon, 15 Nov 2010 05:35:39 +0000 பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது. சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் இல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட தனிமங்களும் அதிகளவில் அங்கு கலவையாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் [...]
நீண்ட இழுபறிக்கு பின் பதவியை துறந்தார் ராஜா: மத்திய அரசுடன் உறவு நீடிக்க கருணாநிதி முடிவு Mon, 15 Nov 2010 05:34:03 +0000 புதுடில்லி : ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தால், எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளான மத்திய அமைச்சர் ராஜா, நீண்ட இழுபறிக்குப் பின், தன் பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்தார். பார்லிமென்ட் இன்று கூடவுள்ள நிலையில், மத்திய அரசுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுவதை தடுக்கவும், மத்திய அரசுடன் சுமுகமான உறவு நீடிக்கவும் கருணாநிதி இந்த முடிவை எடுத்தார்.கருணாநிதியின் உத்தரவையடுத்து, நேற்றிரவு டில்லி சென்ற அமைச்சர் ராஜா, பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். "2ஜி ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஒதுக்கீட்டில் [...]
இந்தியாவில் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது கூகுள் Sat, 13 Nov 2010 05:15:50 +0000 ஐதராபாத் : இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், இந்தியாவில் தனது அடித்தளத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, கூகுள் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி பியூஷ் ரஞ்ஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கூகுள் இந்தியா நிறுவனத்தில், புதிதாக 300 இஞ்ஜினியர்கள் பணியமர்த்தப்பட இருப்பதாகவும், இதன்மூலம், இந்த பிரிவில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வதாகவும், அதேபோல், சர்வதேச அளவில் மிகப்பெரிய கிளவுட் கம்ப்யூட்டிங் ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் சென்டரை, ஐதராபாத்தில் அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளவுட் [...]
பழநியில் வேறு பெண்ணுடன் காதலனுக்கு திருமணம் : தட்டிக்கேட்ட காதலிக்கு அடி, உதை Sat, 13 Nov 2010 05:14:19 +0000 பழநி : காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்து, வேறொரு பெண்ணை மணந்து கொண்டார் காதலன். தட்டிக் கேட்க வந்த காதலிக்கு அடி, உதை விழுந்தது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஆட்டோ கன்சல்டன்சி, பைனான்ஸ் நடத்தி வருபவர் ராஜேந்திரன்(35).காரத்தொழுவைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் மகள் தாமரைச்செல்வி. ராஜேந்திரனும் அவரது கடைக்கு அருகிலேயே பணிபுரிந்த தாமரைச்செல்வியும் கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்துள்ளனர். இந்நிலையில், ராஜேந்திரனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதை அறிந்த தாமரைச்செல்வி, கடந்த செப்., 11 [...]
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 3 மாணவர்கள் படுகாயம் Sat, 13 Nov 2010 05:12:14 +0000 வாழப்பாடி: வாழப்பாடி அருகே ஷேர் ஆட்டோ கவிழ்ந்து 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். வாழப்பாடி அருகே உள்ள பேளூரைச் சேர்ந்தவர்கள் சையது; அகமது. இவர்கள் 10ம் வகுப்பு மாணவர்கள். இவர்கள் இன்று காலை பள்ளிக்கு ஒரு ஷேர் ஆட்டோவில் சென்றபோது, ஆட்டோ கவிழ்ந்தது; இதில் சையது, அகமது உட்பட 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஷேர் ஆட்டோக்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தோழனை காக்க தோள் கொடுக்கும் தோழர்கள்: நிதி திரட்ட 14ம் தேதி கலை நிகழ்ச்சி Thu, 11 Nov 2010 05:21:57 +0000 மதுரை : மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, சிகிச்சையில் இருக்கும் கல்லூரி மாணவரை காப்பாற்ற நிதிதிரட்ட, அனைத்து கல்லூரி மாணவர்களும், வரும் 14ம் தேதி, "மறுபிறவி' என்ற தலைப்பில் கலைநிகழ்ச்சி நடத்துகின்றனர். மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகப்பட்டி சத்துணவு பணியாளர் திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். இருவரும், தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு வந்து சென்றனர். [...]
ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து தங்கம் நீக்கமா? விலை சரிய வாய்ப்பு Thu, 11 Nov 2010 05:20:31 +0000 இந்தியாவில் தங்கத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக, ஆன்-லைன் வர்த்தகத்திலிருந்து, டிசம்பர் முதல் வாரத்தில் தங்கத்தை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, வியாபாரிகள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், தங்கத்தின் விலையில் நேற்று திடீர் சரிவு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்கள், உடனுக்குடன் இந்திய மார்க்கெட்டில் எதிரொலிக்கிறது. 2003ல் கிராம் 523 ரூபாய்க்கு விற்ற தங்கம், 2007 - 1,000, 2008 - 1,250, 2009 - 1,550 என தொடர்ந்து, 2010ல் ஒவ்வொரு [...]
சூரனை வென்ற வீரனை வணங்குவோம் : இன்று சூரசம்ஹாரம் Thu, 11 Nov 2010 05:16:48 +0000 சிங்கார வேலனாக சிக்கலில் வேல் வாங்கிய முருகப்பெருமான், சூரபத்மனை அழிப்பதற்காக போருக்கு கிளம்புகிறார். அலைபாயும் செந்திலம்பதியாகிய திருச்செந்தூரில் இவ்விழா சீரும் சிறப்புமாக நடத்தப்படும். அந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று ""வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா'' என்று கோஷமிடும் ஒலி விண்ணைப் பிளக்கும். அருள் வடிவான முருகனுக்கு சூரனை வதைக்க மனமில்லை. அதனால், வீரபாகு தலைமையிலான நவவீரர்களை தூது அனுப்பினார். தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும்படியும் அறிவுரை கூறினார் வீரபாகு. சூரனோ ஆணவம் என்னும் பேரிருள் வடிவம் கொண்டு யாவரையும் [...]
கோவையில் குழந்தைகளை அநியாயமாக கொன்ற கொலையாளி, என்கவுன்டரில் கொலை Tue, 09 Nov 2010 05:34:42 +0000 கோவை : கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவரை கடத்தி, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொன்ற கொடூர கொலைகாரன் மோகன்ராஜ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். கோவை, ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார்; துணிக்கடை உரிமையாளர். இவருக்கு முஸ்கின் (11), ரித்திக் (9) ஆகிய குழந்தைகள் இருந்தனர். இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி: கோவை பெற்றோர்கள் பேட்டி: குழந்தைகளை கடத்தி கொன்ற கொடூரனை சுட்டுக்கொன்ற இந்நாள் தான் எங்களுக்கு [...]
பச்சிளம் குழந்தையை வாஷிங் மிஷினில் போட்டு கொன்ற அமெரிக்க பெண் கைது Tue, 09 Nov 2010 05:32:21 +0000 லண்டன் : இப்படியும் ஒரு தாய் இருப்பாளா! என்று யாவரும் பதைபதைக்கும் அளவுக்கு, லண்டனில் வசிக்கும் அமெரிக்க பெண் ஒருவர், பிறந்து 10 நாளேயான தனது பச்சிளம் குழந்தையை, வாஷிங் மிஷினில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவர் லின்ட்சே பிட்லர். லண்டனில் ஒக்லஹோமாவில் உள்ள பார்லெஸ்வில்லியில் வசித்து வரும் இவருக்கு, 4 மற்றும் 3 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன், மூன்றாவதாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு மேகி [...]
சக்தி வாய்ந்த நாடு இந்தியா: நெகிழ்கிறார் ஒபாமா Tue, 09 Nov 2010 05:31:29 +0000 புதுடில்லி : ""உலகில் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்று இந்தியா. ஒட்டு மொத்த உலகிலும் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளமையை உருவாக்கவும், பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகளை ஒழித்துக் கட்டவும், இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்,'' என, அதிபர் பராக் ஒபாமா கூறினார். டில்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையில், 21 குண்டுகள் முழங்க சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், அவரது கணவர் தேவிசிங் ஷெகாவத், [...]
மின் உற்பத்தி அதிகரித்தும், போதுமானதாக இல்லை: மின் துறை அமைச்சர் விளக்கம் Wed, 27 Oct 2010 05:17:58 +0000 ""மின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது; ஆனால், எதிர்பார்த்தது போல கூடுதலாக இல்லை,'' என்று, மத்திய மின்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே கூறினார். டில்லியில் நடைபெறும் பொருளாதார ஆசிரியர்கள் பங்கேற்கும் சிறப்பு மாநாட்டில், அவர் பேசும் போது, "கடந்த நான்கு ஆண்டுகளில் 42 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் அதிகரித்திருக்கிறது' என்றார். மின்சார உற்பத்தி வளர்ச்சி குறித்தும், புதிய திட்டங்கள் குறித்தும் அவர் கூறியதாவது:மின்சாரம் என்பது மாநிலங்களும் இணைந்து நிறைவேற்றும் திட்டம். மின் திருட்டைத் தடுக்க உருவாக்கப்பட்ட புதிய சட்டத் திருத்தத்தின் [...]
ஆன்லைன் கேட் தேர்வு இன்று தொடக்கம் Wed, 27 Oct 2010 05:16:23 +0000 புதுடில்லி : ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் கேட் நுழைவுத் தேர்வு இன்று முதல் நடைபெறுகிறது. நாட்டில் 33 நகரங்களில் 78 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வில் கலந்து கொள்கின்றனர். நவம்பர் 24ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜனவரி 12ம் தேதங வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தை தவிர்க்க, எஸ்.பி., அறிவுரை : காவல் நிலையங்களில் “மணக்கிறது’ தமிழ் Wed, 27 Oct 2010 05:15:42 +0000 திருப்பூர் : "இயன்றவரை தூய தமிழில் பேசுங்கள்' என, திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு எஸ்.பி., அருண் அறிவுறுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து, கட்டுப்பாடு அறையில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன்கள் வரை போலீசார் தூய தமிழில் பேச ஆரம்பித்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷன்களில், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. வழக்குகள் தொடர்பாகவும், வழக்குப்பதிவு குறித்தும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்த மைக் அறிவிப்புகளிலும், 90 சதவீதம் ஆங்கில வார்த்தைகளே பயன்படுத்தப்படுகின்றன.கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகாரிகளின் உத்தரவை தெரிவிக்கும்போதும், மற்ற [...]
பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி Wed, 27 Oct 2010 05:14:56 +0000 சென்னை : முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த புலித் தலைவர் பிரபாகரன், உளவுப் பிரிவு தலைவர் பொட்டுஅம்மான் ஆகியோரது மரணம் குறித்து இலங்கை அதிகாரிகள் அளித்த தகவல்களில் திருப்தியடைவதாக சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடுவதாக, "தடா' சிறப்பு கோர்ட் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, விடுதலைப் [...]
மிகவும் வியப்பாக உள்ளது* சச்சின் பெருமிதம் Wed, 27 Oct 2010 05:13:34 +0000 புதுடில்லி: ""உலக லெவன் டெஸ்ட் அணியில் பிராட்மேனுடன், என்னையும் சேர்த்து இருப்பதை நம்பவே முடியவில்லை. அதிக வியப்பை தரும் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது,'' என, இந்திய கிரிக்கெட்டின் பேட்டிங் மாஸ்டர் சச்சின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கிய 11 டெஸ்ட் வீரர்களின் பட்டியலை, ஈ.எஸ்.பி.என்., "கிரிக்கின்போ' இணையதளம் வெளியிட்டது. இதில் நான்கு ஆஸ்திரேலிய வீரர்கள், மூன்று வெஸ்ட் இண்டீஸ், இரண்டு இங்கிலாந்து, மற்றும் ஒரு பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்போதுள்ள வீரர்களில் இந்தியாவின் [...]
பிரதமர் ஜப்பான் பயணத்தால் தென்மாநிலங்களுக்கு லாபம்: சீனாவால் சாதகம் Tue, 26 Oct 2010 05:05:39 +0000 டில்லியில் காமன்வெல்த் குறித்த ஊழல் பேச்சு பரபரப்பு குறைந்து விட்டது. ஆனால், விரைவில் பார்லிமென்ட் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஆளும் தரப்பில், அமெரிக்க அதிபர் ஒபாமா வருகை அதிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பார்லிமென்டின் மைய ஹாலில் அதிபர் ஒபாமாவிற்கு தரப்படும் வரவேற்பு, மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஏனெனில், இங்கு வைக்கப்படும் பூ அலங்காரம் உட்பட எல்லாவற்றிலும் மிகுந்த அக்கறை காட்டுகிறார் சபாநாயகர் மீரா என்றும், அந்த நிகழ்ச்சி இந்திய - அமெரிக்க நல்லுறவை வளர்க்கும் விதத்தில் முக்கியத்துவம் [...]
ஆடம்பர மோகத்தால் மதுரையில் கூலிப்படை உருவாகிறது Tue, 26 Oct 2010 05:03:59 +0000 மதுரை : கூடா நட்பு, வேலையின்மை, ஆடம்பர மோகத்தால் 25 வயதிற்குட்பட்டவர்கள் மதுரையில் கூலிப்படைகளாக உருவெடுத்துள்ளனர். உள்ளூர் போலீசிற்கு பயந்து வெளியூர்களில் "தொழில்' செய்கின்றனர். மதுரையில் சில ஆண்டுகளுக்கு முன், ரவுடிகள் சிலர் தங்களுக்கு கீழ் ஆட்களை நியமித்து கட்டப்பஞ்சாயத்து செய்தனர். "யார் பெரியவர்' என்ற பிரச்னையால் அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு அடிக்கடி கொலைகள் விழுந்தன. கூலிப்படைகளாகவும் செயல்பட்டனர். ஐந்தாண்டுகளுக்கு முன், சின்னக்கடைத் தெருவில் ரவுடிகள் சுருளி, நீலகண்டன் ஆகியோர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பின், போலீஸ் [...]
“பிச்சை புகினும் கற்பித்தல் நன்றே’:புது மொழி படைக்கும் ஊனமுற்றவர் Tue, 26 Oct 2010 05:02:16 +0000 காரைக்குடி : பிச்சை எடுத்து, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் காரைக்குடியை சேர்ந்த செல்வராஜ் (69). மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த இவர், மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் படித்து, பி.ஏ., பொருளாதார பட்டம் பெற்றவர். போலியோ தாக்கி கால்கள் செயல் இழந்ததால், கைகளில் செருப்பை மாட்டி கொண்டு, தவழ்ந்து செல்கிறார். திருமணம் செய்து கொள்ளாத இவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. உசிலம்பட்டியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை நடத்தி, நஷ்டமானதால், காரைக்குடிக்கு இடம் பெயர்ந்தார். யாசகம்: தற்போது இவரது தொழில் யாசகம் [...]
தி.மு.க., நகரச் செயலர் ஓட ஓட விரட்டி படுகொலை : ஆறு பேர் கும்பல் வெறிச்செயலால் ஆலங்குடியில் பரபரப்பு Tue, 26 Oct 2010 05:00:33 +0000 புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், தி.மு.க., நகரச் செயலரை ஆறு பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டி சாய்த்தது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் பதட்டம் நீடிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த, புதுக்கோட்டை விடுதியைச் சேர்ந்தவர் வீரய்யா மகன், தி.மு.க., நகர செயலர் மணிமாறன்(39). இவருக்கு, அமுதா(35) என்ற மனைவி, இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். ஆலங்குடியில் இவர், "மூவேந்தர் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, [...]
இரண்டு சிம்கார்டுகளுக்கு மேல் பயன்படுத்த தடை Tue, 26 Oct 2010 04:59:53 +0000 சேலம் : தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரிப்பை தொடர்ந்து, மொபைல் நிறுவனங்கள் சார்பில், ஏற்கனவே வழங்கப்பட்ட சிம்கார்டுகள் குறித்த ஆய்வு பணி நடக்கிறது. மொபைல்போன் மூலம், கொலை, கொள்ளை, மாணவர்கள் சீரழிவு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன. மேலும், மொபைல்போன் நிறுவனங்களின் இடையேயான போட்டி காரணமாக, முகவரி சான்று இருந்தால் மட்டும் போதும். எத்தனை சிம்கார்டுகளை வேண்டுமானாலும் பெறலாம் என்ற நிலை உள்ளது.குற்ற நடவடிக்கைகள் அதிகரிப்பை தொடர்ந்து, ஒரே நிறுவனத்தை சேர்ந்த சிம்கார்டுகள், இரண்டுக்கும் மேல் பயன்படுத்த [...]
பீகார் சட்டசபை தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு : பலத்த கெடுபிடியால் வன்முறை இல்லை Fri, 22 Oct 2010 05:32:54 +0000 பாட்னா : பீகார் சட்டசபைக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. பலத்த போலீஸ் கெடுபிடியால், பெரிய அளவிலான வன்முறை எதுவும் நடக்கவில்லை. இந்த தேர்தலில் 55 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு கோடி பேர் ஓட்டளித்தனர். பீகார் சட்டசபை தேர்தல் ஆறு கட்டங்களாக நடக்கிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 47 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக, 10 ஆயிரத்து 868 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. [...]
கற்பழிப்பு புகாரில் சிக்கிய 2 பேர் இந்தியாவுக்கு தப்பியோட்டம் : ஆஸி., போலீஸ் வலைவீச்சு Fri, 22 Oct 2010 05:30:45 +0000 கான்பரா : ஆஸ்திரேலியாவில் 36 வயது பெண்ணை கற்பழித்த வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் இந்தியாவுக்கு தப்பி ஓடியுள்ளதாக ஆஸி., போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களை பிடிப்பதற்காக ஆஸி., போலீசார் இந்திய போலீசாரை தொடர்பு கொண்டு தகவல்களை பறிமாறி வருகின்றனர். இருப்பினும் தப்பிய இருவரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை ஆஸி ; போலீசார் தெரிவிக்கவில்லை.கடந்த 3ம் தேதி கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது.
மாணவர் உயிரை காப்பாற்ற அனைத்து கல்லூரி மாணவர்களும் கைகோர்ப்பு Fri, 22 Oct 2010 05:29:20 +0000 மதுரை : மதுரையில் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் அடிபட்டு, தீவிர சிகிச்சையில் உள்ள கல்லூரி மாணவரை காப்பாற்ற, அனைத்து கல்லூரி மாணவர்களும் நிதி திரட்டுகின்றனர். மதுரை மாவட்டம் குமாரம் அருகே வடுகபட்டி விவசாயி திருமால் மகன் கவுதம்(20). வேலம்மாள் பொறியியற் கல்லூரியில் மூன்றாமாண்டு எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் படிக்கிறார். இவரது சக மாணவர் மற்றொரு கவுதம்(20). இவரும் வடுகபட்டி பகுதியைச் சேர்ந்தவர். தினமும் இருவரும் மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்று வந்தனர். அக்.,11ல் கல்லூரி செல்ல ரிசர்வ்லைன் [...]
திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினால் மனைவி ஆக முடியாது: சுப்ரீம் கோர்ட் Fri, 22 Oct 2010 05:27:37 +0000 புதுடில்லி: திருமணம் செய்யாமல், செக்ஸ் மற்றும் உடல் ரீதியாக மட்டும் குடும்ப நடத்தும் பெண், மனைவி ஆக முடியாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி திர்ப்பு வழங்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் பேச்சியம்மாள் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் இருவரும் பிரிந்து விட்டனர். பேச்சியம்மாள், வேலுச்சாமியிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார். இதுகுறித்து குடும்பநல கோர்ட்டில் நடந்த வழக்கில் பேச்சியம்மாளுக்கு விவாகரத்து மற்றும் மாதம் ரூ.500 வழங்க உத்தரவிட்டது. இதனை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது. [...]
வத்திராயிருப்பு அருகே வாலிபர் மீது வெடிகுண்டு வீச்சு: மீண்டும் பதட்டம் Fri, 22 Oct 2010 05:25:13 +0000 வத்திராயிருப்பு : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில், டிராக்டர் ஓட்டிச் சென்ற சுரேஷ் என்பவர் மீது மர்மக் கும்பல் வெடிகுண்டு வீசியதில் அவர் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தால் அங்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. வ.புதுப்பட்டியில் ஜூலை 25ம் தேதி, இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார்; இதில், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகேயுள்ள கிராமங்களுக்கும் இக்கலவரம் பரவியதில், மாத்தூர் கிராமத்தில் ஆட்டுக்கிடையிலிருந்தவர் வெடிகுண்டு [...]
காமன்வெல்த் பாடல் : மன்னிப்பு கேட்டார் ரஹ்மான்! Mon, 18 Oct 2010 05:17:55 +0000 காமன்வெல்த் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் கொடுத்த தீம் பாடல் பிரபலம் ஆகாமலேயே போய்விட்டது. இதற்காக ரஹ்மான் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், காமன்வெல்த் போட்டிக்கான தீம் பாடலின் ட்யூன் சரியில்லை, தரமானதாக இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். இளைய தலைமுறையினரை மட்டும் குறித்து இந்தப் பாடல் வரிகள் இடம் பெற்று விட்டது. மற்றவர்களையும் அதில்சேர்த்திருக்க வேண்டும். இந்தப் பாடலும், ட்யூனும் மக்களைக் கவராமல் போய் விட்டது உண்மைதான். இதற்காக வருத்தப்படுகிறேன். எனது பாடலால் யாராவது [...]
மதுரையில் இன்று அ.தி.மு.க., பேரணி : 3,000 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு Mon, 18 Oct 2010 05:15:30 +0000 மதுரை :அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில், மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள, அ.தி.மு.க.,வினர் பெருமளவில் குவிந்துள்ளனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த சில தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ளதால், ஏதாவது பிரச்னை வருமோ என்ற ஒரு விதமான பதட்டம், மதுரை நகரெங்கும் நிலவுகிறது. எந்த விதமான அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க, 3,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். "கோவை, திருச்சியை தொடர்ந்து மதுரையிலும் அக்., 18ல்(இன்று) பிரமாண்டமான ஆர்ப்பாட்டம்' நடத்தப்படும் [...]
100 வயதில் பல்கலை.யில் பி.எச்.டி. படிக்கும் சுதந்திர போராட்ட தியாகி Mon, 18 Oct 2010 05:11:43 +0000 கவுஹாத்தி: தனது பிறந்த நாளை கொண்டாடிய கையோடு பல்கலை.யில் பி.எச்.டி மாணவராக பதிவு செய்துள்ளார் அசாமைச் சேர்ந்த 100- வயது சுதந்திர போராட்ட வீரர். கல்வி கற்க வயது ஒரு தடையல்ல என்பார்கள். அசாம் மாநிலம் கவுஹாத்தியில் புஹோரி கிராமத்தைச் சேர்ந்தவர் பகூலராம் தாஸ் (100). இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். கடந்த 1930-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக போராடி தனது 19-வது வயதில் சிறை சென்றார். இரணடு மாத சிறைவாசத்திற்கு பின் 1945-ம் ஆண்டு [...] |
||||||||